தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சின்னச் சின்ன கதைகள்
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சின்னச் சின்ன கதைகள்
First topic message reminder :
அந்த பம்ப்செட்டோ மிகவும் பழையதாகஇருந்தது. அந்தத் தண்ணீரை ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்காவிட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவுகூறியது.ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப்பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம்தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அதுதான் மிகப்பெரிய பரிசு, விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்ம திருப்தியை விடப் பெரியசபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.
அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால்தான் பெறமுடியும். இதுபிரபஞ்சவிதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்தசந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப் பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.
கதையை எழுதியவர் : தெரியவில்லை.
நன்றி : மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு.
கொடுங்கள்... பெறுவீர்கள்!
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்தப் பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக்கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை தெரிந்தது. நடக்கவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அருகில் இருக்கும் பம்ப்செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்துவிட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச்செல்லவும்."அந்த பம்ப்செட்டோ மிகவும் பழையதாகஇருந்தது. அந்தத் தண்ணீரை ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்காவிட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவுகூறியது.ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப்பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம்தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அதுதான் மிகப்பெரிய பரிசு, விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்ம திருப்தியை விடப் பெரியசபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.
அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால்தான் பெறமுடியும். இதுபிரபஞ்சவிதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்தசந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப் பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.
கதையை எழுதியவர் : தெரியவில்லை.
நன்றி : மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சின்னச் சின்ன கதைகள்
கசங்கிய கடிதம்
------------------
ஆடம்பரமான ஒரு சிறிய அழகிய மண்டபம். அங்கே உள்ள மேசை ஒன்றில் சிறிய படம் ஒன்று மாலை போட்டபடி இருக்க, அதற்கு முன் ஒரு விளக்கு, தான் எரிந்து, படத்துக்கு வெளிச்சம் கொடுத்தபடி இருந்தது.
படம் இருந்த மேடைக்கு, ஒருவர் எதையோ பறிகொடுத்தவர்போலவும், தொலைந்த எதையோ நிலத்தில் தேடுபவர் போலவும் தலைகுனிந்தபடி மேடைக்கு சென்றார். அங்கே வைக்கப் பட்டிருந்த ஒலிவாங்கியைக் கையால் திருப்பிச் சரிபார்த்து. பேசத் தொடங்கினார்.
உறவுகளே! எமது தாயக விடுதலையில் தன்னை இணைத்து, போராடி, இரத்தம் சிந்தி, விழுப்புண் அடைந்து, எமக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்து, அங்கவீனமடைந்து உயிர் நீத்த உத்தமன் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஒன்றுகூடி இருக்கிறோம். குறுகிய நாளில் தமது எந்தக் கஸ்டத்தையும் பாராது. ஓடீ ஓடி வேலைசெய்து, இந் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த என் நண்பர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். அதுபோல் நாம் எமது விடுதலைப் போராளிகளையும் மறக்கக்கூடாது. எமது விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்தாலும் அதில் ஈடுபட்ட அனைத்துப் போராளிகளையும் அரவணைத்து. அவர்களுக்கு கைகொடுத்து அவர்கள் வாழ்வை உயர்த்தவேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இதே வேளை மரணமான போராளிகளை மனத்தில் நிறுத்தி எந்நாளும் அஞ்சலி செலுத்த வேண்டும். அதேபோல் காயப்பட்ட போராளிகளையும்; அவர்களின் குடும்பங்களையும் பாதுகாத்து. அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி செய்வதுடன் நம் மாவீரர்களின் பெற்றோர்களையும் விழிகளைப் பாதுகாக்கும் இமைகளைப்போல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இப்படியான விழாக்களை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டும்.
மேடைக்கருகில் நின்ற ஒருவர் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ''இந்த ஆள் நேரகாலம் தெரியாமல் அறுக்குது… நான் வேலைக்கு போக வேணும். முதலில் ஆளை மேடையைவிட்டு இறக்கு… '' என்று பக்கத்தில் நின்றவரிடம் சத்தம் போட்டார்.
அதை உணர்ந்தவர் போல் பேசியவர் தனது பேச்சை நிறுத்தி மேடையை விட்டு இறங்க வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. இடை இடையே கொத்து ரொட்டித் தாளம்...... காற்றோடு அதன் வாசம்..... பார்வையாளர்கள் காதும் மூக்கும் அதன்பால் இழுபட மேடையின் முன்பு இருந்த மக்கள் ஒவ்வொருவராக மெல்ல மெல்ல எழுந்து செல்லத் தொடங்கி விட்டார்கள்.
நடந்தவர்களின் காலில் அகப்பட்டு நசிந்து, கசங்கிப் போன நிலையில் ஒரு கடிதம், மண்டப நடுவில் தேடுவாரற்றுக் கிடந்தது. குனிந்து எடுத்தேன்.
நான் என்ன தவறு செய்தேன்.? என்னை ஏன் மற்வர்கள் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். என் கால்கள் ஏன் ஊனமுற்றன. என் கைகள் ஏன் முடமாகின. நான் எம் தேசம் காக்க…. எம் மக்களின் விடுதலைக்காகப் போராடியது தவறா?
இளவதிலே என் பெற்றோரைப் பிரிந்தேன். என் உறவுகளைப் பிரிந்தேன். அம்மாவின் பாசமோ அப்பாவின் பாசமோ அறியாமல் காட்டிலே வளர்ந்தேன். என் பிரிவால் என் குடும்பம் கலங்கியது. அவர்களின் துக்கத்தையம் துயரத்தையும் அறிந்தும் நான் அவர்களைப் பார்க்கச் செல்லாமல் என் தேசத்தை நேசித்து, அதற்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டேன். துப்பாக்கியும் குண்டுகளும் ரவைகளும் என் உறவாகின. என்னைப்போல் இணைந்தவர்கள் நட்பானார்கள். நாம் வெற்றி பெற்றபோதெல்லாம் எல்லோரும் பாராட்டினாhர்கள். போராடினோம். ஆவேசத்துடன் போராடினோம்.
போராட்டத்தில் என் அண்ணனை இழந்தேன். அக்காவை இழந்தேன். தம்பியை இழந்தேன். தங்கையை இழந்தேன். இதனால் பாதிப்புற்ற என் பெற்றோரையும் இழந்தேன். நட்புகளும் நடந்து வந்த பாதையில் நடு ஆற்றில் வீழ்ந்தார்கள். போராட்டமும் முடிந்தது.
கைதியானேன். சிறைக்கூடங்கள் என்போன்றோரை வரவேற்றன. கொடுமைகளும் சித்திரவதைகளும் நாளாந்தம் எமக்காகப் பரிசாகக் கிடைத்தன. போராட்ட வடுவைப் பார்த்தவன் வகைவகையாச் சித்திரவதை செய்தான். அதனால் உடல் மேலும் ஊனமுற்றது. நோய்வாய்ப்பட்டேன். சிறைக்கு நான் பாரமானேன். பாராமானதை ஏன் வைத்திருப்பான் என எண்ணியவன் என்னைச் சிறையிலிருந்து தூக்கி வெளியிலே போட்டான்.
தத்தித் தத்தி நடந்து வந்தேன். என்னைப் பார்த்தவர் கண்களில் பரிகாசம்தான்; தெரிந்தது. போராட்டத்தைப் பாராட்டியவர்களோ. எஞ்சிய உறவுகளோ என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அருவருப்பான ஒரு பிராணியைப் பார்ப்பதுபோல் முகத்தைச் சுழித்தபடி என்னைப் பார்த்தார்கள். என் ஊரை நாடி நடந்தேன். என் வீடு இருந்த இடம் தெரியவில்லை. விபரம் அறியக் கூட அங்கு ஆட்களும் இல்லை. உண்ண உணவும் இல்லை. ஒதுங்க இடமும்; இல்லை. மாற்றிக் கட்டத் துணியும் இல்லை. மனத்தில் அமைதியும் இல்லை. யாரும் அற்ற நிலையில் அனாதையாக இப்படியான நிலையில்… வாழ்வதா…? சாவதா…? யோசித்தேன். வாழ்வதற்கு ஏதாவது ஒரு ஆதரவு வேண்டும். முயற்சித்தேன்…. முயற்சித்தேன்…. முடியவில்லை. எவருமே ஆதரவு கொடுக்கவில்லை. முன்வரவும் இல்லை. இதற்கு முன்னர் உங்களுக்கும் எழுதிய கடிதத்திற்கு இன்றுவரை பதிலும் இல்லை. என்னால் என்ன செய்ய முடியும்? எனக்கு ஒரு கயிறுதான் ஆதரவாகக் கிடைத்தது….
''என்ன நடுவில நின்று கடிதம் வாசிக்கிறீங்க… அங்கால கெதியாப் போங்கோ…'' என ஒருவர் என்னை அதட்ட.... வேறொருவர் ''அண்ணை... உத்தமனின் படம் ஒன்று வேண்டுங்க.... '' என்றார். விழாத் தொடர்ந்தது. நான் இடத்தைவிட்டு நகர்ந்தேன்
நன்றி Sembagan

பைத்தியங்கள்
---------
இந்த உலகத்தில் பைத்தியங்கள் அதிகரித்து கொண்டு செல்கின்றது காரணம் நாம் ஒவ்வொரு பொருளின் மீதும் பைத்தியமாக இருக்கிறோம் உதாரணம் பணம் , பொருள் , நகைநட்டுக்கள் அடுத்தவன் சொத்துக்கள் ( மண் , பொண் ) இன்னும் பல இதை உங்கள் கண்ணாடியை பார்த்து கேட்டால் தெரியும் .நாம் பைத்தியமா இல்லையா என்று. உன்மையில் பைத்தியம் இல்லாதவரை நீங்கள் பைத்தியாமா என்று சொன்னால் அவர் சிரிப்பார் அல்லது முறைப்பார் .அதுவே பைத்தியமே இல்லாத ஒருவரை பைத்தியகார அதாவது மனநல நிலையங்கள் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட இடங்களில் கண்டு அவரை பைத்தியம் என்று சொன்னால் அவர் மனம் எவ்வளவு பாடு படும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் அது போல எந்தன் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது .
இந்த உலகத்தில் எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் அவதும் அன்னை வளர்ப்பினிலே இது பலவருடமாக சொல்லிக்கொண்டிருக்கும் குழந்தை வளர்ப்பு முறை ஆனால் ஒரு குழந்தை பிறந்து சிறிது காலம் கழிந்த பின் அந்த குழந்தைக்கு நடை பழக்கி ,கதை பழக்கி உன்மை எது பொய் எது நன்மை எது தீமை எது என்று சொல்லி கொடுக்கிறோம் அதுவே சில ஆண்டுகள் போன பின்பு அந்த குழந்தைக்கு நீ அங்கே போகதே , அதை செய்யாதே ,அவர்களுடன் சேராதே, என்று ஒரு மனிதனின் குணங்களில் இல்லாத ஒரு மனித பழக்கத்தை அந்த குழந்தைக்கு திணிக்கிறோம்.
இப்படித்தான் எனது வாழ்க்கையும் ஆரம்பிக்கின்றது எனது பெயர் வசந்த் எனது அம்மா ஒரு பொலிஸ் காண்ஸ்ரபிள் அப்பா ஒரு தொழிநுட்ப உத்தியோகத்தர் இருவரும் காதலித்து கல்யாணம் கட்டிக்கொண்டவர்கள் ஆனால் எந்த ஒரு விசயத்திலும் எதையும் விட்டுக்கொடுத்து வாழ தெரியாதவர்கள் எனக்கு நினைவு தெரிந்த காலம் தொடக்கம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை சச்சரவுகள்தான் வாய் பேச்சு அடிதடியில் முடியும் இடையில் நான் சிக்கி தவிக்க எனக்கும் அடி விழும் இதற்கு என்ன காரணம் என்னவென்று அறியாமல் அழுது கொண்டிருப்பேன் அந்த நாளில் நான்.
இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்ல அப்பா ஒரு நாள் இரவில் யாருக்கும் தெரியாமல் அப்பா தூங்கில் இட்டு அகாலமரணம் அடைய இன்னும் தனிமைக்கு என் வாழ்க்கை நகரத்தொடங்கியது. என்னை பார்த்த்துக்கொள்வது என் அப்பாதான் என்னை குளிப்பாட்டி வெளிகிடுத்தி பாடசாலலைக்கு கூட்டி செல்வது எல்லாம் அப்பாதான் அம்மா என்னை கவனிப்பதில்லை காரணம் அவக்கு நேரம் இல்லை என்று சொல்லுவா லீவு எடுப்பதில்லை அப்பாவுக்கும் சந்தேகம் வந்துதான் வாய்பேச்ச்சு முற்றி தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்பது போக போக எனக்கு புரிய ஆரம்பித்தது அம்மாவின் போக்கு எனக்கு எனக்கும் பிடிக்கவில்லை வீட்டுக்கு நேரத்துக்கு வருவதுமில்லை என்னை கவனிப்பதுமில்லை என்னை பார்த்துகொள்ள வேலைக்காரி ஒருவரை வீட்டில் வைத்தார் ஒரு குழந்தையை சொந்த தாய் பார்பதை போல வேறு யாராலையும் பார்த்த்துகொள்ள முடியுமா ? அந்த வேலைக்காரியோ வீட்டுக்கு நேரத்துக்கு வரவேண்டும் வெளியில் எங்கையும் ஊர் சுற்ற கூடாது யாருடனும் சேரக்கூடாது என்று அதட்டும் கட்டளை போடுவாள் நான் நடந்து கொள்ளும் வீதம் பற்றி என் அம்மாவின் தம்பி மாமாவுக்கு போட்டு கொடுப்பது இவள்தான் என் மாமாவுக்கு எங்கள் அம்மாவின் சொத்தை அபகரிக்க கனநாளா ஆசை அந்த மாமா பயலுக்கு. என்னை பயமுறுத்திக்கொண்டே இருப்பான் . நீ ஏதாவது தப்பு தண்டா செய்தால் உன்னை கொன்று விடுவேன் என்பான்.
நான் சந்தோசமாக இருக்கும் நாட்கள் அந்த பாடசாலை நடக்கு ஐந்து நாட்கள்தான் நண்பர்களுடன் விளையாடுவது வெளியில் சுற்றுவது எனது நண்பர்கள் ராஜன், அகிலன் இந்த இருவருமே எனது உயிர் நண்பர்கள் அன்றைய நாள் பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்தேன் அம்மாவும் மாமாவும் பேசிக்கொண்டிருந்தார்கள் அவர்கள் பேசிய சாரம்சம் மட்டுமே என் காதில் விழுந்தது என்னை விடுதியில் சேர்க்க வேண்டும் என்பது மாமாவின் பேராசை அதற்கு அம்மா சம்மதம் தெரிவிக்க வில்லை ஒரு சிறிய சந்தோசம் என்றாலும் என் அம்மவை பற்றி நினைப்பேன் என்னை அவள் அவரசரத்திற்கு பெற்றாளோ அல்லது வெறும் உணர்ச்சிக்கு மட்டும் பெற்றாளோ அல்லது சமுதாயம் தன்னை குற்றம் சாட்ட கூடாது என்பற்கு பெற்றாளோ என்ற கேள்வி மட்டும் என் மனதில் மரதன் ஓட்டம் போல ஓடி கொண்டிருக்கும் . இரவும் தனிமையும் என் வயதும் என்னை கொஞ்சம் கொஞ்சமாக என்னை வேட்டையாட தொடங்க நான் அதைச் செய்தால் என்ன இதை செய்தால் என்ன என்று என்மனம் ஆட்டம் காண ஆரம்பித்தது. வேலைக்காரிக்கு வேட்டு வைக்க தொடங்கினேன் வீட்டில் இருக்கும் கள்ள வழி அதுதான் யன்னல் வழியாக வெளியில் செல்ல ஆரம்பிக்க தொடங்கினேன்.
அன்றைய நாளில் இருந்து யாருக்கும் தெரியாமல் எனது நண்பர்களுடன் பீடி குடிக்க ஆரம்பித்தேன் ,அதில் என்ன ஒரு சுகம் கூட இல்லையே என்று ,சிகரட் ,கோல்ட்லீவ் என்பன குடிக்க ஆரம்பித்தேன் காசுக்கு வீட்டில் திருட ஆரம்பித்தேன் அதன் சுவையையும் அறிந்து விட்டேனே பிறகு என்ன சாரயம் ஏதாவது குடிக்கலாம் என்று நினைத்து ஆளாளுக்கு ஐம்பது ரூபாய் போட்டு கள் குடிக்க அடுத்த கிரமத்துக்கு சென்று கள் வாங்கி குடித்தோம் புது பழக்கம் என்ற படியால் ஆளாளுக்கு குடித்த கப்புக்கு மேலாக சத்தி எடுத்து கப்பை நிறைத்து கொண்டு மரத்தை பிடித்து கொண்டிருந்தோம் தலை சுற்றால் என்னடா இப்படி ஆகிவிட்டதே எப்படி ஊருக்கு செல்வது என்ற பயத்தினால் யாருக்கும் தெரியாமல் மாலை வரை அந்த ஊரில் உள்ள புதரில் ஒளிந்திருந்தோம் இப்படி யாருக்கும் தெரியாமல் இந்த பழக்கம் தொடர ,பியரிலிருந்து எல்லாவற்றையும் ருசிக்க ஆரம்பித்து விட்டோம் மது பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டோம் இப்படி சிலகாலமாக எங்கள் வாழ்க்கை ஓடியது வீட்டில் அம்மாவுக்கு தெரியாமல் அப்பாவின் சைக்கிளில் இருந்து ஒவ்வொரு பொருளாக மூவரும் அவரவர் வீட்டில் திருட ஆரம்பித்தோம். படிப்பு என்பது மக்கி போக எப்படி கள்ள வேலை செய்து பிடிபடாமல் வாழ்வது என்று மூவரும் திட்டம் வகுத்து வகுத்து எனக்களது வேலையை காட்ட ஆரம்பித்தோம்.பாடசாலைக்கு போவது போல போய் வெளியில் சுற்றுவதும் விளையாடுவதும் இப்படி போக மச்சான் நாம அந்த தூள் இருக்குதானே அதை ஒருக்கா போட்டு பார்க்க வேணும் மச்சான் என்று அது தான் கடைசி ஆசை என்றான் திட்டம் ஒன்று போட்டேன் உங்கட சொந்த காரர்கள் யாராவது கொழும்பில் இருக்கிறார்களா என கேட்க ஒம் என்றான் அகிலன் அப்ப சரி நீ உங்கட வீட்ட எப்படியாவது ஒரு காரணம் சொல்லி அங்க போக ஏற்பாடு செய் என்றேன் அவனும் ஏற்பாடு செய்ய ராஜனோ காசுக்கு என்னடா செய்யுற என்ற கேள்விக்கு நான் எடுக்கிறன் என்று சொல்லி வீட்ட போய் அம்மாவின் காப்பை திருடி விற்று கொழும்புக்கு மூவரும் புறப்பட்டோம் .
அன்று இரவு சென்று மருதானையில் ஒரு விடுதியில் றூம் போட்டோம் அங்கு மூட்டை இல்லாத றூமும் இல்லை ஓட்டை இல்லாத றூமும் இல்லை தானே அங்கு தங்கின ஆட்சளூக்கு தெரியும். றூமில் தங்கியிருந்து மூவரும் யோசிக்க அதுதான் யாரிடம் போவது எங்கே வாங்குவது பற்றி யோசிச்சு கொண்டிருக்கும் போது பக்கத்து றூமில் இருந்து அணுகிற சத்தம் கேட்க எங்கள் சிந்தனை தூளாக இருந்தது துவண்டு எழுந்து பெண்ணாக மாறியது மச்சான் இதையும் ஒருக்கா செய்து பார்ப்பமே என சொல்ல எங்கள் றூமில் இருந்து அடுத்த றூமுக்கான ஓட்டை பெருப்பிக்கலானோம் இருட்டு என்பதால் ஒன்றுமே தெரியவில்லை சத்தம் மட்டுமே கேட்டது அன்றிரவு தூக்கம் இல்லாமல் காத்திருத்தோம் அவளை அழைப்பதற்க்கு அடுத்த நாள் காலை அந்த றூம் வாசல் திறபடாத என அலிபாபாவின் மந்திரங்களை மறந்தவர்கள் போல அந்த றூம் கதவினை பார்த்துக்கொண்டிருந்தோம் . கதவு திறபட உள்ளே இருந்து ஒரு நீக்றோ போல கருபான கட்டையன் ஒருத்தன் வந்தான் என்ன தம்பி நிற்கிற என்றான் இல்லை அண்ணை இரவு முழுக்க சத்தம் கேட்டதே அண்ணே அது தான் பார்க்கலாம் என்று வந்த என்று சொல்ல ஓ அதுவா தம்பி எனக்கு இரவு முழுவதும் நடுக்கலும் காய்ச்சலும் என்றான் எப்படியிருக்கும் பரதேசி நாயே அதுக்காடா ஆளை எழுப்புற அளவுக்கு அணுகுவ என்று மனதுக்குள் திட்டி தீர்த்தாலும் ஆசை அடங்கவில்லை அடுத்த நாள் காலை ஆள் பிடிக்க மருதானையை சுற்ற ஆரம்பித்தோம் ஆளாளுக்கு ஒரு திசையில் மூவரும் சென்று தேட யாரும் கிடைக்க வில்லை நான் அடிக்கடி சுற்றி திரிவதை பார்த்த சி .ஐ. டி காரன் என்னை பிடித்து விசாரிக்க கொண்டு சென்றான் அவர்களின் காரியாலத்திற்கு.
அங்கு ஏற்கனவே என் நண்பர்கள் அங்க கோழியை குந்த வைச்சது போல இருக்க கண்கள் பேசின ஆளாளுக்கு சாத்திரிக்கானுகள் என்பது ஆட்களை பார்க்கவும் தெரிந்துகொண்டேன் விசாரிக்க தொடங்க நாங்கள் சொந்த காரங்கள் வீட்டுக்கு வந்தோம் ஆனால் வழி தெரியவில்லை அதனாலதான் சுற்றி கொண்டிருந்தோம் என்று சொல்லியும் மருதானையில தங்கியிருந்தோம் என்று சொல்ல விடுதிக்கு வந்து விசாரித்து விட்டு விட்டு சரி நீங்க ஊருக்கு போங்க என்று சொல்லி எச்சரித்து விட்டான் . தப்பினோம் சாமி என்று ஊருக்கு வந்து சேர வீட்டில் மாமாவும் அம்மாவும் எனக்காக காத்திருந்தனர் எங்கே போன நீ என்று விசாரிக்கும் பொழுது மாமாவின் கைகள் என்னை அடிக்க ஆரம்பிக்க அம்மாவின் கேள்விகள் ஒவ்வொன்றும் நான் செய்த தவறுகள் ஒவ்வொன்றையும் பக்கத்தில் இருந்து பார்த்தவர் போல கேட்க என்னை என்னால் பார்க்க முடியாமல் மாமாவுக்கு வீட்டு மூலையில் இருந்த தடியால் ஒன்றை போட மண்டை கிழிந்தது பதினாறு தையல் உடனே ஆஸ்பத்திரி பொலிஸ் முறைப்பாடு என ஆரம்பித்து அம்மாவோ பொலிஸ் முறப்பாட்டை சமாளிக்க பார்க்க மாமா விட வில்லை நீதிமன்றதுக்கு சென்றது வழக்கு. என்னை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க ஆணையிட்டார் நீதிபதி காரணம் நான் மாணவன் என்ற படியால் .
அப்போதுதான் எனக்கு புரிந்து கொண்டது நாம் எங்கு சென்று தவறு செய்தாலும் அதை கண்டு கொள்ளும் கண்கள் உண்டு என்பதை . அங்கே சீர்திருத்த பள்ளி என்பது கவுன்சிலிங் கோம் அங்கே ஒவ்வொரு மதத்துக்கும் உரிய பெரியவர்கள் வந்து உபதேசம் செய்வார்கள் எனக்கு அது பிடிக்காது அங்கும் தனிமை என்னை நானே திருத்தி கொள்ள வேணும் என்பதை முடிவு செய்தேன் மனநலம் பாதிக்கப்படவன் போல நடிக்கலானேன் அப்போதுதான் ஒரு கிறிஸ்தவ பாதரியார் வந்தார் அவரோ மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தனியாக வைத்து பராமரிப்பவர் அவரிடம் நான் உன்மையை சொல்ல அதாவது எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்க வில்லை எப்படியாவது என்னை உங்க இடத்துக்கு அழைத்து செல்லுங்கள் என்றேன் அவர் மறுத்து விட்டு பின்னர் சரி அப்படியானால் நீ வாழ்க்கை பூரகவும் நடிப்பாயா எனக்கேட்க இல்லை ஐயா எனக்கு எப்ப வாழ பிடிக்கிறதோ அப்போது நான் தெளிந்தவன் போல விலகிவிடுவேன் என்றேன் அன்று சீர்திருத்த பள்ளியில் இருந்து என்னை பைத்தியம் போல என்னை கட்டி கூட்டி சென்றனர் அங்கே நான் உள் செல்ல என்னை எல்லா பைத்தியங்களும் சேர்ந்து என்னை பார்த்து பைத்தியம் பைத்தியம் என்றது எனக்கு சிரிப்பதா அழுவதா என்பது தெரியவில்லை இப்படி நாட்கள் சென்றன அந்த வாழ்க்கை பழகி கொண்டது மனதில் வஞ்சகம் இல்லாத ,அடுத்தவனுக்கு தீங்கு செய்ய நினைக்காத மனங்கள் ,அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாத மனிதர்கள் அவர்களுக்கென ஒரு தனி உலகம் தனி வாழ்க்கை நடத்தும் மனிதர்கள் இவர்களை பார்த்து பைத்தியம் என்று சொல்பவர்களை என்னவென்று சொல்வது இந்த உலகத்தில்.
எனக்கு இந்த வாழ்க்கை மிக பிடித்தது என் அம்மாவும் அடிக்கடி வந்து பார்த்து செல்வார் இதே பாசத்தை ஆரம்பத்தில் என்னிடம் நீங்கள் காட்டியிருந்தால் நான் இப்படியிருந்திருப்பேனா என்றும் கேள்வி எழும் ஆனால் என் சுய சொந்த புத்தி எங்கே சென்றது என்றும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
சில நடந்த சம்பவங்களை வைத்து கற்பனையாக எழுதினேன்
நன்றி முனிவர் ஜீ

அலுவலகத்தில் காட்டுப்புலி!
------------
காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது. ஆளரவத்தில் அரண்டு மிரண்டுபோன புலி, அந்த டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது.
நாலாவது நாள்...
பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூமுக்குள் தனியாக வந்த ஓர் ஆளை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் 'மிஸ்’ ஆனதைப்பற்றிஅலுவலகத் தில் யாருக்கும் கவலை இல்லாததால், எந்த அதிர்வு நிகழ்வும் இல்லை பயப்படும் படி எதுவும் நிகழவில்லை என்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி.
அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். யாரும் அவரைத் தேடவும் இல்லை, காணவில்லையே என்று பதறவும் இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!)
அடுத்த நாள், நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட்டை ஏப்பம்விட்டார் புலியார். நிறுவனத்தில் குண்டூசி விழுந்த சலனம்கூட இல்லை. இதனால் குளிர்விட்டுப்போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து செட்டில் ஆனது.
அடுத்த நாள் பசிக்கவே இல்லாவிட்டாலும், சும்மா இருக்கட்டுமே என்று ஒரு நபரை அடித்து மூர்ச்சையாக்கி, தனக்குப் பக்கத்தில் இருத்திக்கொண்டது.
காபி கோப்பைகளைக் கழுவ வந்த அந்த நபர்தான் அலுவலகத்தின் பியூன். காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லை என்று மொத்த அலுவலகமும் திமிலோகப்பட்டு, தேடுதல் வேட்டையைத் துவங்கியது.
அடுத்த பத்தாவது நிமிடத்தில், ரெஸ்ட் ரூமில் மூர்ச்சையாகிக்கிடந்த பியூனையும், தொடர்ந்து புலியையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.
புலியை அடித்துத் துவைத்து, கூண்டுக்குள் அடைத்து ஜூவுக்கு அனுப்பிவைத்தார்கள்!
நீதி:
உங்களுக்கான நட்பு அல்லது மரியாதையை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ, செல்வமோ கிடையாது. நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது!
////
நன்றி
யாழ் தளம்

என் அறியாமை
------------
பஸ் பயணம் என்பது ஒரு சிலருக்கு பிடிக்கும் ஒரு சிலருக்கு பிடிக்காது அது என் வேலைக்கு ஒவ்வொரு நாளும் தேவைப்பட்டது. நான் காயத்திரி ஒரு ஆசிரியராக புதிதாக நியமனம் பெற்று மட்டக்களப்பில் ஒரு பாடசாலயில் கல்வி கற்பிக்கிறேன். மட்டக்களப்பு என்றால் மட்டக்களப்பு அல்ல கொஞ்சம் தூரம் செல்லவேண்டும் புதிய நியமனம் என்பதால் அங்கு சில காலம் பணியாற்ற வேண்டும் ஒரு நாள் காலை நான் எழும்புவதற்கு நேரமாகிவிட்டது அன்றைய நாள் எனக்கு சுடுதண்ணியை காலில் ஊற்றிக்கொண்டால் போல ஆகிவிட்டது சாப்பிடவும் இல்லை .ஒழுங்காக சாறி கட்டவும் தெரியாது அவதிபட்டுக்கொண்டே ஒருபடியாக சாறியை கட்டிக்கொண்டு புறப்பட ஆரம்பித்தேன் அம்மாவும் சாப்பிட்டு போடி என்று சொல்ல நான் தேவை இல்லை பஸ் போயிடும் என்று சொல்லி ஓட்டமும் நடையுமாக பஸ் தரிப்பிடத்திற்கு சென்றேன் நல்ல காலம் பஸ் அந்த நேரத்திற்கு வந்து விட ஏறினேன்.
அவசரத்தில் ஏறிய நான் சில்லறை காசு எடுக்க வில்லை பஸ் நடத்துனர் ரிக்கட் கொண்டு வர எனது பையை திறந்து பார்த்தேன் அதனுள் ஆயிரம் ருபாய் இருந்தது அதனை நீட்டினேன் அவர் அதை பார்த்து விட்டு சில்லறை தரும் படி கூற எனக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை பக்கத்தில் இருந்தவர்களிடம் வினவ யாரிடமும் அந்த காசை மாற்ற இருக்க வில்லை. ஒரு குரல் மட்டும் இந்தாங்கோ என்று என்னிடம் நீட்டியது அவருக்கு நன்றி சொல்லிவிட்டு ஒரு படியாக ரிக்கட்டை பெற்றுக்கொண்டேன் ஆனால் பஸ்சில் காலை நேரம் என்பதால் இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தது எல்லாம் வேலைக்கு செல்பவர்கள் நின்று கொன்டே செல்ல நேர்ந்தது நிற்பது என்பது எனக்கு பிடிக்காது .பிடிக்காது என்று ஏன் சொல்ல வந்தேன் என்றால் உள்ள ஒரு சின்ன இடுக்கு ஒருவரே நிற்க முடியாது அதுக்குள்ள நின்று போவதென்றால் ??? ஒரு சில காமுகர்களால் பெண்கள் படும் வேதனை இருக்கே அம்மா சொல்ல முடியாது உரசுவது கிள்ளுவது .இடிப்பது இந்த நரக வேதனையில் இருந்து தப்ப நான் நான் படும் பாடு இருக்கே அம்மா அதை சொல்லவே முடியாது.
நான் இருக்கும் ஊரில் இருந்து மட்டுநகர் நாற்பது கிலோமீற்றர் தூரம். பஸ்சில் பாட்டு போட்டு சென்றார்கள் மாணவர்களும் உள் இருந்தார்கள் படிக்கிறார்கள் இல்லையோ ஆனால் பாட்டு மட்டும் நன்றாக பாடுகிறார்கள் , பஸ் இடையில் நின்றால் பிச்சைகாரர்கள் ஏறுவார்கள் இவர்கள் தொல்லை ஒரு பக்கம் இருக்க எனக்கு சில்லறை மாற்றிக்கொடுத்வர் என்னையே பார்த்து கொண்டிருந்தார் .நானும் அவரை உதவி செய்தவர் தானே என்று நினைத்து சிரித்தேன் அவரும் சிரித்து விட்டு மீண்டு மீண்டும் என்னையே பார்த்து கொண்டிருந்தார் அது எனக்கு அருவ ருப்பாக இருந்தது நான் முறைக்க அவர் அதை பொருட்படுத்தவில்லை என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் கிட்ட வரும் படி கூறி ஏதோ செய்கை காட்டினார் நான் ஒன்றும் பேசாமல் அவர் கிட்டே சென்று உதவி செய்யுங்கள் உபத்திரம் செய்யாதீர்கள் என்று சொல்லிவிட்டேன் .அவர் உடனே நீங்கள் இங்க இருங்கள் என்றபடி எழும்பினார் .நான் இருக்கையில் அமர்ந்து கொண்டேன் அவர் என்னருகில் நின்று கொண்டிருந்தார் அவர் இறங்கும் இடம் வர அவர் என்னை பார்த்து காயத்திரி தானே நீங்கள் எப்படி இருக்குறீர்க்ள் என்று கேட்டு விட்டு இறங்கிவிட்டார் அவர் சென்ற பின்பு யார் அவர் என்ற சிந்தனை ஓடியது.
பின்பு அவர் பக்கத்தில் இருந்தவ்ர் ஒரு ஆண் பார்க்க நல்ல பண்பாக இருந்ததவர் அவர் வேலையை காட்ட ஆரம்பித்தார் அவர் தொடைகள் என்னை உரசி உரசி உறுத்தியது அவரை முறைத்து பார்த்தும் அவர் அவரின் வேலையை தொடர்ந்தார் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை ஒருவனிடம் இருந்து இன்னொருவனிடம் சிக்கியுள்ளதாக நினைத்து கொண்டு ஆண்வர்கத்தை நினைத்தும் கல்யாணம் எல்லாம் கட்ட கூடாது என்றும் நினைத்தேன் பொறுத்து பொறுத்து பார்த்தேன் என்னால் முடியவில்லை கூச்சல் இட்டு நடத்துனரை கூப்பிட நினைக்கும் போது அவரோ தம்பி இங்க வாங்கோ என பஸ் நடத்துனரை கூப்பிட பஸ் நடத்துனர் நீங்கள் இறங்கும் இடமா என்று கேட்க ஓம் என்று சொல்ல ஒரு நிமிடம் பொறுங்கோ என்று சொல்லி விட்டு இரு ஊன்று கோல்களை எடுத்து அவரிடம் கொடுத்தார் அவர் அதை வாங்கிக்கொண்டு ஊன்றி எழும்பி நடக்க ஆரம்பிக்கும் போது தங்கை நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள் இருக்கையில் இருக்கும் போது என் கால்கள் என்னிடம் இருக்காது அது அங்கும் இங்கும் இருக்கும் அதனுள் பூட்டப்பட்டிருக்கும் ஆணிகள் உங்களை குத்தியிருந்தால் என்னை மன்னியுங்கள் என்று சொல்லிவிட்டு இறங்கி சென்றார் .
அப்பொழுது என்னால் எதுவும் பேச முடியவில்லை ஒரு சில ஆண்கள் செய்யும் சம்பவங்களால் எல்லோரையும் தவறாகவும் தப்பாகவும் நினைக்க தோன்றினாலும் அவரிடம் மன்னிப்பு கேட்க நினைக்கிறேன் அவரை காணும் போது .பஸ் நடத்துனரோ அவர் போரில் இரு கால்களை இழந்தவர் என்ற் சொன்னார்.
பாடசாலை சென்றேன் அங்க நடந்தை நினைத்தும் என் அறியாமையை நினைத்தும் அவசரபுத்தியை நினைத்தும் கவலையுற்றேன் பாடசாலை நிறைவுற்றதும் மீண்டும் பஸ்சில் ஏறி வீடு வரும் பொழுது எனக்கு காசு மாற்றி தந்தவரை பார்த்தேன் ஆனால் அவர் என்னை பார்த்தும் பார்க்காமலும் ஒரு வெளிநாட்டவருடன் சரளமாக ஆங்கிலம் பேசி வருவதையும் அவர் தமிழர்களின் கலாச்சாரத்தை பற்றி பேசியும் வந்தார் .நான் பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து அதை கேட்டு வந்தேன் .அதற்கு அந்த வெள்ளகாரன் உடன் கட்டை ஏறுவது பற்றி கேட்ட போது அது ஒரு காலத்தில் இருந்தது ஆனால் இப்ப இல்லை என்றும் அவருக்கு தமிழர்களின் கலை கலாச்சாரம் பற்றியும் சொல்லியும் வந்தார் .
நான் என் மனதுக்குள் அவரிடம் இவ்வளவு திறமை இருக்குமா என நினைத்துக்கூட பார்க்க வில்லை நான் அவரிடம் எப்படி என் பெயர் உங்களுக்கு தெரியும் என கேட்க உன் அண்ணனுடன் நான் வெளிநாட்டில் வேலை செய்த நான் அப்ப உங்களது குடும்ப போட்டோவை உங்க அண்ணன் காட்டியிருக்கார் என்று சொல்ல ஓ நீங்கதானா? மதன் என்றாள் ஓம் என்று சொல்ல நீங்க நன்றாக படித்தவர் என்று அண்ணா சொன்னாரே ஓம் நல்லா படித்தால் இங்க வேலை கிடைக்காதே இப்ப நான் ஒரு பாடசாலையில் சாதாரண பியுனாக வேலை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர் இறங்கி செல்கிறார் நானும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவத்துடன் வீடு செல்கிறேன்
பெயர்கள் கற்பனை
முனிவர் ஜீ

Similar topics
» சின்னச் ...சின்ன
» சின்ன சின்ன கதைகள்
» சின்ன சிரிப்பு கதைகள்
» சின்ன கதைகள் சிறுவர்களுக்கு
» பெண்களுக்கு தேவை .சின்னச் சின்ன விஷயங்களில் கவனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum