தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ரேடியோ காலங்கள்.. 'நாங்கள் கேட்டவை'

Go down

ரேடியோ காலங்கள்.. 'நாங்கள் கேட்டவை' Empty ரேடியோ காலங்கள்.. 'நாங்கள் கேட்டவை'

Post by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 2:33 pm

 13 Feb 2018
-------------------
ரேடியோ காலங்கள்.. 'நாங்கள் கேட்டவை' Radio



-இன்று ரேடியோ தினம்.


இன்று உலக ரேடியோ தினம். தஞ்சைவாசியான சர்வதேச 
வானொலி நேயரான டி.எம்.முருகானந்தம் எனக்கு


காலையில் அனுப்பிய வாட்ஸ்அப் தகவலில் அறிந்தேன். 
அடுத்து அதன் அலைவரிசைக்கு இணையாக அக்காலக்கட்டத்தில் 
எனது பள்ளிக்காலம் இருந்ததை மனம் அசைபோட்டது.


இதில் பதிவான வடிவத்தை எழுத்தாக்கி இங்கு தந்துள்ளேன்.


ஒரு காலத்தில் நம் உடலின் மற்றொரு நாடித்துடிப்பாக இருந்தது 
இந்த வானொலி. இதன் அளவை பொறுத்து அது வைக்கப்
பட்டிருக்கும் வீட்டாருக்கு பெருமை. வானொலி நிலையங்களின் 
அலைவரிசைக்கான பேண்டுகள் அதிகம் இருந்தால் கூடுதல்
 மதிப்பு. 


அதேபோல், அளவில் சிறியதாக இருப்பதற்கும் தனிமதிப்பு. 
கண்களை கவரும் இந்த டிரன்சிஸ்டர்களை கடற்கரை, நதிக்கரை, 
சாலைஓர மரத்தடிகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் 
போன்ற இடங்களில் வைத்து கேட்பவர்களிடம் நின்று அவர்களிடம் 
பேசும் சாக்கில் ஒலிக்கும் பாடலை கேட்கத் தோணும். 


எதுவும் பேசாமல் அமைதியாக அருகில் நின்று பாடலை மட்டும் 
இலவசமாகக் கேட்டுச் சென்றவர்களும் உண்டு. கிரிக்கெட் 
போட்டிகளின் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் போது இந்த சிறிய 
வானொலியை வைத்திருப்பவர்களை சுற்றி ஒரு பெரிய கூட்டம் 
சூழ்ந்து இருக்கும். 


அப்போது அந்த வானொலியை விட அதை வைத்திருப்பவர்களுக்கு 
மரியாதை அதிகம் கிடைக்கும். இதன்மூலம் புதிய நட்புகளும் 
உருவானது உண்டு. செய்திகள் ஒலிபரப்பிலும் தொடரும் இந்தநிலை, 
தேர்தல், புயல் சமயங்களில் சிறுபொதுக்கூட்டங்களுக்கு கூடும் 
எண்ணிக்கை அளவிலான கூட்டங்கள் கூடி விடும்.
-

---------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ரேடியோ காலங்கள்.. 'நாங்கள் கேட்டவை' Empty Re: ரேடியோ காலங்கள்.. 'நாங்கள் கேட்டவை'

Post by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 2:34 pm

எனது சொந்த ஊரான சேலத்தில் நான் பள்ளிப்படிப்பின் போது 
காலை மணி அறிந்து எழுவது பெரிய பிரச்சனையாக இருக்கும்.
 சிறுவயதில் எனக்கு கடிகாரத்தில் நேரம் பார்ப்பதில் குழப்பம். 

ஒரு எண்ணிற்கு முன்பின் முள்நின்று விட்டால் காலை மணி 
7.30 மணியா அல்லது 8.30 மணியா என குழம்பி விடுவேன். 
சமையற்கட்டில் டிபன் தயார் செய்யும் அம்மாவிடம் கேட்டால், 
‘கழுத! கழுத! கடிகாரம் பார்க்கத் தெரியல! வெட்கமா இல்ல?’ 
என வசைபாடுகளுடன் மணி அறிய வேண்டி வரும். 

இதில் இருந்து என் மானத்தை காத்த உற்ற நண்பன் இந்த 
வானொலி. நேரத்தை கண்டுகொள்ள வானொலியின் 
நிகழ்ச்சிகளை கணக்கில் எடுத்துக்கொள்வேன். எங்களை 
எழுப்புவதற்காக காலையில் ஏழு மணிக்கு அம்மா அல்லது
 அண்ணன்மார்கள் வீட்டின் பிலிப்ஸ் வானொலியை ஸ்விட்ச் 
ஆன் செய்வார்கள்,

 முன்தினம் அதை அணைத்த போது பாடிக்கொண்டிருந்த
 இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் துவங்கிவிடும். இதில், 
நீங்கள் கேட்டவை, திரைவிருந்து, உங்கள் விருப்பம் எனப் 
பல்வேறுவகை தலைப்புகளில் திரைப்படப் பாடல்கள் 
ஒலிபரப்பாகும். இதன் தலைப்பை கேட்க முடியாவிட்டாலும் 
அதில் வரும் பழைய, புதிய பாடல்களை பொறுத்து அந்த 
நிகழ்ச்சி என்ன? 

அப்படி எனில் இப்போது மணி என்ன? என நேரத்தை கணக்கிடும்
 வில்லாதி வில்லன்கள் பட்டியலில் நானும் இடம் பெற்றிருந்தேன். 
இதற்கு படிப்பை விட உயிர்மூச்சாக சினிமா இருந்தது அதன் 
காரணம்.(உதாரணம்: நினைத்தாலே இனிக்கும் 13 முறை,
 ஒருதலைராகம் 17 முறை).
-
-------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ரேடியோ காலங்கள்.. 'நாங்கள் கேட்டவை' Empty Re: ரேடியோ காலங்கள்.. 'நாங்கள் கேட்டவை'

Post by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 2:36 pm

கடைசியாக வீட்டில் இருந்து பள்ளிக்கு கிளம்பும் போதும்
 வானொலியின் பாடல்களை நம்பி தூரத்தை குறித்த நேரத்தில்
 கடந்து விடுவேன். இதற்கு நான் பள்ளி செல்லும் வழியில் பலரது 
வீடுகளில் அதே இலங்கை வானொலி நிலைய பாடல் நிகழ்ச்சிகள்
 சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பதும் காரணம். 

பள்ளிக்கு உள்ளே நுழையும் முன்பாக அதன் வாசலில் அன்னாசி 
பழம் விற்கும் மாணிக்கம் அண்ணன் அதை சீவியபடி தன் 
டிரான்சிஸ்டரில் கேட்கும் பாட்டு பலன் தரும். நேரத்தை வீணடிக்கக் 
கூடாது என எங்க வாத்தியார் அடிக்கடி கூறுவதை நான் கட்டாயம் 
பின்பற்றுவேன். 

9.40 மணிக்கு அடிக்கும் பள்ளி பெல்லுக்கு மூன்று நிமிடத்திற்கு 
முன்தான் உள்ளே நுழைவேன். அதற்கு உதவியாக மாணிக்கம் 
அண்ணனின் டிரான்சிஸ்டர் இருந்தது. இது எனது மற்ற சில 
நண்பர்களையும் பள்ளிக்கு முன்னதாக உள்ளே செல்லவிடாமல் 
‘டேய்! டைம் இருக்கு நில்றா மாப்ள!’ எனக் கூறி கெடுக்கவும் 
உதவியது. 

அந்த இனிய நாட்களை மறக்க முடியாமல் இருக்க வைத்த 
வானொலி, தொழில்நுட்ப வளர்ச்சியின் பெயரில் முடங்கிவிட்டது! 
இனி அதுபோன்ற காலங்களை எந்த தலைமுறையும் அனுபவிப்பது 
சாத்தியமல்ல!
-
--------------------------------------------
ஆர்.ஷபிமுன்னா 
தி இந்து
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ரேடியோ காலங்கள்.. 'நாங்கள் கேட்டவை' Empty Re: ரேடியோ காலங்கள்.. 'நாங்கள் கேட்டவை'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum