தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இக்கட்டான சூழ்நிலையில் ரிஸ்க் எடுப்பது கைகொடுக்குமா? - நம்பிக்கைக் கதை

Go down

இக்கட்டான சூழ்நிலையில் ரிஸ்க் எடுப்பது கைகொடுக்குமா? - நம்பிக்கைக் கதை Empty இக்கட்டான சூழ்நிலையில் ரிஸ்க் எடுப்பது கைகொடுக்குமா? - நம்பிக்கைக் கதை

Post by அ.இராமநாதன் Tue Apr 17, 2018 9:53 am

[You must be registered and logged in to see this image.]

உலகப் புகழ்பெற்றவை ஆன் ஃப்ராங்க் (Anne Frank) டைரிக் 
குறிப்புகள். 

யூதப் பெண்ணான ஆன் ஃப்ராங்க், நாஜிப் படைகளின் கண்களில் 
படாமல் ஒளிந்து வாழ்ந்தபோது எழுதிய வாழ்க்கை அனுபவங்கள் 
ஒவ்வொன்றும் வலியும் வேதனையும் நிரம்பியவை. 

அதில் ஆன், ஓரிடத்தில் இப்படி எழுதியிருந்தார்... `பிறருக்குக் 
கொடுத்து உதவுவதால், ஒருவர்கூட ஏழையாவதில்லை.’ 
ஒரு நாளல்ல, இரண்டு நாள்களல்ல... கிட்டத்தட்ட இரண்டு 
ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையின்போது அவர் எழுதிய
 வரிகள் இவை. 

அப்படியானால், கொடுப்பதின், பிறருக்கு உதவுவதின் அருமையை 
அவர் உணர்ந்துதான் எழுதியிருப்பார்... அல்லவா!? எதையும் 
பெறுவதைவிட, கொடுப்பதில்தான் மகிழ்ச்சி அதிகம். சரி, ஒன்றை
 ஏன் பிறருக்குக் கொடுக்க வேண்டும்... அடுத்தவருக்காக என்று 
எதையும் ஏன் விட்டுச் செல்ல வேண்டும்? தங்கள் அனுபவங்களை,
 வரலாற்றை, புதிய கண்டுபிடிப்புகளை, எண்ணற்ற தொழில்
நுட்பத்தை நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்றதால்தான் 
நாம் இன்றைக்கு மகிழ்ச்சியான, வசதியான வாழ்க்கையை 
அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். 

இதை நம்மில் யாருமே உணர்வதில்லை. பிறருக்காக எதையும் 
விட்டுச் செல்வதிலிருக்கும் மகத்துவத்தை உணர்த்தும் கதை இது! 

குழாய்

ஒரு மனிதன் தனியாகப் பாலைவனத்தில் மாட்டிக்கொண்டான். 
அவன் கொண்டு வந்திருந்த தண்ணீரும் தீர்ந்து போயிருந்தது. 

தாகம் வாட்டியெடுத்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை 
உதவுவதற்கு ஆட்கள் யாரும் தென்படவில்லை.  தண்ணீர் 
கிடைப்பதற்கான அறிகுறிகூடத் தெரியவில்லை. அவன் நடந்து 
நடந்து சோர்ந்து போனான். `அவ்வளவுதான்... தாகத்தில் உயிரை
விட வேண்டியதுதான்’ என அவன் நினைத்துக்கொண்டிருந்த
 நேரத்தில் சற்று தூரத்தில் சின்னதாக ஒரு சோலை இருப்பது
 தெரிந்தது. `

அங்கே ஒருவேளை தண்ணீர் கிடைக்குமோ..? கிடைத்தாலும், 
கிடைக்கும்.’ அவன் நம்பிக்கையோடு, நடக்கக்கூட முடியாத
 அந்த நேரத்திலும், எட்டு வைத்து மெள்ள மெள்ள சோலையை 
நோக்கி நடந்தான். 

அது ஒன்றும் பெரிய பாலைவனச் சோலை அல்ல. வாடி, வதங்கி 
இரண்டு ஈச்சை மரங்கள் நின்றிருந்தன. இடிந்து, பாழடைந்த
 வீடு ஒன்றும் அருகிலிருந்தது. ஏதோ புயல் காற்றால் அந்த வீட்டின்
 ஜன்னல்கள், கதவுகளெல்லாம் பெயர்ந்துவிழுந்திருந்தன. 

அவன் நீர் கிடைக்காதா என்று அங்குமிங்கும் தேடினான். வீட்டின் 
பக்கவாட்டில் ஓர் அடிகுழாய் இருப்பது தெரிந்தது. அவன் 
தடுமாறித் தடுமாறி அதனருகே போனான். அடிகுழாயைத் தன் 
பலம் கொண்ட மட்டும் ஓங்கி ஓங்கி அடித்தான். எத்தனை முறை 
அடித்தும், குழாயிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வரவில்லை. 

அவன் சோர்ந்து போனான். அவனுக்குத் தாகத்திலும் களைப்பிலும்
 மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. அப்போதுதான் அதை 
கவனித்தான்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இக்கட்டான சூழ்நிலையில் ரிஸ்க் எடுப்பது கைகொடுக்குமா? - நம்பிக்கைக் கதை Empty Re: இக்கட்டான சூழ்நிலையில் ரிஸ்க் எடுப்பது கைகொடுக்குமா? - நம்பிக்கைக் கதை

Post by அ.இராமநாதன் Tue Apr 17, 2018 9:54 am

[You must be registered and logged in to see this image.]


குழாயிலிருந்து பத்தடி தூரத்தில் ஒரு சின்ன கூஜா இருந்தது. 
கார்க் போட்டு மூடிவைத்திருந்த கூஜா. அந்த மனிதன் அதனருகில் 
போனான். கூஜாவுக்கு அடியில் ஒரு தாளில், குறிப்பு ஒன்றும் 
எழுதிவைக்கப்பட்டிருந்தது. அவன் மூடியைத் திறந்து பார்த்தான். 

கூஜா நிறையத் தண்ணீர் இருந்தது. அவனுக்கு ஆனந்தத்தில் 
கண்கள் விரிந்தன. இப்போது அவன் அந்த பேப்பரை எடுத்துப் 
படித்தான். அதில் இப்படி எழுதியிருந்தது...

 `நண்பரே, முதலில் இந்த கூஜாவிலிருக்கும் தண்ணீரை அடி
குழாயில் ஊற்றி நிரப்புங்கள். பிறகு அடிகுழாயை அடியுங்கள்.
 தண்ணீர் வரும். 

பின்குறிப்பு: 
இங்கிருந்து போகும்போது மறக்காமல் கூஜாவில் நீர் நிரப்பி, 
மூடிவிட்டுச் செல்லவும்.’ 

அந்த மனிதன் இப்போது என்ன செய்யலாம் என யோசித்தான்
. `சரி... கூஜாவிலிருந்த தண்ணீர் முழுவதையும் குழாயில் 
ஊற்றிவிடுகிறோம். அதற்குப் பிறகு தண்ணீர் வராவிட்டால்
 என்ன செய்வது? தாகத்தில் உயிரைவிட வேண்டியதுதான்.
 ஆனால், இந்த கூஜா தண்ணீரைக் குழாயில் ஊற்றாமல் 
எடுத்துக் குடித்துவிட்டால், உயிர்பிழைத்துக்கொள்ளலாம்.’ 
இந்த இரண்டு வாய்ப்புகள்தான் அவனுக்கு இருந்தன. 

அவன் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போனான். 
ஆனால், இந்தக் குறிப்பை எழுதியவர், `தண்ணீர் வரும்’ என்று 
நம்பிக்கையோடு எழுதிவைத்திருக்கிறாரே..! 

அப்படியானால் அது உண்மையாகத்தானே இருக்கும்?
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இக்கட்டான சூழ்நிலையில் ரிஸ்க் எடுப்பது கைகொடுக்குமா? - நம்பிக்கைக் கதை Empty Re: இக்கட்டான சூழ்நிலையில் ரிஸ்க் எடுப்பது கைகொடுக்குமா? - நம்பிக்கைக் கதை

Post by அ.இராமநாதன் Tue Apr 17, 2018 9:55 am

[You must be registered and logged in to see this image.]


இயல்பாக அந்த மனிதன் நல்லவன். பிறருக்கு உதவும் சுபாவம்
கொண்டவன். கொடுப்பதில் மகிழ்பவன். `ஒருவேளை என்னைப்
போலவே யாராவது தாகத்தோடு இந்த இடத்துக்கு வந்தால் 
என்ன செய்வார்கள்?’ என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தான். 

கடைசியில் ரிஸ்கான முடிவை எடுத்தான். கூஜாவை எடுத்தான். 
அதிலிருந்த தண்ணீர் முழுவதையும் அடிகுழாயில் ஊற்றினான். 
அடிக்க ஆரம்பித்தான். இரண்டே அடி... தண்ணீர் பொங்கிக்
கொண்டு வந்தது. அவன் தேவையான அளவு தண்ணீர் குடித்து
தாகத்தைத் தீர்த்துக்கொண்டான். களைப்பாறினான்.

 அந்த கூஜா நிறைய தண்ணீர் பிடித்து, அதை மூடினான். பிறகு 
அந்தக் குறிப்பு எழுதப்பட்டிருந்த தாளை எடுத்தான். அதற்குக் 
கீழே தன் பேனாவை எடுத்து இப்படி எழுதினான்...

 `நான் சொல்வதை நம்புங்கள்... நிச்சயம் தண்ணீர் கிடைக்கும்.
ஏதாவது ஒன்றைப் பெறுவதற்கு எதையாவது கொடுத்துத்தான் 
ஆக வேண்டும்...’ 
-
-------------------------------------
பாலு சத்யா
நன்றி-விகடன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இக்கட்டான சூழ்நிலையில் ரிஸ்க் எடுப்பது கைகொடுக்குமா? - நம்பிக்கைக் கதை Empty Re: இக்கட்டான சூழ்நிலையில் ரிஸ்க் எடுப்பது கைகொடுக்குமா? - நம்பிக்கைக் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum