தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இன்னும் இருக்கின்றேன்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஞானபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
Page 1 of 1
இன்னும் இருக்கின்றேன்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஞானபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
இன்னும் இருக்கின்றேன்!
நூல் ஆசிரியர் : கவிஞர் ஞானபாரதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
வெளியீடு : இளங்குயில்கள்,
30, மதுரைச் சாலை, ஆண்டிப்பட்டி-625 512. தேனி மாவட்டம். பக்கம் : 64, விலை : ரூ. 30.
30, மதுரைச் சாலை, ஆண்டிப்பட்டி-625 512. தேனி மாவட்டம். பக்கம் : 64, விலை : ரூ. 30.
******
நூல் ஆசிரியர் கவிஞர் ஞானபாரதி அவர்கள் இலக்கியத்தில் ஈடுபாடு மிக்கவர். இளங்குயில் என்ற மாத இதழை நடத்தி வருபவர். ஆண்டிபட்டியின் பெருமைகளில் ஒன்றானவர். தோழர் சி. மகேந்திரன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோரின் அணிந்துரை மிக நன்று. ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைகள் பற்றி மனிதாபிமானத்துடன் சிந்தித்து கவிதைகள் அடித்துள்ளார், பாராட்டுக்கள்.
வானந்திர பூதங்களின்
அசுரப் பற்களில்
வழியும் இரத்தத்துளிகளில்
கருக் கொள்கிறது
காலத்தின் வன்மத்தைத் துடைத்து
ஞாலத்தின் தொன்மத்தைச் சுமந்து
பறக்கும் வண்ணத்துப் பூச்சி!
‘ஞாலத்தின் தொன்மத்தைச் சுமந்து’ சிந்திக்க வைக்கும் வைர வரிகள். தமிழினம் இன்னும் தொன்மத்தை தொலைக்கவில்லை. சுமந்து கொண்டு தான் உள்ளது என்பதை உணர்த்தி உள்ளார்.
தீபாவளி 27.10.2008 !
தொலைக்காட்சியில் நகர்வலம்
அம்மா அதிரசம் சுட்டாள்
அக்கா வடை சுட்டாள்
ஊரெங்கும் வெடிச் சத்தம்
தாய்த் தமிழகம்!
அம்மையை பௌத்தன் சுட்டான்
அக்காவை ராணுவம் சுட்டது
தங்கையை சிங்கள் வெறியன் சுட்டான்
ஊரெங்கும் வெடிச்சத்தம் சேய் ஈழம்!
அங்குமிங்கும் ஒரே சமநிலை
நரகாசுரர்களுக்கு தீபாவளி கொண்டாட்டம்.
தீபாவளியன்று தமிழகம் கொண்டாட்டத்தில் இருந்த நேரத்தில் ஈழத்தில் தமழினப் படுகொலை நடந்ததை கவிதையின் மூலம் காட்சிப்படுத்தி தடுக்க முடியாது போன சோகத்தை நினைவூட்டி கவிதை வடித்துள்ளார்.அங்கும் இங்கும் கவிதையால் காட்சிப் படுத்தி உள்ளார் .
ஈழத்தாயகத்தில்
இன்னும் இருக்கிறார்கள்
அமைதியின் முகவரி
ஆனால் அங்கு மட்டும்
ஆச்சரியம்
புத்தம் இரத்தம் விரும்புகிறது!
உண்மை தான். எறும்பைக் கூட மிதித்து விடக் கூடாது, கூட்டி விட்டு நடக்கும் புத்த பிட்சுகள் தமிழினப் படுகொலையைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்து, தூண்டி விட்டது புத்தருக்குச் செய்த துரோகம் தான்.புத்தரை இவர்கள் வணங்குவதில் அர்த்தம் இல்லை .
மனசாட்சியை
தட்டி எழுப்பியபடி
தமிழினத்தின் கண்ணீர்த் துளியாய்
இலங்கைத் தீவு
உலகின் வரைபடத்தில்!
இலங்கையை வரைபடத்தில் பார்த்த கவிஞர் ஞானபாரதிக்கு அது ஈழத்தமிழரின் சோகத்திற்காக வடிக்கப்பட்ட கண்ணீர்த்துளியாகத் தெரிகின்றது. கவிஞனின் பார்வை கற்பனை என்றாலும் அர்த்தம் உள்ள பார்வை தான். இரக்கப்பார்வை தான்.மனிதநேயப் பார்வைதான்
முகாமிலிருந்து!
ராணுவம் போட்ட குண்டுல போனது
மாடு, கன்று, வீடு மட்டுமல்ல
மச்சானும் அக்காளும் தான்
தாவணி எடுத்துப் பார்த்தேன்
சில கிழிசல்
சில ரத்தக் கறைகள் !
போரில்லாத பகுதி என்று அறிவித்து விட்டு அங்கு முதியவர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கூட வைத்து, குண்டு போட்டு கொன்று மகிழ்ந்தது சிங்கள இராணுவம். இந்த நூற்றாண்டிலேயே இப்படி ஒரு படுகொலை உலகில் எங்கும் நடக்கவில்லை என்ற அளவிற்கு படுகொலைகள் புரிந்தன.
ஆனால் இன்று வரை விசாரணை தான் நடக்கின்றது. தண்டனை வழங்கப்படவில்லை. ஐ.நா. மன்றமும் இழுத்துக் கொண்டே செல்கின்றது.கொலைகாரன் வலம் வருகிறான். வேதனை .
இனம் அழிக்கும் இனிப்புப் பொங்கல்!
போகியாய் போனது
இல்லமும் உடைமையும்
தமிழன் உயிரும், மானமும்
சிங்களனுக்கு
பொங்கலோ பொங்கல்!
உழவைப் போற்றும் உன்னதத் திருநாளான பொங்கலை ஈழத்தமிழர்கள் ஈழத்தில் கொண்டாட முடியவில்லை. ஆனால் இனத்தை அழித்த மகிழ்வில் சிங்களன் கொண்டாடுகிறான் பொங்கலோ பொங்கல் என்று முடித்த முடிப்பு முத்தாய்ப்பு. படுகொலைகள் நடந்தும் மிச்சம் சொச்சம் ஈழத்தமிழர்கள் “இன்னும் இருக்கின்றேன்” என்ற சொல்வது போன்ற தலைப்பு நன்று.
மனிதாபிமானமுள்ள யாரும் ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைக்கு கண்டனத்தை பதிவு செய்வார்கள். ஆனால் ஒரு சில படைப்பாளிகள் ஈழம் பற்றி எழுதுவதும் இல்லை, பேசுவதும் இல்லை, காரணம் அச்சம். அநீதிக்கு எதிராக எழுதுவதும், குரல் கொடுப்பதும் ஒரு படைப்பாளியின் கடமை என்பதை உணர வேண்டும்.அநீதி கண்டு அமைதியாக இருப்பதும் குற்றமே .
நூல் ஆசிரியர் கவிஞர் ஞானபாரதி அவர்களுக்கு பாராட்டுக்கள். நமது சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு நடந்த துயரத்தை ஈர மனதுடன் கவிதையாக வடித்துள்ளார்.
புத்தம் சரணம் கச்சாமி !
தமிழர் ரத்தம் சரணம் கச்சாமியென
சிங்களர் யுத்தம்
நித்தம் நடத்தினரே!
'புத்தம் சரணம் கச்சாமி' என்று புத்தரை வணங்கிக் கொண்டு புத்தருக்கு பிரம்மாண்ட சிலைகளையும், கோவிலையும் கட்டிக்கொண்டு புத்தரின் ஒப்பற்ற போதனையான ‘ஆசையே அழிவுக்குக் காரணம்’ என்பதை மறந்து விட்டு பேராசை, மண்ணாசை, பொன்னாசை பிடித்து அழிந்து தமிழர்களின் ரத்தம் குடித்த கொடூரத்தை கவிதைகள் மூலம் நன்கு கண்டித்து உள்ளார், பாராட்டுக்கள்!
யாழ்!
புதிய ராகங்களை
மீட்டுக் கொண்டிருக்கிறது
நம்பிக்கையுடன்
சுயம்புகள்
சூல்பைகளுக்காக
காத்திருப்பதில்லை !
ஒரு உறையில் இரண்டு வாள்கள் வைப்பது கடினம். கீரியும் பாம்பும் சேர்ந்து வாழ முடியாது. இலங்கையில் சிங்களரும் தமிழரும் சேர்ந்து வாழ சாத்தியம் இல்லை. ஈழத்தமிழர்கள் இதயத்தில் தனி ஈழம் என்பது நிறைவேறாத ஆசையாக கனவாக உள்ளது. இன்று இல்லாவட்டாலும் என்றாவது ஒரு நாள் அவர்களின் கனவு நனவாகும் என்பது மட்டும் உண்மை.
நாளும் கொண்டாடுவோம்
நாளையும் கொண்டாடுவோம்
ஈழம் இருந்தாலென்ன
இனம் அழிந்தாலென்ன
நமக்குத் தேவை
ஒரு திருவிழா!
இலங்கையில் தமிழினப் படுகொலைகள் நடந்த போது அவற்றை நிறுத்தக் கோரி பலரும் குரல் கொடுத்தனர், போராடினர். ஆனால் அந்தப் போராட்டங்கள் சிறுபான்மை மக்களால் நடத்தப்பட்டதென, பெரும்பான்மை மக்கள் திருவிழாக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஈழப்படுகொலையைக் கண்டுகொள்ளாமல் இருந்தனர். அவற்றை உணர்த்தும் விதமாக பல கவிதைகள் வடித்துள்ளார்.
கோள்களின் சாபம்!
சாம்பலுக்குள் நூலகம்
மண்ணுக்குள் உடல்
மரத்துக்குள் உயிர்
காற்றுக்குள் உணர்வு
கடலுக்குள் ஓலம்
நிலவுக்குள் இரத்தம்
சூரியனுக்குள் ஊன்!
அண்டவெளியில் நெருக்கடி
ஆகாயமெங்கும் பிணநெடி !
தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிசமாக அரிய பல நூல்கள் உள்ள யாழ் நூலகத்தை சிங்கள இன வெறியர்கள் எரித்து மகிழ்ந்தனர். அந்தக் கொடிய நிகழ்வை நினைவூட்டும் விதமாக ‘சாம்பலுக்குள் நூலகம்’ என்ற சொற்களின் மூலம் உணர்த்தி உள்ளார்.
இலட்சணக்கணக்கான மக்களை தமிழர்களைக் கொன்று குவித்த காரணத்தால் ‘ஆகாயமெங்கும் பிணநெடி’ என்கிறார். நூலைப் படித்து முடித்ததும் இவ்வளவு இன்னல்கள் அடைந்த ஈழத்தமிழர்களின் வாழ்வில் விடியல் வர வேண்டும் என்ற எண்ணம் விதைத்தது.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» காலம் இன்னும் இருக்கிறது! நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum