தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இந்தியரின் வாழ்க்கை வரலாறு சினிமா ஆகிறது

Go down

இந்தியரின் வாழ்க்கை வரலாறு சினிமா ஆகிறது Empty இந்தியரின் வாழ்க்கை வரலாறு சினிமா ஆகிறது

Post by அ.இராமநாதன் Mon Mar 12, 2018 8:11 am

புதுடெல்லி: 
காதலியின் கரம் பிடிக்க சைக்கிளிலேயே காடு, மலை தாண்டி
 ஸ்வீடனுக்கு சென்று வெற்றி கண்ட இந்தியரின் வாழ்க்கை 
வரலாற்றை அவரது பிள்ளைகள் சினிமாவாக எடுக்க உள்ளனர். 

கடந்த 1970ம் ஆண்டு நடந்த சுவாரஸ்யமான காதல் சம்பவம் 
அது. ஒடிசாவின் சிறு கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் 
பிறந்த சிறுவன் ‘பிகே’ என்ற பிரத்யும்ன குமார். 

நண்பர்களுடன் விளையாடும்போது அவருக்கு ஓலைச்சுவடி 
ஒன்று கிடைத்தது. அதில், ‘நீ திருமணம் செய்து கொள்ளப்
போகும் பெண் இந்த கிராமத்தை சேர்ந்தவள் அல்ல, இந்த 
நாட்டை சேர்ந்தவளும் அல்ல. வனத்திற்கே சொந்தக்காரியான 
அவள் அழகானவள்’ என்ற வாக்கியங்கள் இடம்பெற்றிருந்தன. 

அதையே வேதவாக்காக ஏற்றுக் கொண்ட பிகே, பின்னாளில் 
ஓவியக்கலை பயில டெல்லி சென்றார். அங்கு பணமின்றி 
தனது இளமைக்காலத்தில் பெரிதும் கஷ்டப்பட்டார். 

ஆனாலும், ஓவியக் கலையில் நன்கு தேர்ந்தார். அதையே தனது 
தொழிலாகவும் கொண்டார். இந்திரா காந்தி, 
பக்ருதீன் அலி அகமது போன்றவர்களின் ஓவியங்களை
 தத்துரூபமாக வரைந்தார். 

ஒருவரின் முகத்தை அச்சு பிசகாமல் அழகாக வரைவதில்
 கைதேர்ந்தவர் என பெயரும் பெற்றார்.

 அப்போதுதான், காதல் தேவதையின் அருள் அவருக்கு கிடைத்தது. 
பிகே பற்றி கேள்விப்பட்ட ஸ்வீடனை சேர்ந்த 
சர்லோட்டி வான் ஸ்ட்வின், இந்தியா வந்து பிகேவை சந்தித்தார்.
 தனது முகத்தை ஓவியமாக வரைய கூறிய சர்லோட்டி, பிகேவிடம் 
காதலில் விழுந்தார். 

இருவரும் காந்தர்வ மணம் புரிந்தனர். பின்னர், சர்லோட்டி தனது 
சொந்த நாட்டுக்கு சென்று விட்டார். இருவரும் கடிதம் மூலம் 
ஓராண்டாக காதலை தொடர்ந்தனர். இதையடுத்து, காதலியை
 கரம்பிடிக்க முடிவு செய்தார் பிகே. 

ஆனால், ஸ்வீடன் செல்ல விமான டிக்கெட் எடுக்க அவரிடம் 
பணமில்லை. எப்படியும் காதலியை அடைந்தே தீர வேண்டும் 
என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் இருந்தது. 

பெற்றோரின் ஆசியுடன், பழைய சைக்கிள் ஒன்றை வாங்கினார். 
அதில் ஏறி தனது காதல் பயணத்தை தொடங்கினார். 
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி வழியாக 
ஐரோப்பாவை சென்றடைந்தார். வழியில் பல இடங்களில் காடு, 
மலைகளில் இரவு பகலாக சைக்கிள் ஓட்டினார். 
ரயில்களிலும் சைக்கிளுடன் சென்றார். 

இறுதியில் ஸ்வீடன் சென்று காதலியை கரம் பிடித்தார். 
அவரது பெற்றோரின் சம்மதத்துடன் முறைப்படி திருமணமும் 
செய்து கொண்டார். தற்போது ஸ்வீடனின் போரஸ் நகரில் கலை, 
கலாச்சார துறை ஆலோசகராக பணியாற்றி வருகிறார் பிகே. 

அவரது காதல் வாழ்க்கை பயணத்தை பெர் ஆண்டர்சன் 
புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து 
பிகேவின் காதல் காவியம் படமாகவும் தயாரிக்கப்பட உள்ளது. 

இதற்கான முயற்சியில் அவரது மகன் சித்தார்த், மகள் 
எமேலி மகாநந்தியா ஈடுபட்டுள்ளனர். படத்திற்கான கதை 
வசனம் தயாராகிக் கொண்டிருக்கிறது. 

படத்தை பிகேவின் பிள்ளைகளே தயாரித்து வெளியிட இருப்பதாக 
கூறி உள்ளனர். அவரது மகள் எமேலி கூறுகையில், 
‘‘எங்கள் பெற்றோரின் காதல் கதையை மற்றவர்கள் படம் எடுக்க
 
உரிமம் கொடுத்தால், உண்மை கதையை மாற்றிவிடுவார்கள். 
அதனால் நாங்களே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, 
எங்கள் பெற்றோரின் தெய்வீக காதலின் தன்மை மாறாமல்
 எடுக்க உள்ளோம்’’ என்றார். 

இதற்காக ஹாலிவுட் மற்றும் ஐரோப்பாவின் முன்னணி 
இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து 
வருகிறது.
-
---------------------------------------
தினத்தந்தி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum