தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வனநாயகம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

வனநாயகம் ! நூல் ஆசிரியர் :  முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty வனநாயகம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Sun Aug 20, 2017 12:56 pm

வனநாயகம் !
நூல் ஆசிரியர் : 
முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 008. பேச : 044 26251968 
பக்கங்கள் : 30 விலை : ரூ. 50 


*****
      “வனநாயகம்” என்ற நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது.  ‘காடு அதை நாடு’ என்ற எனது கவிதை நினைவிற்கு வந்தது. நூல் ஆசிரியர் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் இயல்பாகவே இயற்கையை நேசிப்பவர்.  வனத்துறையின் செயலராக இருந்து  வனம் காத்து, மதுரை விமான நிலையயம் செல்லும் வழி உள்பட பல இடங்களில் மரங்கள் நட வழிவகை செய்தவர். இன்று செழித்து வளர்ந்து நிற்கின்றன.
      2015ஆம் ஆண்டு மக்கள் சிந்தனை பேரவை, ஈரோடு மாநகரில் நடத்திய புத்தகத் திருவிழாவில் ஆற்றிய உரை தான் இந்நூல்.  2017ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் எது ஆன்மீகம்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  அந்த உரையையும் விரைவில் நூலாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஈரோடு புத்தகத் திருவிழாவில் மக்கள் கடல்அலை போல கூடி இருந்தார்கள்.  1¾ மணி நேர உரையை ,மக்கள் ஒருவர் கூட எழுந்து செல்லாமல் ரசித்து மகிழ்ந்தனர்.
      வனம் பற்றிய ஆய்வுக் கட்டுரை என்றே சொல்ல வேண்டும். வனம் பற்றியும் வனத்தில் வாழும் பல்வேறு விலங்குகள் பற்றியும் இராமாயணக் கதைகள், மகாபாரதக் கதைகள் என பலவற்றை மேற்கோள் காட்டி மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்கள்.  நூலை பொருத்தமான வண்ணப்படங்களுடன் நல்ல தாளில் தரமாக அச்சிட்டுள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு பாராட்டுக்கள். நூலிலிருந்து சிறு துளிகள் உங்கள் ரசனைக்கு.
      “தோட்டம் வேறு, வனம் வேறு, பூங்கா வேறு, காடு வேறு, பூங்காவில் நுழையும் போது திகில் இல்லை, செயற்கையான கூட்டத்தில் சிக்கிக் கொள்கிறோம். பரந்து விரிந்த காட்டில் நுழையும் போது நம்மையும் அறியாமல் நாம் பரவசப்படுகிறோம்.  அடுத்தது என்ன நடக்கும் என்று அறிய முடியாமல் சிலிர்ப்பு உண்டாகிறது.  ஏதேனும் சலசலப்பைக் கேட்டால் சிறுத்தை கடந்து சென்றிருக்குமா? பாம்பு ஊர்ந்து போயிருக்குமா? என்றெல்லாம் விழிப்புணர்வோடு உற்றுப்பார்க்கிறோம்”.
      இந்த நூல் படிக்கும் வாசகர்களை  தன் வைர வரிகளின் மூலம் காட்டிற்கே அழைத்துச் சென்று மனக்கண்ணில் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர்.
      காட்டிற்கு செல்வபவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எதை செய்யக் கூடாது எனபதை பல்வேறு நிகழ்வுகளின் மூலம் அறிவுறுத்தி உள்ளார்.  ஒரு வன அதிகாரி தனது உறவினருக்காக புலியைக் காட்ட வேண்டும் என்று ஆணையிட்டு ஆடு ஒன்றை கட்டி வைத்து புலியை வர வைத்து மகிழ்ந்து இருக்கிறார்.  பின்னர் ஆடு கட்டி வைத்த காவலரையும் புலி கடித்து கொன்று விட்டு, மனித வேட்டையாடும் புலியாக மாறிய நிகழ்வை நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
      வனத்தின் முக்கியத்தை நன்கு உணர்த்தி உள்ளார்.  காடுகளை அழித்து நாடுகளாக்கும் நாகரீக மனிதர்களுக்கு புத்தி புகட்டும் விதமாக நூல் உள்ளது.
      “வனங்கள் நாம் வாழ்வதற்கான மூலாதாரங்கள்.  ஒரு நாட்டின் பரப்பளவில் 33 சதவிகிதம் வனங்கள் இருக்க வேண்டும். அப்போது தான் மழை சரியாகப் பெய்யும்; மண்ணரிப்பு தடுக்கப்படும்;  அருவிகள் உண்டாகும்; ஆறுகள் பெருகும்; வெப்பமயம் குறையும்;    வேளாண்மை செழிக்கும்; கால்நடைகள் தழைக்கும்;  சிறுதொழில்கள் மேம்படும்;   பணச்சுழற்சி அதிகரிக்கும்;  பொருளாதாரம் உயரும்”.
      வனங்களை அழித்து விட்டு மரங்களை வெட்டி விட்டு மழை பெய்யவில்லையே என்று வருந்துவதில் அர்த்தமில்லை.  காடு இருந்தால் தான் நாடு செழுக்கும் என்பதை நன்கு விளக்கி உள்ளார்.
      “நம் மண் சார்ந்த மரங்கள் திட மரத்தைத் தருகின்றன;  காற்றைச் சுத்தப்படுத்துகின்றன; மண்ணை செழுமைப்படுத்துகின்றன; கரியமில-வாயுவை உறிஞ்சிக் கொள்கின்றன” மரத்தின் மகத்துவத்தை, வனத்தின் வனப்பை நூல் முழுவதும் எடுத்து இயம்பி உள்ளார்.
      விலங்கு காட்சிச்சாலைக்கு செல்பவர்கள் விலங்குகளைத் தீண்டாமல், சீண்டாமல் பார்க்க வேண்டும் என்ற எச்சரிக்கையும் நூலில் உள்ளது.  முதலைப் பண்ணையில் முதலையைச் சீண்டிவிட்டு மாட்டிக் கொண்டு முதலைக் கண்ணீர் வடித்தவரின் நிகழ்வும் நூலில் உள்ளது. தேன் சேர்க்கும் தேனீ பற்றி, சிறுத்தை, சிங்கம், யானை, பூனை, குரங்கு, பாம்பு மற்றும் வனத்தில் வசிக்கும் விலங்குகள் பற்றிய பல அரிய தகவல்கள் நூலில் உள்ளன.
      “மரங்கள் இயற்கையின் சாசனம், காற்றின் வாகனம், மலரின் ஆசனம், இனிமையின் பாசனம், பாதசாரிகளுக்கு நிழற்குடை, பயணிகளுக்குப் பஞ்சு மெத்தை, பறவைகளுக்கு சரணாலயம், வியாபாரிகளுக்குக் கூடாரம், கால்நடைகளுக்குப் பயணியர் விடுதி”
      மரத்தின் பயனை கவித்துவமாக எழுதி உள்ளார்.  நூலாசிரியர் கவிஞர் என்பதால் அவரது உரையிலும், எழுத்திலும், கவித்துவம் மலர்கின்றது.
      யானைகள் பற்றி நூலில் குறிப்பிட்டுள்ளதைப் பாருங்கள்.
      “யானைகளுக்கு எல்லைகள் இல்லை, தமிழகத்து யானை வங்காளம் வரை கூட செல்லக் கூடியது, எடுத்த எடுப்பிலேயே 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு ஓடக் கூடியது”.
      மன்னர் காலத்தில் போர் என்ற பெயரில் குதிரைகளும், யானைகளும் அழிந்த வரலாற்றை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். புலி, பசி எடுக்காமல் மானை விரட்டாது, புசித்து விட்டால் மானே அருகில் வந்தாலும் தொடாது என்ற உண்மையை எழுதி உள்ளார்.
      வன விலங்குகளிடமிருந்து மனிதர்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றது என்பதை நூலில் நன்கு உணர்த்தி உள்ளார்.  விலங்குகளிடம் பல நல்ல குணங்கள், விலங்காபிமானம் பற்றி, குட்டியிட்ட குரங்கை கடித்துக் கொன்ற சிறுத்தை, குரங்கு குட்டியைப் பார்த்ததும் நெகிழ்ந்து, தான் கொன்ற குட்டியிட்ட குரங்கை உண்ணாமல் பாசம் காட்டிய நிகழ்வு நூலில் உள்ளது.  இதனை கட்செவியில் காட்சியாகவும் பார்த்து நெகிழ்ந்தேன்.  வனநாயகம் நூல் வனத்திற்கான மதிப்பைக் கூட்டும் விதமாக வந்துள்ளது, பாராட்டுக்கள்.

-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.kavimalar.com


http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காகிதம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நினைவுகள்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» இல்லறம் இனிக்க! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ .ப . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» அச்சம் தவிர்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum