தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அழுத்தம் கொடுத்து அழுத்தம் போக்கும் சிகிச்சை!

Go down

அழுத்தம் கொடுத்து அழுத்தம் போக்கும் சிகிச்சை! Empty அழுத்தம் கொடுத்து அழுத்தம் போக்கும் சிகிச்சை!

Post by அ.இராமநாதன் Sun Jul 31, 2016 9:31 am

ஓல்டு இஸ் கோல்டு!

ஸ்ட்ரெஸ்...

-
அழுத்தம் கொடுத்து அழுத்தம் போக்கும் சிகிச்சை! Ht44261


இந்த வார்த்தையை உச்சரிக்காதவர்களே இல்லை. ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தத்தைக் குறைக்க, பாதங்களைத் தொட்டுச் செய்கிற ரெஃப்ளெக்சாலஜி சிகிச்சை முறை பலனளிக்கும் என்கிறார் ரெஃப்ளெக்சாலஜி சிறப்பு சிகிச்சை நிபுணர் கார்த்திக். ``உடல் உறுப்புகளின் பிம்பத்தை பிரதிபலிக்கும் பாதம் மற்றும் கைகளில் உள்ள மையப் புள்ளிகளில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட உறுப்புகளை இயங்கச் செய்வதே ‘ரெஃப்ளெக்சாலஜி’ என்கிற கார்த்திக், அதன் சிறப்புகளைப் பற்றிப் பேசுகிறார். 

“இது  புதிதாக  வந்த  சிகிச்சை இல்லை. 5 ஆயிரம்  ஆண்டுகளுக்கு  முன்பே தாய்லாந்து, சீனா, எகிப்து போன்ற கிழக்கத்திய நாடுகளில் ‘ரெஃப்ளெக்சாலஜி’ சிகிச்சை முறையை பின்பற்றி வந்தார்கள். கி.பி.1017ல் அதிகாரப்பூர்வமாக டாக்டர் வாங்வேய் அங்கீகரித்த பிறகு, இந்தியாவில் முதல் முறையாக 2002ம் ஆண்டில் இந்த சிகிச்சை முறை அறிமுகமானது. நான் மலேசியாவில் உள்ள புசெட் ரெஃப்ளெக்சாலஜி  சினாகா இன்ஸ்டிடியூட்டி  (Pusat Reflexology Cinaga Institute) ல் முறைப்படி இந்த சிகிச்சை முறையைக் கற்றுக் கொண்டேன். 

எனக்கு இக்கலையை பயிற்றுவித்தவர் பார்வை இழந்தவர். சீனர் அல்லாத எனக்கு இந்த சிகிச்சையைக் கற்றுத் தர முதலில் அவர் சம்மதிக்கவில்லை. இடைவிடாது தொடர்ந்து அவரிடம் சென்று அவரை சம்மதிக்க வைத்தேன். இந்தியாவில் அறிமுகமான அந்த வருடத்திலேயே சென்னையில், ரெஃப்ளெக்சாலஜி சிகிச்சையை அறிமுகப்படுத்தினேன். மனித உடலானது, உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளை தனக்குத்தானே சரிசெய்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் பெற்றது. ரெஃப்ளெக்சாலஜி சிகிச்சை முறையில் நோயை குணப்படுத்தும் ஆற்றலைத் தூண்டி உடல் மீண்டும் தன்னை மறுஉருவாக்கம் செய்து கொள்ள ஊக்குவிக்கிறது. 

உடல் உள்ளுறுப்புகளோடு தொடர்புடைய கால் மற்றும் கைகளில் உள்ள புள்ளிகளை தூண்டும் அறிவியல்தான் இது. இப்புள்ளிகளில் கொடுக்கப்படும் அழுத்தம் பாதிக்கப்பட்ட பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், நோயிலிருந்து விரைவில் குணமடைய முடிகிறது. அதேநேரம், உடலின் ஒவ்வொரு உறுப்புகளினூடே ஊட்டச்சத்துகள், ஆக்சிஜன், ஹார்மோன்கள், ஆன்ட்டிபாடிகள் மற்றும் கழிவுப் பொருட்கள் போக்குவரத்துக்கு ரத்த ஓட்டம் மிகவும் அவசியம். ரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது நரம்பு மண்டலப்பகுதிகளிலும், அதன் தொடர்பான உறுப்புகளிலும் இறுக்கம் குறைவதால், உடலோடு, மனம், உணர்வு மற்றும் ஆன்மாவுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது. இதனால் இளமையான தோற்றத்தை திரும்பப் பெறலாம்.

இன்று ஐ.டி, மார்க்கெட்டிங் துறைகளில் இருப்பவர்கள் மட்டுமில்லை பெரும்பாலும் அனைவருமே மன அழுத்தம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். அதிகப்படியான மன அழுத்தமே, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் வரக் காரணமாகிறது. இவர்களுக்கு இச்சிகிச்சை நல்ல பலனளிக்கக்கூடியது. தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மனப்பதற்றத்தை குறைத்து நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள உதவும். இப்போது அனைத்து வயதினரும் தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, அசிடிட்டி, செரிமானமின்மை கோளாறு களால் அவதிப்படுவதைப் பார்க்கிறோம். இவர்களுக்கும் பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு, மாதவிடாய் கோளாறுகளுக்கும் சிறந்தது.

வலது பாதமும், இடது பாதமும் முறையே உடலின் வலது மற்றும் இடது பக்கங்களோடு தொடர்புடையவை. உள்பாதங்கள் வயிறு, சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கணையத்தோடு இணைபவை. பெருவிரல் தலை, கழுத்தோடு ஒத்துள்ளவை. பாதத்தின் பந்துப்பகுதி, தோள் களோடும், குதிகால் இடுப்போடும் தொடர்புடையது. உடலின் வெளி உறுப்புகளான கை, கால், மூட்டுகள் மற்றும் எலும்பு தசைநார்கள் பாதங்களின் வெளிப்புற ஓரங்களோடு இணைபவை. 

இப்படி முக்கியமான உள் உறுப்புகள் அனைத்தும் பாதப்புள்ளிகளுடன் இணைந்திருப்பதால், பாதங்களில் அளிக்கப் படும் மசாஜ் மூலம் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ், டான்சில்ஸ் மற்றும் புற்று நோய் போன்ற எல்லாவிதமான நோய்களுக்கும் சிறந்ததாக ரெஃப்ளெக்சாலஜி சிகிச்சையை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்’’ என்கிறார் கார்த்திக்.

- இந்துமதி

படங்கள்: ஆர்.கோபால் 

நன்றி குங்குமம் டாக்டர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum