தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பேசா மடந்தை (1)
Page 1 of 1
பேசா மடந்தை (1)
முன்னொரு காலத்தில், பீமபுரி என்ற நகரத்தை, அமிருதமோகினி என்ற அரசி ஆண்டு வந்தாள். அவளுக்கு, பேசாமடந்தை என்ற அழகிய மகள் இருந்தாள். அவளின் அழகை கேள்வியுற்ற பல தேசத்து மன்னர்களும், அவளை மணந்து கொள்ள விரும்பினர்.
பேசாமடந்தையை பாதுகாப்பதற்காக, அவளின் தாய், சிறப்பான அரண்மனையை கட்டினாள். அரண்மனையை சுற்றிலும், 10 மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன. ஒவ்வொரு மதில் சுவருக்கும், ஒவ்வொரு கதவு இருந்தது. அந்த, 10 வாயில்களின் வழியாக, 10 மதில் சுவரையும் கடந்து சென்றால் தான், பேசாமடந்தையை பார்க்க முடியும்.
தன் மகளை மணக்க விரும்பும் மன்னர்களுக்கு, அமிருதமோகினி பல போட்டிகளை வைத்தாள்.
'பேசாமடந்தையை மணக்க விரும்புகிறவர் முதல் வாசலுக்கு வந்து, ஆயிரம் பொற்காசுகள் கொடுக்க வேண்டும். அதன்பின், 10 வாசல்களையும் கடந்து, பேசாமடந்தையை பேச வைக்க வேண்டும். அவளை பேச வைக்கிற வீரனுக்கே, அவளை திருமணம் செய்து வைப்பேன். இந்த போட்டியில் தோல்வி அடைந்தால், அவர்களின் தலையை மொட்டையடித்து அனுப்புவேன்' என்று அறிவித்தாள்.
அவளது நிபந்தனையை ஏற்ற பல தேசத்து மன்னர்கள், பீமபுரிக்கு வந்தனர். வந்தவர்கள் அனைவரும், ஆயிரம் பொற்காசுகளை, முதல் வாயிலில் கொடுத்து விட்டு, மற்ற மதில் சுவர்களை கடக்க முயற்சி செய்தனர். ஆனால், யாருமே மதில் சுவர்களை கடக்க முடியாமல் தோல்வி அடைந்தனர். ஆகவே, எல்லாருக்கும் மொட்டையடிக்கப்பட்டு, அவமானத்துடன் அவரவர் நாட்டிற்கு திரும்பினர்.
இந்த செய்தியை கேள்வியுற்ற விக்கிரமாதித்தன், மந்திரி பட்டியுடன் பீமபுரி வந்தான்.
''இந்நகரில் என்ன விசேஷம்!'' என்று அந்த நகரை சேர்ந்த ஒருவரிடம் கேட்டான் விக்கிரமாதித்தன்.
அந்த நகரவாசி, பேசாமடந்தையை பற்றி பல கதைகளை கூறினார். பல தேசத்து அரசர்கள் அவளை மணம் புரிய வந்து, அவமானப்பட்டு சென்றதை பற்றி கூறினார்.
இதை கேட்ட விக்கிரமாதித்தன், ''பட்டி, நாம் பேசாமடந்தை இருக்கும் அரண்மனைக்கு செல்ல வேண்டும்!'' என்றான்.
''அரசே! அந்த அரண்மனை பற்றி முழு விவரங்களையும் அறியாமல், அவசரபட்டு செல்வது நல்லதல்ல... முதலில் இந்த ஊரில் எங்காவது தங்கியிருந்து, முழு விவரங்களையும் தெரிந்து கொள்வோம். அதன் பின், அரண்மனைக்கு செல்வோம்,'' என்று கூறினான் பட்டி.
''உன் யோசனைப்படியே செய்வோம்,'' என்று பதில் அளித்தான் விக்கிரமாதித்தன். உடன் இருந்த வேதாளத்தை, ''நாங்கள் அழைக்கும் போது நீ வந்தால் போதும்!'' என்று கூறி அனுப்பி விட்டான்.
அன்று இரவு இருவரும், ஒரு கிழவியின் வீட்டில் தங்கினர்.
''நீங்கள் இருவரும் வியாபாரத்திற்காக செல்கிறீர்களா...'' என்று கேட்டாள் கிழவி.
''இல்லை பாட்டி, நாங்கள் இருவரும் அமிருதமோகினியின் அரண்மனைக்கு செல்ல போகிறோம். அங்குள்ள பேசாமடந்தையிடம் பேசிவிட்டு, நான், அவளை திருமணம் செய்ய போகிறேன். எனவே, என் தம்பி பட்டியையும் என்னுடன் அழைத்து செல்கிறேன்,'' என்றான் விக்கிரமாதித்தன்.
''உங்களுடைய அறியாமையை கண்டால், எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எத்தனையோ வீராதி வீரர்கள் எல்லாம் வந்து, அவமானப்பட்டு திரும்பி சென்று விட்டனர். நீங்கள் அங்கு சென்றால், உங்களுக்கும் அவமானம் ஏற்படும். ஆகவே, பேசாமல் திரும்பி சென்று விடுங்கள்,'' என்றாள் பாட்டி.
''அப்படி சொல்லி விடாதீர்கள் பாட்டி... பேசாமடந்தையை மணக்காவிட்டால், என் அண்ணன் விக்கிரமாதித்தன், உயிர் வாழமாட்டேன் என்கிறான். எனவே, இந்த விஷயத்தில் நீங்கள் தான் உதவி புரிய வேண்டும்,'' என்றான் பட்டி.
''எந்த விதத்தில் உங்களுக்கு உதவி செய்ய முடியும்...'' என்றாள் கிழவி.
''பாட்டி, இந்த ஊரில் நீண்ட காலமாக வசித்து வருபவர் நீங்கள். அரண்மனையை பற்றிய ரகசியம் முழுவதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். அதை மட்டும் எங்களுக்கு சொன்னால் போதும். நாங்கள் எப்படியாவது உள்ளே சென்று, பேசாமடந்தையை பேச வைத்து விடுவோம்,'' என்றான் பட்டி.
''குழந்தைகளே, பேசாமடந்தை இருக்கிற அரண்மனைக்கு, 10 வாயில்கள் இருக்கும். அதில், முதல் வாயிலில் இருக்கும் ஆராய்ச்சி மணியை அடித்தால், சில அதிகாரிகள் வருவர். அவர்களிடம், ஆயிரம் பொற்காசுகளை கொடுத்து விட வேண்டும். அவர்கள் ஒரு விருந்து படைப்பர். அந்த விருந்தில், வெந்த சோறும், வேகாத சோறும்; உரித்த பழங்களும், உரிக்காத பழங்களும் கலந்திருக்கும்.
''போட்டியில் பங்குபெறுபவர், இந்த விநோத விருந்தை சாப்பிட்டு விட்டு, இரண்டாவது வாயிலுக்கு செல்ல வேண்டும். அங்கு மூன்று பதுமைகள் இருக்கும். போட்டியாளர்கள் உள்ளே நுழைந்ததும், ஒரு பதுமை முக்காலி போடும்; இன்னொரு பதுமை போட்டியாளரை முக்காலியில் உட்கார வைக்கும்; மூன்றாவது பதுமை போட்டியிடுபவரின் தலையை மொட்டை அடித்து விடும்.
''அதை கடந்து, மூன்றாவது வாசலுக்கு சென்றால், அங்கு இரண்டு மல்லர்கள் தோன்றுவர். அவர்கள் போட்டியிடுபவரை அடித்து நொறுக்கி விடுவர். அதையும் கடந்து, நான்காவது வாசலுக்கு சென்றால், அங்கு ஒரு பெரிய கருங்குரங்கு இருக்கும். அதனிடம் தப்பி, ஐந்தாவது வாசலுக்கு சென்றால், ஒரு பயங்கரமான புலி இருக்கும்.
''ஆறாவது வாசலில் ஒரு மதம்பிடித்த யானை இருக்கும். அதை கடந்து, ஏழாவது வாசலுக்கு சென்றால், அங்கு சேறு நிரம்பிய வாய்க்கால் இருக்கும். அதையும் கடந்து சென்றால், மறுபுறத்தில், ஒரு நத்தை ஓட்டில், சிறிதளவு தண்ணீரும், ஒரு ஓலையும் இருக்கும். நத்தை ஓட்டில் உள்ள தண்ணீரில், கால்களை கழுவி விட்டு, சிறிதளவு அதில் மிச்ச தண்ணீரும் வைக்க வேண்டும்.
''இப்படி செய்துவிட்டு, எட்டாவது வாயிலுக்குள் சென்றால், ஒரு பளிங்கு மண்டபம் இருக்கும். அதில் நடக்க முடியாத அளவிற்கு தரை வழுக்கும். தப்பி தவறி கீழே விழுந்தால் மண்டை உடைந்து விடும்.
''இதையும் கடந்து, ஒன்பதாவது வாயிலுக்குள் சென்றால், இருள் அடர்ந்த மண்டபம் ஒன்று இருக்கும். அதில், ஆயிரம் கல் தூண்கள் இருக்கும். இருட்டில் வழியை கண்டுபிடித்து, வாயிலை அடைவது கடினம். தப்பி தவறி, ஏதாவது கல் தூணில் மோதினால், மண்டை உடைந்து விடும்.
''இதையெல்லாம் கடந்து, 10வது வாயிலுக்குள் சென்றால், அங்கு அற்புதமான ஒரு மாளிகை காணப்படும். இரவை பகலாக்க கூடிய அளவிற்கு அணையா விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்.
''மண்டபத்தின் நடுவே தங்கத்தாலான ஒரு கட்டில் போடப் பட்டிருக்கும். அதில், தலைப்பகுதி எது, கால் பகுதி எது என்று குழப்பமாக இருக்கும். தவறான பகுதியில் தலை வைத்து படுத்தால், அங்கு உள்ள பதுமைகள் போட்டியாளரை கீழே தள்ளி விடும்.
''சரியான பக்கத்தில் தலைவைத்து படுத்தால், சில பதுமைகள் தோன்றி சந்தனம் போன்ற வாசனைப் பொருள்களை பூசிவிடும்; சில பதுமைகள் பன்னீர் தெளிக்கும்; சில பதுமைகள் சாமரம் வீசும்.
''அதற்கு பின், அங்கு பல அழகிய பெண்கள் வருவர். அவர்களில் யார் பேசாமடந்தை என்பதை கண்டுபிடித்து, இரவுக்குள் பேசாமடந்தையை, மூன்று வார்த்தைகளாவது பேச வைக்க வேண்டும். இவ்வளவு சாகசங்களையும் செய்தால் தான் பேசாமடந்தையை மணக்க முடியும்,'' என்று கூறினாள் கிழவி.
மறுநாள் காலை -
பேசாமடந்தை இருந்த அரண்மனைக்கு, விக்கிரமாதித்தனும், பட்டியும் சென்றனர். அங்கு முதல் வாயிலில் இருந்த ஆராய்ச்சி மணியை அடித்தான் விக்கிரமாதித்தன். அரண்மனை அதிகாரிகள் வெளியே வந்தனர். அவர்களிடம், ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான் விக்கிரமாதித்தன்.
விக்கிரமாதித்தனுக்கு விருந்து படைக்கப் பட்டது. உணவில் இருந்த வேகாத சோற்றையும், உரிக்காத பழங்களையும் யாருக்கும் தெரியாமல், பட்டியிடம் ஒதுக்கி விட்டான் விக்கிரமாதித்தன். அவற்றை ஒரு துணியில் மறைத்து வைத்து கட்டினான் பட்டி.
இரண்டாவது வாயிலை கடக்கும் போது, ஒரு அரண்மனை அதிகாரியிடம் பேசிக்கொண்டே அதிகாரியை தன்னுடன் அழைத்து சென்றான். அப்போது எதிர்ப்பட்ட மற்றொரு அதிகாரியை பார்த்து பட்டி, ''ஏண்டா வழியில் குறுக்கே நிற்கிற...'' என்று கூறி, அவரை இரண்டாவது வாயில் பகுதிக்குள் தள்ளி விட்டான்.
அப்போது, உள்ளேயிருந்து வந்த மூன்று பதுமைகள், அந்த அதிகாரியை பிடித்து மொட்டை அடித்து விட்டனர். இந்த சமயத்தில் விக்கிரமாதித்தனும், பட்டியும், இரண்டாவது வாயிலை கடந்து விட்டனர்.
மூன்றாவது வாயிலுக்குள் நுழையும்போது, தன்னுடன் வந்த அதிகாரியை பிடித்து, உள்ளே தள்ளி விட்டான் பட்டி. அப்போது வந்த மல்லர்கள், அந்த அதிகாரியை பிடித்து அடித்து நொறுக்கினர்.
இதற்குள் விக்கிரமாதித்தனும், பட்டியும் நான்காவது வாயிலுக்குள் நுழைந்தனர். அதனுள் இருந்த ஒரு பெரிய கருங்குரங்கு இவர்களை நோக்கி வந்தது.
உடனே பட்டி, துணியில் கட்டி வைத்திருந்த வேகாத சோற்றையும், உரிக்காத பழங்களையும் அதன் முன் வீசினான். ஆனால், அதை கண்டு கொள்ளவில்லை குரங்கு.
உடனே, வேதாளத்தை அழைத்து இயந்திர குரங்கை அழிக்கும்படி கூறினான் பட்டி.
வேதாளம், ஒரு நொடியில் அந்த குரங்கை அடித்து நொறுக்கி தனித்தனியாக பிய்த்து எரிந்தது.
இவர்கள், ஐந்தாவது, ஆறாவது வாயிலை கடந்த போது, அங்கு இயந்திர புலியும், யானையும் இருந்தது. இவர்களுடன் சென்ற வேதாளம், புலியையும், யானையையும் அழித்தது.
பட்டியும், விக்கிரமாதித்தனும் ஏழாவது வாயிலை கடந்த போது, ஒரு பெரிய கிணற்றை பார்த்தனர்.
இதை எப்படி தாண்டி செல்வது என்று நினைத்த பட்டி, அருகிலிருந்த பெரிய பாறாங்கல்லை புரட்டி கிணற்றுக்குள் தள்ளி விட்டான்.
கிணற்றுக்குள் பாறாங்கல் விழுந்தவுடன், இரண்டு பலகைகள் கிணற்றை மூடின. பட்டியும், விக்கிரமாதித்தனும், வேதாளமும் அந்த பலகை மீது நடந்து, எட்டாவது வாயிலை அடைந்தனர். எட்டாவது வாயிலில் சேறுகள் நிறைந்த ஒரு கால்வாய் ஓடி கொண்டிருந்தது. அப்போது, பட்டி, வேதாளத்தின் முதுகில் ஏறி கால்வாயை தாண்டி சென்றான்.
விக்கிரமாதித்தன், சேற்று வாய்காலில் இறங்கி நடந்து மறுகரையை அடைந்தான். அங்கிருந்த இலைகளால் சேற்றை நன்றாக துடைத்த பின், நத்தை ஓட்டில் இருந்த தண்ணீரால் மேலும் சுத்தம் செய்து, சிறிது தண்ணீரையும் மிச்சம் வைத்தான். பின் மூவரும், ஒன்பதாவது வாயிலை அடைந்தனர்.
அங்கு இருந்த தரை, மிகவும் பளபளப்பாக கண்ணாடி மாதிரி இருந்தது. அதில் காலை வைத்து பார்த்த போது, வழுக்க துவங்கியது.
உடனே, வேதாளத்தை அனுப்பி, மெழுகும், நெருப்பும் கொண்டு வர சொன்னான் விக்கிரமாதித்தன்.
நெருப்பையும், மெழுகையும் கொண்டு வந்தது வேதாளம். அந்த நெருப்பால் மெழுகை உருக்கி, தன் காலில் தடவி கொண்டான் விக்கிரமாதித்தன்.
மெழுகு பூசிய கால்களால் விக்கிரமாதித்தன் நடக்க துவங்கினான்; இப்போது தரை வழுக்கவில்லை. பட்டி முன்போலவே வேதாளத்தின் முதுகில் ஏறி ஒன்பதாவது வாயிலை கடந்தான். மூவரும், 10வது வாயிலை அடைந்தனர்.
அங்கே ஒரே இருட்டாக இருந்தது. கொஞ்சம் கூட வெளிச்சம் இல்லை. கைபட்ட இடமெல்லாம் கல் தூண்கள் இருந்தது. இருட்டில் யாருக்கும் வழி தெரியவில்லை.
''அரசே! நான் வேதாளத்தின் மீது அமர்ந்து, வண்டு போல ஒலியெழுப்பி செல்கிறேன். நீங்கள், எங்களை பின் தொடர்ந்து வாருங்கள்,'' என்று கூறி விட்டு, வேதாளத்தின் முதுகில் ஏறினான் பட்டி.
இவ்வாறு மூவரும், 10வது வாயிலை கடந்ததும், ஒரு வசந்த மண்டபம் தெரிந்தது. மண்டபத்தின் நடுவே, ஒரு தங்க கட்டில் போடப்பட்டிருந்தது. மண்டபத்தை சுற்றிலும், தூங்கா விளக்குகள் எரிந்தன. தங்க கட்டிலை சுற்றிலும், ஆயிரக்கணக்கான தாதி பெண்கள் உறங்கி கொண்டிருந்தனர்.
அந்த கட்டிலை மூவரும் நெருங்கினர்.
- தொடரும்...
.redadvt a{ color:#000099; font-weight:bold; font-size:18px;}

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum