தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விடுகதை வினா விடைகள்
Page 1 of 1
விடுகதை வினா விடைகள்
courtesy-http://thamaraikulam-theni.blogspot.in/2014/02/blog-post_3334.html
1) தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
1) ஓட்டை2) மீன் வலை3) கரண்டி4) கடல்
2) முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?
1) கஸ்ட்டம்2) ஆறுதல்3) ஆபத்து4) பயம்
3) முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்? இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண். மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
1) பார்வை2) கனி3) கவிதை4) கண்மணி
4) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
1) கண்கள்2) முட்டை3) மீன்4) கடல்
5) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
1) சக்தி2) சூரியன்3) நிலா4) பூமி
6) ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க,ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
1) குரங்கு2) மூச்சு3) கடவுள்4) மனிதன்
7) நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன?
1) புடவை2) பட்டு3) நகை4) ஆபரணம்
8) கடையெழுத்து மாறிடில் தின்னலாம், முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும்,மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள் இங்கே?
1) காசி2) பழனி3) கனி4) திருச்செந்தூர்
9) கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
1) அணிகலன்2) துணி3) ஆடை4) பட்டுத்துணி
10) அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
1) நீர்2) நெல்3) சோறு4) அரிசி
1) வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
1) கத்தரிக்கோல்2) நண்பர்3) பகைவர்4) கத்தி
2) ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?
1) விளக்கு2) துடைப்பம்/தும்புத்தடி3) பேனா4) பாத்திரம்
3) ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?
1) கற்பூரம்2) விளக்கு3) மெழுகுதிரி4) ஊதுபத்தி
4) மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?
1) பஞ்சு2) நுங்கு3) வெண்மை4) வாழை
5) எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
1) வைரக்கல்2) விக்கல்3) சிகிச்சை4) மணல்
6) ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம் அது என்ன?
1) வீடு2) கோயில்3) தேன்கூடு4) கூடு
7) பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
1) மீன்2) வாத்து3) தவளை4) பாம்பு
8) படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும், அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும் அது என்ன?
1) நுளம்பு2) கனவு3) மனிதன்4) வானம்
9) இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
1) பலா2) மா3) வாழை4) தோடை
10) அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
1) நாய்2) பூனை3) அரசன்4) நாக்கு
1) ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் அந்த குகை எது?
1) குளம்2) கிணறு3) வாய்4) மாதுளம்பழம்
2) விரல் இல்லாமலே ஒரு கை அது என்ன?
1) மனித கை2) உலக்கை3) விலங்குகளின் கை4) வானம்
3) நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான்,உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்?
1) நாற்காலி2) வாங்கில்3) மேசை4) வீடு
4) மரத்தின் மேலே தொங்குது மலைப் பாம்பல்ல. அது என்ன?
1) காய்2) பூ3) இலை4) விழுது
5) முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
1) நிலா2) நட்சத்திரங்கள்3) வானம்4) முகில்
6) அரசன் ஆளாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன், இரவுக் காவல்காரன் ஒருவன் அவர்கள் யார்?
1) பூமி, சந்திரன்2) சூரியன், புதன்3) சூரியன், சந்திரன்4) பூமி, சூரியன்
7) பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன?
1) கணினி2) வானொலிப் பெட்டி3) தொலைக்காட்சி4) தொலைநகல்
8) நான் பார்த்தால் அவன் பார்ப்பான், நான் சிரித்தால் அவன் சிரிப்பான் அவன் யார்?
1) வானம்2) நிழல்3) கோமாளி4) முகம் பார்க்கும் கண்ணாடி
9) கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்?
1) வெங்காயம்2) மிளகாய்3) மாம்பழம்4) வாழை
10) தனித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை. அது என்ன?
1) கறி2) சோறு3) உப்பு4) சீனி
1) கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
1) வெங்காயம்2) தோடம்பழம்3) கரும்பு4) தேசிக்காய்
2) உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன?
1) நீர்2) இளநீர்3) கடல்4) மாம்பழம்
3) வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன?
1) ரோஜாபூ2) மல்லிகைப்பூ3) பூ4) சிரிப்பு
4) எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?
1) மீன்2) சிலந்தி3) நண்டு4) வாத்து
5) ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?
1) கண்ணீர்2) அருவி3) ஆறு4) கிணறு
6) கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?
1) நெருப்பு2) விளக்கு3) மெழுகுதிரி4) அனல்
7) ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?
1) பற்கள்2) பூக்கொத்து3) மாதுளம்பழம்4) மாம்பழம்
8) வெள்ளி ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது?
1) மான்2) முட்டை3) மீன்4) கண்
9) மருத்துவர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு அவர் யார்?
1) இலையான்2) நுளம்பு3) மான்4) சிங்கம்
10) ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் அவன் யார்?
1) நாய்2) செருப்பு3) பூனை4) அட்டை
1) வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன?
1) மிளகாய்2) பயறு3) உழுந்து4) நெல்
2) தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன?
1) கை2) முதுகு3) பூ4) காய்
3) பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?
1) சீப்பு2) கல்3) பல்4) முகப்பூச்சு
4) ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன?
1) வீட்டுமுற்றம்2) வாசல்3) கதவு4) உள்ளங்கையும் விரல்களும்
5) தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்?
1) வாழைப்பழம்2) பனம்பழம்3) தேங்காய்4) பாக்கு
6) தட்டச் சீறும் அது என்ன?
1) தீக்குச்சி2) மெழுகுதிரி3) நாய்4) சிங்கம்
7) வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?
1) வாழ்க்கை2) வழுக்கை3) உலக்கை4) பொக்கை
8) காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்?
1) விமானம்2) பறவை3) பலூன்4) குருவி
9) பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்?
1) காகம்2) குருவி3) கிளி4) கோழி
10) அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன?
1) பாக்கு வெற்றிலை2) அம்மி குளவி3) கை கால்4) மலை மடு
1) வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை அது என்ன ?
1) விருந்தினர்2) மாணவர்3) செருப்பு4) அன்பளிப்பு
2) ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும் பந்தும் அல்ல அது என்ன ?
1) குட்டை2) கடல்3) குளம்4) கிணறு
3) மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல அவன் யார்?
1) குயில்2) தேவாங்கு3) உடும்பு4) அணில்
4) வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி அவர்கள் யார்?
1) கதவும் தச்சனும்2) முதலாளியும் நாயும்3) பூட்டும் சாவியும்4) கடலும் நீரும்
5) எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன ?
1) வானம்2) மின்விசிறி3) காகிதம்4) காற்று
6) உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அது என்ன ?
1) பாய்2) பாம்பு3) அட்டை4) தடி
7) மழை காலத்தில் குடை பிடிப்பான் அவன் யார் ?
1) வளி2) தொப்பி3) காளான்4) காற்று
8) யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும் அது என்ன ?
1) மரக்கதவு2) கண் இமை3) யன்னல்4) வாசல்
9) அடிக்காமல்,திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார் ?
1) தடி2) சவுக்கு3) காயம்4) வெங்காயம்
10) வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார் ?
1) ஆறு2) குளம்3) கடல்4) கிணறு
1) கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான் அவன் யார்?
1) வெருளி2) சிலந்தி3) அட்டை4) பாம்பு
2) அள்ள அள்ளக் குறையாது ஆனால் குடிக்க உதவாது அது என்ன ?
1) கடல்நீர்2) வாளி3) கயிறு4) தீர்த்தம்
3) முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம் அது என்ன?
1) கரும்பு2) மாதுளம்பழம்3) பலாப்பழம்4) முட்டை
4) வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார் ?
1) நாய்2) தபாற் பெட்டி3) வாகனம்4) மரம்
5) முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார் ?
1) மாங்காய்2) சிவபெருமான்3) பலாப்பழம்4) தேங்காய்
6) மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார் ?
1) மீனவன்2) சிலந்தி3) மீன்4) சிலை
7) உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார் ?
1) பானை2) காகம்3) அகப்பை4) நீர்
8) எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள் அவள் யார் ?
1) சூரியன்2) வளி3) நிலா4) காற்று
9) வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன ?
1) தீக்குச்சி2) தடி3) மரம்4) மேசை
10) சலசலவென சத்தம் போடுவான் சமயத்தில் தாகம் தீர்ப்பான் அவன் யார் ?
1) நீர்2) கடல்3) அருவி4) தாகம்
1) காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன?
1) நாவல் பழம்2) மாம்பழம்3) தேங்காய்4) பனை
2) தாடிக்காரன், மீசைக்காரன். கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?
1) தேங்காய்2) அரிசி3) சக்கரை4) சட்டி
3) ஒரு கிணற்றில் ஒரே தவளை அது என்ன ?
1) காகம்2) நாக்கு3) மூக்கு4) பேன்
4) வால் உள்ள பையன், காற்றில் பறக்கிறான் அது என்ன ?
1) நூல்2) பறவை3) பட்டம்4) விமானம்
5) ஆனை விரும்பும், சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும், கடித்தால் சுவைக்கும் அது என்ன ?
1) சீனி2) மூங்கில்3) வெல்லம்4) கரும்பு
6) பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன ?
1) மிளகாய்2) காசு3) அன்னாசி4) மாதுளம்பழம்
7) கண்ணுக்குத் தெரியாதவன் உயிருக்கு உகந்தவன் அவன் யார் ?
1) பேய்2) காற்று3) தூசு4) நீர்
8) தலையைச் சீவினால் தாளிலே மேய்வான் அவன் யார்?
1) வெண்கட்டி2) பேனா3) பென்சில்4) ஆடு
9) சுற்றுவது தெரியாது ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான் அவன் யார் ?
1) வானம்2) பூமி3) பம்பரம்4) காற்றாடி
10) வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல் அது என்ன ?
1) பல்2) பலாப்பழம்3) முட்டை4) மிளகாய்
1) குதிரை ஓட ஓட வால் குறையும். அது என்ன?
1) குதிரை2) ஊசி நூல்3) தும்பி4) நாய்
2) பூக்கும், காய்க்கும், வெடிக்கும். ஆனால் பழுக்க மட்டும் செய்யாது. அது என்ன?
1) இலவம்பஞ்சு2) விளாம்பழம்3) முந்திரி4) பப்பாளி
3) எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்?
1) புத்திசாலி2) வித்தகன்3) அறிஞன்4) கோமாளி
4) ஆடி ஆடி நடப்பான், அரங்கதிர வைப்பான். அவன் யார்?
1) கழுதை2) யானை3) சிங்கம்4) புலி
5) அடிப்பக்கம் மத்தளம், இலை பர்வதம், குலை பெரிது, காய் துவர்ப்பு, பழம் தித்திப்பு. அது என்ன?
1) மாமரம்2) வாழைமரம்3) பலாமரம்4) மாதுளை
6) ஒருவனுக்கு உணவளித்தால் ஊரையே கூட்டுவான். அவன் யார்?
1) காகம்2) நாய்3) புறா4) பூனை
7) எங்க வீட்டுத் தோட்டத்திலே தொங்குதே ஏகப்பட்ட பச்சைப் பாம்புகள். அது என்ன?
1) மிளகாய்2) பாகற்காய்3) புடலங்காய்4) கத்தரிகாய்
8) "உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்" அது என்ன?
1) நரகம்2) பிரம்பு3) தராசு4) காவல்காரன்
9) "ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது" அவர்கள் யார்?
1) மனிதர்கள்2) யானைக் கூட்டம்3) எறும்புக் கூட்டம்4) மான் கூட்டம்
10) "உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்" நான் யார்??
1) கழுதை2) அஞ்சல் பெட்டி3) குதிரை4) மாடு
Posted by [You must be registered and logged in to see this link.]at [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பொது அறிவு வினா - விடைகள்
» பொது அறிவு - வினா, விடைகள்
» உங்களுக்கு தெரியுமா பொது அறிவு வினா-விடைகள்:-
» விடுகதை-விடைகள்
» விடுகதை -விடைகள்
» பொது அறிவு - வினா, விடைகள்
» உங்களுக்கு தெரியுமா பொது அறிவு வினா-விடைகள்:-
» விடுகதை-விடைகள்
» விடுகதை -விடைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum