தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன்

Go down

செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன் Empty செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன்

Post by அ.இராமநாதன் Wed Mar 07, 2018 8:16 pm

செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன் Tamil_News_large_1166418

சிரிப்பு என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு, 
சந்தோஷத்தின் குறியீடு. மனம் மகிழ்ச்சியாக இருப்பதை 
முகச்சிரிப்பு வெளிகாட்டும்.

 மனிதனுக்கு மட்டுமே உரித்தான சிறந்த பண்பு, சிரிப்பு. 
மனிதனால் சிரிக்க, சிரிப்பை வரவழைக்க முடியும். 
அதேபோல் சிரிப்பை விரும்பாத மனிதர்கள் உலகில் இல்லை.

'எந்நேரமும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களை எனக்கு பிடிக்கும். 
புன்னகையுடன் வேலை செய்பவர், திறமை, ஆர்வம், குறித்த 
நேரத்தில் தங்கள் வேலையை செய்து முடிப்பார்' என பல 
இடங்களில் மகாத்மா காந்தி கூறி உள்ளார். சிரிப்பு குறித்து
 வள்ளுவரும் கூறி உள்ளார்.

சிரிக்கும்போது நடப்பது:

சிரிக்கும்போது நம் உடலில் அநேக மாற்றம் ஏற்பட்டு அவை 
எல்லாமே ஆரோக்கியம் காக்க உதவுகிறது. வயிறு குலுங்க 
சிரிக்கும்போது உடலில் 57 தசைகள் வேலை செய்கின்றன.
 சாதாரண புன்முறுவலுக்கு நம் முகத்தில் 13 தசைகள்
 இயங்குகின்றன. வயிறு குலுங்க சிரிப்பவர்கள் பிராணவாயுவை 
அதிக அளவில் உட்கொண்டு, கரியமில வாயுவை அதிகம் 
வெளியேற்றுகின்றனர். 

இது உடலில் உண்டாகும் கழிவுகளை உடனுக்குடன் அகற்றி, 
ரத்தம் சுத்தமாக உதவுகிறது. இதன்மூலம் இதயம், நுரையீரல், 
கல்லீரல், கணையம், மண்ணீரல் போன்ற உயிர் காக்கும் 
உறுப்புகள் சிறப்பாக இயங்க உதவுவது சிரிப்பு.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன் Empty Re: செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன்

Post by அ.இராமநாதன் Wed Mar 07, 2018 8:19 pm

செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன் Actres10


நோய் விலகும்:

'வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்' என்பது முன்னோர் 
வாக்கு. இது நூற்றுக்குநூறு உண்மை. மனம் நிறைந்து சிரிக்கும்
போது 'என்டார்பின்' எனும் ஹார்மோன் உடலில் சுரக்கிறது. 

இது ஒரு வலி மறப்பான் மருந்தாக பயன்படுகிறது. இது வலி 
ஏற்படுத்தும் நோய்தன்மையை வெகுவாக குறைக்கும்.
 இதற்கு உண்மை நிகழ்ச்சி ஒன்றை குறிப்பிட வேண்டும். 

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையாளர் நார்மன் கொவ்சின். 
இவருக்கு முதுகு தண்டில் வலி ஏற்பட்டது. நோய் குணமாக 
தாமதமானது. பழைய சினிமா கருவி ஒன்றை விலைக்கு வாங்கி 
வீட்டில் வைத்தார். 

அதிக சிரிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவை படங்களை தினமும் 
பார்த்தார். தன்னை அறியாமல் வாய்விட்டு சிரித்தார்.
 ஒரு படம் பார்க்க ஆகும் மூன்றுமணி நேரத்தின்போது, வலியை 
முற்றிலும் மறந்தார். 

மருத்துவர்கள் கொடுத்த மருந்துகளை சாப்பிட்டார்
 வலி குறைந்து, விரைவிலேயே குணமானார்.

மனக்கவலை மறைய:

இயந்திர வாழ்க்கையில், இளம்வயதிலே மன அழுத்தம் அதிகமாகி 
உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயநோய், மனச்சோர்வு, 
மனக்கவலை போன்ற நோய்கள் அதிகரித்து வருகிறது. 

இதற்கு தீர்வாக நகைச்சுவை உணர்வை அதிகரிக்கவேண்டும், 
சிரிப்பை ஒரு பயிற்சியாக செய்யவேண்டும் என டாக்டர்கள் 
வலியுறுத்துகின்றனர். மனக்கவலையை மறக்க உதவும் 
செலவில்லாத மருந்து சிரிப்பு. இதன் மூலம் மன அழுத்தம், கவலை, 
கோபம் குறைகிறது. தனிமையை விரட்டி மற்றவர்களுடன் 
இணைந்து பணிபுரியும் குழுமனப்பான்மையை ஊக்கப்
படுத்துகிறது. 

தினமும் 15 நிமிடங்கள் சிரித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அ
திகமாகும், இதனால் ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற நோய்கள் 
தடுக்கப்படுகிறது என ஆராய்ச்சிகள் நிரூபித்து உள்ளன.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன் Empty Re: செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன்

Post by அ.இராமநாதன் Wed Mar 07, 2018 8:20 pm

செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன் 18-1497807287-laughing454-600


ஹாஸீயயோக் சிரிப்பு பயிற்சி:

சிரிப்பின் சிறப்பை, பண்டைய மக்கள் தெரிந்து வைத்து 
இருந்தனர். ஆதிகாலத்தில் குருகுல கல்வி முறையில் பலவித
 யோகாசன பயிற்சி அளிப்பது வழக்கம். அதில் முக்கியமானது 
தான் இந்த 'ஹாஸீயயோக்' எனும் சிரிப்பு பயிற்சி. 

போர்க்காலங்கள், இயற்கை பேரழிவு, நோய்தொற்று 
தீவிரமாகும்போது, சிரிப்பு பயிற்சி அளிக்கப்படும். 
இது மக்களிடம் ஏற்பட்ட மன உளைச்சல், மன பயம், 
மனக்கவலை போன்றவற்றை மாற்றி மன வலிமையை தந்தது. '

மனித உடல் ஆரோக்கியத்திற்கு சிரிப்பு இன்றியமையாதது' 
என உலக ஆராய்ச்சிகள் உறுதி செய்து உள்ளன. சிரிப்பு எனும் ம
னித குணத்தை ஒரு சிகிச்சை முறையாக சேர்த்து உள்ளனர். 

உலகில் சிரிப்பு சிகிச்சை தற்போது பிரபலமாகி அமெரிக்கா, 
பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் 'சிரிப்பு மருத்துவ
மனையை' துவங்கி உள்ளன; நம் நாட்டில் உள்ள நகைச்சுவை 
மன்றங்கள் போல!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன் Empty Re: செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன்

Post by அ.இராமநாதன் Wed Mar 07, 2018 8:22 pm

செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன் Imagep11



சிரித்த முகம் தேவை:

சிரித்த முகத்துடன் உள்ளவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு 
கூடும், நகைச்சுவை ததும்ப பேசுபவர்களை சுற்றி எப்போதும்
 ஒரு கூட்டம் இருக்கும். பல புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். 
எனவே நீங்களும் நகைச்சுவை உணர்வை அதிகப்படுத்தி, 
எந்த விஷயத்தையும் நகைச் சுவையோடு பேச கற்றுக்
கொள்ளுங்கள். 

நகைச்சுவை துணுக்கு, நிகழ்ச்சியை தினமும் நண்பர்களிடம் 
கூறுங்கள். இதற்காக நகைச்சுவை நூல்களை அதிகம் 
படிக்கவேண்டும். 'டிவி' க்களில் அழவைக்கும் சீரியல்களை 
தவிருங்கள். 

நகைச்சுவை உணர்வு அதிகமாகும்போது மனம் எளிதாகும், 
உடல் நலமாகும், வாழ்வு வளமாகும்.
-
-------------------------------------
- டாக்டர் ஜி.கணேசன், 
பொதுநல மருத்துவர், 
படம் -இணையம்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன் Empty Re: செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum