தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெண்கள் மனசு வச்சா எதையும் சாதிக்கலாம்

Go down

பெண்கள் மனசு வச்சா எதையும் சாதிக்கலாம் Empty பெண்கள் மனசு வச்சா எதையும் சாதிக்கலாம்

Post by அ.இராமநாதன் Thu Aug 25, 2016 11:26 pm

தஷி மாலிக் - நுங்ஷி மாலிக்

இமயம் தொட்ட எவரெஸ்ட் இரட்டையர்

எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்த உலகின் முதல் இரட்டையர் என்கிற பெருமைக்கு உரியவர்கள் தஷி மாலிக் - நுங்ஷி மாலிக் சகோதரிகள். சாதனையாளர்களை சிஸ்டர்ஸ் ஸ்பெஷல் பேட்டிக்காக அணுகினால், உடனே டபுள் ஓகே. சொல்கிறார்கள். கேள்விகளை உள்வாங்கி இருவரும் தனித்தனியே பதிலளிக்கிற பாங்கு சுவாரஸ்யமாக இருக்கிறது!
பெண்கள் மனசு வச்சா எதையும் சாதிக்கலாம் 8
``அப்பாவுக்கு ஹரியானாவுல உள்ள சோனிப்பட் கிராமம்தான் பூர்வீகம். அம்மாவுக்கு டேராடூன். நாங்க பிறந்ததும் எங்களுக்கு அகிதா, நிகிதானுதான் பேர் வச்சாங்க. ஸ்கூல் ரெக்கார்டை தவிர வேற எங்கேயும் அந்த பேர் யாருக்கும் தெரியாதுங்கிறதால எங்களோட செல்லப் பேரான தஷி, நுங்ஷியையே மாத்திட்டாங்க...’’ என்கிறார் தஷி.

``தஷின்னா திபெத்தியன்ல அதிர்ஷ்டம்னு அர்த்தம். நுங்ஷின்னா மணிப்புரியில அன்புனு அர்த்தம். பேருக்கேத்த படியே அதிர்ஷ்டமும் அன்பும் சேர்ந்தவங்க நாங்க...’’  என்கிறார் நுங்ஷி. அழகான ஆங்கிலத்தில் அமர்க்களமாக ஆரம்பிக்கிறது இரட்டையரின் அரட்டை! ``ட்வின்ஸா இருக்கிறதுங்கிறது ரொம்ப ஸ்பெஷல் ஃபீலிங். பெரிசா எதையும் சாதிக்கலைனாலும் எல்லாரோட பார்வையும் பாராட்டும் நம்ம மேலதான் இருக்கும். பத்தாயிரம் பிறப்புகள்ல ஒண்ணு ட்வின்ஸா இருக்கிறதா சொல்றாங்க. 

அந்த வகையில நாங்க ஆசீர்வதிக்கப்பட்டவங்க. அதையும் தாண்டி, ஆண்களோட ஆதிக்கம் நிறைஞ்ச ஒரு சாகசத் துறையில முதல் இரட்டையரா பல சாதனைகளைச் செய்திருக்கோம்கிறது எவ்வளவு பெரிய பெருமை?’’ - இரட்டையராகப் பிறந்ததன் இன்பம் பகிர்கிறவர்கள், தங்களது சாகசப் பயணத்தின் ஆரம்பத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். ``ஆரம்பத்துல எங்க ரெண்டு பேருக்குமே மலையேற்ற ஆர்வம்கிறது கனவுலகூட இருந்ததில்லை


Last edited by அ.இராமநாதன் on Thu Aug 25, 2016 11:28 pm; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பெண்கள் மனசு வச்சா எதையும் சாதிக்கலாம் Empty Re: பெண்கள் மனசு வச்சா எதையும் சாதிக்கலாம்

Post by அ.இராமநாதன் Thu Aug 25, 2016 11:28 pm

பெண்கள் மனசு வச்சா எதையும் சாதிக்கலாம் 8a
-
இத்தனைக்கும் ரெண்டு பேருக்கும் நிறைய ஊர் சுத்தப் பிடிக்கும். ஸ்போர்ட்ஸ் பிடிக்கும். முதல்ல படிப்புக்காகவும், எங்களுக்குள்ள ஒரு லீடர்ஷிப் குவாலிட்டியை வளர்த்துக்கவும் உடலளவுலயும் மனசளவுலயும் வலிமையா ஃபீல் பண்ணவும்தான் இதை ட்ரை பண்ணினோம். பல நேரங்கள்ல நமக்குள்ள மறைஞ்சிருக்கிற திறமைகள், யதேச்சையா எதிர்பாராத சில விஷயங்கள் மூலமா வெளியில வரும்னு சொல்வாங்க... அப்படித்தான் எங்க விஷயத்துலயும் நடந்தது.  

உத்தர்காஷியில நேரு இன்ஸ்டிடியூட்ல மலையேறுதலுக்கான அடிப்படை பயிற்சியை முடிச்சதும், அந்த விஷயம் எங்க ரெண்டு பேருக்கும் ரொம்பப் பிடிச்சதா மாறிடுச்சு. அதையடுத்து இன்ஸ்ட்ரக்டர் கோர்ஸ் வரை வரிசையா முடிச்சிட்டோம். இந்தியாவுல ரொம்ப கம்மியான பெண்கள்தான் இதை முடிச்சிருக்காங்க. இன்னொரு பக்கம் காஷ்மீர்ல பனிச்சறுக்குப் பயிற்சியையும் முடிச்சிட்டோம். எங்கக் குடும்பத்துலயும் நாங்கதான் முதல் சாதனையாளர்கள்...’’ - சகோதரிகளின் வார்த்தைகளிலேயே வெளிப்படுகிறது அந்தப் ெபருமிதம்!

உடலளவுல மட்டுமில்லை... மனசளவுலவும் பொருளாதார ரீதியாகவும் சவாலான விஷயம் இது. பனிமலையில ஏறத் தயாரான அளவுக்கு எங்களோட இதய ஆரோக்கியமும் சரியா இருக்கணும். தினமும் எக்சர்சைஸ் பண்றோம். ஆனா, அது சிகரம் தொடறதுக்கெல்லாம் போதாது. மாரத்தான் ஓடறவங்ககூட மலை ஏற முடியாம சிரமப்படறதைப் பார்த்திருக்கோம். 15 கிலோ வெயிட்டை தூக்கிட்டு, 3 ஆயிரம் அடி உயரத்தை ஏறிக் கடக்க என்ன மாதிரியான ஃபிட்னஸ் தேவைப்படும்னு யோசிச்சுப் பாருங்க.
[img(451.1875px,226.1875px)]http://kungumam.co.in/Thozhi_images/2016/20160816/8b.jpg[/img]
மனசும் உடம்பும் பலமா இருக்கணும். பிரமாண்டமான மலை... பாறைகளான ஐஸ் கட்டிகள் மேல ஏறிப் போக இந்த ரெண்டும் முக்கியம். மலையில சின்னதா ஒரு அசைவு ஏற்பட்டாகூட, எல்லாம் மறந்துடும். அந்த இடத்துல நிலவற அமைதியும் தனிமையும் ஒருவித அசாதாரண பயத்தைக் கொடுக்கும். எந்த நிமிஷமும் எல்லாம் தப்பிப் போகலாம். ஸோ... மோசமான நிகழ்வுகளுக்குத் தயாராகவும், நல்லதே நடக்கட்டும்கிற நம்பிக்கையோடவும்தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்போம். 

இத்தனைக்கு இடையிலயும் நாம செய்யற விஷயத்து மேல ஒரு இலக்கோடவும் வெறியோடவும் இருக்கிறபோது மன பலம் தானா வந்துடும். அந்த ஃபீலிங் ரொம்ப ஸ்பெஷல்...’’ - திகில்களும் திருப்பங்களும் நிறைந்த தங்களது சாகச முயற்சிகளை விவரிக்கும் போதே வியர்க்க, வியக்க வைக்கிறார்கள் தஷியும் நுங்ஷியும். ``நாங்க ரெண்டு பேரா இருக்கிறதால மட்டும்தான் எல்லாம் சாத்தியமாச்சு. இதே விஷயத்தை நாங்க தனியாளா பண்றதா இருந்தா எங்க பெற்றோர்கூட சம்மதிச்சிருக்க மாட்டாங்க. 

அதுலயும் ட்வின்ஸா இருக்கிறதுங்கிறது எங்களோட சாதனைக்கு மிகப்பெரிய பலம். மலையேற்றத்துல ரெண்டு பேருக்கும் ஆர்வம் இருந்தது பிளஸ்னா, ரெண்டு பேரும் சேர்ந்து சவால்களை சந்திக்கிறதுல ஒரு சுவாரஸ்யமும் இருந்தது. 23 வருஷங்கள்ல நாங்க ரெண்டு பேரும் ஒருநாள்கூட பிரிஞ்சதில்லை. இந்த மலையேற்றமும், அதுல சந்திச்ச சவால்களும் எங்களுக்குள்ள நாங்க ட்வின்ஸா இருக்கிறது எவ்வளவு ஸ்பெஷல்னு உணர்த்தி இருக்கு...’’ - சகோதரிகளின் பேச்சில் வரிக்கு வரி எட்டிப் பார்க்கிறது பாசம்.

``இந்தச் சாதனையை முடிக்கிறதுக்கு 3 வருஷங்களுக்கு முன்னாடி வரை நாங்க விளையாட்டுத்தனமான ஸ்கூல் பொண்ணுங்க. திடீர்னு ஒருநாள் வட துருவத்துலயும் தென் துருவத்துலயும் உள்ள உயரமான சிகரங்களை எட்டிட்டோம்கிற பெருமையோட நின்ன அந்தத் தருணம் மறக்க முடியாதது. மைனஸ் 40 டிகிரி குளிர்ல ஒரு ஃப்ரீசர் பெட்டிக்குள்ள உங்களைப் போட்டு அடைச்சு வச்சா எப்படி இருக்கும்? அதே அனுபவம்தான் எங்களுக்கும் இருந்தது.  

வட துருவத்தைப் பொறுத்த வரை நீங்க எந்தத் திசையில அடியெடுத்து வச்சாலும் அது தெற்கு நோக்கிப் போகும். அது மட்டுமில்லாம, வட துருவத்துல நீங்க எங்கே இருக்கீங்கன்றதுக்கான எந்த அடையாளத்தையும் கண்டுபிடிக்க முடியாது. ஐஸ் ஷீட்டானது தொடர்ந்து நகர்ந்துக்கிட்டே இருக்கும்.  ஜிபிஎஸ் இருந்தா மட்டும்தான் நாம எங்கே இருக்கோம்னே தெரிஞ்சுக்க முடியும். ஒவ்வொரு அடி முன்னேற்றமும் எனக்குள்ள எப்படியொரு சந்தோஷத்தைக் கொடுத்ததுனு சொல்லவே முடியலை... அதாவது, இந்தியாவுல சில கிராமங்கள்ல ஆண் குழந்தைகள் பிறந்தா, ஸ்டீல் தட்டை ஸ்பூனால தட்டி அக்கம் பக்கத்தாருக்குச் சொல்லி அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவாங்க. 

பெண்ணா பிறந்ததை நினைச்சு பெருமையா நாங்களும் அப்படித்தான் எங்க வெற்றியைக் கொண்டாடினோம்...’’ என்கிறவர்களின் வெற்றி ஒட்டுமொத்த பெண் இனத்தையும் பெருமை கொள்ளச் செய்கிறது. இரட்டைச் சகோதரிகளின் எதிர்கால லட்சியங்களும் இவர்களைப் போலவே அவ்வளவு அழகு! இதையே புரொஃபஷனா எடுத்துப்போமாங்கிறது தெரியலை. நாங்க ஏற்கனவே சொன்னது போல செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளமா இருக்கு. முதல்ல ஸ்போர்ட்ஸ்ல மேல்படிப்பை முடிக்கணும்.

எவரெஸ்ட்டை எட்டினதுங்கிறது முழுக்க முழுக்க எங்களோட தனிப்பட்ட விருப்பத்தின் பேர்ல நடந்தது. அது மூலமா நாங்க இன்னொரு விஷயத்தையும் பிரகடனப்படுத்த நினைச்சோம். அதாவது, இந்தியப் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகளுக்கு எந்த வகையிலும் சளைச்சவங்க இல்லை... அவங்க மனசு வச்சா எதையும் சாதிக்கலாம்னு நிரூபிக்கவும் இதை ஒரு வாய்ப்பா பயன்படுத்திக்கிட்டோம். 

வருஷத்துக்கு ஒருமுறை இது மாதிரி ஒரு சாகசப் பயணம் செய்வோம். இந்த வருஷம் நியூசிலாந்துல உள்ள  உயரமான சிகரமான மவுண்ட் குக்  போறதா திட்டம். இதை அடையறது உலகத்துலயே ரொம்ப கஷ்டமானதுனு சொல்லப்படுது. உலகத்துலயே முக்கியமான நாலு ice capsக்கு போறதும் ஒரு திட்டம். ஆனா, இதுக்கான ஸ்பான்சர்ஷிப் கிடைச்சா இன்னும் நல்லாருக்கும்...’’ கண்களிலும் மனதிலும் கனவுகள் தேக்கிச் சொல்கிறார்கள்.

எல்லா துறைகளையும் போல இதுலயும் ஆண்களோட எண்ணிக்கைதான் அதிகம்.  உலகளவுல வெறும் 30 சதவிகிதம் பெண்கள்தான் இதுல இருக்காங்க. இது வாழ்வா, சாவா போராட்டம்தான். ஒவ்வொரு முறை சிகரம் ஏறப்போற ஆணும் பெண்ணும் உயிரைப் பணயம் வச்சு ரிஸ்க் எடுத்துதான் துணியறாங்க. இதுல ஆண்கள் சந்திக்கிற அதே சவால்களைத்தான் பெண்களும் சந்திக்கிறாங்க.  மாதவிலக்கு மாதிரியான பெண்களுக்கே உரித்தான உடல் அசவுகரியங்கள் வேணா சிரமங்களைத் தரலாம்...’’ - தன் பார்வையில் சவால்களைச் சொல்கிறார் தஷி.

``ஆதிகாலத்துலேருந்தே விளையாட்டுங்கிறது ஆண்களுகான துறையாகவே பார்க்கப்பட்டிருக்கு. உடலளவுல சிரமமான விளையாட்டுகள் எல்லாம் ஆண்களுக்கானதுனு ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்திட்டாங்க. எங்களைப் பொறுத்த வரை மலையேற்றம்கிறது பெண்களுக்கு ரொம்பவே உகந்தது. ஏன்னா, மனசளவுல அவங்க ரொம்ப பலமானவங்க. இன்னும் சொல்லப் போனா ஆண்களைவிடவும் சிறப்பா இந்தத் துறையில சாதிக்கக்கூடியவங்க பெண்கள்.

ஆனாலும், நம்ம ஒட்டுமொத்த சூழலுமே பெண்களுக்கு எதிரானதாதான் இருக்கு. இந்த மாதிரியான சாகசங்களை முயற்சி செய்யற ஒரு பெண், தனிமனுஷியா பயணம் செய்யறதும், பல ஆண்களுக்கு இடையில ஒருத்தியா நாட்களைக் கடத்தறதும் ஒரே கூடாரத்துக்கு அடியில ஆண்களுக்கு சமமா இடத்தைப் பகிர்ந்துக்கிறதும் அவளுக்கு இன்னும் சவாலாதான் இருக்கு...’’ - உடன்பிறப்பின் கருத்துகளுக்கு வலு சேர்க்கிறது நுங்ஷியின் பார்வை.

``ஏப்ரல் 2015ல வட துருவத்தை எட்டிய முதல் தெற்காசிய பெண்கள், அதுலயும் உலகின் முதல் இரட்டையர்னு எங்களுக்கு அங்கீகாரம் கிடைச்சது. ஏழு உச்சி மாநாடுகள் அடங்கின  Explorers Grand Slamஐ முழுமையா முடிச்சவங்கன்ற பெருமையும் எங்களுக்கு வந்தது. இதுதான் உச்சம்... இதைத் தாண்டி என்ன இருக்குனு பலரும் வியப்போட கேட்டாங்க.  எங்களைப் பொறுத்த வரை சாகசங்களுக்கு எல்லைங்கிறதே இல்லை!

இந்த வருஷம் நியூசிலாந்துல நாங்க ஸ்போர்ட்ஸ் அண்ட் எக்சர்சைஸ்ல எங்களோட பேச்சிலர் டிகிரியை முடிக்கணும். அப்புறம் எங்களோட பயண அனுபவங்களைப் பத்தி புத்தகமா எழுதற முயற்சிகளுக்காக அமெரிக்கா கிளம்பறோம். இதுக்கெல்லாம் இடையில எங்களோட சொந்த ஃபவுண்டேஷன் ஆரம்பிச்சு, மலையேற்றத்துல ஆர்வம் உள்ள பெண்களை ஊக்கப்படுத்தற விஷயங்களைச் செய்யப் போறோம். 

பயணம்... சாகசம்... அர்த்தமுள்ள வாழ்க்கைனு பெரிய திட்டங்களோடவும், டான்ஸ், ஒரு படத்துல நடிக்கிறதுனு சின்ன ஆசைகளோடவும் காத்திட்டிருக்கோம்...’’ அதிர்ஷ்டமும் அன்பும் சேர்ந்து அசத்துகிறார்கள் பாசப் பறவைகள்!

மாரத்தான் ஓடறவங்ககூட மலை ஏற முடியாம சிரமப்படறதைப் பார்த்திருக்கோம். 15 கிலோ வெயிட்டை தூக்கிட்டு, 3 ஆயிரம் அடி உயரத்தை ஏறிக் கடக்க என்ன மாதிரியான ஃபிட்னஸ் தேவைப்படும்னு யோசிச்சுப் பாருங்க.

மலையில சின்னதா ஒரு அசைவு ஏற்பட்டாகூட, எல்லாம் மறந்துடும். அந்த இடத்துல நிலவற அமைதியும் தனிமையும் ஒருவித அசாதாரண பயத்தைக் கொடுக்கும். எந்த நிமிஷமும் எல்லாம் தப்பிப் போகலாம்.

மைனஸ் 40 டிகிரி குளிர்ல ஒரு ஃப்ரீசர் பெட்டிக்குள்ள உங்களைப் போட்டு அடைச்சு வச்சா எப்படி இருக்கும்? அதே அனுபவம்தான் எங்களுக்கும் இருந்தது.
-
நன்றி-  குங்குமம் தோழி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum