தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
‘பூட்டு’ பூமியில் குட்டியாய் டூர் -
Page 1 of 1
‘பூட்டு’ பூமியில் குட்டியாய் டூர் -
திண்டுக்கல் :
கோடை விடுமுறையில் ஒட்டுமொத்த பார்வையையும்
ஈர்ப்பது சுற்றுலாத்தலங்கள் தான். ஒரே நேரத்தில் பலரும்
மொய்ப்பதால் நெருக்கடி, வாகன நெரிசல், அடிப்படை
வசதிகளில் சிரமம்... என ஒட்டுமொத்த உல்லாச
மனோநிலையே சிலவேளைகளில் கெட்டுப்போய் விடுகிறது.
ஆனால் பலரது பார்வையிலும் படாமல் மகிழ்ச்சியையும்,
ரம்மியமான சூழ்நிலையையும் வாரி வழங்கும் பல்வேறு
சிறிய சுற்றுலாத்தலங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலுமே
இருக்கின்றன.
அவற்றை அப்பகுதியில் உள்ளவர்கள் மட்டும் கண்டு
களிக்காமல், வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களும் ரசிக்க
வழி வகுப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
இதோ பூட்டுக்கு பெயர் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தில்
வெளிச்சம்படாத சில சுற்றுலாதலங்கள்:
சிறுமலை... பெரு மகிழ்ச்சி
சிறுமலை... பெயருக்கேற்றார்போல் சிறியது தான்.
ஆனால் வழியெங்கும் சில்லென்ற காற்றும், பசுமையான
காட்சியும் மனதை ரொம்பவே அள்ளும்.
2,750 மீட்டர் உயரம் கொண்ட இம்மலை 18 கொண்டை
ஊசி வளைவுகளை கொண்டது. நான்காவது வளைவிலே
விண்ணில் மிதப்பதை போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.
தென்னை மரம், அடுக்குமாடி கட்டடங்கள் என்று உயரமாகத்
தெரிந்த அத்தனையும், அடுத்த அரை மணிநேரத்தில்
குனிந்து அதலபாதாளத்தில் பார்க்க வேண்டிய அளவிற்கு
இந்த மலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
எப்படி போவது? திண்டுக்கல்லில் இருந்து 21 கிமீ தூரத்தில்
உள்ளது. ஒரு மணிநேரத்திற்கு ஒரு பஸ் உண்டு.
கட்டணம் ₹30.
பஞ்சாமிர்த பழம்!
சிறுமலை வாழைப்பழம், தமிழக அளவில் பிரசித்தி பெற்றது.
சிறியவர் முதல் பெரியவர் வரை எவரும் இதனை உண்ணலாம்.
எளிதில் அழுகிப்போகாது. இப்பழம் இருக்கும் அறை அப்படி
ஒரு கமகமப்புடன் இருக்கும்.
முக்கியமானவர்களை சந்திக்க செல்லும் போது இப்பழங்களை
கொண்டு செல்வது பலரது வழக்கம். பழநி முருகன் கோயிலில்
இப்பழம் தான் பஞ்சாமிர்தத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
மலை, குளிர்ச்சியான பருவநிலை உள்ளிட்டவற்றால்
இச்சிறப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
பீரங்கி பார்க்கணுமா?
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் திண்டுக்கல் மலைக்
கோட்டைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. 1605ல்
முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர் 60 0அடி உயரம் உள்ள இந்த
கல் மலையில் ஒரு கோட்டையை கட்டினார்.
தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் திருமலைநாயக்கர்,
ராணிமங்கம்மாள், திப்புசுல்தான், ஹைதர்அலி,
மைசூர் சுல்தான்கள், ஆங்கிலேயர் என்று இங்கு தடம்
பதித்துள்ளனர்.
பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட பீரங்கிகள், சிறைகள், போர்
வீரர்கள் தங்கும் அறைகள் என்று இன்றும் வரலாற்றின்
நினைவுகளாக நம்மை அந்தக்காலத்திற்கே அழைத்து
செல்கின்றன.
15வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி இலவசம்.
அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.15, வெளிநாட்டினருக்கு
ரூ.200 கட்டணம். காலை 8 முதல் மாலை 6 மணி வரை
அனுமதி உண்டு.
பெரிய்ய்ய... கருடாழ்வார்
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோயில்
முன்புள்ள கருடாழ்வார் குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை பலரது கவனத்தையும் கவர்ந்து வருகிறது.
26 அடி உயரத்தில் விண்ணை முட்டிக்கொண்டு நிற்கும்
கருடாழ்வார் கண்களை உருட்டிக் கொண்டிருக்கும் காட்சி
காண்போரை ஈர்க்கும். பிரமாண்டமான கால் விரலை
மட்டும் தான் அருகில் இருந்து பார்க்க முடியும்.
அவரின் தோற்றத்தை அண்ணாந்து பார்த்தே வழிபட
முடியும்.
வைகை கரையில் வீர ஆஞ்சநேயர்
நிலக்கோட்டையில் இருந்து 7 கிமீ தூரத்தில்
வைகையாற்றின் கரையில் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற
வீரஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயில்
இதிகாச காலங்களுடன் தொடர்புடையது. அருகே
சித்தர்கள் மலை உள்ளது. இங்கு சித்தர்கள் பலர் தவம்
செய்ததாக ஐதீகம்.
மலை உச்சியில் மகாலிங்கம் கோயில் உள்ளது. கோயிலுக்கு
முன்பு வற்றாத சுனை ஒன்று உள்ளது. நவக்கிரகங்களில்
குருபகவானுக்கு தனிக்கோயில் உள்ள குருவித்துரை
இக்கோயிலில் இருந்து 4 கிமீ.தூரத்தில் அமைந்துள்ளது
மற்றொரு சிறப்பு.
ஓராயிரம் ரூபாயில் ‘ஒரு பக்க பிரிண்டிங்’
பழநி பஸ் ஸ்டாண்டில் இருந்து சுமார் ஒரு கிமீ தொலைவில்
திருஆவினன்குடி கோயில் எதிர்புறம் உள்ள சன்னதி வீதியில்
அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு பழங்கால
பொருட்கள் அதிகம் வியாபித்துள்ளன.
ஓலைச்சுவடிகள், மருத்துவச்சுவடி, மந்திர ஏடு, இந்திய
நாணயங்கள், எழுத்தாணிகள், செப்புத்தகடுகள்,
மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழி. இரண்டாயிரம்
வருடத்திற்கு முந்தைய மூங்கில் பாத்திரம், இசைக்கருவிகள்
என்று நம் மூதாதையரின் பயன்பாட்டு கருவிகள் நம்மை
ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
மேலும் கிபி 2ம் நூற்றாண்டை சேர்ந்த செங்கல் வகைகள்,
மரச்சிற்பங்கள், உலோகவியல் பொருட்கள், படிமங்கள்,
கிபி 18ம் நூற்றாண்டில் பழநி என்ற எழுத்துடன் அனுமன்,
மயில் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ள நாணயம்,
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வெளியிட்ட ஆயிரம் ரூபாய்
நோட்டு (ஒரு பக்கம் மட்டுமே பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும்)
உள்ளன.
சமணர்களின் ஹெட் மலை
பழநியில் இருந்து கொழுமம் சாலையில் 17 கிமீ தூரத்தில்
பாப்பம்பட்டி அருகே இம்மலை உள்ளது. கிபி 2, 3ம் நூற்றாண்டில்
வாழ்ந்த சமணத்துறவிகளின் பள்ளி அங்கு செயல்பட்டதற்கான
ஆதாரம் உள்ளது. 1,800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு,
குகை ஓவியங்கள் அதிகம் உள்ளன. உத்தமபாளையம், மதுரை,
கொல்லிமலையில் செயல்பட்ட சமண பள்ளிகளுக்கு ஐவர்மலை
தலைமையிடமாகவும் இருந்துள்ளது.
-
-----------------------------
நன்றி- தினகரன்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பொழுதை கழிக்க டூர் அடிக்கும் தமன்னா!
» மதுக்கடைகளுக்குப் பூட்டு போடு…!
» தீயவை பூட்டு
» பூட்டு சாவியைக் கண்டுபிடித்தவர்கள்
» வீடியோ பூட்டு
» மதுக்கடைகளுக்குப் பூட்டு போடு…!
» தீயவை பூட்டு
» பூட்டு சாவியைக் கண்டுபிடித்தவர்கள்
» வீடியோ பூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum