தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்!
Page 1 of 1

நோய்கள் அத்தனைக்கும் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்… தவறான வாழ்க்கை முறை. அதற்கு ஒரே ஒரு சிகிச்சைதான் இருக்க முடியும், அது சீரான, ஒழுங்கான உணவு முறை. உண்ணும் உணவில் கவனமில்லாமல் இருப்பதுதான் பல நோய்களுக்கு அடிப்படை.
நாம் பல்பொருள் அங்காடியில் வாங்கும் பல பொருள்களை நாள்பட உபயோகிக்க என்று ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கிறோம்.
-
ஆனால், எந்தப் பொருள்களை வைக்க வேண்டும், எத்தனை நாள்கள் வரை வைத்திருக்கலாம் என்பதை அறியாமல், அந்தப் பொருளையும் கெடுத்து, அதன் மூலம் நம் உடல்நலனையும் கெடுத்துக்கொள்கிறோம்.
நம் வீட்டு ஃபிரிட்ஜில் வைக்கவே வைக்கக் கூடாத பழங்கள், காய்கறிகள், உணவுகள் பட்டியல் இங்கே…
வாழைப்பழம்
-
ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாதது வாழைப்பழம். ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் அதிகப்படியான குளிரும் இருளும் வாழைப்பழத்தின் சத்தைக் கெடுப்பதோடு, அழுகவும் செய்துவிடும். திறந்த, உலர்ந்த இடங்களில் வாழைப்பழத்தை வைத்திருப்பதே நல்லது.

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்!
தேன்
இயற்கையிலேயே கெட்டுப்போகாத தன்மை கொண்ட தேனும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத ஒரு பொருள்தான். சாதாரண தட்பவெப்பநிலையில் இறுக மூடி வைத்தாலே தேன் அதன் சத்துக்களை பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடியது. ஆனால், ஃபிரிட்ஜில் குளிர்ந்த சூழலில் வைத்திருக்கும்போது அது தனது நிலையை மாற்றிக்கொண்டு, மணல்போலக் கடினமாகவும், சுவை மாறியும் போய்விடும். ஏறக்குறைய உபயோகிக்க முடியாத அளவுக்கு தேன் மாறிவிடும்.
அவகேடோ
அவகேடோ பழத்தையும் ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது. கடைகளில் வாங்கும்போது பழுக்காத நிலையில் இருக்கும் இந்தப் பழம், ஃபிரிட்ஜில் வைத்தால், பழுக்கவே பழுக்காது. மேலும், அதன் சுவையும் மாறிவிடக்கூடும்.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களும் ஃபிரிட்ஜில் வைக்கத் தோதானவை அல்ல. சாதாரண வெப்பநிலையே இந்தப் பழங்களைப் பழுக்கச் செய்துவிடும். அதிகக் குளிரான சூழல், இந்தப் பழங்களின் சிட்ரஸ் அமிலத்தை பாதித்து, சுவையை மாற்றிவிடும். மேலும், அதன் தோலை பாதித்து பளபளப்பையும் மங்கச் செய்துவிடும்.
ஸ்டோன் வகை பழங்கள்
ப்ளம், பீச், ஆஃப்ரிகாட், நெக்டாரின் போன்ற மேல்நாட்டு ஸ்டோன் வகைப் பழங்களுக்கும் ஃபிரிட்ஜ் ஒத்து வராது. வாங்கும்போது அதிகம் பழுக்காதநிலையில் இருக்கும் இவற்றுக்கு சாதாரணச் சூழல்தான் ஏற்றது. குளிரில் வைத்திருந்தால் அதிகம் பழுக்காது; சுவை கூடாமல் போய்விடும்

மூலிகைகள்
மூலிகைகளையும் கீரைகளையும் ஃபிரிட்ஜில் வைத்து வீணடிக்கக் கூடாது, ஏனென்றால், அவற்றின் சத்துகள் குறைந்துபோய்விடும். சாதாரணச் சூழலில், நீர் நிறைந்த பாத்திரத்தில் இவற்றின் தண்டுப் பகுதியை நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்திருந்தாலே போதும், தளதளவென்று உலர்ந்து போகாமல் இருக்கும்.
பெர்ரி வகைப் பழங்கள்
சாதாரண தட்பவெப்பத்திலேயே நல்லநிலையில் இருக்கும் இந்தப் பழங்கள் நல்ல சுவையைத் தரக்கூடியவை. அதிக நேரம் குளிரில் வைக்கப்பட்டால், இதன் சுவையும் கெட்டு வடிவமும் மாறிவிடும்.
வெங்காயம்
ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாதது வெங்காயம். குளிரில் தானும் கெட்டு ஃபிரிட்ஜையும் கெட்ட நாற்றம் உள்ளதாக மாற்றிவிடும். மேலும், ஃபிரிட்ஜில் இருக்கும் எல்லா உணவுகளையும் வெங்காய மணம் மணக்கும்படி மாற்றிவிடும். உலர்ந்த சூழலே வெங்காயத்துக்கு ஏற்றது. பேப்பர் பைகளில் வெங்காயத்தைப் போட்டு வைத்திருப்பதே போதுமானது.
அதிக வெப்பமில்லாத இருண்ட சூழலில், வெங்காயத்தை வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் உருளைக்கிழங்குக்கு அருகே வைக்கக்கூடாது. உருளைக்கிழங்கில் இருந்து வெளியாகும் வாயுவும் ஈரப்பதமும் வெங்காயத்தை அழுகச் செய்துவிடும். கவனம்!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்!
பிரெட்
பிரெட் போன்ற பேக்கரி பொருள்களும் ஃபிரிட்ஜுக்கு ஆகவே ஆகாதவை. சாதாரண தட்பவெப்பத்தில் சுவையும் மெதுவான தன்மையும் அதிகம் கொண்ட பிரெட், அதிகமான குளிரில் விறைத்துப் போய்விடும். இதனால் சுவையும் கெட்டு, கெட்டித்துவிடும். ஆகவே இருளான, அதிக வெப்பமில்லாத சமையலறை அலமாரிகளிலேயே டிபன் பாக்ஸ்களில் மூடிவைத்தே பிரெட்டைப் பாதுகாத்துவைக்கலாம்.
மிளகாய்
சிவப்பு, பச்சை, மஞ்சள் என எந்த மிளகாயையும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. ஃபிரிட்ஜின் அதிகக் குளிர் இவற்றை அழுகச் செய்துவிடும். சாதாரணச் சூழலில் பேப்பர் பைகளில் வைப்பதே போதுமானது.
குளிர்ச்சி தரக்கூடிய காய்கள்
பரங்கிக்காய், சுரைக்காய் போன்ற குளிர்ச்சியை தரக்கூடிய காய் வகைகளையும் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். அவற்றின் இயற்கையான நீர்ச்சத்து மாறி, சுவை மாறிவிடக்கூடும்.

எண்ணெய்
எந்த எண்ணெயும் ஃபிரிட்ஜில் வைக்க கூடியவை அல்ல. குளிரில் எல்லா வகை எண்ணெயும் உறைந்து போய், கடினமாகி கலங்கிவிடும். இதனால் எண்ணெயின் சுவையும் சத்தும் கெட்டுவிடும். சாதாரணச் சூழலே எண்ணெய்க்கு உகந்தது. உதாரணமாக, ஃபிளாக்ஸ் விதை எண்ணெய் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டால், உறைந்துவிடு; சீக்கிரமே கெட்டும் போய்விடும்.
நீர்ச்சத்து மிகுந்த காய்கனிகள்
பூசணி, தர்பூசணி உள்ளிட்ட நீர்ச்சத்து மிக்க காய்கறிகளையும் பழங்களையும்கூட ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஃபிரிட்ஜில் வைக்கப்படும் இந்த வகை காய்கனிகள் குளிரால் உடைந்து குழைந்துவிடும். ஆனால், இவ்வகை காய்கனிகளை நறுக்கி, நான்கு அல்லது ஐந்து நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம்.
ஊறுகாய்
மசாலா சேர்க்கப்படாத, காயவைக்கப்பட்ட ஊறுகாய் எதையும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. உலர்ந்த, காற்றோட்டமான இடத்திலேயே ஊறுகாய் கெடாமலும், சுவை பாதிக்காமலும் இருக்கும்.
பூண்டு
`காயக் காயத்தான் பூண்டின் சுவை கூடும்’ என்பார்கள். அதனால் திறந்தவெளியில் பூண்டை வைத்திருப்பதே நல்லது. ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டால், பூண்டின் சுவை கெட்டு, அதன் நீண்டகால பலனும் பாதிக்கப்படும்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்!
சில்லி சாஸ்
வினிகர், மிளகாய் சாஸ் போன்ற உணவுக்கு சுவையூட்டும் பொருள்களைச் சாதாரண சூழலில் அடுப்படியில் பாட்டில்களில் பாதுகாத்து வைப்பதே சிறந்தது. தரமான சாஸ்கள் பல நாள்கள் வரை கெடாமல் இருக்கக்கூடியவை.
இதனால் இவற்றை ஃபிரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியம் இல்லை. பாக்டீரியா போன்ற நுண்ணியிரிகளால் கெடாமல் சாஸ்களைப் பாதுகாக்க, அடிக்கடி பாட்டில்களைச் சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். ஃபிரிட்ஜில் வைக்கப்படும் சில்லி சாஸின் சுவையும் காரமும் குறைந்துவிடும் என்பதே உண்மை.
மசாலா பொருட்கள்
மிளகாய், மிளகு, மல்லி போன்ற மசாலா தூள்கள் எதையும் ஃபிரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியம் இல்லை.
காபி
காபி தூள் அல்லது காபி கொட்டை இவற்றை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை. காற்று புகாத பாட்டிலில் வைத்திருந்தாலே போதுமானது. ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் ஈரப்பதம் காபித் தூளை பாதித்து, கெட்டுப்போகச் செய்துவிடும்.
சாலட் அலங்கரிக்கும் க்ரீம்கள்
காய் மற்றும் கனிகளை கொண்டு செய்யப்படும் சாலடுகளுக்கு அலங்கரிக்கவும், சுவையூட்டவும் பயன்படும் எந்த வித க்ரீம்களையும் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். `இனிப்புத் தயிர்’ எனப்படும் யோகர்ட் உள்ளிட்ட க்ரீம்கள், ஃபிரிட்ஜில் நீர்த்துப்போய் கெட்டுவிடும்.
நட்ஸ்
முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற எந்த உலர்க்கொட்டைகளும் ஃபிரிட்ஜில் வைக்கத் தேவையில்லாத பொருட்கள். குளிர்ந்த ஈரப்பதம் இந்த வகை நட்ஸ்களின் உள்ளிருக்கும் எண்ணெய்ப் பொருள்களைப் பாதித்து, கெட்டுவிடச் செய்துவிடும். மேலும் ஃபிரிட்ஜில் இருக்கும் வேறு பொருள்களின் வாசத்தால் மாறிவிடும்.
காற்றுப்புகாத பாத்திரங்களில் மூடி வைத்தாலே இவை கெடாமல் இருக்கும். ஒருவேளை அதிகமான அளவில் நட்ஸ்களைப் பாதுகாக்க ஃபிரிட்ஜில் வைக்க வேண்டி வந்தால், அவற்றை உபயோகிக்கும் முன்னர் பாத்திரத்தில் வைத்து வறுத்த பிறகே உபயோகிக்க வேண்டும்.

உலர்பழங்கள்
திராட்சை, அத்தி, பேரீச்சை போன்ற உலர்பழங்களுக்கும் ஃபிரிட்ஜில் இடமில்லைதான். உலர்ந்த பழங்கள் அதன் உலர்ந்த தன்மைக்காகவே விரும்பப்படுகின்றன. அந்தத் தன்மையை ஃபிரிட்ஜின் குளிர் காற்று பாதித்துவிடும்.
தானிய வகைகள்
தானிய வகைகள் சாதாரணச் சூழலில் வைக்கப்படவேண்டியவை. ஈரப்பதமான சூழல் அவற்றைக் கெட்டுப்போகச் செய்துவிடும்.
ஜாம்கள்
பழங்களால் செய்யப்பட்ட ஜாம்களை ஃபிரிட்ஜில் வைக்கவேண்டியது இல்லை. ஜாம்களைப் பாதுகாக்க அதனுள் சேர்க்கப்படும் பொருள்கள் அதிகக் குளிரால் உறைந்து, சுவை மாறிவிடுகின்றன.
உருளைக்கிழங்கு
மண்ணில் விளைந்து, ஈரம் போகக் காய்ந்து நம்மிடையே வரும் உருளைக்கிழங்கு காய்ந்து இருப்பதே நல்லது. இது, ஈரத்தில் முளைத்துவிடும் தன்மை கொண்டது. சாதாரணச் சூழலில் பேப்பர் பைகளில் சுற்றிவைப்பதே உருளைக்கு நல்லது. பிளாஸ்டிக் பைகளில் சுற்றிவைத்தால், உருளைக்கிழங்கின் ஈரப்பதத்தால் சீக்கிரமே கெட்டுவிடும் ஆபத்து உண்டு.

கெட்ச்சப்
கெட்ச்சப் எனும் சுவையூட்டும் கூழ்கள் தற்போது எல்லா வீட்டிலும் காணப்படுகின்றன. இனிப்பு, புளிப்பு மற்றும் காரச் சுவைகளில் வரும் இந்த வகை கெட்ச்சப்-ஐ ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஒரு மாதம் வரை சாதாரணச் சூழலிலேயே கெடாமல் இருக்கக் கூடியது கெட்ச்சப். ஃபிரிட்ஜில் வைத்தால், இறுகிவிடும்.
தக்காளி
அதிகக் குளிர் தக்காளியின் பளபளப்பையும் சுவையும் பாதிக்கக்கூடியது. காற்றுப்புகக்கூடிய சாதாரணச் சூழலிலேயே தக்காளி சில நாள் வரை கெடாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைக்கும் தக்காளி பழுப்பதே இல்லை. எனவே, தக்காளியின் சுவையை அதிகம் பெற ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம்.
நிலக்கடலை வெண்ணெய்
நிலக்கடைலையால் செய்யப்பட்ட வெண்ணெய் தற்போது சுவையூட்டியாகப் பயன்பட்டு வருகிறது. இதுவும் ஃபிரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியமில்லாத பொருளே.
மீன்
மீனையோ, பேக் செய்யப்பட்ட மீன்களின் இறைச்சியையும் ஃபிரிட்ஜில் பொதுவான இடத்தில் வைக்க வேண்டாம். மீன் நாற்றம் மற்ற பொருள்களுக்கும் பரவி அவற்றின் தன்மையைப் பாழடித்துவிடும். ஃபிரிட்ஜில் மீனை வைப்பதற்கென்றே ஓர் இடம் இருக்கும். அதில் வைக்கலாம்.
-விகடன்

Similar topics
» பழங்கள் கீரைகள்
» பிரெட் காய்கறிகள்
» பழங்கள் சாப்பிடலாம் வாங்க
» பழங்கள் தரும் நன்மை
» உனக்காக பசியாற பழங்கள்..!
» பிரெட் காய்கறிகள்
» பழங்கள் சாப்பிடலாம் வாங்க
» பழங்கள் தரும் நன்மை
» உனக்காக பசியாற பழங்கள்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum