தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நினைத்து நினைத்து சிரித்தேன்.
Page 1 of 1
நினைத்து நினைத்து சிரித்தேன்.
² நாட்டுப்புற வழக்கில்………..
வீட்ல மதுரையா? சிதம்பரமா? என்று கேட்பார்கள்.
மதுரை என்றால் மீனாட்சி ஆட்சி போல மனைவியின் கட்டுப்பாட்டில் குடும்பம் நடக்கிறது என்றும்,
சிதம்பரம் என்றால் நடராசரின் ஆட்சிபோல கணவனின் கட்டுப்பாட்டில் குடும்பம் நடக்கிறது என்று புரிந்துகொள்வார்கள்.
² வீட்டுல எலி வெளியில புலி என்று மனைவிக்குப் பயந்த கணவனைக் குறிப்பார்கள்.
² அவ என்னை அடிக்க!
என்னை அவ அடிக்க! என்று என்னமோ தானே தன் மனைவியை அடித்தது போல பெருமையாக சில குடும்பத்தலைவர்கள் பேசிக்கொள்வார்கள்.
“கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருசன்!
என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது.
“பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி“ என்ற காலமெல்லாம் கடந்துபோய்விட்டது.
இந்தக் காலத்தில் ஆணுக்குச் சமநிலையில் பெண்களும் இருக்கின்றனர்.
ஆனால் இன்றும்….
கணவனுக்குப் பயப்படும் மனைவியையும்!
மனைவிக்குப் பயப்படும் கணவனையும்!
பார்க்க முடிகிறது.
கணவனுக்குப்
பயப்படும் மனைவியைப் பார்ப்பது இக்காலத்தில் அரிதாக இருந்தாலும்,
மனைவிக்குப் பயப்படும் கணவனைப் எல்லா இடங்களிலும் பார்க்கமுடிகிறது!
மனைவிக்குக் கணவன் ஏன் பயப்படவேண்டும்?
கணவனுக்கு மனைவி ஏன் பயப்படவேண்டும்?
மனைவி என்றவுடன் பல கணவர்களுக்கு பூரிக்கட்டை நினைவுக்கு வந்து அச்சமளிப்பது உண்மைதான்.
கணவனுக்குப் பயப்படும் மனைவியை இயல்பாக எடுத்துக்கொள்ளும் இந்த உலகம்…
மனைவிக்குப்
பயப்படும் கணவனை வினோதமான விலங்கைப் பார்ப்பதுபோல இழிவாகப் பார்க்கும்
போக்கை சமூகத்தில் பார்க்கமுடிகிறது. இந்த நிலை இன்று நேற்றுத்
தோன்றியதல்ல. சங்ககாலத்திலிருந்தே இதே நிலைதான்..
“பரத்தையிடம்
(விலைமகள்) சென்று அவள் கையைப் பிடித்து இழுத்த தலைவனின் செயலைத்
தலைவியிடம் சொல்லுவேன் என்கிறாள் பரத்தை. அதுகேட்டு பெருநடுக்கமடைகிறான்
தலைவன். “
சங்க
காலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலைவுடைமைச் சமூகத்துக்கு உயர்ந்த
காலம் என்பதாலும், மக்கள்தொகை குறைவு என்பதாலும் ஒரு ஆணுக்குப் பல பெண்கள்
என்பதை இயல்பாகவே எடுத்துக்கொண்டனர். அதனால் தலைவன் பரத்தையரிடம் சென்று
வருவது இயல்பாக இருந்தது.
இருந்தாலும் தலைவன் பரத்தையிடம்
சென்று வருவதை தலைவி விரும்புவதில்லை. “வாயில் மறுத்தல்“ என்னும் துறைவழி
தலைவியின் எதிர்ப்பை அறியமுடிகிறது. தலைவியிடம் வாயில் வேண்டிநிற்கும்
தலைவன் தன் தவறை உணர்வதாகக் கொள்முடியும்.
நற்றிணைப் பாடல் ஒன்று அழகான நகைச்சுவை ஓவியத்தைப் பதிவு செய்துள்ளது.
பாடல் இதோ...
நற்றிணை .100. மருதம்
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்
5 வான் கோல் எல் வளை வௌவிய பூசல்
சினவிய முகத்து, 'சினவாது சென்று, நின்
மனையோட்கு உரைப்பல்' என்றலின், முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்
10 புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்
மண் ஆர் கண்ணின் அதிரும்,
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.
பரணர்
(பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச் சொல்லியது.)
தலைவன்
தன்னைவிட்டுப் பிரிந்து தலைவியை நாடிச் செல்கிறான் என்பதை உணர்ந்த பரத்தை
வருத்தமடைந்தாள். அவனை மீண்டும் பெறவேண்டும் என்று கருதியவளாக………
தன்னிடம்
தலைவன் நடந்துகொண்ட நடத்தையைக் கேட்டுத் தலைவி தலைவனை வெறுக்கவேண்டும்
என்று எண்ணி, தலைவியின் உறவினர்கள் கேட்குமாறு தன் தோழியிடம் கூறுவதுபோல
இவ்வாறு கூறுகிறாள்………..
தோழி! பெரிய நகத்தைக் கொண்ட கொக்கு
கார்காலத்து உலாவும். அதன் கரிய மூக்குப் போன்ற ஆழமான நீரில் தோன்றிய
ஆம்பல் மலரை உடையது குளிர்ந்த நீர்த்துறை. அத்துறைக்குரிய தலைவன் நெய்மணம்
கமழும், என் கூந்தலைப் பற்றி என் கையில் உள்ள வேலைப்பாடமைந்த ஒளிவீசும்
வளையைக் கழற்றிக் கொண்டான். அதனால் சினம் (கோபம்) கொண்ட முகத்தையுடையவளாக
அவனிடம்,
“இனி நான் இவ்வாறு சினம்(கோபம்) கொள்ளாது இங்கு நடந்ததை உன் மனைவிக்குச் சொல்லுவேன் என்றேன்.“
அதற்கு
அவன் ஊரின் எல்லையிலே உள்ள பல நெடிய ஆனிரைகளை விற்போரை வென்று
செலுத்திக்கொண்டு வருகிறவனும், இரவலர்களுக்கு தேர்கொடுக்கும் வள்ளன்மை
உடையவனுமான மலையமான் அவையில் வேற்று நாட்டிலிருந்து வந்த பெரிய இசையையுடைய
கூத்தர் நன்மையை விரும்பி முழக்குகின்ற மத்தளத்தின் மார்ச்சனை வைத்த
பக்கம் அதிர்வது போல அதிர்ச்சியுற்று நடுங்கினான். அவன் நடுங்கி
வருத்தமுற்ற நிலையை நினைக்கும் போதெல்லாம் சிரிப்பேன்.
○
பரத்தையின் கூந்தல் பற்றி வளையலைக் கழற்றிக் கொண்ட செயலலைத் தலைவி
அறிந்தால் என்னாகும்? என நடுங்கிய தலைவனின் நிலையை எண்ணி எண்ணிப்
பார்ப்பதால் பரத்தைக்குச் சிரிப்பு தோன்றுகிறது.
○ தலைவனின்
நாகரிகமற்ற செயலைத் தலைவி அறிந்தால் அவனை வெறுப்பாள். அதனால் தான்
மீண்டும் தலைவனைப் பெற்று இன்புறலாம் என்பது பரத்தையின் எண்ணமாகும்.
○
இப்பாடலின் வழி சங்ககால சமூகநிலையையும், வாழ்வியியல் ஒழுக்கங்களையும்
அறியமுடிகிறது. காலம் கடந்து போனாலும் மனிதர்களின் வாழ்வியல் கூறுகள்
மாறிப்போவதில்லை என்னும் வாழ்வியல் உண்மை புலப்படுகிறது.

gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Similar topics
» நினைத்து நினைத்து சிரித்தது...!
» நினைத்து நினைத்து
» உனை நினைத்து . . .
» உன்னை நினைத்து...
» உன்னை நினைத்து ...!
» நினைத்து நினைத்து
» உனை நினைத்து . . .
» உன்னை நினைத்து...
» உன்னை நினைத்து ...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum