தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
Page 1 of 1
ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
ஹைக்கூ உலா !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com விலை : ரூ. 80.
******
நுழைவாயில் :
ஹைக்கூ திலகம் இரா.இரவியின் பதினேழாவது நூலான ‘ஹைக்கூ உலா’ நூற்றுப் பதினேழு பக்கங்களை உள்ளடக்கிய உன்னத நூல். ஹைக்கூ என்னும் பாரசூட்டில் ஏறிப் பயணித்தால் சமூக விபத்துக்கள் எதுவும் நேராமல் சமநிலைச் சாலையில் சீராகப் பயணிக்கலாம் என்பதோடு இலக்கியப் பயணம் வாசகர் வாழ்வை வண்ணத்துப்பூச்சியாய் ஒளிரச் செய்யும் என்பதனை முன் அட்டைப்படம் கூறுகின்றது.
சிவபெருமானுக்கு வலமும் புறமுமாய் நந்தனாரும் ஞானசம்பந்தரும் அமைந்தது போல, இரா.இரவிக்கு தமிழ்த்தேனீயாய் இரா. மோகன் அவர்களும், இளைஞர்களின் மனத்தில் வாசம் புரியும் இறையன்பு அவர்களும் பக்கபலம் என்பதனை நூலின் பின் அட்டைப்படம் உணர்த்துகின்றது.
எது முதல் எது வரை?
உழவர் முதல் உதிரிப்பூக்கள் வரை, ஜல்லிக்கட்டு முதல் கால்கட்டு வரை, தன்னம்பிக்கை முதல் தானம் வரை, அறம் முதல் மரம் வரை, காதல் முதல் கந்துவட்டி வரை, சில்வண்டு முதல் துப்பாக்கி குண்டு வரை, கரையோர நாணல் முதல் காட்தோரத் தேக்கு வரை என கற்காலத்திலிருந்து கணினி காலம் வரை அலசி ஆராய்ந்து ஆணிவேர் எது, சிறுவேர் எது? பெருவேர் எது? என்று இந்நூல் முழுவதும் சுட்டிக்காட்டுகிறார் கவிஞர் இரா.இரவி.
கவிஞர் கரங்களில் ...
பக்கத்திற்குப் பக்கம் வானவில் வளைகின்றது. வளைந்த வானவில்லோ வர்ணங்களோடு வசனத்தையும் பிரதிபலிக்கின்றது. துள்ளிக் குதிக்கும் மீன்களோ தண்ணீரிலிருந்து தாவி தரைக்கு வந்து கவிஞரின் உள்மனதோடு உரையாடி விட்டுச் செல்கின்றது. இரும்பு கூட கரும்பாக உருமாறி இனிமை பேசுகின்றது. இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு என சோளக்கதிர் சொல்லாமல் சொல்கின்றது.
செம்பருத்தி செடியில் இருந்து கொண்டு சிரிக்கின்றது. வேப்பம்பூவோ தித்திக்கின்றது. ஆமையோ கூட்டிலிருந்து எட்டிப் பார்த்து உயர்திணை உயிர்க்கு புத்தி புகட்டிச் செல்கின்றது. தாமரை மலரோ கரைக்கு வரை தத்துவம் பேசுகின்றது. சில்வண்டு நூலை வாசிக்கும் வாசகர்கள் காதிற்கும் வந்து சீண்டிச் செல்கின்றது. மரங்களும், மரத்தில் பூக்கும் மலர்களும் மனிதனால் உருவெடுத்து கவிஞரிடம் மண்டியிட்டுப் பேசுகின்றன.
பழமொழியா? புதுமொழியா?
பழமொழிகளை எல்லாம் புதுமொழிகளாக்கி அவற்றை அனைவர்க்கும் புரியும் வண்ணமாய் பொதுமொழிகளாக்கி ஹைக்கூ வடிவத்தில் வழங்குவதில் கவிஞர் இரா.இரவிக்கு நிகர் அவர் மட்டுமே. உதாரணத்திற்கு இதோ ஒன்றிரண்டு – ஹைக்கூ.
“திரைகடல் ஓடிதிரவியம் தேடினால்
சுடுகிறான் சிங்களன்” (ப.109)
மூடப்பழக்கத்திற்கு முட்டுக்கட்டைப் போடும் கவிதை இதோ.
“பொய் சொன்ன வாய்க்கு
போசனம் கிடைத்தது
சோதிடர்” (ப.53)
காகிதக் கல்வெட்டு :
“தனித்து இருந்தால் கிழிக்கலாம்
சேர்ந்து இருந்தால் கிழிக்க முடியாது
காகிதம்” (ப.103)
சாட்டையடி கவிதை :
“நடிகர் விளம்பரத்தில் ஒருமுறை
நாம் பலமுறை குடிக்கிறோம்
குளிர்பானம்” (ப.50)
கருணைக் கவிதை :
“மதிக்கப்படுகின்றன
வருடத்தில் ஒரு நாள்
எருக்கம்பூக்கள்” (ப. 44)
முரண் நயம் :
“அடுக்கு மாடியில்
நெருக்கமான வீடுகள்
தூரமான மனசுகள்”
மனதில் பதிந்த கவிதை :
“தாமதமானாலும்
இறுதியில் வெல்வது
அறம்” (ப.74)
மனமார ...
சாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற ஐந்து அரக்கர்களையும் ஹைக்கூ என்னும் அஸ்திரம் கொண்டு அடியோடு தகர்க்கும் வல்லமை கவிஞர் இரா. இரவிக்கு உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. காலத்தோடு கரங்கோர்த்து உருமாற்றும் வல்லமை மிக்க இரா. இரவியின் புகழ் இலக்கிய உலகில் பரவி ஒளிரட்டும் என என் போன்ற இணையதள வாசகியர் பாராட்டி மகிழ்கின்றோம்.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kavignar-eraravi
https://www.facebook.com/rravi.ravi
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் !
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
» நூல் விமர்சனம் ------------------------- நூல் : ஹைக்கூ 500 ஆசிரியர்: ஹைக்கூத் திலகம் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை கவிஞர் முனைவர் காவல் உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன்
» ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் !
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
» நூல் விமர்சனம் ------------------------- நூல் : ஹைக்கூ 500 ஆசிரியர்: ஹைக்கூத் திலகம் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை கவிஞர் முனைவர் காவல் உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன்
» ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum