தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சுவடுகள் நெய்த பாதை ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

சுவடுகள் நெய்த பாதை !   நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty சுவடுகள் நெய்த பாதை ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Sat Nov 14, 2015 2:17 pm

சுவடுகள் நெய்த பாதை !


நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com,

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


தகிதா பதிப்பகம், 4/833, தீபம் பூங்கா, கே.வடமதுரை,
கோவை-641 017.
பேச : 94437 51641. மின்னஞ்சல் :
dhakitha@gmail.com பக்கங்கள் :68, விலை: ரூ.60.
*****
       நூல் ஆசிரியர் கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்களைப் பற்றி நூலை வெளியிட்ட தகிதா பதிப்பகம் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளது, குறிப்பிடத் தகுந்தது.

       “தமிழகத்தின் தலைநகர் தொடங்கி தாயகத்தின் தலைநகர் வரையில் தன் ஊடகத்துறையின் மூலம் உன்னதப் பங்களிப்பை இவர் வழங்கியிருக்கிறார்.  பன்மொழி அறிவும், படைப்பாக்கச் சிறப்பும், சமூக அறிவியல் ஞானமும் ஒருங்கே பெற்றிருக்கும்.  இவர் தன் அச்சு, ஊடக எழுத்துக்களின் மூலம் பல லட்சம் தமிழர்களின் இதயங்களை ஊடுருவி இருக்கிறார்.

       ஆம், உண்மைதான். பத்திரிக்கைத் துறையில் பல ஆண்டுகளாக தனி முத்திரைப் பதித்தவர் கவிதை உலகிலும் ‘சுவடுகள் நெய்த பாதை என்ற இந்த நூலின் மூலம் தடம் பதித்து உள்ளார்.  பாராட்டுக்கள்.  கவிஞர் ஜெயபாஸ்கரன் அணிந்துரை தோரணவாயிலாக வரவேற்கின்றது.

       ‘சுவடுகள் நெய்த பாதை என்ற நூலின் தலைப்பே சிந்திக்க வைத்தது.  சுவடுகள் உருவாக்கிய பாதை என்றால் சாதாரணம்.  சுவடுகள் நெய்த பாதை எனும் போது கவித்துவமாகின்றது.  சுவரொட்டி பற்றி எழுதிய கவிதை மிக வித்தியாசமானது.

       போஸ்டர் நான்!
காற்று தான் போர்வையாகும்

கைகளே ஆடையாகும்
ஏழையின் வீட்டில் நானோர்

காகித மஞ்சம் ஆனேன்
மாடுகள் உண்ணும் போது

சுவர்களின் புல்வெளியானேன்
வயிற்றிலே பசியே நிரம்பும்

பாமரன் எழுத்து கற்க
பாடமாய சுவரின் விரிவேன்.
சுவர்மரம் சாயும் போது

விழுதென ஒட்டி நிற்பேன்
கிழிந்தபின் பிளாட்பாரத்தின்

கூரையாய் ஆகி காப்பேன்
அவதாரம் செய்யும்

ஆண்டவன் தானே நானும்!


       நம் கண்ணில் படும் சுவரொட்டிகள் பற்றி ஓர் ஆய்வே நடத்தி கவிதை வடித்துள்ள கவித்துவம் மிக்க உள்ளத்திற்கு பாராட்டுக்கள்.

       மனிதர்களில் நல்லவர்கள், “தூங்குபவர்களும், இறந்து போனவர்களும் என்ற பொன்மொழியை நினைவூட்டும் விதமாக, தத்துவம் சொல்லும் விதமாக உள்ள கவிதை நன்று.

       செத்துப் போனவன்
       செத்துப் போனவன் தந்த சுகம்

       சும்மா இருப்பவன் தருவதில்லை
       கல்லறைக்க்குள்ளே இருப்பவன் போல

       நல்லதை எவனும் செய்வதில்லை
       மூச்சு நிறுத்தியவன் செய்த பணியை

       முழுசாய் இருப்பவன் புரிவதில்லை
       கண் மூடியவன் பார்த்த வாழ்வை

       மண்ணில் இருப்பவன் பார்ப்பதில்லை
       விழுந்து விட்டவன் காட்டும் குணத்தை

       வாழ்பவன் எவனும் காட்டவில்லை
       இத்தனை புகழும் கிடைப்பதற்கேனும்

       ஒருமுறை செத்தால் பாவமில்லை.


       எதுகை, மோனை மட்டுமல்ல ; இயைபும் வரும் விதமாக பல புதுக்கவிதைகள் நூலில் உள்ளன.  கவிதைகளுக்கு பொருத்தமான புகைப்படங்கள் அச்சிட்டிருப்பதால் படிக்க சுவை கூட்டுகின்றன. 

       பட்டிமன்ற நடுவர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள், தினமணி வைர விழாவில் பாராட்டிய கவிதை, நூலில் உள்ளது.  பாராட்டுக்கள்.

       விதையின் தவறல்ல !
       முளைத்த நாற்றுகள் காய்ப்பதுண்டா?
              காய்க்கும், இந்த மண்ணில்!
       குஞ்சுகள் கூட்டைச் சுமப்பதுண்டா?
              சுமக்கும், இந்த தேசத்தில்!
       கன்றுக்குட்டிகள் உழுவதுண்டா?
              உழும், இந்த நாட்டில்
       முதிர்ந்த பயிர்களுக்கு

       மூளை மழுங்கினால்
       சிறகுள்ள பறவையே

       சோம்பேறிகளானால்
       காளைகள் வயல் உழ  

       கௌரவம் பார்த்தால்
       கல்வியைத் தேடும் வயதில்

       காசுக்குத் தேய்கிறேன் நான்!
       தவறினை மரங்கள் செய்ய

       தண்டனை விதைகளுக்கா?


       இக்கவிதையை கூர்ந்து இரண்டு முறை படித்தால், பொருள் நன்கு புலப்படும்.  மேலோட்டமாகப் படித்தால் சாதாரணமாகத் தோன்றும்.  ஆழ்ந்து படித்தால் நுட்பமான பொருள் விளங்கும்.

       உழைக்க வேண்டிய குடும்பத் தலைவன், உழைக்காமல் குடித்து பணம் அழித்து, சோம்பேறியாக வாழ்ந்தால், மகன் சிறியவனாக இருந்தாலும், படிக்க வேண்டிய வயதில், படிப்பைத் தியாகம் செய்து விட்டு, குழந்தைத் தொழிலாளியாக உழைத்து பணம் ஈட்டி குடும்பத்தைக் காக்க வேண்டிய நிலை வரும் என்பதை மிக அழகாக புதுக்கவிதையில் சுட்டியுள்ள நூலாசிரியியர் கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

       பா. கிருஷ்ணன் என்பதை பா வடிக்கும் கிருஷ்ணன் என்றும் பொருள் கொள்ளலாம்.

       உலகமயத்தின் காரணமாக நகர வாழ்க்கை இன்று நரக வாழ்க்கை ஆனது. இயந்திரமயமான வாழ்க்கையே இன்று இயல்பு வாழ்க்கையாகி விட்டது.  உறவுகளோடு உறவாட நேரமின்றி பணத்தாசையில் ஓடி ஓடி உழைக்கின்றனர்.  இயந்திரம் கண்டுபிடித்த மனிதன் இயந்திரமாக மாறி வருகின்றான்.  இனி வாழ்கின்றவர்களில் மனிதர் யார்? என்று கண்டுபிடிக்க ஓர் இயந்திரம் கண்டுபிடிக்க வேண்டும்.  இந்நிலை உணர்த்தும் கவிதை நன்று.

       யந்திரமானாய்!
       மனிதா! மனிதா! / வெளிச்ச வாழ்வை
       அமைத்துக் கொண்டாய் / இருட்டே எனக்கு
       மிச்சமானது / மாட மாளிகை
       அமைத்துக் கொண்டாய் / மணல் குடில்களைப்
       பெற்றுக் கொண்டோம் / நேரமே உனக்கு எஜமான ஆனது
       நிதானம் எங்கள் சொத்தாய் போச்சு
       வசதியைத் தேடி / நகர வாழ்க்கையில்
       யந்திரமானாய் / வாழ்க்கையைத் தேடி
       கிராம வாழ்க்கையில் / மானுடன் ஆனேன்.



       உண்மை தான்.  இன்னும் கிராமங்களில் தான் மானுடம் வாழ்கின்றது.

       உலகப் பொதுமறை வடித்த திருவள்ளுவர் யாருக்கும் தீங்கு இல்லாத பொய் என்றால் வாய்மையாகக் கருதப்படும் என்றார். இதனை சிலர் தவறாகப் புரிந்து கொண்டு, வள்ளுவரே பொய் சொல்லலாம் என்று சொல்லி விட்டார் என்று சொல்லி, வாயைத் திறந்தாலே பொய்யாகவே பேசி வருகின்றனர்.  அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள், போட்டிப் போட்டு பொய் பேசி வருகின்றனர்.  அதனை உணர்ந்து வடித்த கவிதை நன்று.

       பொம்மைகள் !
       இந்த உலகத்தில் / எல்லோரும் இனிமேல்
       பொம்மையாகி விடுங்கள் / அப்போது தான்
       நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்கள்.
       இன்னொருவரை விட தனக்குத் தான்
       எல்லாம் வேண்டும் என்று / நினைக்க மாட்டீர்கள்
       மற்றவர் தனிமையை / உணர்வினை, மனசினை
       புரிந்து கொள்ளாமல் / புண்படுத்த மாட்டீர்கள்.



       பொய் பேசினால் ஊமையாகி விடுவீர்கள் என்ற நிபந்தனை இருந்தால் மட்டும் மனிதர்கள் பொய் பேசாமல் இருப்பார்கள்.

       சுவடுகள் நெய்த பாதையில் வடித்த கவிதைகள் நன்று! நூல்ஆசிரியர் கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்களுக்கு  பாராட்டுக்கள்!  தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்...    

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வானம் என் வாசலில் ! கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன்.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இஃதோர் கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» சோகச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் .டேவிட் ராஜ போஸ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கனவுச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» இந்திய சமகால ஓவியக் கலையின் முன்னோடி ! எம் .எப் .உசேன் ! நூல் ஆசிரியர் ஓவியர் புகழேந்தி .மின் அஞ்சல் oviarpugal@yahoo.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum