தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பூதம் காட்டிய புண்ணியவழி
Page 1 of 1
பூதம் காட்டிய புண்ணியவழி
இரண்டு நாட்கள் கோவிலுக்கு போய் வந்து,
'பச்... சாமியாவது ஒண்ணாவது...' என்று சலித்துக்
கொள்வது, ஏழெட்டு ஜோசியர்களை பார்த்து,
'ஜோசியமே பொய்...' என்று புலம்புவது, பொழுதை
எல்லாம் வீணாகப் போக்கி, 'நமக்கெல்லாம்
எங்கே நல்ல காலம் வரப் போகுது...' என்று,
விரக்தியின் விளம்பில் நிற்பது மனிதர்களின்
இயல்பு.
-
சில வினாடிகள் கூட, கஷ்டத்தை தாங்கத் தயாராக
இல்லாத நாம், நூறு ஆண்டுகளுக்கு ஆனந்தமாக
வாழ ஆசைப்படுகிறோம்.
-
கார் ஓட்டத் தெரியாவிட்டாலும், போக்குவரத்து விதிகளை
தெரிந்து கொள்வது போல், மகான்களின் வாழ்க்கையை
தெரிந்து கொள்வதன் மூலம் மனதில் அமைதி ஏற்படும்.
-
எந்நேரமும், ராம தியானத்திலேயே இருப்பவர், ராம்போலோ.
தினமும் காலையில் எழுந்து நீராடி, அனுஷ்டானம் முடிந்த பின்,
மீதியுள்ள தீர்த்தத்தை, அருகில் உள்ள மரத்தில் ஊற்றுவது அவர்
வழக்கம்.
-
இது, 12 ஆண்டுகள் தொடர்ந்தது. திடீரென்று ஒருநாள்,
ராம்போலோ எதிரில், பூதம் ஒன்று தோன்றி, 'ராம பக்தா...
குளம், ஏரி என, பல இடங்களில் உள்ள நீரையெல்லாம் அருந்தியும்,
என் தாகம் தீரவில்லை; இவ்வளவு நாட்களாக நீ வார்த்த தீர்த்தத்தால்,
என் தாகம் தீர்ந்து, சாப விமோசனம் கிடைத்தது.
என் துயர் தீர்த்த உனக்கு என்ன வேண்டும் கேள்...' என்றது.
-
'ஸ்ரீராமரை நேரில் தரிசிக்க வேண்டும்; அதுவே என் விருப்பம்...'
என்று, தன் விருப்பத்தை வெளியிட்டார், ராம்போலோ.
-
பூதமோ, 'அருகில் உள்ள வீதியில் ராமாயண உபன்யாசம் நடை
பெறுகிறது; அதை கேட்க, தினமும் முதியவர் வடிவில் வருகிறார்,
மாருதி. அவரை பிடித்தால், உன் விருப்பம் நிறைவேறும்...' என்று
சொல்லி மறைந்தது.
-
ராமாயண உபன்யாசம் நடைபெறும் இடத்திற்கு, தினமும் முதல்
ஆளாக வந்து, அனைவரும் வெளியேறிய பின், கடைசி ஆளாக
வெளியேறுவார் ஆஞ்சநேயர்.
-
பூதம் கூறிய இடத்திற்கு புறப்பட்ட ராம்போலோ, முதியவர் வடிவில்
அமர்ந்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறிந்து, அவர் அருகில்
அமர்ந்தார். ஆஞ்சநேய முதியவரோ இரு கரங்களையும் கூப்பியபடி
கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்.
-
தன் மேலாடையில், ஆஞ்சநேயரை கட்டினார், ராம்போலோ.
வழக்கப்படி, உபன்யாசம் முடிந்து அனைவரும் வெளியேறியவுடன்,
முதியவரும் வெளியேறத் துவங்கினார். கூடவே, ராம்போலோவும்
புறப்பட்டார்.
-
விவரம் புரிந்த முதியவர், வேகமாக நடக்கத் துவங்கினார்.
சில வினாடிகளில், முதியவர் ஓட ஆரம்பித்தார். அவருடைய
வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், விழுந்து, எழுந்து ஓடினார்,
ராம்போலோ.
-
உடம்பெல்லாம் காயங்கள்; ரத்தம் வெளியேற துவங்கியது.
அந்நிலையிலும், அவர் தன் பிடியை விடவில்லை.
-
கடைசியில், முதியவர் மனமிரங்கி, தன் நிஜ வடிவான ஆஞ்சநேய
வடிவத்தை காண்பித்து, 'ராம்போலோ... உன் விடாமுயற்சியும், தீவிர
பக்தியும், உண்மையிலேயே என்னைக் கட்டிப் போட்டு விட்டன;
வேண்டியதைக் கேள்...' என்றார்.
-
'அஞ்சனை மைந்தா... அடியேன் ஸ்ரீராம தரிசனம் பெற ஆசைப்
படுகிறேன்...' என்றார். ஆஞ்சநேயர் அருளால் ஸ்ரீராமர் அவருக்கு
தரிசனம் தந்து, 'பக்தா... என் வரலாற்றை நீ உனக்கு தெரிந்த
மொழியில் எளிமையாக எழுது; அது என்றென்றும் நிலைத்து நிற்கும்...'
என்று ஆசி கூறி, மறைந்தார்.
-
ராம்போலோவும் அப்படியே எழுதி முடித்தார். பக்தி மயமான
அந்நூல், 'ராம் சரிதமானஸ்' எனப்பட்டது.
இந்நூலை எழுதிய ராம்போலோவே, துளசி ராமாயணத்தை
எழுதிய துளசிதாசர்!
-
விடாமுயற்சியும், தீவிர பக்தியும் இருந்தால், தெய்வம் நேராக
வந்து தரிசனம் அளிக்கும்.
-
--------------------------------------
பி.என்.பரசுராமன்
வாரமலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பூதம் சொன்ன கதை
» சாமி பூதம்
» ஆறாவது.. பூதம்... காதல்..!
» பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம் - ருத்ரா
» அண்ணன் காட்டிய வழியம்மா
» சாமி பூதம்
» ஆறாவது.. பூதம்... காதல்..!
» பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம் - ருத்ரா
» அண்ணன் காட்டிய வழியம்மா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum