தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



*கவிதை உளி..!*

Go down

*கவிதை உளி..!* Empty *கவிதை உளி..!*

Post by அ.இராமநாதன் Wed May 11, 2016 8:35 pm

வேண்டினான்...
வரவேண்டுமென
பயிரிட்டவன்....
வேண்டினான்..
வரக்கூடாதென
வியாபாரி...
பாரபட்சமின்றி
பெய்தது மழை..!
------------------------------------
ஒவ்வொருவரிடமும்...
அரட்டை அடிப்பான்...
தொலைகாட்சியில்
தொலைந்தே போவான்..
பெற்றவர் சொல்லும்
எந்த வேலைக்கும்..
நேரமில்லை என்பான்..!
----------------------------------------
வீடு கட்ட வாங்கிய கடன்
கட்டிய வீடு பழசாகிவிட்டது..
வட்டி மட்டும் இன்னும்...
புத்தம்புதிதாய் அசலுடன்..!
-------------------------------------------
நினைத்ததெல்லாம்...
நடந்து கொண்டிருந்தது...
தொட்டதெல்லாம் பொன்னாக..
யாரங்கே...?
என் கனவைக் கலைத்தது..!
--------------------------------------------
ஆசைகளும்..ஏக்கங்களும்..
கனவுகளும், பெருமைகளும்..
அமைதியாக அடங்கிப்
போயின கல்லறையில்...!
------------------------------------------
விழிகள் வெளி
நோக்கிப் பார்க்கிறது
மனம் உள்
நோக்கிப் போகிறது...
தூரங்கள் அறியாமலே...!
-------------------------------------------
தடைகள்....எனை நோக்கி
எய்த அம்புகள்
ஒன்றின் மேல் ஒன்றாய்..
உயரத்தில் நான்..!
-------------------------------------------
வெட்டி வெட்டி களைந்தாலும்
மீண்டும்.. துளிர்க்கும்.... புல்...!
வெறும் புல்லென வேரோடு
வெட்டாமல் விட்ட வினை..!
-----------------------------------------------
கண் ஜன்னல் மீறி
வெளி நடந்தது..
தென்னங்கீற்று பால்நிலா
பக்குவமாய் தரை விழ
யாருக்கும் தெரியாமல்..!
-----------------------------------------------
நிலம்...எரிமலை..புயல்
சீறும் மழை..பொங்கும் கடல்..
அத்தனையும் மௌனமாய்...
மனக் குமுறலின் முன்..
மண்டியிட்டு...!
------------------------------------------------
என்னைக் காக்க
எப்போதும் உனையன்றி
வேறேதும் இங்கில்லை...
மௌனமே என் துணை..!
-----------------------------------------------
நெருங்கி வாழாதோ
நேசமான உறவுகள்..
இருந்தாலும் இதயத்தில்
வெற்றிடமில்லை...!
-----------------------------------------------
எங்கும் முகமூடி
நடமாட்டம்...
நம்பாதே...போலி..!
நிழல் என்றும் துணை.!
-------------------------------------------------
அனுபவப் பாடம்
கற்றுத் திரும்பினால்
வாழ்க்கை பள்ளி
தாழிட்டது..!
-------------------------------------------------
பறக்க நினைக்கும்
போதெல்லாம்....
தரையைப் பார்க்கிறேன்.
வெட்டப்பட்ட சிறகுகள்..!
----------------------------------------------------
வாழ்வின் புதிய
அத்தியாயங்கள்
ஆரெட்டிலும்....
அரங்கேறும்...
கனவுகளாய்..!
--------------------------------------------
மன அதிர்வுகள்
வார்க்கும் வரிகள்
அடுத்த இதயத்தை
தாக்கினால் வாகை..
சூடும்.. கவிதை..!
------------------------------------------------
மௌனம் கூட
உச்சரிக்கிறது...
எங்கும் நீ..!
--------------------------------------------------
நம்பிக்கையான
நட்பு ஒன்றினால்
நேசிக்க முடிகிறது
வாழ்க்கையை..!
----------------------------------------------------
உலக மாயையில்
முகத்திரை தாங்கினால்
உயிர் தாங்குமா
போலி நாடகம்...
சாட்சி சுரண்டும்..!
----------------------------------------------------
சுற்றிலும் சுதந்திரம்
பூகம்பம் உள்ளில் ஆயினும்
புன்னகை புரியும்
மனம்..!
------------------------------------------------------
ஜெயஸ்ரீ ஷங்கர்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum