தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பாரதி கனவை நனவாக்குவோம் ( கவிஞர் இரா.இரவி
2 posters
Page 1 of 1
பாரதி கனவை நனவாக்குவோம் ( கவிஞர் இரா.இரவி
பாரதி கனவை நனவாக்குவோம் ( கவிஞர் இரா.இரவி
(eraeravik@gmail.com)
எட்டயபுரத்தில்
பிறந்து பாட்டுப் திறந்தால் எட்டாத உயரம் சென்றவன் மகாகவி பாரதி. அவன்
இன்று இருந்திருந்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே என மீண்டும் பாடி
இருப்பான். ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று அடையும் முன்னே
தீர்க்க தரிசனமாக பாடினோமே, இதுவா ஆனந்த சுதந்திரம்? என்று நொந்து
இருப்பான். வெள்ளையனிடமிருந்து பெறப்பட்ட இந்த நாடு அரசியல்
கொள்ளையர்களிடம் அல்லவா மாட்டிக் கொண்டது என வருந்தி இருப்பான்.
இன்றைக்கும்
ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி வறுமையில் வாடும் ஏழைகள் ஏராளம்.
குடியிருக்க வீடுகள் இன்றி நடைபாதையில் வாழும் மக்கள் ஏராளம். வறுமை
இன்னும் ஒழிக்கப்படவில்லை. பாரதி அன்று பாடினான். " தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லை எனில் ஐகத்தினை அழித்திடுவோம்" என்று. ஆனால் இன்று எத்தனையோ பேர்
உண்ண உணவின்றி வாடி வதங்குகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட
இன்னும் பூர்த்தி செய்யப்பட வில்லை. வறுமையை ஒழிக்க வேண்டிய
அரசியல்வாதிகளோ அவர்களது வறுமையை ஒழித்துக் கொண்டு கோடிகளை
கொள்ளையடித்துச் சேர்த்து விடுகின்றனர். உலகமயம், தாராளமயம், புதிய
பொருளாதாரம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களை பல வழிகளில் இந்தியாவை
சுரண்ட அனுமதித்து விட்டனர். உள்ளூர் தொழிற்சாலைகளை மூடி விட்டனர். பலர்
வேலையையும், வாழ்க்கையையும் இழந்து விட்டனர். விளைநிலங்களை எல்லாம்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு விவசாயி
வயிற்றில் அடித்து விட்டனர்.
அன்று காணி நிலம் வேண்டும் என்று
பாடினான் பாரதி. இன்று காணி நிலங்களே காணாமல் போனது. "சாதிகள் இல்லையடி
பாப்பா" எனப் பாடினான். இன்று சங்கம் இல்லாத சாதிகள் இல்லை என்ற அளவிற்கு
சாதிச் சங்கங்கள் பெருகி சாதி மோதல்களும், வன்முறை வெறியாட்டங்களும்
மண்ணில் நடந்து வருகின்றது. சாதிச்சங்கத் தலைவர்கள் எல்லாம் சகல வசதியுடன்
டாடா சுமோவில் வலம் வந்து கொண்டு அப்பாவி மக்களை மோதவிட்டு வேடிக்கை
பார்த்து அரசியல் நடத்துகின்றனர்.
ஊழலை ஒழிக்க என்ன வழி என்று
உரக்கச் சிந்திப்போம். ஊழழை ஒழிப்போம். வறுமையை ஒழிப்போம். நாட்டின் வளம்
காப்போம். கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டி அடிப்போம்.
கொள்ளை போகும் நமது வளங்களையும், செல்வங்களையும் காப்போம். நதிகளை
தேசியமயமாக்குவோம். சண்டைகளின்றி தண்ணீரைப் பகிர்ந்து கொள்வோம்.
விவசாயத்தையும் விவசாயியையும் பேணிக் காப்போம்.
சுனாமி பேரலையின்
காரணமாக பல உயிர்களையும் உடமைகளையும் இழந்தோம். இதற்கு என்ன காரணம்?
நிலத்தடி நீரை அளவிற்கு அதிகமாக உறிஞ்சவது. பாறைகளுக்கு வெடி வைத்து
தகர்ப்பது. பாலீத்தீன் பைகளை அதிகம் பயன்படுத்துவது. தொழிற்சாலை கழிவுகளை
ஆற்றில் கலப்பது. மரங்களை வெட்டி வீழ்த்துவது, இப்படி அடுக்கடுக்காக
இயற்கையை அழிக்கும் பணியிணை மனிதன் செய்ததன் காரணமாக இயற்கைச் சீற்றம்
வந்தது. சுனாமி வந்தது. நிலநடுக்கம் வந்தது.
மகாகவி பாரதி ஓர்
இயற்கை நேசன். இயற்கையை ரசித்துப் பாடியவன். அவருக்காக விழா எடுக்கும்
இந்த வேளையில் இயற்கையை நாமும் ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கையை
அழிப்பது, சிதைப்பது முதலான இது போன்ற செயல்களை அறவே நிறுத்தி விட
வேண்டும். வருங்கால சந்ததிகள் வளமாக வாழ தொடர்ந்து மழை கிடைக்க முடிந்த
வரை இயற்கையை பேணிக் காப்போம். புதிய மரங்கள் நடுவோம், மழை பெறுவோம்!
மனிதரில்
ஏற்றத் தாழ்வு இல்லை, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சொல்வது பாவம் என்று
பாடியவன் பாரதி, எனவே பாரதியின் வரிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க
வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். சாதி, மத மோதல்களுக்கு முடிவு
கட்டுவோம். சக மனிதனை மனிதனாக மதிப்போம். சமதர்ம, சமத்துவ சமுதாயம்
சமைப்போம். உதிரத்தின் நிறம் சிறப்பு என்பதை மோதித் தான் உணர வேண்டுமோ?
பகுத்தறிவை பயன்படுத்தாமல் சாதி, மத மோதல்களின் காரணமாக விலை மதிப்பற்ற
மனித உயிர்கள் பலியாவதை தடுப்போம். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும்
இழந்த உயிரை திரும்பத்தர இயலுமா? முடியாது. மனித உயிரின் மகத்துவத்தை
உணர்ந்து எந்த நிலையிலும் வன்முறையின்றி பேச்சுவார்த்தையின் மூலமே சமரசம்
காண்போம். காட்டுமிராண்டித்தனமான மோதல்களையும், தாக்குதல்களையும்
வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டு வருவோம்.
கவிஞன் வாக்கு
பொய்க்காது என்று பொன்மொழி உண்டு. அந்த பொன்மொழி பொய்க்காமல் காக்க
வேண்டியது நமது கடமை. மகாகவி பாரதியின் கவிதை வரிகள் பொய்க்கவில்லை மெய்
தான் என உலகிற்கு உணர்த்திட நாம் அனைவரும் ஓரணியில் சேருவோம். தேமதுரத்
தமிழோசை உலகெல்லாம் பரவச் செய்வோம். தமிழின் பெருமையை உலகிற்கு பறை
சாற்றிடுவோம். தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு மனித நேயம் காப்போம்.
சாதி,மத வெறி மாய்ப்போம்.
சோறு பொங்க செல்லம்மா வைத்திருந்த
அரிசியை, சிட்டுக்குருவிகளுக்குப் போட்டு பசியாற வைத்து மனம் மகிழ்ந்தவன்
பாரதி. இன்று தொழிற்சாலை பெருக்கத்தால் சுற்றுச்சூழல் மாசுபட்டதன் காரணமாக
சிட்டுக்குருவி இனமே அழிந்து வருகின்றது. நவீன யுகம் விஞ்ஞான யுகம்,
இயந்திர மயம் என்ற பெயரில் பெருகி வரும் தொழிற்சாலைகள் கக்கம் நச்சுப்
புகை மற்றும் வெளியேறும் கழிவுகளால் வரும் தீங்க இவற்றால் சுற்றுச்சூழல்
பெருமளவில் மாசடைந்து ஓசோனில் ஓட்டை விழுந்தது. அந்த ஓட்டை பெரிதாக
காரணமாக அமைகின்றது. அதிக வெப்பத்தின் காரணமாக மழை பொய்த்தது. மழை
பொய்த்ததின் காரணமாக விவசாயம் பொய்த்தது. அண்டை மாநிலங்களுடன் தண்ணீர்
பகிர்வில் சண்டை, தண்ணீரின் காரணமாக ஒரு உலகப் போர் வருமென்று ஆய்வுகள்
சொல்கின்றன.
இன்றைக்கு பாலின் விலையை விட தண்ணீரின் விலை அதிகம்
என்ற அவல நிலை பன்னாட்டு நிறுவனங்கள் ஆற்று நீரை கொள்ளையடித்து பாட்டிலில்
நிரப்பி விற்று கோடிகளை கொள்ளையடித்து செல்கின்றனர். குடிமக்களுக்கு
சுத்தமான நீரை வழங்க வேண்டிய கடமை அரசிற்கு உண்டு. ஆனால் அவர்கள்
செய்வதில்லை. அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்வதற்கும் பிற கட்சியினரை வசை
பாடுவதற்குமே சேரம் போதவில்லை பிறகு எப்படி மக்கள் குறைகளை தீர்ப்பார்கள்.
குளிர்பானம் என்ற பெயரில் பூச்சி மருந்துகளைக் கலந்து மக்களுக்கு புற்று
நோயை பரப்பி வரும் பணியினையும் பன்னாட்டு நிறுவனங்கள் எந்த வித
தடையுமின்றி அமோகமாக செய்து வருகிறார்கள். இவர்கள் தரும் பணத்திற்கு
மயங்கி நடிகர், நடிகைகள், ஊடகங்கள் மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரம்
செய்து மக்களை முட்டளாக்கி வருகின்றனர்.
தேச ஒற்றுமையை
வலியுறுத்தினான் பாரதி. ஆனால் இன்று அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு
தண்ணீர் தரவே மறுத்து வருகின்றனர். உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கினாலும்
துச்சமாக மதித்து தான் தோன்றித்தனமாக நடந்து வருகின்றனர். இமயம் முதல்
குமரி வரை இந்தியா என்பது குழந்தைகளின் பள்ளிப் பாடப்புத்தகத்தில் தான்
உள்ளது. குழந்தைகளின் உள்ளத்தில் பதியுமளவிற்கு அண்டை மாநிலங்கள் நடந்து
கொள்வதில்லை. இரண்டு நாடுகள் கூட சமரசமாக தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் போது
இரண்டு மாநிலங்களிடையே தண்ணீர் பகிர்வில் தீராத சண்டை, ஏன் இந்த இழிநிலை?
எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் பொதுநலம் மறந்து சுயநலம்
பிடித்து ஆடுவதேன். மனிதநேயம் என்பது மனித மனங்கள் மறந்து போனது ஏன்?
பாரதியின் கவிதை வரிகளுக்கு செயல்வடிவம் தர வேண்டாமா? சிந்திக்க வேண்டும்.
என்ன
வளம் இல்லை? நம் நாட்டில் வளங்களும் இருந்தும் இன்னும் நம்மால் ஏன்?
வறுமையை ஒழிக்க முடியவில்லை. சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது.
மகாகவி பாரதியின் 125 வது ஆண்டு விழா நடக்க இருக்கும் இந்த காலத்திலாவது
பாரதி கண்ட கனவை நனவாக்க நாம் முயற்சி செய்ய வேண்டாமா? சிந்திப்போம்
செயல்படுவோம்
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: பாரதி கனவை நனவாக்குவோம் ( கவிஞர் இரா.இரவி
அருமையான பகிர்வு, மிக்க நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பாரதி கனவை நனவாக்குவோம்- ( கவிஞர் இரா.இரவி
» பார் போற்றும் பாரதி ! தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» பாரதி இன்றிருந்தால்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
» நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி! கவிஞர் இரா. இரவி
» பார் போற்றும் பாரதி ! தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» பாரதி இன்றிருந்தால்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
» நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி! கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum