தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



-கொஞ்சசம் சிரிங்க...

Go down

-கொஞ்சசம் சிரிங்க... Empty -கொஞ்சசம் சிரிங்க...

Post by அ.இராமநாதன் Wed Oct 11, 2017 8:52 am

சிரித்துப் பார் உன்னை உனக்கு பிடிக்கும். சிரிக்க வைத்து பார். இந்த உலகத்திற்கே உன்னைப் பிடிக்கும். இன்றைக்கு நாம் எல்லோரிடமும் குறைந்து வரும் உணர்வுகளில் ஒன்று சிரிப்பு தான். சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி. எப்படி இருக்கீங்கன்னு கேட்டால்... ஏதோ இருக்கிறோம் என்ற சலிப்பு நிறைந்த பதில்களே நம்மிடம் வருகிறது.
'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற வள்ளுவனின் வாய்மொழியில் உள்ள தத்துவத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம். சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு சிரிப்பு. வேறு ஜீவ ராசிகள் செய்ய முடியாத செயல் இந்த சிரிப்பு. மனம் கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு. நேர் மறை எண்ணங்களைத் தருவது சிரிப்பு. நட்பினை பெற்றுத் தருவது சிரிப்பு. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்என்பது உண்மை தான். அதனால் தான் அமெரிக்கா போன்ற நாடுகளில் சிரிப்பு வைத்தியம் என்ற சிகிச்சை முறையை கடைப்பிடிக்கிறார்கள். மனிதனோடு பிறந்த உணர்வின் வெளிப்பாடு சிரிப்பு. வாழ்நாளில் சிரிக்காத நாட்கள் வீணான நாட்களே. அதிகமாகச் சிரிப்பவர்களை சற்றே உற்று நோக்கி பார்த்தால் அவர்களின் பின்னணியில் சோகங்கள் அடங்கியிருக்கும். மன அழுத்தங்களை தவிர்க்க சிரிப்பே சிறந்த மருந்து. மற்றவர்களை வேதனைப் படுத்தும் நக்கல் சிரிப்பைத் தவிருங்கள். 
தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற அகந்தைச் சிரிப்பைத் தவிருங்கள். ஏளனச் சிரிப்பையும், பரிகாச சிரிப்பையும் தவிருங்கள். நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். சிக்கலான விஷயத்தையும் புன்னகையால் கடந்து செல்லுங்கள்.

தொற்று வியாதி : சிரிப்பு ஒரு தொற்று வியாதி... எதிரே உள்ள மனிதர்களைப் பார்த்து ஒரு புன்னகை செய்யுங்கள். திரும்ப அவரிடம் இருந்து பதிலாக புன்னகை வரும். இது தான் சிரிப்பின் வலிமை. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள். சுட்டெரிக்கும் சூரியனாய் இருக்கும் கோபத்தை புன்னகையால் குளிர வைப்போம். சிரிக்கும் போது 300 தசைகள் முகத்தில் அசைகின்றனவாம். தசைகளை இயங்க வைக்கும் ஆற்றல் படைத்தது சிரிப்பு. குழந்தைகளின் அழகிற்குக் காரணம் சிரிப்பு தான். நம் மனதையும், முகத்தையும் அழகாக்குவதற்கு அழகு நிலையங்கள் தேவையில்லை. அலுவலகத்தில் சிடுசிடுக்கும் மேனேஜர், வீட்டில் 'உர்' என்று இருக்கும் குடும்ப தலைவர்கள், வயதானால் சிரிக்க கூடாது என்ற கொள்கையில் ஊறி இருக்கும் பெரியவர்கள், பெண்கள் சிரித்தால் போச்சு என பேசும் பழமை வாதிகள்; இவர்களெல்லாம் வாழ்க்கையில் எதை சாதிக்கப் போகிறார்கள். பிரச்னைகள் எல்லாம் தீர்ந்த பிறகு தான் சிரிப்போம் என்று நீங்கள் கூறினால், இந்த ஜென்மத்தில் அது சாத்தியப் படாது. பொன்னகை தராத மகிழ்வை புன்னகையே தரும். காந்தியின் பொக்கை வாய் சிரிப்பை ரசிக்காதவர் உண்டா. கணவன் மனைவி சண்டை
களைக் கூட இலகுவாக தீர்க்கும் சக்தி புன்னகைக்கு உண்டு. எதிரியை வீழ்த்தும் மிகப்பெரிய ஆயுதம் புன்னகை தான்.

சிரிப்பவன் யார் : தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன். தன்னை நினைத்து சிரிப்பவன் காதலன். தனக்குள்ளே சிரிப்பவன் கபடன். தன்னோடு பிறரையும் சிரிக்க வைத்து பார்ப்பவன் மனிதன். வெற்றியில் சிரிப்பவன் வீரன். கண் பார்த்து சிரிப்பவன் கஞ்சன். தேவையின்றி சிரிப்பவன் வீணன். மற்றவரின் சிரிப்பில் மகிழ்ச்சி அடைபவன் இறைவன்.

'இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்'

துன்பத்தையே துன்பப்படுத்த வேண்டும் எனில் சிரிப்பு என்ற ஆயுதத்தை பயன்படுத்துங்கள். 'மீம் கிரியேட்டர்ஸ்'களின் 'மீம்ஸ்'களை ரசியுங்கள். மிக மிக சீரியசான விஷயங்களை கூட 'மீம்ஸ்'களால் அதகளம் பண்ணும் வாழ்க்கை தான் வாழ்வை ரசனையாக்கும்.
மிருகங்களுக்கு மட்டுமே சிரிக்கத் தெரியாது. நமக்கு கடவுள் அளித்த மிகப்பெரும் கொடை அல்லவா சிரிப்பு.

இலவச இணைப்பு : புன்னகையுடன் கிடைக்கும் இலவச இணைப்பு எது தெரியுமா. நல்ல நட்புகள், ஆரோக்கியமான வாழ்க்கை, மகிழ்ச்சியான வாழ்விற்கு ஆயுள், நிறைவான மனம் இவையனைத்தும் நம் வாழ்க்கையோடு வரும் இலவச இணைப்புகள். இதை விட வேறு என்ன வேண்டும் நிம்மதியான வாழ்விற்கு. அடுத்த நொடி நிரந்தரமில்லை. நிலையில்லா உலகு நிஜமில்லா கனவு. 
இத்தகைய வாழ்க்கையில் வரப் போகும் கவலைகளை நினைத்து எதற்காக கலங்க வேண்டும். பிறரை சிரிக்க வைத்துப் பாருங்கள். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். 
பைத்தியமாக மாறுங்கள்... என்ன இப்படி சொல்றேன்னு நினைக்கறீங்களா. மனநிலை 
பாதித்தவர்களுக்கு எதுவுமே தெரியாது. கவலை என்பது இல்லாமல் சிரித்துக் கொண்டே இருப்பர். நாமும் சில சமயங்களில் அப்படி இருக்கலாம். தவறில்லை. கவலைகளை மறக்க அப்படி இருப்போமே.

இறுக்கம் தவிர் : இறுக்கமான மனிதர்களையும், இணக்கமாக மாற்றி இளக வைப்பது புன்னகை. வெற்றிகரமான ரகசியங்களில் ஒன்றும் அது தான். சிரிப்பவர்களுக்கு ஜி.எஸ்.டி., வரி இல்லைனு சொன்னால் தான் சிரிப்பீங்களா... நம் வாழ்க்கைக்கான முகவரி சிரிப்பு தான்.

பொம்பள சிரிச்சா போச்சு... : இதற்கான உண்மையான விளக்கம் என்ன தெரியுமா? எந்த வீட்டில் பெண்கள் சிரித்த முகத்துடன் இருக்கிறார்களோ அந்த வீட்டில் உள்ள துன்பங்கள் போச்சு என்பதே விளக்கம். அதனால்தான், 'சிரிச்ச முகமும், சீதேவியுமாய்' என கிராமத்தில் பாட்டிகள் கூறுவதுண்டு. அடிக்கடி சிரிக்க முடியாவிட்டால் கூட காலை ஒரு வேளை மதியம் ஒரு வேளை, இரவு ஒரு வேளை என சிரிக்க கற்றுக் கொள்ளலாம். உம்மணாம் மூஞ்சிகளிடமும், 'உர்' என இருப்பவர்களிடமும் பழகும் போது மனதில் வெறுமையும், சோகமும் குடி புகுந்து விடும். முதலில் அவர்களைக் காலி செய்தால் தான் வாழ்க்கை ஜாலியாகும். வெடிக்கும் கடுகுடன் இணைந்த போதும் சமையலை மணக்க செய்யும் கறி வேப்பிலை போல, கோபமான மனிதர்களையும் உங்கள் புன்னகையால் மகிழ வையுங்கள். மெய்யாகச் சிரியுங்கள்.வடிவேலுவின் வெள்ளந்தியான சிரிப்பு, விவேக்கின் விவேகமான சிரிப்பு, கலைவாணரின் கருத்தான சிரிப்பு... இவை அனைத்தும் கலந்ததாக உங்கள் சிரிப்பு இருக்கட்டும். புன்னகை தேசத்தால் மனிதம் மலரட்டும். நொடிகளும் 
இனிதாகட்டும் நம் புன்னகையால்.ஹா.. ஹா என்ற இரட்டை எழுத்துக்களை 'முகநுால்' கமென்ட்ஸ்க்கு மட்டுமே பயன்படுத்தாமல் நம் வாழ்க்கையிலும் பயன் படுத்தி மகிழ்வோம். 
சிரிங்க...சிரிங்க...சிரிச்சுக் கொண்டே இருங்க.
-----ம.ஜெயமேரி
ஆசிரியை
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, க.மடத்துப்பட்டி.
bharathisanthiya10@gmail.com




நன்றி - தினமலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum