தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கன்னியாகுமரி சுற்றுலா

Go down

 கன்னியாகுமரி சுற்றுலா Empty கன்னியாகுமரி சுற்றுலா

Post by அ.இராமநாதன் Tue May 23, 2017 9:51 pm

விவேகானந்தர் பாறை
-
கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள ஒரு பாறையில் 
சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், மற்றொரு 
பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளது. 

இங்கு படகில் செல்ல வேண்டும். அலைகள் நிறைந்த 
கன்னியாகுமரி கடலில் பயணம் செய்வது ஒரு த்ரில் 
அனுபவம் ஆகும். 

தமிழ்நாடு அரசின் பூம்புகார் போக்குவரத்துக்கழகம் இந்த 
படகு சர்வீசை நடத்துகிறது. லாட்ஜ்களில் ரூ.200 முதல் 
ரூ.ஆயிரம் வரையிலான கட்டணத்தில் அறைகள் உள்ளது.

படகு கட்டணம் - ரூ.20, விவேகானந்தர் மண்டப நுழைவு 
கட்டணம் - ரூ.10. பள்ளி மாணவர்கள் அத்தாட்சி கடிதத்துடன் 
வந்தால் படகு கட்டணம் பத்து ரூபாயும், மண்டப நுழைவு 
கட்டணம் ஐந்து ரூபாய் மட்டுமே. 

மண்டபத்திலுள்ள தியான அறையில் சற்று நேரம் அமர்ந்தால் 
மனஅமைதி கிடைக்கும். மண்டபத்தில் விவேகானந்தர், 
ராமகிருஷ்ணர் தொடர்பான பயனுள்ள புத்தகங்கள் கிடைக்கும்.
-
----------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 கன்னியாகுமரி சுற்றுலா Empty Re: கன்னியாகுமரி சுற்றுலா

Post by அ.இராமநாதன் Tue May 23, 2017 9:52 pm

காந்தி மண்டபம்
-
முக்கடல் சங்கமிக்கும் புண்ணிய தீர்த்தம் அருகே இந்த 
மண்டபம் கட்டப்பட்டுள்ளது. காந்தியின் அஸ்தி கலசம் 
வைக்கப்பட்ட இடம் இந்த மண்டபத்தின் அருகே உள்ளது. 

இந்த இடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாம் 
தேதி சூரிய ஒளி விழும். இங்கு பயணிகள் செல்ல கட்டணம் 
எதுவும் கிடையாது. 
செருப்பு பாதுகாக்க மட்டும் 50 பைசா கட்டணம்.
-
-------------------------------------
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 கன்னியாகுமரி சுற்றுலா Empty Re: கன்னியாகுமரி சுற்றுலா

Post by அ.இராமநாதன் Tue May 23, 2017 9:52 pm

காமராஜர் மணி மண்டபம்
-
காந்தி மண்டபம் அருகே காமராஜர் மணி மண்டபம் உள்ளது. 
கன்னியாகுமரியில் சிப்பியால் செய்யப்பட்ட அலங்கார 
சாமான்கள் விசேஷம். ரூ.10 முதல் ரூ.500 வரை கிடைக்கும். 

இங்குள்ள சங்கிலி மண்டபத்தில் பயணிகள் பாதுகாப்பாக 
குளிக்கலாம். இந்த இடத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணமும் 
செய்யலாம். குமரியிலுள்ள பகவதி அம்மன் கோயில் மிகவும் 
விசேஷமானது. 

இதன் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு, வடக்கு வாசல் 
திறந்திருக்கும். அம்பிகையின் மூக்குத்தி ஒளி கண்ணைப் 
பறிக்கும். 
-
-------------------------------
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 கன்னியாகுமரி சுற்றுலா Empty Re: கன்னியாகுமரி சுற்றுலா

Post by அ.இராமநாதன் Tue May 23, 2017 9:52 pm

பத்மனாபபுரம் அரண்மனை
-
கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக 
திருவனந்தபுரம் செல்லும் வழியில் தக்கலை அருகே 
350 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அரண்மனை 
அமைந்துள்ளது. 

திருவிதாங்கூர் மன்னர்கள் கட்டிய இந்த அரண்மனை 
முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்டதாகும்.

பழங்கால மன்னர் மற்றும் வாழ்க்கை முறையை படம் 
பிடித்து காட்டும் வகையில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. 
இங்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 50 
கட்டணம் ஐந்து முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 
ரூ.10 வசூலிக்கப்படுகிறது. 
தக்கலையில் ரூ.150 முதல் வாடகை உள்ள லாட்ஜ்கள் 
உள்ளன. 
-
--------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 கன்னியாகுமரி சுற்றுலா Empty Re: கன்னியாகுமரி சுற்றுலா

Post by அ.இராமநாதன் Tue May 23, 2017 9:52 pm

மாத்தூர் தொட்டிப்பாலம்
-
திற்பரப்பில் இருந்து திருவட்டார் வந்த பின்னர் மாத்தூர் 
என்ற கிராமத்துக்கு செல்லும் ரோட்டில் தொட்டிப்பாலம் 
உள்ளது. ஆற்றுக்கு மேல், கால்வாய் விவசாயத்துக்கு 
தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் இதிலுள்ளது 
விசேஷ அம்சம்.

ஆசியாவிலேயே இரண்டாவது நீள பாலம். 
அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. 1240 அடி 
நீளமும், 103 அடி உயரமும் கொண்ட இந்த பாலம் 
29 பில்லர்களை தாங்கி நிற்கிறது. 

இதன் மீது நின்று பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் 
வரை பச்சை பசேலென காட்சி தரும். 
கட்டணம் கிடையாது. இங்கு தங்கும் வசதி இல்லை. 
அருகிலுள்ள மார்த்தாண்டத்தில் தங்குவதற்கு லாட்ஜ்கள் 
உள்ளன. 

மேலும், 18 அடி உயரமுடைய அனுமான் மற்றும் பெண் 
விநாயகர் சிற்பம் கொண்ட சுசீந்திரம் தாணுமாலய சுவாமி 
கோயில், பாம்பை மூலவராகக் கொண்ட நாகர்கோவில் 
நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் 
ஆகியவை பிரசித்தி பெற்ற இடங்கள் ஆகும்.
-
----------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 கன்னியாகுமரி சுற்றுலா Empty Re: கன்னியாகுமரி சுற்றுலா

Post by அ.இராமநாதன் Tue May 23, 2017 9:52 pm

-
திற்பரப்பு அருவி
-
பத்மனாபபுரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் 
திற்பரப்பு அருவி உள்ளது. கோடை காலத்திலும் சிறிதாவது 
தண்ணீர் கொட்டுவது இதன் சிறப்பம்சமாகும். 

இங்கு சிறுவர்கள் குளிக்க வசசதியாக சிறிய நீச்சல் குளம் 
கட்டப்பட்டுள்ளது. இயற்கையான சூழ்நிலையில் இந்த 
அருவி அமைந்துள்ளது. நுழைவு கட்டணம் ரூ.2. வீடியோ 
கேமரா கட்டணமாக ரூ.75-ம், போட்டோ கேமரா கட்டணமாக 
ரூ.5-ம் வசூலிக்கப்படுகிறது. 

இங்குள்ள லாட்ஜ்களில் ரூ.150 முதல் ரூ.300 வரை வாடகை 
வசூலிக்கப்படுறது. 
-
------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 கன்னியாகுமரி சுற்றுலா Empty Re: கன்னியாகுமரி சுற்றுலா

Post by அ.இராமநாதன் Tue May 23, 2017 9:52 pm

-
பே வாட்ச் பொழுதுபோக்கு பூங்கா
-
கன்னியாகுமரி - கோவளம் சாலையில் 2 கி.மீ. தொலைவில் 
இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. கன்னியாகுமரி 
பஸ் நிலையத்தில் இருந்து மிக அருகில் உள்ளது. இங்கு 
பல்வேறு நீர் விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு 
அம்சங்கள் உள்ளன. 

காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை பூங்கா 
திறந்திருக்கும். பெரியவர்களுக்கு 240 ரூபாயும், 
சிறியவர்களுக்கு 180 ரூபாயும், வயதானவர்களுக்கு 
120 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 
-
-----------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 கன்னியாகுமரி சுற்றுலா Empty Re: கன்னியாகுமரி சுற்றுலா

Post by அ.இராமநாதன் Tue May 23, 2017 9:53 pm

-
மெழுகு பொம்மை அருங்காட்சியகம்
-
இந்தியாவின் முதல் மெழுகு பொம்மை அருங்காட்சியகம் 
கன்னியாகுமரியில் உள்ளது. பே வாட்ச் பொழுதுபோக்கு 
பூங்காவினுள் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் வெளிநாட்டு 
சுற்றுலா பயணிகளை கவருவதாக அமைந்துள்ளது.
-
------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 கன்னியாகுமரி சுற்றுலா Empty Re: கன்னியாகுமரி சுற்றுலா

Post by அ.இராமநாதன் Tue May 23, 2017 9:53 pm

-
குகநாதசுவாமி கோயில்
-
ஆயிரம் ஆண்டு பழமையான இந்த கோயில் 
ராஜராஜசோழனால் 
கட்டப்பட்டதாகும். சோழர்களின் கட்டடகலை இந்த 
கோயிலில் பிரதிபலிக்கிறது. ரயில் நிலையத்திற்கு மிக 
அருகில் இந்த கோயில் அமைந்துள்ளது.
-
-----------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 கன்னியாகுமரி சுற்றுலா Empty Re: கன்னியாகுமரி சுற்றுலா

Post by அ.இராமநாதன் Tue May 23, 2017 9:53 pm

-
காமராஜர் நினைவகம்
-
Hotel image காந்தி மண்டபத்திற்கு அருகில் 
பெருந்தலைவர் காமராஜர் நினைவு மண்டபம் உள்ளது. 
இந்த மண்டபம் 02-10-2000ல் நிறுவப்பட்டது.
-
-----------------------------------
அரசு அருங்காட்சியகம்
-
டற்கரை சாலையில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 
தென்னிந்தியாவின் சிற்பக்கலையை பிரதிபலிக்கும் அரிய 
சிலைகள், பழங்கால பொருட்கள் இங்கு பார்வைக்கு 
வைக்கப்பட்டுள்ளது.
-
--------------------------------------
அரசு பழ பண்ணை
-
கன்னியாகுமரியில் இருந்து 2 கி.மீ தொலைவில் 
நாகர்கோவில் சாலையில் அரசு பழ பண்ணை 
அமைந்துள்ளது. பல வகையான பழமரங்கள் மற்றும் 
செடிகள் இங்கு உள்ளன. திறந்திருக்கும் நேரம் : 
காலை 9 மணி முதல் 11 மணி வரை. மதியம் 1 மணி 
முதல் 3 மணி வரை. விடுமுறை : 
சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள்.
-
--------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 கன்னியாகுமரி சுற்றுலா Empty Re: கன்னியாகுமரி சுற்றுலா

Post by அ.இராமநாதன் Tue May 23, 2017 9:53 pm

-
ஜீவானந்தம் மணி மண்டபம்
-
மார்க்சிஸ்ட் கட்சி தமிழகத்தில் பரவ காரணமானவர்களில் 
இவரும் முக்கியமானவராவார். 1957ம் ஆண்டு சென்னை 
வண்ணாரபேட்டை எம்.எல்.ஏ., ஆக இருந்தவர். 
1998ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி நாகர்கோவிலில் அவருக்கு 
மணி மண்டபம் கட்டப்பட்டது. அவரது உருவசிலை மற்றும் 
புகைப்படங்கள், வாழ்க்கை குறிப்புகள் இங்கு பார்வைக்கு 
வைக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------
-
குமரி அம்மன் கோயில்
-
கன்னியாகுமரி கடற்கரையில் குமரிஅம்மன் கோயில் 
அமைந்துள்ளது. சிவனுடன் நடைபெற இருந்த திருமணம் 
தடைபட்டதால் அம்மன் இங்கு கன்னியாக கோயில் 
கொண்டுள்ளாள். 

அம்மன் அணிந்திருக்கும் வைர மூக்குத்தி மிகவும் சிறப்பு 
வாய்ந்ததாகும். கடலில் இருந்து பார்த்தாலும் பிரகாசமாக 
தெரியும்.
-
----------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 கன்னியாகுமரி சுற்றுலா Empty Re: கன்னியாகுமரி சுற்றுலா

Post by அ.இராமநாதன் Tue May 23, 2017 9:54 pm

கேரளாபுரம்
-
கேரளபுரம் தக்கலைக்கு அருகில் உள்ளது. 
இங்குள்ள கோயிலில் உள்ள விநாயகர் சிலை நிறம் 
மாறும் தன்மையுடையதாக உள்ளது. ஆறுமாத காலம் 
கருப்பாகவும், அடுத்த ஆறுமாத காலம் வெள்ளையாகவும் 
சிலை காட்சியளிக்கிறது. 
-
-------------------------------
-
மருத்துவமலை
-
கன்னியாகுமரியில் இருந்து 7 கி.மீ தொலைவில் 
மருத்துவமலை உள்ளது. இந்த மலை மேற்கு தொடர்ச்சி 
மலையின் ஒரு பகுதியாகும். இதன் உயரம் 800 அடியாகும். 

ஹனுமான், லட்சுமணனுக்கு சிகிச்சை அளிக்க தேவையான 
மூலிகைக்காக மகேந்திர கிரியில் இருந்து இலங்கைக்கு 
சஞ்சீவி மலையை கொண்டு சென்ற போது கீழே விழுந்த 
சிறு துண்டு தான் மருத்துவமலை என கூறுகின்றனர். 
இந்த மலையில் பல்வேறு மூலிகைகள் கிடைக்கிறது.
-
------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 கன்னியாகுமரி சுற்றுலா Empty Re: கன்னியாகுமரி சுற்றுலா

Post by அ.இராமநாதன் Tue May 23, 2017 9:54 pm

-
முருகன் குன்றம்
-
கன்னியாகுமரியில் இருந்து 3 கி.மீ தொலைவில் 
முருகன் குன்றம் அமைந்துள்ளது. மிகவும் அமைதியான 
இந்த இடத்தில் சித்ரா பவுர்ணமி அன்று மக்கள் கூடுவர். 

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் 
-
மிகவும் 
எளிமையாக கேரள பாரம்பரிய முறையில் பகவதி அம்மன் 
கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் மேற்கூரை ஆரஞ்சு 
வண்ண ஓடுகளால் ஆனது. 

கடும் தலைவலி இருப்பவர்கள் அம்மனுக்கு அரிசி, வெல்லம், 
சேர்த்து செய்யப்படும் மண்டையப்பத்தை படைத்தால் 
தலைவலி தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. 

திருவனந்தபுரத்தில் இருந்து 75 கி.மீ தொலைவிலும், 
திருநெல்வேலியில் இருந்து 95 கி.மீ தொலைவிலும்பகவதி 
அம்மன் கோயில் உள்ளது. கோயிலிலேயே தங்கும் வசதியும் 
உள்ளது.
-
-----------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 கன்னியாகுமரி சுற்றுலா Empty Re: கன்னியாகுமரி சுற்றுலா

Post by அ.இராமநாதன் Tue May 23, 2017 9:54 pm

-
சோட்டவிளை பீச்
-
கன்னியாகுமரியில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள 
இயற்கையான கடற்கரை பகுதி சோட்டவிளை பீச் ஆகும். 
சுற்றுலா பயணிகள் பலர் இங்கு வந்து செல்கின்றனர். 

இங்கு கடில்கள், கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
இந்த கடற்கரையை ஒட்டி அமைந் துள்ள சாலையில் 
செல்வது மிகவும் ரம்மியமாக இருக்கும்.
-
------------------------------------
-
செயின்ட் சேவியர் சர்ச்
-
நாகர்கோவிலில் இருந்து 30 கி.மீ தொலைவில் செயின்ட் 
சேவியர் சர்ச் அமைந்துள்ளது. கி.பி 1600 ஆண்டு இந்த 
சர்ச் கட்டப்பட்டது. 1865ம் ஆண்டு மரியன்னைக்காக புதிய 
சன்னதி கட்டப்பட்டது. 1930ம் ஆண்டு இந்த சர்ச் கதீட்ரல் 
அந்தஸ்து பெற்றது. 1955ம் ஆண்டு சர்ச் கட்டடம் 
விரிவாக்கப்பட்டது. தொலைபேசி - 0465-2242010.
-
-------------------------------
-
சுசீந்திரம் தனுமலையான் கோயில்

சுசீந்திரம் தனுமலையான் கோயில் கலை களஞ்சியமாக 
விளங்குகிறது. இந்த கோயிலில் பிரம்மா, விஷ்ணு, 
சிவன் சந்நிதிகள் உள்ளது சிறப்பம்சமாகும். 

மேலும் 18 அடி உயர அனுமான் சிலை மற்றும்
பிரம்மாண்டமான பெண் விநாயகர் சிலை ஆகியவை 
பிரசித்தி பெற்றதாகும். தொலைபேசி - 04652-241421
-
------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 கன்னியாகுமரி சுற்றுலா Empty Re: கன்னியாகுமரி சுற்றுலா

Post by அ.இராமநாதன் Tue May 23, 2017 9:54 pm

-
பேச்சிபாறை அணை
-
 கன்னியாகுமரியிலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கும் எல்லையாகஅமைந்துள்ள 
மலைத் தொடரை வைத்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது. 

இம்மாவட்டத்தின் பெரிய அணை இதுவேயாகும். 1894 ஆம் 
ஆண்டு கோதையாறு அணைத்திட்டம் தொடங்கப்பட்டு 
1905 இல் சுமார் 27 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி 
முடிக்கப்பட்டது. கோதையாறு அணையே பேச்சிப்பாறை 
அணை எனப்படுகிறது. இத்தேக்கத்தில் 350 கோடி கன 
அடி தண்ணீரை தேக்கி வைக்க முடிகிறது. 

இதன் மூலம் சுமார் 56,000 ஏக்கர் நிலம் பாசனம் பெற 
இயலுமென்று கூறப்படுகிறது. 

நாஞ்சில் நாட்டை நெற்களஞ்சியம் ஆக்குவதற்கு இந்த அணை 
பெரிதும் உதவுகிறது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். 
இங்கு படகு செலுத்துதல் சுகமான அனுபவமாகும். அணையின் 
எதிர்ப்புறம் வரை செல்ல குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
-
---------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 கன்னியாகுமரி சுற்றுலா Empty Re: கன்னியாகுமரி சுற்றுலா

Post by அ.இராமநாதன் Tue May 23, 2017 9:55 pm

பீர் முகமது தர்கா
-
பீர் முகமது தர்கா தக்கலையில் அமைந்துள்ளது. 
தத்துவ அறிஞர் முகமது அப்பாவின் பெயர் இந்த 
தர்காவிற்கு வைக்கப்பட்டுள்ளது. முகமது அப்பா 
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் பிறந்தவர். 

இவர் கேரள மாநிலம் பீர்மேட்டில் சிலகாலம் மதப்பணி 
செய்தார். பின் தக்கலையில் வந்து தங்கினார். சிறந்த 
கவிஞரான இவர் பல்வேறு தத்துவ புத்தகங்களை 
எழுதியுள்ளார். 

மேலும் இவர் சேர மன்னர்களுடன் நல்ல நட்புறவாக 
இருந்துள்ளார். 
-
---------------------------------
-
செய்குதம்பி பாவலர் நினைவகம்
-
தமிழ் இலக்கணம், இலக்கியத்தில் புலமை பெற்றவரான 
செய்குதம்பி பாவலர் 1874ம் ஆண்டு பிறந்தார். அவர் 
தமிழ் மாணவர்கள் மத்தியில் (ஒரே நேரத்தில் கேட்கப்படும் 
100 கேள்விகளுக்கும் பதிலளித்தல்) சதாவதான நிகழ்ச்சியை 
செய்து காண்பித்து பாராட்டை பெற்றுள்ளார். 

1950ம் ஆண்டு காலமான அவரது நினைவாக நாகர்கோவிலில் 
நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

-
----------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 கன்னியாகுமரி சுற்றுலா Empty Re: கன்னியாகுமரி சுற்றுலா

Post by அ.இராமநாதன் Tue May 23, 2017 9:55 pm

திருவெற்றூர்
-
கன்னியாகுமரியில் இருந்து 70 கி.மீ தொலைவில் திருவெற்றூர் 
அமைந்துள்ளது. இங்குள்ள கோயில் சிற்பம் மற்றும் ஓவிய 
கலைக்கு பிரசித்தி பெற்றதாகும். கோயில் சுவர்களில் உள்ள 
சித்திரங்கள் காண்பதற்கு மிக அழகானவையாகும்.
-
---------------------------------
-
உதயகிரி கோட்டை
-
தமிழகத்தின் பழங்கால நினைவுசின்னங்களில் உதயகிரி 
கோட்டையும் ஒன்றாகும். 1729 முதல் 1758ம் ஆண்டு 
வரையிலான காலகட்டத்தில் மார்த்தாண்ட வர்மரால் இந்த 
கோட்டை கட்டப்பட்டது.1741ம் ஆண்டு மார்த்தாண்ட வர்மர் 
குளச்சலில் டச்சுகாரர்களை தோற்கடித்தார். டச்சுகாரரான 
டி லெனோயின் சமாதி இந்த கோட்டையினுள் உள்ளது. 

முதலில் மன்னர் மார்த்தாண்ட வர்மரால் சிறைபிடிக்கப்பட்ட
 ஐரோப்பிய கைதிகளில் ஒருவராக இருந்த லெனோய், 
பின்னர் மன்னரின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். 

மார்த்தாண்டரின் படைவீரர்களுக்கு ஐரோப்பிய போர்முறையை 
அவர் கற்று கொடுத்தார். கன்னியாகுமரியில் இருந்து 34 கி.மீ 
தொலைவில் உள்ள இந்த கோட்டை சுற்றுலா தலமாக 
விளங்குகிறது.
-
--------------------------------------
-
வள்ளி மலை கோயில்
-
மலை மீது அமைந்துள்ள சுமார் 300 படிகட்டுகளை கொண்ட 
இந்த கோயிலில் விநாயகர் மற்றும் காசி விஸ்வநாதர் 
சன்னதிகள் உள்ளன. கோயில் மலையை குடைந்து 
ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
-
--------------------------------
-
வட்டகோட்டை
-
கன்னியாகுமரியில் இருந்து 6 கி.மீ தொலைவில் கிரானைட்
கற்களால் கட்டப்பட்ட வட்டகோட்டை உள்ளது. நாஞ்சில் 
நாட்டின் பாதுகாப்பு கொத்தளமாக மார்த்தாண்ட வர்மரால் 
இந்த கோட்டை கட்டப்பட்டது. 

செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டை மூன்றரை 
ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.கோட்டையின் மதில் 
சுவர்கள் 25 முதல் 26 அடி உயரம் கொண்டவையாக 
அமைந்துள்ளது. கோட்டையின் முன்புற சுவர் 29 அடி அகலமும், 
மூலைகளில் 18 அடியும், பின்புறம் 6 அடி அகலமும் 
கொண்டுள்ளது. 

இந்த கோட்டை மார்தாண்டவர்மர் ஆட்சியில் டி லெனோய் 
என்பவரின் ஆலோசனையில் கட்டப்பட்டதாகும்.
-
------------------------------------
-
கீரிப்பாறை: காளிகேசம்:
-
பெருஞ்சாணி அணையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் 
கீரிப்பாறை இருக்கிறது. இது வரை பேருந்து செல்லும். 
கீரிப்பாறையின் கொடுமுடி காளிகேசம் என்ற இடத்தில் 
சிறு அம்மன் கோவில் உள்ளது.

கீரிப்பாறையிலிருந்து மேலே செல்வதற்கு நல்ல 
வண்டித்தார்ச்சாலை உள்ளது. சிற்றுந்துகள் மூலம் போகலாம். 
இங்குள்ள ஆறு மலைச் சரிவுகளில் விழுந்தோடி 
வருவதைத்தான் காளிகேசம் என்கின்றனர். சிறுசிறு சரிவுகளில் 
அருவியாகவும் காட்சியளிக்கிறது. பாறைகளைக் குடைந்தும், 
அறுத்துக் கொண்டும் ஓடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் 
காட்சியாகும். ஆறு அறுத்த பாறை ஒன்றில் பழங்குடியினர் 
இருந்த தற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன. 
-
---------------------------------
தினமலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 கன்னியாகுமரி சுற்றுலா Empty Re: கன்னியாகுமரி சுற்றுலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum