தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விந்தை மனிதர்கள்
Page 1 of 1
விந்தை மனிதர்கள்
விந்தை மனிதர்கள்
நூல் ஆசிரியர் : கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
நூலின் அட்டைப்பட ஓவியம் சிறப்பாக உள்ளது. நூல் ஆசிரியர் மதுக்கூர்
இராமலிங்கம் நாடறிந்த நல்ல பேச்சாளர். எழுத்து ஆற்றலும் வரும் என்று
நிரூபித்து உள்ள நூல் இது. இந்நூலிற்கு சாகித்ய அகதெமி விருது பெற்ற
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி, கலைமாமணி முனைவர் கு. ஞானசம்பந்தன்
பெண்ணிய எழுத்தாளர் அ.வெண்ணிலா ஆகியோரின் அணிந்துரை அழகு சேர்க்கின்றது.
ஒவியர் ஸ்ரீரசா அவர்களின் ஓவியங்கள் நூலிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
இயந்திமயமாகி விட்ட காலத்தில் மனித மனங்களும் இயந்திரமாகி விடுகின்றது.
இயல்பான நிலைக்குத் திரும்ப இது போன்ற நகைச்சுவை விதைக்கும் நூல்கள்
உதவுகின்றன. செம்மலர் இதழில் பிரசுரமானவற்றை தொகுத்து நூலாக வழங்கி
உள்ளனர். நல்ல முயற்சி, பாராட்டுக்கள்.
கிராமத்து மனிதர்களை படம்பிடித்து, கிராமிய மொழியிலேயே வடித்து உள்ளார்.
‘பாவாடை ராசு” முதல் கட்டுரை இவர் பற்றி, ‘ராசு அண்ணன் சட்டை போட்டிருந்து
யாரும் பார்த்ததில்லை. அவர் கல்யாணத்தின் போது ஒரே ஒரு நாள் சட்டை
போட்டிருந்ததாகவும், தாலி கட்டிய உடனேயே உடம்பெல்லாம் அரிக்கிறது என்று
சொல்லி உடனே கழற்றி எறிந்து விட்டதாகவும் தகவல் உண்டு, இருந்தாலும் இதை
நேரடியாகப் பார்த்ததற்கு இப்போது யாரும் சாட்சியில்லை”.
கிராமத்தில இன்றும் சட்டை போடாத மனிதர்கள் பலர் உண்டு. அவர்கள் நம்
நினைவிற்கு வந்து விடுகின்றனர். ஒரு நாள் இரவு அவசரத்தில் துண்டுக்குப்
பதிலாக மனைவியின் பாவாடையை தோளில் போட்டு சென்றதன் காரணமாக அவருக்கு
பாவாடை ராசு என்று பெயர் வந்த காரணம் கட்டுரையில் உள்ளது. இரண்டு ரூபாய்
சாப்பாடு என்று நினைத்து சாப்பிட்டவரிடம், கூச்சப்படாமல் சாப்பிடுங்க
என்று சொல்லி, சின்னச் சின்ன கண்ணங்களில் கறி, கோழி, மீன் வைத்து இவை
எல்லாம் தனிக்கணக்கு என்று ரூ.150 ஆகியதால், கடைசியில் ஊருக்கு நடந்த வந்த
கதை. இப்படி சின்னச் சின்ன நிகழ்வுகளின் தொகுப்பில் நகைச்சுவை ஊருக்கு
நடந்த வந்த கதை. இப்படி சின்னச் சின்ன நிகழ்வுகளின் தொகுப்பில் நகைச்சுவை
விதைக்கிறார் நூல் ஆசிரியர். ஆனால் இன்றைக்கு அளவு சைவ சாப்பாடே 45 ரூபாய். விலைவாசி விலா எலும்பை முறிக்கும் காலம் இது.
‘கவர்மெண்டு கந்தசாமி”. கந்தசாமி வாயிலிருந்து ஒரு நாளைக்கு நூறு
முறையாவது கவர்மெண்ட் என்கிற வார்த்தை வெளியே வந்து விடும். இன்றைக்கு
தமிங்கிலம் நகரத்தை மட்டுமல்ல கிராமங்களையும் பிடித்து ஆட்டுகின்றது
என்பதை அழகாகப் பதிவு செய்துள்ளார். இவரை வில்லங்கம் கந்தசாமி, சுருட்டல்
கந்தசாமி என்றெல்லாம் அழைப்பது அவருக்குத் தெரியும். ஏனென்றால். ஏப்ப
சாப்பையானவர்கள் பெயரில் நிலமிருந்தால் தனது பெயரில் அதை மாற்றிச்
சுருட்டிக் கொள்வதிலும் யாராவது தன்னை எதிர்ப்பதாகத் தெரிந்தால் போலீசில்
சொல்லி வில்லங்கத்தில் மாட்டி விடுவதிலும் அவர் பலே கில்லாடி.
கிராமத்தில் உள்ள பாமரர்களை கொள்ளையடிக்க ஒரு கூட்டம் உள்ளது என்ற கருத்தை
நகைச்சுவை கலந்து விளக்குகின்றார் நூலாசிரியர். அய்யப்பனுக்கு மாலை
போடுகிறேன் என்ற பெயரில் பலர் தாடி வளர்ப்பது, வண்ணத்துண்டு அணிவது என
தோற்றம் மாறி காணப்படுவார்கள், ஆனால் சில காவல்துறை காவலர்களும் இந்தக்
கோலத்தில் காட்சியறித்து விடுவதை கிண்டல் செய்யும் விதமாக ‘அய்யப்ப
போலீஸ்” என்ற கட்டுரை உள்ளது. நமது அய்யப்ப போலீஸ் பனிரெண்டு மாதமுமே
அய்யப்பன் கெட்டப்பில் தான் இருப்பார். டூட்டியின் போது காக்கி உடை
போட்டிருந்தாலும், வீபதி, சந்தனம், குங்குமம் வைத்துக் கொள்வதோடு, ஒரு
கலர் துண்டும் போட்டிருப்பார். இவர் எப்போது அய்யப்பனாக இருக்கிறார்,
எப்போது சாதாவாக இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாது.
மதசார்பற்ற நாட்டின் காவல்துறைக் காவலர்களுக்கு இதுபோன்ற விதிவிலக்கு
வழங்கக் கூடாது. பணியில் இருக்கும் போது இவற்றை அனுமதிக்கக் கூடாது என்று
பல்வேறு சிந்தனைகளை விதைக்கின்றது. பல்பொடி வடுவாயி, எம்.ஜி.ஆர். கிழவி,
எலக்சன் ஏகாம்பரம், பொடி பொன்னுசாமி, சிரிப்புக்காட்டி செல்லையா, சிலோன்
ஜெயபால், பண்டிதர் பரமசிவம், நூலகர் பூவலிங்கம், உடுக்கு முனி இப்படி
பல்வேறு பாத்திரங்களை அவர் கண்டு ரசித்த, கேள்விப்பட்ட நபர்களை மிகச்
சிறப்பாக கட்டுரையாக்கி வழங்கி உள்ளார். பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
விதம்.
கவிஞர் ஸ்ரீ ராசா ஓவியம் பாத்திரங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றது.
நூலைப் படித்து முடிந்தவுடன் ஒவ்வொரு பாத்திரமும் நம் மனக்கண் முன் வந்து
விடுகின்றனர். அது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி. கிழவி எம்.ஜி.ஆர் படம்
பார்த்தால் அடுத்த படம் வருகிற வரை முதல் படத்தின் கதையையே சொல்லிக்
கொண்டிருக்கும், எந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எந்தக் காட்சியில் எந்த உடை
அணிந்திருந்தார், எந்தச் செருப்புப் போட்டிருந்தார் என்ற புள்ளி விபரம்
கிழவிக்கு அத்துப்படி, எம்.ஜி.ஆர். படக்கடை வசனத்தை கிழவி. அந்தப்பட
இயக்குநரை விட சிறப்பாகச் சொல்லும். எம்.ஜி.ஆர். கண்ணாடி போட்ட கிழவி
ஓவியம் மிகச் சிறப்பு.
உண்மைதான், இது போன்ற கிழவிகள் கிராமங்களில் வாழ்கிறார்கள். நானும்
பார்த்து இருக்கிறேன், கேட்டும் இருக்கிறேன். எம்.ஜி.ஆரிடம் ஒரு கிழவி,
யாரை கூட வைத்தாலும், நம்பியாரை கூட வைக்காதே என்று சொன்ன நிகழ்வு
நினைவுக்கு வந்தது. எலக்சன் ஏகாம்பரம், இவர் வாக்களித்தால், வாக்களித்த
நபர் தோற்று விடுவார் என்ற மூட நம்பிக்கை, அதன் காரணமாகக இவரிடம் யாரும்
வாக்குக் கேட்பதில்லை. இது போன்ற பல மூட நம்பிக்கைகள் கிராமங்களில்
இன்றும் உள்ளது. சாப்பாடு இலையில் தண்ணீர் தெளிப்பது தூசி போக, ஆனால்
இரவில் இரவில் இலைக்குத் தண்ணீர் தெளிக்கக் கூடாது என்பார்கள். இப்படி
மூடநம்பிக்கை உண்டு.
சிரிப்புக்காட்டி செல்லையா, மயான வெட்டியான் அவர் சொல்லும் வசனம்,
‘எல்லாப் பயலும் கடைசியா எங்கிட்டாத் தான் வரணும்” இப்படி நூல் முழுவதும்
மறக்க முடியாத கதாபாத்திரங்களை நகைச்சுவை கலந்து வழங்கி உள்ளார். பேச்சில்
நகைச்சுவை எளிது, எழுத்தில் நகைச்சுவை கடினம், கடினமான பணியை மிக எளிதாகச்
செய்து உள்ளார். மனம் இலகுவாக இந்த நூல் உதவும். மனபாரம், கவலை, சோர்வு
உள்ளவர்கள் இந்த நூலைப் படித்து நகைச்சுவை உணர்வை, புத்துணர்வைப் பெறலாம்.
நூலாசிரியர் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களுக்குப் பாராட்டுக்கள். கிராமங்களிலும் திமிங்கிலம் தவழ்வது உண்மை தான். ஆனால் படைப்பாளிகள் அவற்றைத் தவிர்த்து எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» போடோஷாப்பின் விந்தை....
» விந்தை கணக்கு..!
» விரல்கள் செய்யும் விந்தை - மருத்துவம்
» நாக்கினால் சப்பாத்தை பொலிஷ் பண்ணும் விந்தை மனிதன்
» பச்சைகுத்தப்பட்ட மனிதர்கள்
» விந்தை கணக்கு..!
» விரல்கள் செய்யும் விந்தை - மருத்துவம்
» நாக்கினால் சப்பாத்தை பொலிஷ் பண்ணும் விந்தை மனிதன்
» பச்சைகுத்தப்பட்ட மனிதர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum