தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



டோபல் தேர்வை தெரிந்து கொள்ளுங்கள்

2 posters

Go down

டோபல் தேர்வை தெரிந்து கொள்ளுங்கள் Empty டோபல் தேர்வை தெரிந்து கொள்ளுங்கள்

Post by கவிக்காதலன் Tue Dec 28, 2010 11:44 pm

ஆங்கில திறனை மதிப்பிடுவதற்கான சர்வதேச தேர்வுகளில் டோபல் தேர்வு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.





சர்வதேச
பல்கலைக்கழகங்களில் இடம்பெறுவதற்கு நமக்கு உதவும் காரணிகளில் டோபல் தேர்வு
மதிப்பெண்ணும் முக்கியமான ஒன்று. ஆங்கில பிரியர்களிடையே அத்தேர்வைப் பற்றிய
ஆர்வம் எப்போதும் குறையாமல் இருக்கும். எனவே தற்போது அத்தேர்வை பற்றி
இங்கே விரிவாக அலசலாம்.
டோபல் தேர்வு: (டி.ஓ.இ.எப்.எல்)
கடந்த
1965 -ஆம் ஆண்டு முதல் இந்த தேர்வானது, கல்வி தேர்வு சேவை என்ற தனியார்
லாபநோக்கமற்ற அமைப்பாலும், கல்லூரி வாரியத்தலும் நிர்வகிக்கப்படுகிறது.
இந்தத் தேர்வைப் பற்றி நீங்கள் முந்தைய தலைமுறையினரிடம் விசாரித்தால் அந்த
தேர்வில் முன்பு இருந்த நிலையைவிட, தற்போது அபரிமிதமான மாற்றங்கள்
நிகழ்ந்திருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
தாளில் எழுதும் தேர்வாக இருந்த இது, 1998 -இல் கணினி
மயமாக்கப்பட்டதாகவும், 2005 -இல் இணைய மயமாக்கப்பட்டதாகவும் ஆனது. ஆனால்
ஈரான், ஈராக், கென்யா, மியான்மர், நார்வே, ரஷ்யா, தென்ஆப்ரிக்கா மற்றும்
அமெரிக்கா போன்ற நாடுகளில் சில குறிப்பிட்ட நிலையங்களில் தாள்வழி தேர்வு
குறிப்பிட்ட தேதிகளில் இன்றும் நடைபெற்று வருகிறது.
தேர்வு எழுதும் முறை:
தேர்வுக்கு
முன்னதாக முதலில் இடத்தை முக்கியமாக தேர்வுசெய்து கொள்ள வேண்டும். ஏனெனில்
இடத்தை வைத்து தாள்வழி தேர்வா? அல்லது இணையவழி தேர்வா? என்பதை முடிவுசெய்து
கொள்ளலாம். இணையவழி தேர்வானது, படித்தல், கவனித்தல், பேசுதல் மற்றும்
எழுதுதல் போன்ற தேர்வின் அனைத்து பிரிவுகளையும் முக்கியமாக எடுத்துக்கொண்டு
மதிப்பிடுகிறது. இணையவழி தேர்வானது ஒருங்கிணைந்த திறன்களுக்கு
முக்கியத்துவம் கொடுக்கிறது.
தேர்வின் மொத்த நேரம் 4 மணிகள் மற்றும் ஒரே நாளில்
எழுதப்பட வேண்டும். கணினிவழி தேர்வு எழுத நீங்கள் கணினியின் சில
அம்சங்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். தேர்வு எழுதுகையில் நேரம்
பார்த்தல், அடுத்தப் பக்கத்திற்கு செல்லுதல், கேட்புமுறை கேள்விகளுக்கு
ஒலியை சரிசெய்தல், பத்திகளை விரிவாக படித்தல், பேசுமுறை தேர்வில் ஒலிப்பானை
பயன்படுத்தல் போன்ற பல விஷயங்களுக்கு கணினி அறிவு அவசியம்.
பேச்சு தேர்வில் உங்கள் பதில்கள் ஆன்லைன் மூலமாக
மதிப்பீட்டு மையத்திற்கு சென்றுவிடும். எழுதுதல் பிரிவு இரு பிரிவுகளைக்
கொண்டுள்ளது. முதல் பிரிவில் நீங்கள் படித்த மற்றும் கேட்டவற்றுக்கு பதிலை
தட்டச்சு செய்ய வேண்டும். இரண்டாம் பிரிவில் உங்கள் கருத்தை மையமாக வைத்து
ஒரு கட்டுரை எழுத வேண்டும். மேற்கூறிய பிரிவுகள் இரண்டு, மூன்று அல்லது
மொத்தமாக நான்கு பிரிவுகளின் கேள்விகளையும் கொண்டிருக்கும். இது எதை
உணர்த்துகிறது என்றால், பத்தியை நீங்கள் படிக்க வேண்டும், தலைப்பை பற்றிய
சிறிய விரிவுரையை நீங்கள் கேட்க வேண்டும்.
பின்னர் உங்கள் பதிலை வாயால் சொல்லவோ அல்லது எழுதவோ
வேண்டும். இணையவழி தேர்வுக்காக பதிவு செய்பவர்கள், அதை முடித்தப்பின்னர்,
தேர்வின் நான்கு பிரிவுகளுடைய அணுகலையும் பெற முடியும். இத்தகைய மாதிரி
முறையில், படித்தல் மற்றும் கவனித்தல் பிரிவுகளுக்கு நாமே பதில் கூறலாம்,
எழுதுதல் மற்றும் பேசுதல் பிரிவுகளுக்கு மாதிரி பதில்கள்
கொடுக்கப்பட்டிருக்கும்.
தாள்வழி தேர்வுக்கு 2.30 மணிகள் கொடுக்கப்படும்.
பிரிவுவாரியாக இந்த நேரம் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள
கேள்விகளை தேர்ந்தெடுத்து எழுதலாம். தாள்வழி தேர்வில் ஆங்கில எழுத்து
தேர்வு தேவை.
தேர்வு மற்றும் உங்கள் மதிப்பெண்ணை கணக்கிடுதல்:
டோபல்
தேர்வுக்கான மதிப்பெண் வெளிப்படையானது மற்றும் நம்பகமானது. எப்படியெனில்,
தேர்வெழுதியவரின் ஆங்கில பேச்சுத்திறன் பதியப்பட்டு, தேர்வு நிலையத்தில்
இருக்கும் ஒரே நிபுணருக்கு பதிலாக, ஆறு நிபுணர்களால் மதிப்பாய்வு
செய்யப்படுகிறது. இந்த தேர்வின் நம்பகத்தன்மை, வெளிப்படைத் தன்மை மற்றும்
தனிச்சிறப்புகளுக்காகவே இதை பலர் தேர்வு செய்வதாக, கல்வி தேர்வு சேவை
அமைப்பு கூறுகிறது. உலகெங்கிலும் கிட்டத்தட்ட 7500 கல்வி நிறுவனங்கள் இந்த
தேர்வு மதிப்பெண்களை, மாணவர்களை சேர்ப்பதற்கான அளவுகோலாக
எடுத்துக்கொள்கின்றன. அவற்றில் உலகின் முதன்மையான 100 பல்கலைக்கழகங்களும்
அடங்கும்.
மதிப்பீட்டு முறையில், கல்வி தேர்வு சேவை அமைப்பானது,
மனித திருத்துனர்களையும் மற்றும் தானியங்கு திருத்து முறைகளையும்
பயன்படுத்துகிறது. தேர்வில் பலதரப்பட்ட அம்சங்கள், சிந்தனைத் திறன்
மதிப்பீடு மற்றும் ஒழுங்குமுறைகளை மதிப்பிட்டு வரையறுக்க மனித
திருத்துநர்கள் முக்கியம் என்று கல்வி தேர்வு சேவை அமைப்பு நிர்வாகிகள்
கூறுகிறார்கள்.
கல்வி தேர்வு சேவை அமைப்பின் திருத்துநர்கள் சிறப்பாக
பயிற்சியளிக்கப்பட்டவர்கள், சான்றிதழ் தேர்வு தேறியவர்கள். தேர்வை
முடித்தவுடன், தேர்வு எழுதியவர் தனது மதிப்பெண்களை ரத்துசெய்ய முடியும்.
ஆனால் குறிப்பிட்ட ஒரு பிரிவுக்கான மதிப்பெண்களை மட்டும் ரத்துசெய்ய
முடியாது. மதிப்பெண்ணை ரத்துசெய்வதன் மூலம் உங்களுக்கும் அல்லது எந்த கல்வி
நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படாது. அதேசமயம் ரத்துசெய்த
மதிப்பெண்களை மீண்டும் பெறலாம். ஒருவர் தேர்வு முடித்த 14 மணி
நேரங்களுக்குள் முடிவுகளை ஆன்லைனில் பெறலாம்.
தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்:
பல
தரப்பு செய்திகளைக் கொண்ட உபகரணங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும்
செய்தித்தாள்களை தொடர்ந்துப் படிக்க வேண்டும். உங்கள் ஆங்கில வார்த்தை
வளத்தை அதிகரித்து கொள்ளவும். மேலும் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,
படங்கள் பார்ப்பதன் மூலமும், ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளை கேட்பதன் மூலமும்
புரிந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.
இதைத்தவிர இணையத்தையும் பயன்படுத்தவும். விரிவுரை
நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு முக்கியமான குறிப்புகளை எடுக்க முயலவும்.
ஆங்கிலம் பேசும் பயிற்சிக்கு, அதை தாய்மொழியாக கொண்டவர்களிடமோ அல்லது
முழுவதும் ஆங்கிலம் பேசும் உறுப்பினர்களை கொண்ட சங்கத்திலோ இணையவும்.
குறிப்பெடுத்துக்கொண்டு பேச பழகவும். எழுத்து பயிற்சிக்காக, சில
குறிப்பிட்ட தலைப்புகளை தேர்வு செய்துகொண்டு, அதைப்பற்றி எழுதி பழகவும்.
வார்த்தை வளத்தை அதிகரித்து, நல்ல இலக்கண அறிவையும் பெற்றால், எழுதும்போது
அவற்றை நீங்கள் இயல்பாக பயன்படுத்த முடியும்.
மேலும் நீங்கள் ஒரு வெளிநாட்டு கல்வி நிலையத்தில்
விண்ணப்பித்து, விண்ணப்பத்தின் கடைசி நாளுக்கு 2 அல்லது 3 மாதங்களுக்கு
முன்பாக இந்த தேர்வை எழுதினால், உங்கள் மதிப்பெண் சரியான நேரத்தில் கல்வி
நிலையத்தை சென்றடையும். இதைத்தவிர தேர்வுத்தேதிக்கு குறைந்தபட்சம் 8
வாரங்களுக்கு முன்பாக முறைப்படி தேர்வுக்கு தயாராக தொடங்க வேண்டும்.
ஆலோசனைகளை சரியாக கடைப்பிடித்து முயலும்பட்சத்தில், வெற்றி உங்கள் பக்கம்
நிச்சயம் இருக்கும்.
கேள்வித்தாள் முறைகள்
படித்தல் தேர்வு
3-5 பத்திகள்(ஒவ்வொன்றும் 700௦௦ வார்த்தைகள்
வரை கொண்டிருக்கும்)
ஒவ்வொன்றிலும் 12-14 கேள்விகள்,
60௦-100௦௦ நிமிடங்கள்.
மதிப்பீட்டு அம்சங்கள்
பத்தியை புரிந்து படித்து பதில் அளிக்கும்
திறன், எண்ணங்களுக்கு இடையிலான ஒற்றுமையை
புரிந்துகொள்ளும் திறன், முக்கிய
தகவல்களையும், எண்ணங்களையும்
பிரிக்கும் திறன் அறிதல்.
கவனித்தல் தேர்வு
4-6 விரிவுரைகள்(ஒவ்வொன்றும் 3-5 நிமிடங்கள்)
ஒவ்வொன்றிலும் 6 கேள்விகள், 2-3
கலந்துரையாடல்கள்(3 நிமிடங்கள்),
கலந்துரையாடலுக்கு 5 கேள்விகள், 60-90 நிமிடங்கள்.
மதிப்பீட்டு அம்சங்கள்
பரந்த அளவில்
ஆங்கில பேச்சை புரிந்துகொள்ளும் திறன்,
முக்கிய குறிப்புகளை விரிவாக்கும் திறன்
10 நிமிட இடைவேளை
பேசுதல் தேர்வு

6 தலைப்புகள், 2 தனியானவை,
4 இணைக்கப்பட்டவை.
மதிப்பீட்டு அம்சங்கள்
சாதாரணமாக பள்ளி, கல்லூரிகளில்
பேசுவதைப்போல ஆங்கிலத்தில்
பேசும் திறன், உங்கள் கருத்துக்களை
ஆங்கிலத்தில் வெளிப்படுத்தும் திறன் அறிதல்
எழுதுதல் தேர்வு
1 இணைக்கப்பட்ட பகுதி, 20 நிமிடங்கள்,
1 தனியான பகுதி, 30 நிமிடங்கள்.
மதிப்பீட்டு அம்சங்கள்
கல்வி நிறுவனங்களில் ஏற்று கொள்ளப்படும்
நடையில் ஆங்கிலத்தில் எழுதும் திறன் அறிதல்.
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

டோபல் தேர்வை தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: டோபல் தேர்வை தெரிந்து கொள்ளுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 15, 2011 9:49 am

தகவலுக்கு மிக்க நன்றி நண்பா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டோபல் தேர்வை தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: டோபல் தேர்வை தெரிந்து கொள்ளுங்கள்

Post by கவிக்காதலன் Sat Jan 15, 2011 10:28 pm

சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

டோபல் தேர்வை தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: டோபல் தேர்வை தெரிந்து கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum