தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மாதங்கி முத்திரை -
Page 1 of 1
மாதங்கி முத்திரை -
-
பலன்-சர்க்கரையின் அளவை இரத்தில் குறைக்கும். செய்முறை- இருகைகளையும் கோர்த்தவாறு இடதுகை பெருவிரல்மீது வலதுகைப் பெருவிரல் இருக்குமாறு வைக்கவும். இரு நடு விரல்களையும் நேராக நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கச் செய்யவும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும |
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மாதங்கி முத்திரை -
கீழே கண்டுள்ள 32 முத்திரைகளை அவற்றின் அருகில் உள்ள குறிப்பினைப் பயன் படுத்தி சரியான முறையில் கவனமாக செய்து பழகவும்.
-
-
அபானவாயு முத்திரை | |
பலன்-இதயம் நன்றாக சீராக இயங்க வைக்கும். செய்முறை-சுண்டு விரலை நேராக நீட்டி, நடு விரல், மோதிர விரல்களை வளைத்து அதன் நுனிகள் கட்டைவிரல் நுனியைத் தொடுமாறு செய்யவும். ஆட்காட்டி விரலை மடித்து கட்டை விரலின் அடிப்பாகத்தை தொடுமாறு செய்யவும். கை மாற்றி செய்யவும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும் | |
அனுசாசன் முத்திரை | |
பலன்-கழுத்துவலி குறையும். தண்டுவடம் வலுவடையும். செய்முறை- ஆட்காட்டி விரலை நேராக நீட்டி, சுண்டு விரல், நடு விரல், மோதிர விரல்களை வளைத்து அதன் நுனிகள் உள்ளங்கையை தொடுமாறு செய்யவும். கட்டை விரலை நடு விரலின் மீது வைத்து லேசான அழுத்தம் கொடுக்கவும். கை மாற்றி செய்யவும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். | |
உஸஸ் முத்திரை | |
பலன்-உரிய நேரத்தில் எழ, விழிப்புணர்வு அதிகரிக்கும். செய்முறை-இரு கை விரல்களையும் கோர்த்தவாறு வைக்கவும். ஆண்கள் வலதுகை கட்டை விரலை இடதுகை கட்டை விரலின் மீது இருக்குமாறு செய்யவும். பெண்கள் இடதுகை கட்டை விரலை வலதுகை கட்டை விரலின் மீது இருக்குமாறு செய்யவும். தினமும்- காலை- எழும்போது, இரவு உறங்கும் போது 3/5 நிமிடம் செய்யவும் | |
கணேச முத்திரை | |
பலன்-இருதயம் பலம் பெறும். மன இருக்கம் தளர்ந்து தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். செய்முறை-இடது கைவிரல்களை மடக்கி கைபாதம் நெஞ்சைப் பார்த்தபடி வைக்கவும். வலதுகை விரல்களை மடக்கி இடதுகை விரல்களில் கொக்கி போல் மாட்டிக் கொள்ளவும். மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும்போது கை புஜங்களில் அழுத்தம் கொடுத்து கைகள் ஒன்றை ஒன்று இழுத்த வண்ணம் இருக்கட்டும். கை மாற்றி செய்யவும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். |
கருட முத்திரை | |
பலன்-உடல் சோர்வு மறைந்து, கண்பார்வை தீர்க்க மாகும். பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். செய்முறை-கிராஸ் வடிவில் இடதுகைமேல் வலதுகை இருக்குமாறும் இரு கைகளையும் பாதங்கள் தெரியுமாறும் அவை நம் முகம் பார்த்த வண்ணம் இருக்குமாறும் வைக்கவும். இருகை கட்டை விரல்களை கொக்கிபோல் வளைத்து மாட்டிக் கொள்ளவும். மற்ற விரல்கள் நேராக ஒன்றை ஒன்று தொடாமல் நீட்டி இருக்க வேண்டும் தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும் |
குபேர முத்திரை | |
பலன்-சைனஸ் கோளாறுகள் நீங்கும். நினைவாற்றல் கூடும். செய்முறை-மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடித்து அதன் நுனி உள்ளங்கையைத் தொடுமாறு வைக்கவும். கட்டைவிரல், ஆட்காட்டி விரல், நடுவிரல் ஆகியமூன்றின் நுனிகளும் ஒன்றை ஒன்று தொடுமாறு செய்யவும். மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும் தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும் |
சக்தி முத்திரை | |
பலன்-உறக்கம் விரைவில் வரும். பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். செய்முறை-தலையணை இன்றி நேராக மல்லார்ந்து படுத்த நிலையில் செய்ய வேண்டும். இரண்டு கை கட்டை விரல்களையும் உள்ளங்கையில் மடித்து வைத்து ஆள்காட்டி விரல், நடு விரல்களால் மூடியபடி கட்டை விரலில் லேசன அழுத்தம் கொடுக்கவும். இடது கைவிரல்கள் வலது கை விரல்களைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இடது கை சுண்டு விரல், மோதிர விரல் இரண்டையும் நேராக நீட்டி விரல்களின் நுனிகள் வலது கையின் விரல் நுனிகளைத் தொடுமாறு செய்யவும். இந்நிலையில் கைகளை அப்படியே அடிவயிற்றின் அருகே வைத்து மூச்சை மெதுவாக இழுத்து மெதுவாக விடவும். இரவு படுக்கையில்3/5நிமிடம் செய்யவும் |
சங்கு முத்திரை | |
பலன்-திக்குவாய் குணமாகும். சரளமான தங்குதடையற்ற பேச்சுவளம் கூடும். செய்முறை-இடது கை கட்டை விரலை வலது உள்ளங்கையில் வைத்துவலது கைவிரல்களால் இறுக பிடிக்கவும். மற்ற விரல்களை வலதுகை விரல்மேல் வைக்கவும். அந்த விரல்களின் நுனி வலதுகை கட்டைவிரலைத் தொட்டவாறு இருக்க வேண்டும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும் |
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மாதங்கி முத்திரை -
சுரபி முத்திரை | |
பலன்-வாதநோய் குணமாகும். செய்முறை-இடதுகை சுண்டு விரல் வலதுகை மோதிர விரலைத் தொடுமாறும், இடதுகை மோதிர விரல் வலதுகை சுண்டு விரலைத் தொடுமாறும், இடதுகை நடுவிரல் வலதுகை ஆள்காட்டி விரலைத் தொடுமாறும், இடது ஆள்காட்டி விரல் வலது கை நடுவிரலைத் தொடுமாறும், இரு கட்டை விரல்களும் நேராக நிமிர்ந்தும் இருக்கட்டும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும் |
சுவாசகோச முத்திரை | |
பலன்-ஆஸ்துமா குணமாகும். முதல் நிலை-செய்முறை-இருகை பாதங்களும் ஒன்றை ஒன்று பார்த்தபடி நெஞ்சுக்குமுன் வைத்து இருகை நடு விரல்களை உட்பக்கமாக மடித்து அதன் நகக்கண்கள் ஒன்றை ஒன்று தொடுமாறு வைக்கவும். மற்ற விரல்கள் நேராக ஒன்றை ஒன்று தொடாத வண்ணம் இருக்க வேண்டும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும் |
இரண்டாம் நிலை-செய்முறை- இடதுகை ஆட்காட்டி விரலை நேராக நீட்டவும். இடதுகை சுண்டு விரலை மடக்கி இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்திலும், மோதிரவிரலை கட்டை விரலின் நடுப்பாகத்திலும், நடுவிரலை கட்டை விரலின் நுனியைத் தொட்டமாறும் வைக்கவும். கையை மாற்றி செய்யவும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும் |
சூர்ய முத்திரை | |
பலன்-தைராய்டு சுரப்பி தூண்டப்படும். உடல் சூட்டினால் கொழுப்பு கரையும். உடல் எடை குறையும். செய்முறை-இடது கை மோதிர விரலை மடித்து இடதுகை கட்டைவிரலின் அடிப்பாகத்தை தொட்டவாறு வைக்கவும். எல்லா விரல்களும் நேராக இருக்கட்டும். கையை மாற்றி செய்யவும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும் |
சூன்ய-ஆகாய முத்திரை | |
பலன்-காது நோய்கள் குணமடையும். எழும்புகள் வலுவடையும். செய்முறை-இடது கை கட்டைவிரல் இடதுகை நடுவிரல் இரண்டின் நுனிகளும் ஒன்றை ஒன்று தொட்டவாறு வைத்து மற்ற விரல்கள் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும் |
சோபன முத்திரை | |
பலன்-எதிர்மறை எண்ணங்கள் குறைந்து நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும். செய்முறை-இருகைகளையும் கோர்த்தவாறு இடதுகை கட்டை விரல் மேல் வலதுகை கட்டை விரல் இருக்குமாறு செய்யவும். ஆள்காட்டி விரல்கள் இரண்டையும் நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கட்டும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். |
ஞான-சின் முத்திரை | |
பலன்-தியானத்திற்கு ஏற்றது. சிந்தனை தெளிவு அடையும். நரம்பு மண்டலங்கள் நன்றாக செயல்படும். இரத்த அழுத்தம் சீர்படும். செய்முறை-இருகைகளையும் முழங்கால் மீது உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு வைத்து கட்டைவிரல் ஆட்காட்டி விரல் நுனியைத் தொட்டவாறு லேசான அழுத்தம் தரவேண்டும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும் |
சமான-துடிப்பு முத்திரை | |
பலன்-சிந்தனை தெளிவு அடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். முதல்நிலைசெய்முறை-ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பிறகு நடுவிரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பின் மோதிர விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். கடைசியாக சுண்டு விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். |
இரண்டாம் நிலைசெய்முறை-ஆள்காட்டி விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பிறகு நடுவிரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பின் மோதிர விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். கடைசியாக சுண்டு விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். | |
மூன்றாம் நிலைசெய்முறை-ஐந்து விரல்களின் நுனிகளும் ஒன்றாக சேர்ந்திருக்குமாறு வைக்கவும்.மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். தினமும் காலை, மாலை மூன்று நிலை களையும்3/5 நிமிடம் செய்யவும். |
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மாதங்கி முத்திரை -
நாக முத்திரை | |
பலன்-சிந்தனை தெளிவு அடையும். பிரச்சனைகள், சிக்கல்கள் தீர்வு காணும். செய்முறை-இடது உள்ளங்கை கீழ் வலது உள்ளங்கை பாதம் பார்த்தவண்ணம் வைத்து வலது கட்டை விரலால் இடது உள்ளங்கையை லேசாக அழுத்தவும். இடது கட்டை விரல் வலது கட்டை விரல் மீது இருக்க வேண்டும். இடதுகையின் மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்க வேண்டும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும் |
பங்கஜ முத்திரை | |
பலன்-காய்ச்சல் குணமாகும். உடல் சூடு தணியும்.. செய்முறை-இரு கைகளின் பாதங்களை ஒன்று சேர்த்து குவித்து கட்டை மற்றும் சுண்டு விரல்கள் ஒன்றை ஒன்று தொடுமாறும் மற்ற விரல்கள் ஒன்றை ஒன்று தொடாமல் குவிந்த நிலையில் இருக்க வேண்டும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். தேவைப்படின் ஒரு மணிக்கு ஒரு முறை செய்யலாம். |
பிரம்மார முத்திரை | |
பலன்-அலர்ஜி உடல் தடிப்பு குணமாகும். செய்முறை-இடதுகை ஆட்காட்டி விரலை மடித்து இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்தைத் தொடுமாறு வைக்கவும். இடதுகை கட்டைவிரலால் நடுவிரலின் நகத்திற்குப் பக்கவாட்டில் தொடுமாறு வைக்கவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். கைகளை மாற்றி செய்யவும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். தேவைப்படின் ஒரு மணிக்கு ஒரு முறை செய்யலாம். |
பிராண முத்திரை | |
பலன்-கண் பார்வை கூர்மையாகும். மூளை செயல் திறன் அதிகரிக்கும். செய்முறை-இடதுகை மோதிர விரல், சுண்டு விரல் நுனிகளால் கட்டைவிரல் நுனியைத் தொடவும். மற்ற இரண்டு விரல்களும் நேராக இணைந்தபடி நீட்டி இருக்கட்டும். கைமாற்றி செய்யவும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். |
பிருத்வி முத்திரை | |
பலன்-வயதானவர்களுக்கு மிகுந்த பயன். நகம் எழும்பு, முடி வளரும். உடல் நடுக்கம் குறையும். செய்முறை-இடதுகை மோதிர விரல் நுனியை கட்டைவிரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். கைமாற்றி செய்யவும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். |
மகாசிரசு முத்திரை | |
பலன்-தலைவலி, தலை பாரம் குறையும். கண்களில் அயர்ச்சி குறையும். செய்முறை-இடதுகை கட்டைவிரல், ஆட்காட்டி விரல், நடு விரல் ஆகிய மூன்றின் நுனிகளும் ஒன்றை ஒன்று தொடுமாறு வைத்து இடதுகை மோதிர விரலை மடித்து அதன் நுனி உள்ளங்கையை நடுவில் தொடுமாறு இருக்கவும் சுண்டு விரல் நேராக நீட்டி இருக்கவும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். |
மாதங்கி முத்திரை | |
பலன்-சர்க்கரையின் அளவை இரத்தில் குறைக்கும். செய்முறை-இருகைகளையும் கோர்த்தவாறு இடதுகை பெருவிரல்மீது வலதுகைப் பெருவிரல் இருக்குமாறு வைக்கவும். இரு நடு விரல்களையும் நேராக நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கச் செய்யவும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். |
மிருகி-மான் முத்திரை | |
பலன்-பற்கள் உறுதியாகி பல்வலி குறையும். செய்முறை-இடதுகை நடுவிரல், மோதிரவிரல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு இடதுகை கட்டை விரலால் இரண்டு விரல்களின் நுனியிலிருந்து முதல் ரேகை- கோட்டை லேசான அழுத்தம் கொடுத்துத் தொடவும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். |
முதுகுவலி முத்திரை | |
பலன்-முதுகு வலி நரம்புக் கோளாறுகள் குறையும். செய்முறை-இடதுகை கட்டைவிரல், ஆள்காட்டிவிரல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு- சின் முத்திரை. மற்ற விரல்கள் நேராக சேர்ந்து இருக்கட்டும். வலதுகை சுண்டுவிரல் மற்றும் நடுவிரல் நுனிகளைக் கட்டை விரல் நுனியால் தொடவும். வலதுகையின் மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். |
முஷ்டி முத்திரை | |
பலன்-பயம் குறையும். தன்னம்பிக்கை அதிகமாகும். செய்முறை-இடதுகை விரல்களை மடக்கி உள்ளங் கையைத் தொடுமாறு வைக்கவும். கட்டை விரலை மோதிர விரலின் மேல் வைத்து லேசான அழுத்தம் கொடுக்கவும், கையை மாற்றி செய்யவும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். |
மூட்டுவலி முத்திரை | |
பலன்-மூட்டு வலிகள் குணமாகும்.. செய்முறை-இடதுகை நடுவிரல் நுனியை இடதுகை கட்டை விரலைத் தொடுமாறு வைக்கவும். இடது கையின் மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்கட்டும். வலதுகை மோதிர விரல் நுனியை கட்டைவிரல் நுனியால் தொடவும். வலதுகையின் மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். |
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மாதங்கி முத்திரை -
ருத்ர முத்திரை | |
பலன்-வயிற்றின் கோளாறுகள் குணமாகும். குடலிறக்கம், கருப்பை கீழிறங்குதல், மூலநோய் ஆகியவைகள் கட்டுப்பாட்டினுள் வரும். செய்முறை-இடதுகை கட்டைவிரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நுனியை ஒன்று சேர்த்து தொடுமாறு வைக்கவும். இடது கையின் மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்கட்டும். கையை மாற்றி செய்யவும்.. தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். |
லிங்க முத்திரை | |
பலன்-தும்மல், சளி, இருமல், மூக்கடைப்பு சரியாகும் செய்முறை-இருகைகளையும் கோர்த்து இடதுகைப் பெரு விரல் மீது வலது கைப் பெருவிரல் இருக்குமாறு வைத்து இடதுகைப் பெருவிரலை நேராக நிமிர்த்தி இருக்கட்டும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். |
வருண-பூதி முத்திரை | |
பலன்-உடல் சூடு குறையும். தாகம் தணியும். தோல் வறட்சி மறையும். செய்முறை-இடதுகை கட்டை விரல் நுனியை சுண்டு விரல் நுனியோடு இணைக்கவும். இடதுகையின் மற்ற விரல்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவாறு நேராக நீட்டியிருக்கட்டும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். |
வாயு முத்திரை | |
பலன்-வாயு தொந்தரவு நீங்கும், வயிற்றுக் கோளாறுகள் குறையும். செய்முறை-இடதுகை ஆள்காட்டி விரலை மடக்கி கட்டை விரலின் அடிப் பகுதியில் வைக்கவும். இடதுகையின் மற்ற விரல்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவாறு நேராக நீட்டியிருக்கட்டும். கையை மாற்றி செய்யவும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். |
வீட்ராக் முத்திரை | |
பலன்-தியானம் செய்யப் பயன்படும். மன அமைதி ஏற்படும்.. செய்முறை-இடதுகை விரல்கள் ஒன்று சேர்ந்து பாதம் மேல் நோக்கியிருக்குமாறு வயிற்றின் அருகில் வைக்கவும். வலதுகை விரல்கள் ஒன்று சேர்ந்து பாதம் மேல் நோக்கியிருக்குமாறு இடதுகை பாதத்தின்மேல் வைக்கவும். இரு கட்டை விரல்களும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். |
ஹாக்கினி முத்திரை | |
பலன்-மன அமைதி ஏற்பட்டு நினைவாற்றல் அதிகமாகும்.. செய்முறை-இடதுகை வலதுகை விரல்கள் ஒன்றை ஒன்று தொடாமல் நேராக நீட்டி அவைகளின் நுனிகளை ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்கவேண்டும். தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். |
***முடிவுற்றது***
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» மலச்சிக்கலை தீர்க்கும் சூசி முத்திரை
» மூச்சுக்காற்றின் முத்திரை - கவிதை
» விரல் முத்திரை
» விரல் முத்திரை – மருத்துவம்
» நபி( ஸல் ) அவர்களின் முத்திரை பதித்த தடம்
» மூச்சுக்காற்றின் முத்திரை - கவிதை
» விரல் முத்திரை
» விரல் முத்திரை – மருத்துவம்
» நபி( ஸல் ) அவர்களின் முத்திரை பதித்த தடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum