தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தூக்கணாங் குருவிக் கூட்டைப் பற்றி நம் குழந்தைகளுக்கு சொல்லித் தருவோமா?
Page 1 of 1
தூக்கணாங் குருவிக் கூட்டைப் பற்றி நம் குழந்தைகளுக்கு சொல்லித் தருவோமா?
-
தூக்கணாங் குருவிக் கூட்டை பார்த்திருக்கிறீர்களா?
அதன் அழகைச் சொல்ல வார்த்தைகள் ஏது?. தன் சின்ன அலகால்
கூடு கட்டும் அதன் நேர்த்தியே அலாதியானது. கிராமங்களின்
வயல்வெளிகளில், வளர்ந்து நிற்கும் நெடுமரங்களின் கிளைகளில்
காற்றில் அசைந்து கொண்டிருக்கும் இந்த சின்னக் கூடுகள்
சொல்லும் பாடங்கள் ஏராளம்.
அறிவியலின் வளர்ச்சியால் சிட்டுக் குருவிகளின் இனத்தை மெள்ள
மெள்ள இழந்து கொண்டிருக்கிறோம் . இளம்மஞ்சள் நிறத்தில்
அதிகாலையில் கதிரவன் எழும் நேரத்தில் நம் வீட்டுத் தாழ்வாரத்தில்
குறுகுறுவென கூச்சலிடும் சிட்டுக்குருவிகள் அதன் நிறத்தைப்
போலவே சாம்பலாகிப் போன சரித்திரம் மட்டுமே மிச்சமாய்
இருக்கிறது
நம்மிடத்தில். சிட்டுக்குருவிகளைப் போலவே தூக்கணாங்
குருவிகளையும் தூரத்து கதைகளாக நினைவுப்படுத்திக்
கொண்டிருக்கிறோம்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தூக்கணாங் குருவிக் கூட்டைப் பற்றி நம் குழந்தைகளுக்கு சொல்லித் தருவோமா?
நம் அன்றாட வாழ்வில் குறைந்த பட்சம் வீட்டு விலங்குகளாக
நாய், பூனை, பசு, ஆடு இவற்றை எல்லாம் நேரடியாக தினமும்
பார்த்துக் கொண்டிருந்தோம். பறவைகளாக காக்கை, கோழி,
குருவி, இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தோம்.
கிராமங்கள் தொலைந்த நகர வாழ்வில் கோழிகளை பிராய்லர்
கோழிகளாகவும் காக்கைகளை நெரிசல் இல்லாத சாலைகளின்
மின்கம்பங்களிலுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இப்படியே போனால் மனிதன் அல்லாத மற்ற உயிரினங்களை
இணையங்களில் மட்டுமே டவுன்லோடு செய்து பார்த்துக்
கொண்டிருப்போம்.
நேரடியாய் எதையும் கற்கவோ ரசிக்கவோ வாய்ப்பற்ற வாழ்க்கை
முறை வாய்த்தவர்கள் நம் குழந்தைகள். டிஸ்கவரி சேனல்களில்
மட்டுமே விலங்குகளும் பறவைகளும் வாழ்ந்து கொண்டிருப்பதாய்
அவர்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறோம்.
பிளாஸ்டிக் பொம்மைகளாகவே டைகர், லயன், ஸ்பேரோ, க்ரோ ...
என பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வரவேற்பறையில்
இருக்கும் லெதர் சோபாவுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு விலங்கின்
தோலைப் பற்றியோ, பால்கனியில் தொங்கிக் கொண்டிருக்கும்
ஊஞ்சலில் வார்னிஷ் பூசப்பட்ட மூங்கில் மரத்தின் வரலாறு
குறித்தோ அவர்கள் அறியாமலேயே நகர்ந்து போகின்றது வீடியோ
கேம்ஸ் வாழ்க்கை முறை.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தூக்கணாங் குருவிக் கூட்டைப் பற்றி நம் குழந்தைகளுக்கு சொல்லித் தருவோமா?
நகரமயமாதல் என்பதே மனிதனை இயந்திரமாக்குவது தானே.
இந்த அவசர யுகத்தில் கிராமங்களின் வாழ்க்கைமுறையை
ஒருமுறையேனும் தேடிப் பயணிக்க வேண்டிய அவசியத்தில்
இருக்கிறோம்.
’நான் படிச்சிட்டு இன்ஜினீயர் ஆகப் போறேன்’ என்று சொல்லும்
குழந்தைக்கு இயற்கை கொடுத்திருக்கும் இன்ஜினீயரான
தூக்கனாங்குருவி பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறோமா?.
தேங்காய் நார், வைக்கோல், இலைகள் என தன் கண்ணுக்கு எட்டும்
எல்லாவற்றையும் தன் அலகால் எந்த அளவுக்குப் பாரம் சுமக்க
முடியுமோ அந்த அளவுக்கு தூக்கிக் கொண்டு வந்து தன் இணைக்கு
கூடு கட்டும் தூங்கணாங் குருவி அன்பின் அடையாளம்.
இங்கே கட்டுவது என்றால் கொத்தனார் சிமெண்ட் கலவையை
செங்கலில் பூசிக் கட்டுவாரே ... அப்படி அல்ல. ஒவ்வொரு நாரையும்
அலகில் வைத்துக் கொண்டு கிளையில் அதை முடிச்சிட்டு மெது
மெதுவாய் வளைவு நெளிவுகளோடு முழுதாய் கூடு செய்யும் மாயப்
பறவைகள் அவை. நினைத்துப் பாருங்கள்.
கைகள் இல்லாமல் ஒற்றை மூக்கால் ஒரு வாழ்வாதாரத்தை
உருவாக்கும் அந்த சின்னக் குருவிகள் தன்னம்பிக்கையின்
அடையாளம் அல்லவா?.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தூக்கணாங் குருவிக் கூட்டைப் பற்றி நம் குழந்தைகளுக்கு சொல்லித் தருவோமா?
நேராக ஒரு பின்னல். அதிலிருந்து தொடரும் தொப்பை போல
ஒரு வளைவான அமைப்பு , அங்கிருந்து மீண்டும் குழாய் போல
ஒரு வளைவு என முட்டையிடும் தன் இணைக்குப் பாதுகாப்பாய்
வீடு செய்யும் தூங்கணாங்குருவி பாசத்துக்குச் சிறந்த உதாரணம்.
மின்விளக்கு இல்லாத காலத்தில் ராந்தல் விளக்குகளை வீடுகளில்
பயன்படுத்தி இருப்போம். தூங்கணாங்குருவிகளுக்கு ராந்தல்
விளக்கு எது தெரியுமா?. மின்மினிப் பூச்சிகள். கழனியில் சகதியில்
இருந்து சின்ன களிமண் துளியை கொண்டு வந்து தன் கூட்டுக்குள்
வைத்துவிட்டு அதில் மின்மினிப் பூச்சிகளை ஒட்ட வைத்து
வீட்டுக்கு ஒளிகூட்டும் தூங்கணாங்குருவிகள் நம்
எலெக்ட்ரீஷியன்களுக்கு முன் உதாரணம்.
காற்றில் விழாத அழுத்தமான பிடிமானத்தைக் கொண்டு தன்
ஒற்றை அலகால் உறுதியாய் அறுந்து விழாத கூடு கட்டும் இந்த
சின்னக் குருவிகள் உணர்த்தும் பாடம் இதுதான்.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!.
’ வாருங்கள். சில நாட்களாவது கிராமம் நோக்கிப் பயணிப்போம்.
குருவிகள் கூடு கட்டும் அழகை தூரத்தில் இருந்து ரசிப்போம்.
அதன் அருமைகளை நம் குழந்தைகளுக்குச் சொல்லி மகிழ்வோம்.
நீங்கள் மீண்டும் நகரத்துக்கு நகர நேர்ந்தாலும் நிச்சயமாக உங்கள்
வீட்டு பால்கனியில் இறைந்து கிடைக்கும் தானியங்களைத் தேடி
சில பறவைகள் அமர்ந்திருப்பதை நாளை உங்கள் குழந்தைகளும்
நெருக்கமாய் கண்டு ரசிக்கலாம்.
-
--------------------------------------
-பொன்.விமலா
-விகடன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» உன் நண்பனை பற்றி சொல்;உன்னை பற்றி சொல்கிறேன்,
» 35ஐப் பற்றி - அதன் மதிப்பைப் பற்றி
» சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைகள்
» குழந்தைக்கு சொல்லித் தரும் பாப்பா பாட்டு
» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
» 35ஐப் பற்றி - அதன் மதிப்பைப் பற்றி
» சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைகள்
» குழந்தைக்கு சொல்லித் தரும் பாப்பா பாட்டு
» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum