தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தீப்பொறி – தெய்வநெறி ! நூல் ஆசிரியர் : கவிச்சுடர் புதுமைக்கோமான் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

தீப்பொறி – தெய்வநெறி !  நூல் ஆசிரியர் : கவிச்சுடர் புதுமைக்கோமான் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty தீப்பொறி – தெய்வநெறி ! நூல் ஆசிரியர் : கவிச்சுடர் புதுமைக்கோமான் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Thu Jun 16, 2016 10:27 am

தீப்பொறி – தெய்வநெறி !

நூல் ஆசிரியர் : கவிச்சுடர் புதுமைக்கோமான் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

புதுமை பதிப்பகம், 343, வது ஸ்கொயர், ஆஸ்டின் டவுன், பெங்களூரு – 560 047. 
*****
       நூல் ஆசிரியர் கவிச்சுடர் புதுமைக் கோமான் அவர்கள் தள்ளாத வயதிலும் தளராத தேனீயாக உழைத்து வருபவர்.  பாவலர் இராம. இளங்கோவன் அவர்களுடன் பெங்களூரு அலுவலகம் வந்து என்னை சந்தித்து மகிழ்ந்தவர். இல்லம் சென்று உடன் இந்நூலை அஞ்சலில் அனுப்பி வைத்தார்.  பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திர கவியரங்கில் தவறாமல் கலந்து கொண்டு கவிதை பாடும் வல்லவர்.  கவிதை உறவு உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கவிதை எழுதி வருபவர்.

       கவிக்குரிசில் இரா. பெருமாள் இ.ஆ.ப., கவிமாமணி தேனி.ரா. பாண்டியன், யோகினி சிவசக்தி லலிதாம்பிகை, தேனி. ரா. உதயகுமார், கவிமலர் வ. மலர்மன்ன்ன் ஆகியோரின் அணிந்துரைகள் நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அமைந்துள்ளன.

       ‘தீப்பொறி’ என்ற பகுதியில் 47 தலைப்புகளில் கவிதையும், ‘தெய்வநெறி’ என்ற பகுதியில் 32 தலைப்புகளில் கவிதையும் எழுதி உள்ளார். நூல் ஆசிரியர் கவிச்சுடர் புதுமைக் கோமான் அவர்கள் சிறந்த மரபுக்கவிஞர் என்பதால் மரபு மாறாமல் மிக நுட்பமாக கவிதை வடித்துள்ளார். 

 மரபுக்கவிதை வாசிப்பது சுகமான அனுபவம்.  பழைய திரைப்படப்பாடல்கள் கேட்டு ரசிப்பதைப் போன்ற அலாதியான இன்பம் தருபவை.  மரபுக்கவிதை தொடர்ந்து எழுதி வரும் வெகுசிலரில் சிகரமானவர் இவர். இலக்கணத்தோடு கருத்துக்கும் முக்கியத்துவம் தந்து பல்வேறு தலைப்புகளில் கவிதை எழுதி உள்ளார்.

       உலகின் முதல் மொழியான செம்மொழி தமிழ்மொழி பற்றிய முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

       மொழிக்கெல்லாம் ஒளிவிளக்கு!

       செங்கதிரின் வெங்கதிரைத் தானம் பெற்றுச்
       சிற்றளவே ஒளியளித்துச் சிறப்புற் றோங்கும்
       திங்களைப் போல், மங்காது மேன்மை யுற்ற
       தீந்தமிழின் தயவால் தான் பிற்கா லத்தில்
       தங்கமுலாம் பூசினாற்போல் திகழு கின்ற
       சில மொழிகள் பிறப்பெடுத்துச் சிறக்கக் கண்டோம்
       எங்கள் தமிழ் இன்றிருக்கும் மொழிகட் கும்பின்
       எழப்போகும் மொழிகட்கும் ஒளிவி ளக்கு.

       இதுவரை உருவான மொழிகளுக்கும், இனிவரப்போகும் மொழிகளுக்கும் தாய்மொழி, தமிழ்மொழி என்பதை மிக அழகாக எடுத்து இயம்பி உள்ளார். பாராட்டுக்கள்.

       மரபுக்கவிதை எழுதினால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் கவிதையாலேயே எழுதி உள்ளார்.  கவிதையில் இலக்கணம் மட்டும் இருந்தால் போதாது, உணர்ச்சிமிக்க கருத்துக்கள் இருக்க வேண்டும்.  அப்படி இருந்தால் தான் கவிதை என்கிறார். நூலில் தலைப்பில் உள்ள கவிதை.

       தீப்பொறி !

       பாப்புனையும் பற்றுடைய கவிஞர் பல்லோர்
              பத்திரிகை தனில்தம்பேர் பதிப்ப தற்கே
       யாப்பறிவும், யாருக்குமொரு பயனு மில்லா
              பாப்புனைந்து பொழுதைவீ ணாக்கு கின்றார்;
       தீப்பொறியாய்த் தெறிக்கின்ற சீர்த்திரு த்த
              தீம்பாவாய் மரபோடு வரைதல் வேண்டும்!
       மூப்பெய்தி மெய்தளர்ந்த முதிய வர்க்கும்
              முறுக்கேற்றும் விதமாக வடிக்க வேண்டும்!

       இன்றைய அரசியலில் அன்றைய அரசியல் போல தூய்மை இல்லை வாய்மை இல்லை, அறம் இல்லை. காமராசர், கக்கன் போன்ற நல்லவர்கள் இல்லை.  இன்றைய அரசியல் நிலையை கவிதையில் படம் பிடித்துக் காட்டி உள்ளார்.

       ஒரே குட்டை மட்டைகள்!

       கோடிகளில் செல்வங்கள் குவித்து வைத்தே
              குதூகலமாய வாழுகின்ற குபேர மன்னர்
       கூடுதலாய செல்வங்கள் குவிக்கும் வாஞ்சைக்
              கொண்டோராய் அரசியலில் குதிக்கின் றார்கள்;
       நாடிதனின் கேடொழித்து நலிந்தோர்க் கெல்லாம்
              நலஞ்சேர்க்கும் நோக்கத்தால் அல்ல! அல்ல!
       பாடுபடும் பஞ்சையரின் துயர்து டைத்துப்
              பசுமையாய் வாழவைக்கும் குறிக்கோள் இல்லை!

       ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

       வழக்காடு மன்றத்தில் வழக்காடுவது போல நீள்கவிதை வித்தியாசமாக எழுதி உள்ளார்.  பாராட்டுகள். விலைமகள் புலம்பி நீதி கேட்டது போல வடித்துள்ளார்.  பெண்ணுரிமை பேசி உள்ளார்.
       பாருக்குள்ளே நல்ல நாடு என்று தலைப்பிட்டு வஞ்சப்புகழ்ச்சி அணியில் கவிதை வடித்துள்ளார்.  நாட்டில் நடக்கும் அவலம் கண்டு பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்து உணர்ச்சிமிக்க பல கவிதைகள் வடித்து உள்ளார்.  பாராட்டுகள்.

       பாருக்குள் நல்ல நாடு !

       வாடி வதையும் மக்களின் வாழ்வை
              வளமாய் ஆக்கும் நோக்கம் – இன்றி
       கோடிக் கணக்கில் பொருளைக் குவிக்கும்
              கொடுமதி நெஞ்சில் தேக்கி – மிக்கக்
       கேடுறும் அரசியல் சூதாட் டத்தில்
              கொள்ளை யடிக்க விரைந்தார் – இந்த
       நாடுறும் நலிவை நாழிகை யேனும்
              நினைவில் கொள்ள மறந்தார்.

       நூலில் உள்ள கவிதைகளில் அறச்சீற்றம் உள்ளது.
       ஒப்பற்ற உழைப்பினைப் போற்றி கவிதை வடித்துள்ளார்.  உழைப்பின் உன்னதத்தை உணர்த்தி உள்ளார்.

       உழைப்பே உயர்வு தரும் !

       பொருளொன்று இருக்கின்ற இடம்தெ ரிந்தும்
       பெறுகின்ற முயற்சியினை மேற்கொள் ளாமல்
       விருதாவாய்ப் பொருதொழித்தே இருத்தல் விட்டு
       விருப்பாக்ச் செயலாற்ற சிறக்கும் வாழ்வு!

       கவிதைகளில் கோபம் காட்டுகின்றார்.  கேள்வி கேட்கின்றார்.  அவல நிலை குறித்து ஆதங்கம் உணர்த்துகின்றார்.

       விடுதலைபெற் ரறுபத்து மூன்றாண்டாகி
       வியப்பூட்டும் முன்னேற்றம் என்ன கண்டோம்?
       இடருற்றோர் வாழ்வினிலே விடியல் இல்லை ;
       இன்னமும் படிப்பறியார் பல்லோர் உள்ளார் !

      நூல் ஆசிரியர் கவிச்சுடர் புதுமைக்கோமான் அவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போல உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் போல மரபுக்கவிதையாலே தமிழ்இன உணர்வூட்டி, விழிப்புணர்வு விதைத்து உள்ளார்.  பாராட்டுகள்.  வயதால் முதிர்ந்திட்ட போதும் கவிதையால் இளமையாக உள்ளார் நூலாசிரியர்.
****
.
http://eraeravi.blogspot.in/2016/05/91.html

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum