தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சமூகத்தில் இன்றைய பெண்களின் நிலை!!

Go down

சமூகத்தில் இன்றைய பெண்களின் நிலை!! Empty சமூகத்தில் இன்றைய பெண்களின் நிலை!!

Post by varun19 Tue Mar 15, 2016 8:39 pm

[size=13]இதைப்பற்றி எழுத வேண்டுமென்று என்னுள் நீண்ட நாட்களாக எண்ணமிருந்தது. பெண் என்பவள் யார்? அவள் இச்சமூகத்தில் எவ்விதம் நடத்தப்படுகிறாள்?
 [/size]
[justify][size=13]''வெளியே போகும் போது பார்த்துப் போய்ட்டு வாமா, டியூசனுக்கு தனியா போகாதே, கடைக்குப் போனா தம்பியைக் கூட்டிட்டு போ. நைட் லேட்டா வராதே, சாயந்திரம் லேட்டானா ஒரு போன் பண்ணி சொல்லு! என்று ஒவ்வொரு பெற்றோரும் இன்று தங்கள் வீட்டு பெண்களிடம் கூறுவது இயல்பாக உள்ளது. இன்றைய சூழலில் ஒரு பெண் தனியே வெளியில் செல்வதென்பது எவ்வளவு கடினம். அப்படி வெளியே செல்லும் பெண் வீட்டிற்குத் திரும்பும் வரையில் அந்தப் பெற்றோர் அடையும் தவிப்பும், பயமும், வேதனையும் எண்ணிலடங்கா![/size][/justify]


[center][url=https://2.bp.blogspot.com/-zfzBuv-CCOE/VtWlj0LRcAI/AAAAAAAAAoI/aYmmUNCMfNI/s1600/1409837136000-EPA-INDIA-CRIME-PROTEST.jpg][img(200px,150px)][You must be registered and logged in to see this link.]



[justify][size=13]இன்றைய  தேதியில் விடுமுறைக்காக சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து தங்கள் ஊருக்குச் செல்லும் பெண்களின் நிலை - பயமும் பாதுகாப்பின்மையும் அவர்களுடன் பயணித்துக் கொண்டே இருக்கும். ரயிலில் ஸ்லீபர் க்லாஸ் முன்பதிவு செய்தும் இரவில் உறங்காமல் கண் விழித்து பிரயாணிக்கும் பெண்களுக்கு அமைதியென்பதே இருப்பதில்லை. [/size][/justify]



[justify][size=13]Play school, LKG செல்லும் குழந்தைகளிடம் 'good touch and bad touch' பற்றி கவுன்சிலிங் செய்வது இன்று கட்டாயமாக உள்ளது. என்ன உலகமடா இது!! அந்த சிறுவயதிலேயே ஆண் பற்றிய ஒரு கசப்பான எண்ணமும், பயமும் அவளுக்குள் விதைக்கப்படுகிறது. தன் தந்தை, சித்தப்பா, மாமா, உறவினர், பக்கத்து வீடு என்று தன்னைச் சுற்றியிருக்கும் ஒவ்வொரு ஆணிடமும் அவளின் எச்சரிக்கை அவசியமாகிறது. [/size][/justify]


[justify][size=13]நம் அனைவரையும்  பாதித்த ஒரு நிகழ்வு - கொடூரமான பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டு, துடித்துத் துடித்துச் சாவைத் தழுவிய நிர்பயா.[/size][/justify]

[justify][size=13]கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் அந்த இளம்பெண் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்டார். அந்த ஆறு குற்றவாளிகளில் ஒரு சிறாரும் அடங்கும்.[/size][/justify]

[justify][size=13]பெண்ணைப் போற்றி வணங்கிய நம் தாயகம் இன்று அந்தத் தாயின் கருவறையை அழித்துவருகிறது. GDP, technology, smart city and internet for all என்று ஒருபுறம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்குக்  கொண்டே செல்கிறது. பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு, வன்கொடுமை, பெண் கடத்தல், ஆசிட் தாக்குதல்கள், மானபங்கம் - இதுவே இன்றைய செய்தித்தாள்களில் நீங்காமல் இடம் பெற்றிருக்கும் செய்தி.. இங்கு ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். இன்னும் கொடுமை என்னவென்றால் ஒரு வயது குழந்தையும் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகிறது, கற்பனை செய்வதுகூடக் கடினமாக இருக்கிறது. போலீஸ் நிலையத்திலும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் பெண்களுக்கும், ஸ்கூல், காலேஜ் என்று அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்தவண்ணம் உள்ளன.[/size][/justify]

[justify][size=13]நிர்பயா வழக்கில் தொடர்புடைய‌ முக்கிய‌ குற்றவாளிகளில் ஒருவன் கூறியது பின்வருமாறு;[/size][/justify]

[justify][size=13]''“ஏன் அந்தப் பெண் இரவு 8 மணிக்கு மேல் தனியாக ஒரு ஆணுடன் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும். அதற்காகத் தான் நாங்கள் அவளுக்குத் தண்டனை கொடுத்தோம்''. [/size][/justify]
[justify][size=13]''இரவில் வேற்று ஆண் ஒருவனுடன் வெளியில் வரும் பெண் ஒழுக்கமற்றவளாகத்தான் இருப்பாள்''. ''பாலியல் பலாத்காரத்திற்கு ஆணைவிட பெண்ணே முக்கிய காரணமாகிறாள்''.   “அந்தப் பெண் எங்களை எதிர்த்துப் போராடாமல் எங்களை அனுசரித்து நடந்துகொண்டிருந்தால், நாங்கள் அந்தப் பெண்ணைக் கொல்லாமல் விட்டிருப்போம்”.[/size][/justify]
[justify][size=13]“பெண்ணும் ஆணும் சமமல்ல‌. அவர்கள் வீட்டு வேலை செய்வதில் மட்டுமே ஈடுபட வேண்டும். டிஸ்கொதேவுக்குப் போவது, அரைகுறையாக ஆடை அணிந்து தவறுகள் செய்வது என்று இந்தக்காலப் பெண்கள் படுமோசம். 20 சதவிகித பெண்களே நல்லவர்கள்” [/size][/justify]

[justify][size=13]குற்றவாளியின் மனைவி கூறியது, “என் கணவர் தவறு செய்திருக்க மாட்டார். அவர் இறந்தால் என் பிள்ளையின் கழுத்தை நெரித்துக்கொன்றுவிட்டு நானும் இறந்து விடுவேன்”. இதே  நிலை இப்பெண்ணிற்கு ஏற்பட்டிருந்தால் அவள் குடும்பம் குற்றவாளிகளை மன்னித்து மறந்திருக்குமா?[/size][/justify]

[justify][size=13]சிறார் குற்றவாளியின் தாயின் பதில், ''என் பையன் அந்தத் தப்ப செய்திருக்க மாட்டான்''. தண்டணைக் காலம் முடிந்து இன்று சிறார் குற்றவாளி சுதந்திரமாகச்  சுற்றுகிறான். நமது  சட்டத்தில் அவனுக்கு எந்தவொரு கடுமையான தண்டனையும் வழங்கப்படவில்லை.[/size][/justify]

[justify][size=13]குற்றவாளிகளுக்காக வாதாடிய (போராடிய) வழக்கறிஞர் கூறியது, “நம் சமூகத்தில் ஒருபோதும் பெண்களை தெரியாத ஆண்களுடன் மாலை 6.30 / 7.30 /  8.30  மணிக்கு மேல் வெளியில் விடுவதே இல்லை. இந்தியாவில் மிகச் சிறந்த கலாச்சாரத்தை கட்டி வைத்திருக்கிறோம். என் தங்கையோ, மகளோ இது போல் திருமணத்திற்கு முன் இருந்தால், குடும்பத்தினர் முன்னிலையில் தீ வைத்து எரித்து விடுவேன்”. [/size][/justify]

[justify][size=13]“பெண் மென்மையானவர்கள்,  வைரத்தை போன்றவர்கள். அவளைக் கைக்குள் பொதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவளை இப்படித் தெருவில் போட்டால் நாய்க் கவ்விக்கொண்டுதான் போகும். ஆணும், பெண்ணும் நண்பர்களாக இருக்கவே முடியாது. இரவில் என் வீட்டுப் பெண்களை வெளியே தனியாக அனுப்பிவைக்க மாட்டேன். குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்த வெளி நபர்களுடன் சுற்றுகிற பெண்கள் நல்லவர்களே இல்லை. இவர்கள் சேர்ந்து பழகினாலே அது செக்ஸ்க்குதான். நம்முடைய கலாசாரம் சிறந்த கலாசாரம். இதில் பெண்களுக்கு இடமில்லை”. இதுவே இன்று பெரும்பாலான மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது.[/size][/justify]

[justify][size=13]குற்றவாளிக்கு எதிராக வழக்கு பதிவு செய்தால் அதை எதிர்த்துப்  போராட பல வக்கீல்கள் கூட்டம் ஒருபக்கம். பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். [/size][/justify]

[justify][size=13]இதில் இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், பஸ்ஸிலிருந்து தூக்கி எறியப்பட்ட அப்பெண்ணை அருகிலிருந்த அனைவரும் வேடிக்கைப் பார்த்தார்களே தவிர எவரும் காப்பாற்றவோ உதவவோ முன் வரவில்லை. கேடு கெட்ட மனிதர்கள்!![/size][/justify]
[justify][size=13]என்னைப் பொறுத்த வரையில் - தான் செய்தது தவறே இல்லை என்று நினைப்பவர்களிடம் கருணை காட்டுவதை விட முட்டாள்தனம் வேறெதுவுமில்லை. அந்தச் சிறார் குற்றவாளிக்கு தான் செய்வது தவறு என்று தெரிந்தே  செய்திருக்கிறான், நீதிமன்றமோ சிறார் பிரிவின் கீழ் அவனை சிறையிலிருந்து விடுதலை செய்துள்ளது. [/size][/justify]

[center][url=https://3.bp.blogspot.com/-YKYjzVtTlKI/VtWlj4mpI1I/AAAAAAAAAoA/-Z1l2hn4_XI/s1600/delhi_gang_rape_1378798591_540x540.jpg][img(320px,198px)][You must be registered and logged in to see this link.]

[justify][size=13]இத்தகைய வன்செயலுக்கு குடியும் போதையும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. பணம் படைத்தவனும் வலிமையானவனும் பெண்ணைத் துன்புறுத்தலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. தனிமையிலிருக்கும் பெண்ணிடம் எது வேண்டுமானாலும் செய்யலாம், யாரும் தடுக்கமாட்டார்கள்,  அப்படியே கைது செய்யப்பட்டால் சட்டத்திலிருத்து எளிதில் விடுதலை பெறலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. [/size][/justify]

[justify][size=13]இதேபோல் இன்னும் எவ்வளவோ வக்கிரமான சம்பவங்கள் குழந்தைகளிடம் கூட நடந்து வருகின்றன. அதற்காக குழந்தைகள் மேல் இச்சமூகம் குறை சொல்லுமா - குழந்தையின் ஆடையினால் தான் அவள் துன்புறுத்தப்பட்டால் என்று !![/size][/justify]

[justify][size=13]நிர்பயா வழக்கை முன்னிறுத்தி விவாதம் நடத்தி தங்கள் TRP எண்ணை உயர்த்திய தொலைக்காட்சிகளும், நாளிதழ்களும், சமூக ஊடகங்களும் இன்று இவ்வழக்கைப் பற்றி எண்ணுவதுமில்லை, அதைப் பற்றி விவாதிப்பதுமில்லை. இத்தகைய கொடூர நிகழ்வை குடிமக்களாகிய நாமும் எளிதில் மறந்துவிட்டோம். இன்றைய சினிமாவும், ஊடகங்களும் பெண்களைக் காட்சிப் பொருளாகவே சித்தரிக்கின்றது.[/size][/justify]

[justify][size=13]இது போன்ற தீமை இன்னொரு நிர்பயாவிற்கு விளையுமுன் அதைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? இதே  நிலை நாளை நம் வீட்டுப் பெண்களுக்கு உருவாகாதா? அதைத் தடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமையல்லவா?[/size][/justify]

[justify][size=13]குழந்தையின்  பிறப்பிலிருந்தே அதனுள் ஆணாதிக்க சிந்தனையானது விதைக்கப்படுகிறது. பெண்ணின் சுதந்திரம் பறிக்கப்பட்டு ஒவ்வொரு நிலையிலும் அவள் மற்றொரு ஆணைச்  சார்ந்தே வாழவேண்டிய சூழ்நிலை உள்ளது. சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் ஆண்-பெண் இருவரும் சமம் என்ற எண்ணத்தைப் பதிய வைக்க வேண்டும். பெண்ணை சமமாக மதித்தலையும், பிறருக்குத் தீங்கிழைத்தல் தவறானதென்றும், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளனைத்தும் தண்டிக்க தக்கச் செயலென்று கற்பிக்க வேண்டும்.[/size][/justify]

[justify][size=13]ஒவ்வொரு மனிதனுக்கும் தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற பயம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அரசும் அதைச் சார்ந்த துறைகளும் சட்ட வரம்புகளை ஆராய்ந்து, தகுந்த சட்டத்தை வகுத்து எதிர்காலத்தில் இத்தகைய கொடிய செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட  வேண்டும். [/size][/justify]

[justify][size=13]பெண்ணைப் போற்றாத, ஆராதிக்காத, மதிப்பளிக்காத எந்தவொரு  சமூகமூம் அழிவின் பாதையிலே செல்லும். இன்று நாம் போற்றிப் புகழும் நம் நவீன இந்தியா அத்தகு கொடிய பாதையில் வேகமாகச்  சென்று கொண்டிருக்கிறது.  [/size][/justify]

[justify][size=13]இன்னும் இது போன்ற நிலை எத்தனை வருடங்களுக்குத் தொடரும்?

[You must be registered and logged in to see this link.]

[/size][/justify]
varun19
varun19
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 28
Points : 84
Join date : 04/03/2016
Age : 40
Location : Dubai

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum