தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



"அங்காடி நாய்"

2 posters

Go down

"அங்காடி நாய்" Empty "அங்காடி நாய்"

Post by வ.வனிதா Wed Jan 05, 2011 12:21 pm

கழுதைக்கு ‘புரோகிதம்’


காதலர் தினத்துக்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினர் கழுதைகளுக்கு திருமணம் செய்துள்ளார்கள். கழுதைகள் மணமக்களாக மாலையுடன் இருக்க, வேத புரோகிதப் பார்ப்பனர் மந்திரம் ஓதினால், கழுதைகள் அந்த புரோகிதனிடம் என்ன கேட்டிருக்கும்? ஒரு கற்பனை தான்.....

கழுதை : ஏய், நீ யாரப்பா? ஏன் இப்படி எல்லாம், எங்களுக்கே எரிச்சல் ஏற்படும்படி கத்தறே; நெருப்பை மூட்டி புகையை போடுறே; எதுக்காக எங்கள இங்கே இழுத்து வந்திருக்கீங்க?

புரோகிதன் : இன்று காதலர் தினம்; அதை நாங்கள் எதிர்க்கிறோம். அதுக்காக உங்களை பிடிச்சு வச்சு கல்யாணம் செய்யறோம்.

கழுதை : அப்படியா? இப்படி எங்களைக் கட்டாயப்படுத்தி, இழுத்து வந்து, கல்யாணப் பந்தலிலே கட்டிப் போட்டு வச்சிருக்கீங்களே. இதேபோலத்தான் ஒவ்வொருவரும் கழுதையாகவே இருக்கணும்னு, மக்களுக்கு சொல்ல வர்றீங்களா?

புரோகிதன் :அடே, கழுதையே, நீ கூட, இப்படி எல்லாம் பேசுவீயோ? திமிராகப் பேசாதே!

கழுதை : திமிராகப் பேசுறது நீயா? நாங்களா? உன்னுடைய திமிர் எங்களுக்கு தெரியாதா?
புரோகிதன் : என்ன திமிர், சொல்லேன் பார்ப்போம்.

கழுதை : ‘சூத்திரனை’ இழிசாதிக்காரன்னு அவன் வீட்டுக்குள்ளே நுழைஞ்சு, அவன் பணம், பருப்பு, அரிசி, எல்லாம் வாங்கிகிட்டு, அவனுக்கு புரியாத மொழியிலே பேசுறே! அதை காலம் காலமா கேட்டுகிட்டு, சொரணையற்று கிடக்கிறான், உங்க தமிழன். அந்தத் திமிரில் எங்களிடமும் பேசறே!

புரோகிதன் : அட திமிர்பிடித்த கழுதையே! உன்னிடம் பேசறதுக்கு நேரமில்லை. நான் மந்திரம் ஓதுவதைக் கேட்டுக்கோ. சீக்கிரம் சுபமுகூர்த்தத்தை முடிச்சுட்டு, அடுத்த தேவைக்கு கிளம்பனும். (புரோகிதன் மந்திரம் ஓதுகிறான்).


“ஸோமப்ரதமோ, விவிதே கந்தர்வோ விவித
உத்தர த்ருதியோ அக்நிஷ்டே பதி:
தூரியஸ்தே மநுஷய ஜா”

கழுதை : யோவ்! நிறுத்து; நிறுத்து. காது கிழியுது. இப்போ என்ன சொல்றே! இதுக்கு என்ன அர்த்தம்?

புரோகிதன் : ஏய் கழுதை, நானும் ஆயிரக் கணக்கில் முகூர்த்தங்கள் நடத்தி வச்சிருக்கேன். ஒரு பயல்கூட அர்த்தம் கேட்டதில்லை. உனக்கு அவ்வளவு துணிச்சல் வந்துடுச்சா?

கழுதை : நாங்க உங்க மக்களைப்போல, மானங் கெட்டவங்க இல்ல; மானமுள்ள கழுதைகள் நினைச்சுக்கோ. முதலில் அர்த்தத்தைச் சொல்லு.

புரோகிதன் : காசு கொடுக்கிறவன்கூட அர்த்தம் கேட்கிறதுல்ல. நீ எல்லாம் கேட்க வந்துட்டே! சொல்றேன் கேள். “பெண்ணே உன்னை சோமன் முதலில் அடைந்தான்; பிறகு கந்தர்வன் அடைந்தான்; மூன்றாவதாக அக்னி உன்னை ஏற்றுக் கொண்டான்; நான்காவதாக மனித ஜாதியில் பிறந்த இந்த கணவன் உன்னை அடைகிறான்” - இதுதான் நான் சொன்ன மந்திரத்தின் அர்த்தம்.

கழுதை : அடேய் புரோகிதா? அது யாருடா சோமன், கந்தர்வன், அக்னி? இப்படி கண்ட கண்ட ‘தேவன்’களோட எல்லாம் எங்களை ஏன் தொடர்புபடுத்துகிறாய்? நாங்கள் கழுதைகள்; கழுதைகளோடுதான் சேர்வோம்; கழுதைகளோடு தான் உறவு வச்சுக்குவோம்; உங்க வேதத்துல சொல்றதுபோல கண்டவர்களோடும் அலைய மாட்டோம். இந்த மந்திரத்தை எல்லாம் எங்களிம் விடாதே. எங்களுக்குன்னு ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லு.

புரோகிதன் :அதெல்லாம், உங்களுக்கு எல்லாம் எங்களிடம் மந்திரம் ஏதும் இல்லை; வாயை மூடு.

கழுதை : பிறகு ஏண்டா, எங்களை இழுத்து வந்து கல்யாணம் பண்ணிப் பாக்குறீங்க. ஆமாம், சூத்திரர்கள் வேதத்தை ஓதக்கூடாதுன்னு நீ தானே எழுதி வச்சிருக்கே. பிறகு, ஏன், சூத்திரர் வீட்டுக்குப் போய் வேதம் ஓதி, பணம் வாங்குறே? பணம் கிடைச்சா, எதை வேண்டுமானாலும் செய்வீயோ!

புரோகிதன் : மானங்கெட்ட மனிதர்கள் அழைக் கிறார்கள், போகிறோம். வியாபாரம் நடக்குது, உனக்கென்ன வலிக்குது?

கழுதை : அதையெல்லாம் மானங்கெட்டவங் களோடு வச்சுக்க. நாங்கள் மானமுள்ள கழுதைகள்; தெரியுமா?

புரோகிதன் : மூட்டை தூக்குற கழுதே நீ, நாலுகால் பிராணி நீயா மானத்தைப் பற்றி பேசுறே! உனக்கு என்ன யோக்கியதை இருக்கு?

கழுதை : எனக்குத்தானப்பா, யோக்கியதை இருக்கு. எப்படின்னு கேக்குறீயா? சொல்றோம் கேள்.

நாங்கள் உங்கள் சட்டத்தின் குடிமக்கள் அல்ல; உங்களுடைய அடிமைச் சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது.

நாங்கள் இந்துக்கள் அல்ல; அதனால் எங்களிடம் பிராமணாள் கழுதை கிடையாது. ‘சூத்திர’க் கழுதை கிடையாது. சாதிக் கழுதைகள் கிடையாது, பூணூல் போட்ட கழுதை கிடையாது நாமம், விபூதி போட்டால் உதைப்போம்!

எங்களுக்கு கோயில் கும்பாபிஷேகம் கிடையாது; நாள், நட்சத்திரம், ஜாதகம் கிடையாது. ஆவி, ஆத்மா கிடையாது. எங்களிடம் சங்கராச்சாரிகள் இல்லை. அதனால், வரதராஜப் பெருமாள்கள் சாக வேண்டி யதும் இல்ல; அரசியல் கட்சிகள் கிடையாது; ஏமாத்தற தலைவர்கள் கிடையாது; ஓட்டு கேட்க ஓட மாட்டோம்; ஓட்டுக்கு பணம் தர வேண்டிய அவசிய மில்ல. ஆயிரம் ரூபா நோட்டாக இருந்தாலும், அதை எங்க வாயிலே போட்டு மென்று தின்னுடுவோம்; குட்டிச்சுவர் எல்லாம் எங்கள் தெருதான். நாங்க சுதந்திரமானவங்க... உழைச்சுப் பிழைக்கிறவங்க. மூட்டை தூக்குறவங்க. புரிஞ்சுதா? நாங்க இந்தியனும் இல்ல; இந்துவும் இல்ல. உன்னுடைய சட்டத்தை எங்ககிட்ட கொண்டு ஏங்கடா வர்றீங்க....!

புரோகிதன் :தேச விரோதியே! தேசத் துரோகியே! நீ மட்டும் மனுஷனாயிருந்தா, தேசப் பாதுகாப்புச் சட்டத்துல புடிச்சு உள்ளே தள்ளியிருப்போம், தெரியுமா? கழுதையா பிறந்துட்டே, தப்பிச்சுட்டே!

கழுதை : நல்லவேளையா கழுதையாகவே பிறந்தோம்; பிரம்மாவின் எந்த உறுப்பிலேயிருந்தும் பிறக்கலே; எங்க அம்மா வயித்துல பிறந்தோம்; தப்பிச்சோம். எங்களை கழுதையாகவே வாழ விடுங்கப்பா! எங்களை பிடித்து கட்டாயப்படுத்தி, ஏன், கல்யாணம் நடத்தி, வேதமந்திரங்களை ஓதி, எங்களை அவமானப்படுத்துறீங்க?

நாங்க பெண் கழுதைகளை ஆண் கழுதைகள் அடக்கியாள்கிறோமோ?

சாதிப் பேரைச் சொல்லி வன்முறை செய்ய றோமா?

உங்கள் காதல் எதிர்ப்புக்கு நாங்கள் தான் கிடைச்சோமா?

டேய் புரோகிதா! நல்லா கேட்டுக்க; இன்னும் எத்தனை காலம், தான் இப்படி ஏமாற்றிப் பிழைப்பீங்க! போ! போய், உனது இந்து சட்டம், வேதம், புராணம் எல்லாவற்றையும் கொண்டுவந்து போடு; எங்களுக்கு தீராப் பசி! எல்லாவற்றையும் தின்று, மென்று விழுங்கி, மலமாக கழிக்கிறோம். அப்போதாவது புத்தி வருதா பார்க்கிறோம்!

கழுதை கட்டை உடைத்துக் கொண்டு, கத்திக் கொண்டே ஓடியது. பார்ப்பான் வேத மந்திரமும் அதோடு சேர்ந்து ஒலித்தது.






வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

"அங்காடி நாய்" Empty Re: "அங்காடி நாய்"

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 11, 2011 9:44 am

இப்படியும் யோசிக்கிறீங்களே... கற்பனைக்கு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

"அங்காடி நாய்" Empty Re: "அங்காடி நாய்"

Post by வ.வனிதா Tue Jan 11, 2011 12:33 pm

நான் யோசித்ததல்ல என் நண்பர் ஒருவர் யோசனை !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

"அங்காடி நாய்" Empty Re: "அங்காடி நாய்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum