தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்!
Page 1 of 1
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்!
நன்னூலார், ஒரு நல்ல நூலுக்கு இருக்க வேண்டிய பத்து வகையான அழகுகளைப் பட்டியல் இடும்போது, முதலாவதாகச் சுருங்கச் சொல்லலைக் குறிப்பிடுவார். அடுத்து, விளங்க வைத்தலை இரண்டாவது அழகாகச் சுட்டுவார். கவிதை உலகிலும் நெடுங்கவிதைகளை விட, குறுங்கவிதைகளே ஆற்றலும் வலிமையும் மிக்கனவாக விளங்குகின்றன. மக்களுக்கு அவை எளிதில் சென்று சேருவதோடு, அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவனவாகவும் திகழ்கின்றன. இவ்வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க சில குறுங்கவிதைகள் குறித்து ஈண்டுக் காண்போம்.
÷சுஜாதா ஒரு சிறந்த புனைகதை எழுத்தாளர்; அறிவியல் புனைகதை உலகில் தடம் பதித்த படைப்பாளி என்பது எல்லோருக்கும் தெரியும்; ஆனால், அவர் ஒரு நல்ல புதுக்கவிஞரும் ஆவார். "நைலான் ரதங்கள்' என்னும் தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள கவிதைத் தொகுப்பு இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. சுஜாதாவின் கவித்திறனைப் பறைசாற்றும் குறுங்கவிதை ஒன்று.
"சந்திரனில் இறங்குமுன்
சந்தேகம் வந்தது
வீட்டை விட்டுக் கிளம்புமுன்
பூட்டினேனா?'
÷விண்வெளிப் பயணம் மேற்கொண்டு இறங்குவது வேண்டுமானால் சந்திர மண்டலத்திற்கு என்று இருக்கலாம்; ஆனால், மனிதனுக்கு - அவன் விண்வெளி விஞ்ஞானியே ஆனாலும், வரும் சந்தேகம் என்னவோ வீட்டளவில்தான்! மனித மனத்தின் மறுபக்கத்தினை இயல்பான மொழியில் - முறையில் பதிவு செய்திருக்கும் அற்புதமான கவிதை இது!
÷"அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர்' என ஓர் அழகுத் தொடர் சங்க இலக்கியத்தில் உண்டு. அழகிய சொற்களைத் தேர்ந்து, அவற்றை நுண்ணிய முறையில் ஆளும் வல்லமை படைத்தவர்கள் கவிஞர்கள் ஆவர். இன்றைய புதுக்கவிஞர்களுள் சிலர் இவ் வல்லமை கைவரப் பெற்றவர்களாக உள்ளனர். நெஞ்சை அள்ளும் ஓர் எடுத்துக்காட்டு:
"நீலக் குழல் விளக்கில்
முட்டி முட்டிப் பால் குடிக்கின்றன
விட்டில் பூச்சிகள்'
÷இனிமேல், நீலக்குழல் விளக்கில் விட்டில் பூச்சிகள் முட்டி முட்டி நிற்கும் காட்சியைக் காணும் போதெல்லாம், பாலகுமாரனின் அழகிய இக்குறுங்கவிதை நம் நினைவுக்கு மோனையைப் போல ஓடோடி வந்துவிடும். "முட்டி முட்டிப் பால் குடிக்கின்றன' என்பதில் துலங்கும் கவிஞரின் தற்குறிப்பு - தனித்திறன் - நனி நன்று.
÷அதிரடியான வினாக்களால் எதிர்ப்புக் குரல் எழுப்புவது - கலகம் விளைவிப்பது இன்றைய புதுக்கவிதைகளின் உயிர்ப் பண்பாகும். "உழைத்தால் உயரலாம்' என்பது காலங்காலமாக நாட்டில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் சொல்லிவரும் ஒரு கொள்கை முழக்கம்; இதுவே கவிஞர் நீலமணியின் கை வண்ணத்தில் தெறிப்பான ஒரு குறுங்கவிதையாக வெளிப்பட்டுள்ளது.
"உழைத்தால் உயரலாம்
உழைத்தால் உயரலாம்...
அது சரி,
யார் உழைத்தால்
யார் உயரலாம்?'
÷மரபுக் கவிதை, வசன கவிதை, புதுக்கவிதை என்னும் முத்துறைகளிலும் முத்திரை பதித்த கவிஞர் மீரா. எதையும் தற்திறன் (ஞழ்ண்ஞ்ண்ய்ஹப்ண்ற்ஹ்) மிளிரக் கூறுவது அவரது ஆளுமைப் பண்பு. ஜப்பானியர்கள் படைத்த புகழ் பெற்ற கவிதை வடிவம் "ஹைகூ'. மீராவோ தமிழ் மண்ணுக்கும் பண்புக்கும் ஏற்பக் "குக்கூ' என்னும் புதியதொரு கவிதை வடிவத்தைப் புனைந்துள்ளார். தத்துவ மணம் கமழும் மீராவின் சின்னஞ்சிறிய குக்கூ ஒன்று:
"வீடு கட்டினேன்
சுடுகாட்டுக் கெதிரில்
எந்த நேரமும்
விடைபெறலாம் எளிதில்'
÷அரிய கருத்தை, எளிய மொழியில், அழகிய முறையில் புலப்படுத்துவதில்தான் கவிதைப் படைப்பு முழுவெற்றி பெறும் என்பது உண்மை என்றால், அதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு இச்சிறு கவிதை எனலாம்.
÷சுருங்கக் கூறின், உருவத்தில் "சுருக்'; உள்ளடக்கத்தில் "நறுக்'; உத்தியில் "சுரீர்'; மொழியில் "பளிச்'- இவையே இன்றைய குறுங்கவிதைகளின் பண்பும் பயனும் எனலாம்.
-பேரா. இரா. மோகன்
தமிழ்மணி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» குறுங்கவிதைகள்...!
» தகடுகளில் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய உருவங்கள்
» குறுங்கவிதைகள்
» உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி
» கரங்கள்’ எனும் மூலதனம் - குறுங்கவிதைகள்
» தகடுகளில் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய உருவங்கள்
» குறுங்கவிதைகள்
» உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி
» கரங்கள்’ எனும் மூலதனம் - குறுங்கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum