தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பன்முக நோக்கில் குறுந்தொகை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
பன்முக நோக்கில் குறுந்தொகை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
பன்முக நோக்கில் குறுந்தொகை !
நூல் ஆசிரியர் :
தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராயர் நகர், சென்னை – 600 017. பக்கம் : 252, விலை : ரூ. 160.
பேச : 044-24342810 மின்னஞ்சல் : vanathipathippagam@gmail.com
பேச : 044-24342810 மின்னஞ்சல் : vanathipathippagam@gmail.com
******
சங்க இலக்கியத்தில் மிகவும் கவர்ந்தது குறுந்தொகையே. அதனால் நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு குறுந்தொகையின் மீது பெருங்காதல் என்றே சொல்ல வேண்டும். குறுந்தொகையைப் படித்ததோடு நில்லாமல் ஒப்பியல் ஆய்வுக்குச் செய்து வடித்த 40 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
குறுந்தொகையில் உள்ள தமிழர்களின் பண்பாட்டை ஒழுக்கத்தை, வாழ்க்கை நெறியை, மனிதநேயத்தை, மலர்களின் பாசத்தை, விலங்கபிமானத்தை படம்பிடித்துக் காட்டி உள்ளார். பல்வேறு கோணங்களில் குறுந்தொகையை ஆய்வு செய்துள்ளார்.
முதல் கட்டுரையே முத்திரை பதிக்கும் கட்டுரையாக முத்தாய்ப்பாக உள்ளது பாருங்கள்.
முதல் கட்டுரையே முத்திரை பதிக்கும் கட்டுரையே முத்தாய்ப்பாக உள்ளது பாருங்கள்.
“நயமும் நுட்பமும் துலங்கும் குறுந்தொகையின்
முதற்பாடல்”
“காதலையும் அதன் நுட்பமான மன வேறுபாடுகளையும் இவ்வளவு திறமையுடன் பாகுபடுத்துவதில் உலக இலக்கியத்தில் தமிழ் முதலிடம் வகிக்கிறது” – சுஜாதா. "
ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் அக்கட்டுரைக்குப் பொருத்தமான மெற்கோள்களுடன் தொடங்கி இருப்பது நல்ல யுத்தி ஆகும். ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் முத்தாய்ப்பாக எழுதியுள்ள முடிவுரை நயவுரை.
“அன்புப்பரிசீலனை நல்கிஆடவர் முன்மொழியும் காதலைப் பெண்கள் உடனடியாக எளிதில் ஏற்றுக் கொண்டுவிடக்கூடாது” என்பதை நாகரிகமாகவும் குறிப்பாகவும் உணர்த்தும் ஆகிய பழந்தமிழ்ப் பாடல் இது.
இப்பாடல் உணர்த்தும் உட்கருத்து – செய்தி – இன்றைய கணினி யுகத்தின் காதலுக்கும் ஏற்புடையதே ஆகும்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட குறுந்தொகைப் பாடலை இக்காலத்துப் பொருத்திப் பார்த்த இலக்கியப் பார்வை நன்று.
குறுந்தொகை எனும் பலாப்பழத்தை பக்குவமாக கையில் அனுபவம் என்ற எண்ணெய் தடவி பல உரைகள் படித்த அனுபவம் என்ற கத்தி கொண்டு நறுக்கி இனிக்கும் பலாச்சுளைகளாக வழங்கி உள்ள பாங்கு மிக நன்று.
குறுந்தொகை படிக்கும் போது முட்கள் உள்ள பலா போலவே இருக்கும். இந்நூல் மூலம் பொருள் புரிந்து படிக்கும் போது பலாச்சுளையாகவே இனிக்கும்.
தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் பேராசிரியர்கள், துணைத் தலைவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். முதுகலை தமிழ் இலக்கியத்திற்கு இந்நூலை பாடமாகவும் வைக்கலாம். அத்தகைய தகுதி இந்நூலுக்கு உண்டு.
காதலர்களிடையே புகழ்பெற்ற பாடலான
யாயும் ஞாயும் யாராகியரோ?
பாடல் விளக்கமும் ஒப்பீடுகளும் மேற்கோள்களும் மிக நன்று. பாராட்டுக்கள். எழுத்தாளர் சுஜாதா தொடங்கி தமிழறிஞர்கள் தமிழண்ணல், இரா. சாரங்கபாணி, சிலம்பொலி செல்லப்பன், தனிநாயக அடிகளார், வையாபுரி பிள்ளை, அ. பாண்டுரங்கன், மனோன்மணி சண்முகநாதன், ச. அகத்தியலிங்கம், தி.சு. பாலசுந்தரம் பிள்ளை, தெ. ஞானசுந்தரம், மொ.அ.துரை. ரங்கசாமி, அரங்க இராமலிங்கம், க. பஞ்சாங்கம், கவிக்கோ அப்துல் ரகுமான், ரா. செல்வநாயகம், வைரமுத்து அவர்களின்ஆசிரியர் பேராசிரியர் இராம. குருநாதன், இன்றைய இலக்கிய விமர்சகரான
ந. முருகேசபாண்டியன் வரை இவர்கள் சங்க இலக்கியம் பற்றி உரைத்த நல்கருத்துக்களை ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் எழுதி இருப்பது சிறப்பு. கட்டுரையை படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டி விடுகின்றன.
ந. முருகேசபாண்டியன் வரை இவர்கள் சங்க இலக்கியம் பற்றி உரைத்த நல்கருத்துக்களை ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் எழுதி இருப்பது சிறப்பு. கட்டுரையை படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டி விடுகின்றன.
சங்க இலக்கியத்தின் மகுடமான குறுந்தொகையில் வரும் பாடல்களில் தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழியின் கூற்று இவை அனைத்தும் வாழ்வியல் இலக்கணம் கற்பிக்கும் விதமாய் உள்ளன.
கற்காலம் தொடங்கி கணினிக் காலம் வரை தொடர்ந்து வருவது காதல். மனித குலத்தின் இனிய உணர்வு காதல். வயப்பட்டவர்கள் மட்டுமே உணரும் அற்புத உணர்வு காதல். காதல் ரசம் சொட்டச் சொட்ட குறுந்தொகைப் பாடல்களின் விளக்கம் தந்துள்ள நடை மிக அருமை.
“சங்கப் பெண்பாற் புலவரான கச்சிப் பேட்டு நன்னாகையாடும் தம் பாடல்களில் தலைவரைப் பிரிந்து வாடும் தலைவியரின் ஆற்றாமை உணர்வுகளுக்கும் பெண்களுக்கே உரித்தான தனிப்பட்ட அனுபவங்களுக்குமே அழுத்தமும் முதன்மையும் தந்து பாடி இருப்பது இவ்வகையில் ஓய்வு நோக்கத்தக்கது”
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண்புலவர்கள் காதலைப் பற்றி, பிரிவைப் பற்றி மிக மிக நுட்பமாக பாடல் பாடி உள்ளனர். அன்று இருந்த பெண் விடுதலை கூட இன்று இல்லை என்பதே உண்மை. சங்க காலத்தில் 30க்கு மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்து உள்ளனர்.
இன்று பெண் கவிஞர்கள் மிகக்குறைவாக உள்ளனர். பெருக வேண்டும், சில பெண் கவிஞர்கள் திருமணமானதும் எழுதுவதையே நிறுத்தி வருகின்றனர். இந்நிலை மாற வேண்டும். இப்படி பல சிந்தனைகளை எழுப்பியது இந்நூல்.
பரணர் பாடிய குறுந்தொகைப் பாடல் வரலாற்று மாந்தர்கள் பற்றி புகழ்ந்து பாடி உள்ளார். வரலாற்று நிகழ்வுகள் பற்றி பாடி உள்ளார். இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன.
ஆண்மை என்றால் ஆண்களுக்கு உரியது என்று எண்ணுகின்றோம். ஆனால் ஆண்மை என்பது ஆண், பெண் இருபாலருக்கும் உரியது என்கிறார். ஆடவர் உளவியல் காதல் பற்றிய கருத்து உள்ளது.
“ஆண்மகனின் காதல் ஆர்வம் தவறன்று. தருவதே எனினும் அவனது ஆர்வ மிகுதியில் காலப்போக்கில் தொய்வு ஏற்படுகிறது”.
உண்மை தான். காதலில் பெண்னின் அளவிற்கு ஆணின் காதல் நீடித்து இருப்பதில்லை என்ற ஆண்மகனின் உளவியலைப் படம்பிடித்துக் காட்டி உள்ளார். சிலப்பதிகாரத்தில் வரும் கோவலனையும் மேற்கோள் காட்டி உள்ளார். காதல் திருமணங்கள் சில தோல்வியில் முடிவதற்கு இந்த உளவியலே காரணமாகின்றது.
“கற்பவர்களைச் சிந்திக்க வைக்கும் சுவையான பாடல்கள்!” குறுந்தொகையில் உள்ள பாடல்கள். கற்பனை வளமும், கவிதை நயமும் நிறைந்த காதலோவியங்கள் குறுந்தொகைப் பாடல்கள். காதல் வாழ்க்கையின் பல்வேறு வேறுபாடுகளையும், காதலர்களின் உள்ளக்கிடக்கையும் சுருக்கமாகவும் அழகாகவும் கூறிக் கற்பவர்களச் சிந்திக்க வைக்கும் சுவையான பாடல்கள்” முனைவர் இர. பிரபாகரன் கருத்து.
நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் தன் பார்வையோடு நின்று விடாமல் பலரின் பார்வையையும் மேற்கோள் காட்டி ஒப்பீடு செய்த விதம் அருமை. இன்றைய காதலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய அற்புத நூல். பாராட்டுக்கள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» பன்முக நோக்கில் புறநானூறு! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் ! பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கவிதை ஒளி! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தமிழ் உலா! நூல் ஆசிரியர் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் ! பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கவிதை ஒளி! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தமிழ் உலா! நூல் ஆசிரியர் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum