நான் ஒன்னு சொல்லுவேன்… எழுந்திருச்சு ஓடக்கூடாது…
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்’ல சுண்டல் போடுறாங்க…
ஹே…ஹே.. நில்லுங்க… எங்க ஓடுறீங்க?….

—————————————-

“அப்பா…நான் படிக்கப் போகலை,”[You must be registered and logged in to see this image.]
“ஏன்டா?”
“கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு
சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்…?”
“ஆ…!”
———————————————

தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை
கிடைக்கும்!

அப்ப….. நீ படிச்சா கிடைக்காதா?
—————————————–

கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு!
குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க?
மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி
உங்களுக்கு வரும்?

—————————————

டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட
சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை
முட்டைதான் போடுது! என்ன செய்ய?

—————————————–
டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!
என்னிடம் சுத்தமா இல்ல!
பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

——————————————-

இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?
கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு,
மாடி வீடுதான் கிடைக்கும்!

——————————————

சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து!
அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

—————————————-
படித்ததில் பிடித்தது