தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வாழ்க்கைச் சக்கரத்தில் ஆணென்ன? பெண்னென்ன? (நாவல்) நூல் ஆசிரியர் : நவரஞ்சனி ஸ்ரீதர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
வாழ்க்கைச் சக்கரத்தில் ஆணென்ன? பெண்னென்ன? (நாவல்) நூல் ஆசிரியர் : நவரஞ்சனி ஸ்ரீதர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வாழ்க்கைச் சக்கரத்தில் ஆணென்ன? பெண்னென்ன? (நாவல்)
நூல் ஆசிரியர் : நவரஞ்சனி ஸ்ரீதர் !
[size=17]நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
[/size]
[/size]
மணிமேகலை பிரசுரம், சென்னை. 17
பக்கம் :152, விலை: ரூ.45
******
முனைவர் நவரஞ்சனி ஸ்ரீதர் அவர்கள் எழுதியுள்ள இந்த நாவலுக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் அணிந்துரை நூலிற்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது.
அவரது அணிந்துரையில் இருந்து சிறு துளிகள்.
“தனது திருமணத்திற்கு உதவிய மைத்துனி மேல் நட்பு கொள்ளும் ஒரு நாயகன், உறவுகள் சமூகத்தின் கொச்சைப்பார்வையை மீறி அந்த நட்பால் தன் லட்சியத்தில் வெற்றியும் அடைகிறான்”.
ஆண், பெண் நட்பு பற்றிய மேன்மையை மென்மையாக விளக்கி உள்ள நாவல். இந்த நாவல் வெளிவந்த வருடம் 2008. நூல் ஆசிரியர் முனைவர் நவரஞ்சனி ஸ்ரீதர் அவர்கள் முகநூல் நண்பர். அவர் விமர்சனம் எழுதிட வேண்டி அனுப்பி வைத்தார். கவிதைகள் என்றால் உடனே விமர்சனம் எழுதி விடுவேன். நாவல் என்பதால் சற்று காலதாமதமாகி விட்டது.
ஆண், பெண் நட்பை தவறாகப் பார்க்கும் சமுதாயத்தின் பார்வை இன்னும் மாறவில்லை என்பதே உண்மை. ஆனால் என்னுடைய முகநூலில் 5000 நண்பர்கள், பின்தொடர்வோர் 6700 – இதில் பல பெண்தோழிகளும் உண்டு. அவர்களுடனான நட்பு நல்லமுறையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.
எனக்கு அவர்களும் உதவுகின்றனர். அவர்களுக்கு நானும் உதவி வருகிறேன். நல்ல நாவல் நல்ல நடை. போரடிக்காமல் படிப்பதற்கு சுவையான நடை. இடையிடையெ ஆசிரியரின் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார்.
நூல் ஆசிரியர் நாவல் ஆசிரியர் எழுத்தாளர் மட்டுமல்ல சென்னை வானொலி நிலையத்தில் புல்லாங்குழல் இசைக் கலைஞராகப் பணியாற்றி வருபவர். புல்லாங்குழல் இசை அனைவருக்கும் பிடிக்கும், இந்த நாவலும் எல்லா வாசகர்களுக்கும் பிடிக்கும்.
தோழிக்கு இந்த நூலை காணிக்கை ஆக்கி உள்ளார். அதிலிருந்து சில வரிகள்.
“என் எழுத்துத் தேருக்கு அச்சாணியாக விளங்கும் என் பெண் தோழமைக்கு இந்நூலை காணிக்கையாக சமர்ப்பிப்பதில் பெரும் உவகையும், என் நெஞ்சிலிருந்த மிகப்பெரிய மனபாரத்தை இறக்கி வைத்த மனநிம்மதியையும் ஒருசேர அடைகிறேன்”.
ஆசிரியர் என்னுரை என்ற முன்னுரையிலும், நாவல் முடிந்த பின் பின்னுரையிலும் ஆண் பெண் நட்பை கொச்சைப்படுத்தாமல் அங்கீகரிக்க முன்வர வேண்டும் என்ற ஆதங்கத்தை நன்கு விளக்கி உள்ளார். நாவலின் கருப்பொருளும் இது தான்.
கணினியுகத்திலும் மக்கள் மனங்களில் இன்னும் மாற்றம் விளையவில்லை. நாகரிகம் என்பது உடையில் இருந்தால் மட்டும் போதாது. நாகரிகமற்ற கொச்சை எண்ணங்களுக்கு முடிவு கட்டும் விதமாக நாவல் படிக்கும் வாசகர்களை நெறிப்படுத்தும் விதமாக எழுதி உள்ளார். ஒரு எழுத்தாளர் கடமையும் இது தான்.
நட்பு என்பது பொதுச்சொல். அது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். நட்பின் மேன்மையை பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி உளளார்.
“கோப்பெரும்சோழனும் பிசிராந்தையாரும் இன்றிருந்தால், நம்மைக் கண்டு வெட்கம் அடைந்து இருப்பார். கிருஷ்ணனும் குசேலரும் தம் தோழமைக்கு பூமாலை சூட்டிப் பாமாலை பாடி இருப்பார். தோழமைக்கு வந்தனங்களும் வாழத்துக்களும் சொல்லி மகிழ்ந்திடுவர்”.
தோழமையே என்று சொல்லி தோழமைக்கும் மகுடமாக விளங்கியவர்களை பட்டியலிட்டு தோழமையின் சிறப்பை தோழமையுடன் எழுதி உள்ளார்.
இந்நூல் படிக்கும் வாசகர்களுக்கு கண்டிப்பாக மனமாற்றம் நிகழும் என்று அறுதியிட்டுச் செல்ல முடியும். ஆண்-ஆண் நட்பு போலவே, பெண்-பெண் நட்பு போலவே, ஆண்-பெண் நட்பும் இயல்பானது. இதனைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு என்பது புரிந்து விடும். நல்ல நட்பை அங்கீகரிக்கும் மனமாற்றத்தை இந்த நாவல் உண்டாக்கி விடுகின்றது.
மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தால் இல்லத்தில் பாடுவது இயல்பு. பாட்டுப்பாடிக் கொண்டே அகல்யா வேலைகள் செய்த விதத்தை நாவலில் எழுதி உள்ளார். நாவலைப் படிக்க ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு வருகின்றது. நேரடியாக ஒரு நிகழ்வைக் காண்பது போன்ற உணர்வு வருகின்றது. இது எழுத்தாளனின் வெற்றி.
சிலர் நாவல் என்ற பெயரில் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், புள்ளிவிபரங்களையும் நகைச்சுவை துணுக்குகளையும் எழுதி வரும் காலத்தில் ஆண்-பெண் நட்பு மதிக்கப்பட வேண்டும். அந்த நட்பில் பல நன்மைகள் கிடைக்கும், சாதனைகள் சாத்தியமாகும், வாழ்வில் உயரலாம் என்பதை மையக்கருத்தாக வைத்து நாவலை வடித்து உள்ளார்.
நாவலிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு :
“குருவால் பயிற்றுவிக்கப்படும் விஷயம், மாணவனால் சிறப்பாகச் செய்யப்படும் போது அது குருவுக்கு அதிக மனநிறைவை ஏற்படுத்தும்”மகிழ்வை ஆசிரியர் உணர்த்தி உள்ளார்.
“பெண்களைத் தொடுவதில் அவனுக்கு ஒருவிதமான கூச்சம் இருந்தால், முடிந்தவரைப் பெண்களைத் தொடுவதைத் திட்டவட்டமாய்த் தவிர்த்து வந்தான்” தமிழ்ப்பண்பாடு காக்கும் விதமாக எழுதி உள்ளார்.
“ஆண் மதிக்கப்படத்தக்கவன் என்று நடந்து கொள்வதன் மூலம், தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள் பெண்கள்”.
நல்ல பண்புகளை உணர்த்தும் விதமாக பல வசனங்கள் நாவலில் உள்ளன.
“ஆண்கள் வெளியில் மிகுந்த தைரியசாலிகளாகவும், உள்ளுக்குள் மனவலிமையற்றும் இருக்கிறார்கள். பெண்கள் வெளியில் மிகுந்த மனவலிமையற்வர்களாகவும், உள்ளுக்குள் மிகுந்த தைரியமாகவும் இருக்கிறார்கள்”
பெரும்பாலான ஆண்கள், பெண்கள் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டி வெற்றி பெற்றுள்ளார் நூல் ஆசிரியர் முனைவர் நவரஞ்சனி ஸ்ரீதர் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» காலம் இன்னும் இருக்கிறது! நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கொஞ்சம் காதல், கெஞ்சும் கவிதை ! (காதலர்களுக்கு மட்டும்) நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மதுராபுரி! நாவல் ! நூல் ஆசிரியர் : ‘ம. கேசவ நாராயணன்’ ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» கொஞ்சம் காதல், கெஞ்சும் கவிதை ! (காதலர்களுக்கு மட்டும்) நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மதுராபுரி! நாவல் ! நூல் ஆசிரியர் : ‘ம. கேசவ நாராயணன்’ ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum