தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தங்கைக்கோர் குழந்தை (சிறுகதைகள்) நூல் ஆசிரியர் : எழுத்தாளர் உஷா முத்துராமன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
Page 1 of 1
தங்கைக்கோர் குழந்தை (சிறுகதைகள்) நூல் ஆசிரியர் : எழுத்தாளர் உஷா முத்துராமன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
தங்கைக்கோர் குழந்தை (சிறுகதைகள்)
நூல் ஆசிரியர் : எழுத்தாளர் உஷா முத்துராமன்!
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
மணிமேகலை பிரசுரம் தியாகராயர் நகர் சென்னை 600017.
விலை 50 ரூபாய்
******
எழுத்தாளர் உஷா முத்துராமன் அவர்கள் திருநகரில் வாழ்ந்து வரும் இல்லத்தரசி. முகநூலில் நல்ல கவிதைகள் படைத்து வரும் கவிதாயினி. காலை வணக்கத்தை கவித்துவத்துடன் வழங்கி வரும் தோழி, மதிப்புரைக்காக இந்நூலை அனுப்பி இருந்தார்.
நூலை தனது பெற்றோருக்கு மட்டுமன்றி மாமனார், மாமியாருக்கும் காணிக்கையாக்கி நன்றியைப் பதிவு செய்துள்ளார். கணவர் முத்துராமன், மகள் ராதிகா வைத்தியநாதன், பேரன் வருண்சுந்தரம் வரை அனைவருக்கும் காணிக்கையாக்கி உள்ளார்.பல்வேறு இதழ்களில் பிரசுரமான சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .
எழுத்துலகில் தனி முத்திரை பதித்து வருபவரும், புதிய தலைமுறை கல்வி வார இதழில் மிக நுட்பமான அறிவியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்து வருபவருமான என் முகநூல் நண்பர் எழுத்தாளர் ராஜேஸ்குமார் அவர்களின் அணிந்துரையும், எழுத்தாளர் தேவிபாலாவின் வாழ்த்துரையும் மிக நன்று.
நூலின் தலைப்பிலான முதல் கதையே, “தங்கைக்கோர் குழந்தை” சிந்தனை விதைக்கும் விதமாக உள்ளது. தன் தங்கைக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மையை அறிந்து தனக்குப்பிறந்த இரட்டைக் குழந்தையில் ஒன்றை மனைவியின் சம்மதத்துடன் தங்கைக்குத் தத்துக் கொடுக்கும் பாசமிக்க அண்ணன் கதை . மனிதாபிமானம் விதைக்கும் சிறந்த சிறுகதை.
‘பார்வைகள்’ என்ற கதை, கண் தானம் விழிப்புணர்வு விதைக்கும் கதை. விபத்தின் போது இறந்துவிட்ட ஓட்டுனரின் கண் முதலாளிக்கு வைக்கப்பட்டு பார்வை வந்ததும், ஓட்டுனர் கடைசியாக ஆசைப்பட்ட நாகூர் தர்காவிற்கு ஓட்டுனர் குடும்பத்துடன் சென்று கண்டுகளிப்பதை மிக நெகிழ்ச்சியுடன் எழுதி உள்ளார். தீயுக்கும், மண்ணிற்கும் இரையாகும் விழிகளை மனிதர்களுக்குத் தாருங்கள் என்ற விழிப்புணர்வை விதைத்தது சிறப்பு.
‘தவிப்பு’ என்ற சிறுகதையில் தன்னை சரியாக கவனிக்காமல் இருக்கும் பெற்றோரை கவனிக்க வைத்து பணத்தை விட பாசம் பெரிது என உணர்த்திடும் யுத்திக்கு பாராட்டுக்கள்.
‘ஒரு நிமிட சபலம்’ என்ற சிறுமி நிவேதா அப்பா, அம்மாவிற்குள் சண்டை வராமல் சமாளித்துப் பேசும் அறிவாளியாக இருக்கிறாள். பிறர் பணத்தின் மீது ஆசை கூடாது என்ற அறநெறிக் கருத்து விதைத்து உள்ளார்
‘வாழ்க்கை’ என்ற சிறுகதையில் கணவன் மனைவியிடம் ஆணாதிக்கம் செலுத்தக் கூடாது மனைவியும் கணவனை எடுத்து எறிந்து பேசக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தியது சிறப்பு.
‘காலச் சக்கரம்’ என்ற சிறுகதையில் மாமியார், மருமகள் சண்டை புரிதல் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருப்பதை சுட்டிக்காட்டி எழுதியது சிறப்பு.
‘கல்யாணம் யாருக்கு?’ என்ற சிறுகதை எள்ளல் சுவையுடன் உள்ளது. மகனுக்குப் பெண் பார்க்க வந்த இடத்தில் தந்தை மாப்பிள்ளை ஆகிறார்?
‘திட்டம் நிறைவேறியது’ என்ற சிறுகதையில் மனிதாபிமானம் மிக்க மாமியாராகக் காட்டி இருப்பது சிறப்பு, விருவிருப்பாக இருந்தது.
‘அம்மாவின் ஆசை’ என்ற சிறுகதையும், விழிகள் தான விழிப்புணர்வு விதைக்கின்றது.
‘திருவிழான்னு வந்தா’ சிறுகதை, இளம் விதவை மறுமணத்தின் அவசியத்தை உணர்த்தியது.
‘முற்றுப்புள்ளி’ என்ற சிறுகதை, இரண்டு குழந்தைகள் போதும், முற்றுப்புள்ளி வைத்திடுவோம் என்று குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு விதைத்தது.
‘இரக்கம் இறங்குகிறது’ என்ற சிறுகதை, முன்கூட்டி பணம் தந்து உதவியவருக்கு வேலையை முடித்துக் கொடுத்து உதவாமல் இருக்கும் தொழிலாளியின் சுயநலத்தைக் காட்டியது.
‘மாற்றம்’ என்ற சிறுகதை அலுவலகப் பணியாளர்களிடம் அன்பு காட்ட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது.
‘தர்மம்’ என்ற சிறுகதை வீட்டுக்கு வந்து விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதும் மனிதநேயம் என்று வலியுறுத்துகிறது.
‘பாசமுள்ள எறும்புகள்’ என்ற சிறுகதை, குழந்தைகளைத் திட்டாமல் அன்பு செலுத்தினால், அடம்பிடிக்காமல் அமைதியாக வளரும் என்ற கருத்தை விளக்கியது.
‘காதல் பரிசு’ என்ற சிறுகதை, அக்காவைக் கொன்றவனை காதலிப்பது போல நடித்து கொலை செய்யும் கதை.திருப்பங்களுடன் துப்பறியும் கதை போல எழுதி உள்ளார்.
‘இதுவும் ஒரு பட்ஜெட் தான்’ சிறுகதை, வேகாத வெயிலில் எரிவாயு சிலிண்டர் கொண்டு வருபவர்களுக்கு சிறிய ஊக்கத் தொகை தருவது தவறில்லை என்பதை உணர்த்தியது.
‘இப்படித்தான் இருக்கணும் பொம்பளே’ என்ற சிறுகதை, கணவன் மனைவி புரிதலை உண்டாக்கியது. யாரையும் மட்டமாக எண்ணக் கூடாது என்ற எண்ணத்தையும் விதைத்தது.
‘அம்மா வந்தாள்’ என்ற சிறுகதை, அம்மாவின் ஆசைக்காக காதலியை மறந்து, அம்மா சொன்னவளை மணமுடித்து அவள் நோயால் இறந்துவிட பழைய காதலியை சந்தித்து மணமுடிக்கும் கதை.
‘அரசியல் புரிந்தது’ என்ற சிறுகதை அரசியல் பற்றி விளக்கம் சொல்லியது. கணவன் மனைவி இல்வாழ்க்கையில் ஒப்பீடு செய்தது.சிறப்பு .
‘தீக்குளிப்பு’ என்ற சிறுகதை தலைவருக்காக தீக்குளிக்கும் தொண்டனுக்கு அறிவுரை வழங்கி தீக்குளிப்பதைத் தடுத்து நல்அறிவுரை வழங்கி உள்ளார்.
‘கட்டாய ஓய்வு’ என்ற சிறுகதை, கட்டாய ஓய்வு வழங்கப்பட்டாலும் ஓய்வாக வீட்டில் இருக்காமல் ஏதாவது ஒரு வேலை செய்து வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது.
‘காதல் விளக்கம்’ என்ற சிறுகதை, சாதி, மத வேறுபாடு பார்க்காமல் மகளின் நல்ல காதலை அங்கீகரிக்க வேண்டும் என்று உணர்த்தியது.
‘பகடைக்காய்’ என்ற சிறுகதை வெளிநாட்டில் வேலை பார்த்தால் கவனமாக இருக்க வேண்டும், கடத்தலுக்கு பயன்படுத்திட பொருள் கொடுத்தால் வாங்கக்கூடாது என்ற விழிப்புணர்வு விதைத்தது.
ஒவ்வொரு சிறுகதையிலும் ஒரு நல்ல செய்தி சொல்லி இருக்கும் எழுத்தாளர் கவிஞர் உஷா முத்துராமனுக்கு பாராட்டுக்கள்.
183ஆம் பக்கம் சேகருக்கு என்பது சேருக்கு என்று உள்ளது, அடுத்த பதிப்பில் திருத்தி விடுங்கள்.
நகைச்சுவை துணுக்குகளை சற்று விரிவுபடுத்தி சிறுகதை என்று பலர் எழுதி வருகின்றனர். ஆனால் எழுத்தாளர், கவிஞர் உஷா முத்துராமன் அவர்கள் 25 சிறுகதைகளிலும் வாழ்க்கையை நெறிப்படுத்தும் அறநெறிக் கருத்துக்களை,மனிதநேயத்தை ,இரக்க உணர்வை விதைத்து உள்ளார், பாராட்டுக்கள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» ஹைக்கூ உலா; நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, நூல் விமர்சனம் : உஷா முத்துராமன்
» குழந்தையுடன் குழந்தையாய் ! (சிறுகதைகள்) நூல் ஆசிரியர் : நெருப்பாலைப் பாவலர் இராம. இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரவி !
» காந்தி தேசம் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் ப .திருமலை ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» விழிப்புணர்வு ! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மண் மூடிப் போகும் மாண்புகள்! நூல் ஆசிரியர் : ‘எழுத்தாளர்’ ப. திருமலை1 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» குழந்தையுடன் குழந்தையாய் ! (சிறுகதைகள்) நூல் ஆசிரியர் : நெருப்பாலைப் பாவலர் இராம. இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரவி !
» காந்தி தேசம் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் ப .திருமலை ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» விழிப்புணர்வு ! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மண் மூடிப் போகும் மாண்புகள்! நூல் ஆசிரியர் : ‘எழுத்தாளர்’ ப. திருமலை1 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum