தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்

Go down

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள் Empty “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்

Post by KavithaMohan Mon Dec 11, 2017 5:34 pm

ஒகி புயல், கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் தொழிலாளர்களின் கனவுகளை நாசமாக்கிவிட்டது. ரப்பர் தடிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. புயலுக்கு முன்புவரையிலும் ஒரு டன் ரப்பர் மரத்தடிகள் 6,500 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தது. தற்போது 5,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது . குமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம், தோவாளை ஆகிய 3 தாலுகாக்களில் 115 ஆண்டுகளாக அதிகளவில் ரப்பர் சாகுபடியாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட ரப்பருக்கு சர்வதேச மார்க்கெட்டில் தனி மவுசு உண்டு. 

கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதியிலிருந்து வீசிய ஒகி புயலின் காரணமாக கன்னியாகுமரி  மாவட்டத்தில் லட்சக்கணக்கான ரப்பர் மரங்கள் பாதிப்படைந்தன. இதையடுத்து ரப்பர் மரத்திலிருந்து பால் வெட்டும் தொழில் மற்றும் ரப்பர் தொடர்பான தொழில்துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

ரப்பர் தடிகளுக்கு கேரளாவில் அதிக வரவேற்பு உண்டு. இலகு ரக மரமான ரப்பரை பதப்படுத்தி ரசாயனக் கலவையில் ஊறவைத்துக் கடினத்தன்மை ஏற்படுத்தப்படுகிறது. ரசாயன முறையில் பதப்படுத்தப்படும் ரப்பர் தடிகள் தேக்கு மரங்களுக்கு இணையான பலம் கொண்டவை. அதற்குப்பிறகு கேரளாவிலிருந்து வெளி நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம், பெரும்பாவூர் பகுதியில் இந்திய அளவிலான ரப்பர் சந்தை உள்ளது. கன்னியாகுமரி  மாவட்டம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படும் ரப்பர் தடிகள் இந்தச் சந்தைகளில்தான் வியாபாரிகளால் போட்டிபோட்டு வாங்கப்படுகிறது.

ஒகி புயலில் சேதமாகிப்போன ரப்பர் மரங்களை இப்போது வெட்டினால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்பதால், ரப்பர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர் (ரப்பர் தடிகள் உலர்ந்த பிறகு அது வெறும் விறகாக மட்டுமே பயன்படும்). புயலால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஒரேநேரத்தில் அதிகளவிலான ரப்பர் மரங்கள் வெட்டப்பட்டுவருவதால், அம்மரங்களை விற்பனை செய்வதற்கு விவசாயிகள், வியாபாரிகளைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் வைத்த விலை இல்லாமல், வியாபாரிகள் வைக்கும் விலையிலேயே ரப்பர்  தடிகள் விற்கப்படுகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகி வருகின்றனர். புயலுக்குப் பிறகு கன்னியாகுமரியிலிருந்து கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுகின்ற ரப்பர் மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், கேரள மாநிலத்திலும் குமரி மாவட்ட ரப்பர் தடிகளின் விலை சரிந்துள்ளது. 

[You must be registered and logged in to see this image.]
சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் உள்ள தீக்குச்சி ஆலைகளுக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ரப்பர் தடிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. எனவே, அங்கும் அளவுக்கதிகமான ரப்பர்  தடிகள் குவிந்துள்ளன. அதனால், தமிழகச் சந்தையிலும் கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் தடிகள் விலை கணிசமாகக் குறைந்துவிட்டது. தற்போதையச் சூழலில், ரப்பர் தடிகளை வாங்க யாரும் முன்வரவில்லை. கடந்த வாரம் விறகுக்காக ஒரு டன் ரப்பர் மரங்கள் 2,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது 1,500 ரூபாய்க்கு ரப்பர் மரங்களை வாங்க ஆளில்லாமல், விவசாயிகள் திண்டாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ''இந்த நிலை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்'' எனக் கவலை தெரிவிக்கிறார்கள் வியாபாரிகள்.

[You must be registered and logged in to see this image.]
கன்னியாகுமரி மாவட்டத்தில் தரமான ரப்பர் அதிக அளவு உற்பத்தியாகிறது. ஆனால், இப்பகுதியில் இதுவரை கனரக ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படவில்லை.வேறு தொழில் வாய்ப்பு இல்லாத குமரி மாவட்டத்தில், ரப்பர் தொழிற்சாலை அமைந்தால், மாவட்டத்திலுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பெறுகுவதோடு, விவசாயிகளுக்கும் நல்ல பயன் கிடைப்பதால், மாவட்டம் நல்ல வளர்ச்சி பெறும். 1992-ம் ஆண்டு நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 'கன்னியாகுமரி மாவட்டத்தில் 400 கோடி ரூபாய் செலவில், கனரக ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படும்' என அறிவித்தார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்தக் குமரி மாவட்ட மக்களுக்கும்  மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து,  ரப்பர் தொழிற்சாலை அமைக்க செண்பகராமன்புதூர் பகுதியில் நிலம் தேர்வு செய்யும் பணியும் தொடங்கியது. ஆனால், இந்த அறிவிப்பும், ஆரம்பக் கட்டப்பணிகளுடன் சிறிது நாள்களில் முடங்கிப்போனது. பின்பு  தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சிப் பொறுப்புக்கு வந்து சென்றாலும், கனரக ரப்பர் தொழிற்சாலைத் திட்டம் மட்டும் இப்பகுதிக்கு வரவேயில்லை. இந்நிலையில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான கனரக ரப்பர் தொழிற்சாலைத்திட்டம் சுருங்கி 210 கோடி ரூபாய் செலவில், 'ரப்பர் பூங்காத் திட்டமாக' தி.மு.க. ஆட்சியில் மாறியது.

நன்றி
விகடன்
KavithaMohan
KavithaMohan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 36
Points : 108
Join date : 25/11/2017
Age : 34
Location : Chennai

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum