தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் துணிகரம் 8 கோடி நகை கொள்ளை

Go down

திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் துணிகரம் 8 கோடி நகை கொள்ளை Empty திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் துணிகரம் 8 கோடி நகை கொள்ளை

Post by அ.இராமநாதன் Tue May 29, 2018 7:54 am

சென்னை:
 திருவள்ளூரில் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பொதுமக்கள் 
அடமானம் வைத்திருந்த நகைகள் இருந்த பீரோவை திறந்து, 
அதில் இருந்த 636 பேரின் 8 கோடி மதிப்பிலான 32 கிலோ 
தங்க, வைர நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் 
சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் பாங்க் ஆப் இந்தியா வங்கி 
உள்ளது. இங்கு, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை
சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கணக்கு வைத்துள்ளனர். 

பலர் தங்களது தங்கம், வைர நகைகளை அடமானம் வைத்து
 கடன் பெற்றுள்ளனர். அந்த வகையில் 636 பேர், ₹8 கோடி
 மதிப்பிலான தங்களது நகைகளை இந்த வங்கியில் அடமானம் 
வைத்து கடன் பெற்றுள்ளனர். 

இந்த நகைகள் கடன் வாங்கியவர்களின் பெயரில் தனித்
தனியாக ‘பேக்’ செய்யப்பட்டு வங்கியில் உள்ள லாக்கரில் 
பத்திரமாக வைக்க வேண்டும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக
 லாக்கரில் வைக்காமல், பீரோவில் வைத்து பூட்டிவிட்டு
 ஊழியர்கள் சென்றுள்ளனர். 

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேலை 
முடிந்ததும், வழக்கம்போல வங்கியை பூட்டிவிட்டு மேலாளர் 
சேகர், துணை மேலாளர் மற்றும் ஊழியர்கள் சென்றனர். 

வார விடுமுறை நாட்கள் என்பதால் சனி மற்றும் ஞாயிற்றுக்
கிழமைகளில் ஊழியர்கள் வங்கிக்கு வரவில்லை. இந்நிலையில் 
நேற்று காலை வழக்கம்போல வங்கி ஊழியர்கள் பணிக்கு 
வந்தனர். 

வங்கியின் அறை கதவை திறந்து உள்ளே சென்றபோது நகைகள்
 வைத்திருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 
636 பேரின் 32 கிலோ தங்க, வைர நகைகள் 
கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
இதன் மொத்த மதிப்பு ரூ.8 கோடியாகும்.

உடனே வங்கி மேலாளர் சேகருக்கு ஊழியர்கள் தகவல் 
தெரிவித்தனர். அவர் வங்கிக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். 
மேலும், வங்கியின் மண்டல மேலாளர் ஜெயபிரகாஷ் சம்பவ 
இடத்துக்கு வந்தார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு 
தகவல் தெரிவிக்கப்பட்டது.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் துணிகரம் 8 கோடி நகை கொள்ளை Empty Re: திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் துணிகரம் 8 கோடி நகை கொள்ளை

Post by அ.இராமநாதன் Tue May 29, 2018 7:54 am

சம்பவ இடத்துக்கு காஞ்சிபுரம் சரக டிஐஜி தேன்மொழி, 
எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் வங்கிக்கு 
வந்து கொள்ளை நடந்த இடங்களை பார்வையிட்டனர். மோப்ப 
நாய் ‘ரேம்போ’ வரவழைக்கப்பட்டது. 

அது வங்கியில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றுவிட்டது. 
மேலும், கை ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை
 சேகரித்தனர். இது குறித்து போலீசார் விசாரணையில் தெரியவந்த
 தகவல்கள்: அடமானம் வைக்கப்படும் நகைகள் வழக்கமாக லாக்கரில்
 வைத்து பாதுகாக்கப்படும். 

ஆனால் கொள்ளை நடந்த அன்று வழக்கத்துக்கு மாறாக பீரோவில்
 நகைகளை வைத்துள்ளனர். இந்நிலையில் பூட்டை உடைக்காமல் 
பீரோவை திறந்து, அதில் இருந்த ரூ.8 கோடி மதிப்பிலான தங்க, 
வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. வங்கி லாக்கர் 
திறக்கப்பட்ட நிலையில் இருந்தது. அதில் இருந்த ரூ.26 லட்சம் 
பணத்தை கொள்ளையர்கள் அப்படியே விட்டுவிட்டு 
சென்றுள்ளனர். 

அவர்கள் நகைகளை மட்டும் கொள்ளைடியத்தது ஏன் என்று
 விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர். மக்கள் நடமாட்டம் 
அதிகம் உள்ள பகுதியில் வங்கியில் கொள்ளை நடந்த சம்பவம் 
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளை நடந்தது எப்படி?: வங்கி கொள்ளையில் அதன்
 ஊழியர்களுக்கு கண்டிப்பாக தொடர்பு இருக்கும் என போலீசார் 
கருதுகின்றனர். காரணம் வங்கியின் ஷட்டர்கள், மற்றும் பீரோ
 லாக்கர்களில் ஒரு இடத்தில் கூட சேதமோ, கீறல்களோ இல்லை 
என்பது போலீசாரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

 வங்கி ஊழியர்களே கள்ளச்சாவி தயாரித்து 2 நாள் விடுமுறையில் 
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் 
சந்தேகிக்கின்றனர். இதனால் காலை முதல் மாலை 4 மணி வரை 
வங்கியின் நுழைவு வாயிலில் போலீசாரை நிறுத்தி, யாரையும் 
உள்ளே அனுமதிக்கவில்லை. 

வங்கியின் சாவியை கையாள்பவர்களான மேலாளர், துணை 
மேலாளர், மற்றும் சாவி மேற்பார்வையாளர் ஆகியோரிடம் டிஐஜி
மற்றும் எஸ்பி ஆகியோர் தனித்தனியாக அழைத்துச் சென்று துருவி, 
துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் துணிகரம் 8 கோடி நகை கொள்ளை Empty Re: திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் துணிகரம் 8 கோடி நகை கொள்ளை

Post by அ.இராமநாதன் Tue May 29, 2018 7:54 am

மேலும், வங்கியில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராவில்
 பதிவாகியுள்ள காட்சிகளை வைத்தும் போலீசார் வங்கி
 ஊழியர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குவிந்த மக்கள்: எப்போதும் பரபரப்பாக இருக்கும் திருவள்ளூர் - 
பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 
அடமானம் வைத்த வாடிக்கையாளர்களின் 32 கிலோ நகைகள் 
கொள்ளைபோன சம்பவம் அப்பகுதி மக்களிடையே வேகமாக 
பரவியது. 

இதையடுத்து அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் 
ஏராளமானோர் வங்கி முன் குவிந்தனர். அவர்களை உள்ளே 
செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து 
வங்கியில் இருந்து வெளியே வந்த எஸ்.பி., சிபிசக்கரவர்த்தியை
 முற்றுகையிட்டனர். 

விரைவில், அடமானம் வைத்த நகைகள் மீட்கப்படும் என கூறி 
அவர்களை சமாதானப்படுத்தினார். இந்தக் கொள்ளை குறித்து, 
வங்கியின் மண்டல மேலாளர் ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின்
பேரில், திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து
 வருகின்றனர். 

கடந்த வாரம் ராஜாஜிபுரம் பத்மாவதி நகரில் ஆடிட்டர் 
ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியின் கைகளை கட்டிப்
போட்டு, 200 சவரன் நகைகள் மற்றும் புது காரை மர்ம நபர்கள் 
கொள்ளையடித்து சென்றனர். 

இந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில்தான் இந்த 
கொள்ளை சம்பவம் தற்போது அரங்கேறி உள்ளது. இதனால் 
பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

70 ஆயிரம் மக்களை பாதுகாக்க 8 போலீஸ்...!

திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில், ஒரு இன்ஸ்பெக்டர்
, 2 எஸ்.ஐ.,க்கள், 13 எஸ்.எஸ்.ஐ.,க்கள், 11 ஏட்டுகள், 13 முதல்நிலை 
மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் என மொத்தம் 40 போலீசார் 
பணியில் உள்ளனர். 

இதில், எழுத்தர், ஸ்டேஷன் பாதுகாப்புக்கு இரண்டு போலீசார், 
இன்ஸ்பெக்டர் டிரைவர் உட்பட 8 பேர் மட்டுமே போலீஸ் 
நிலையத்தில் பணியில் உள்ளனர்.

மற்ற 32 போலீசார், கோர்ட் பணி, கலெக்டர் அலுவலக பணி, 
பெரியகுப்பம் மற்றும் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையம்,
 அரசு கருவூலம், மாற்று போலீஸ் நிலைய பணி என அனுப்பி 
வைக்கப்பட்டு உள்ளனர். 

வெறும் 8 பேரை வைத்து மட்டுமே ரோந்து, இரவு பீட் செல்லுதல், 
விழா பாதுகாப்பு, புலன்விசாரணை செய்தல், குற்றவாளிகளை 
தேடுதல், கைது வாரன்ட் உத்தரவுகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட 
பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
-------------------------------
தினத்தந்தி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் துணிகரம் 8 கோடி நகை கொள்ளை Empty Re: திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் துணிகரம் 8 கோடி நகை கொள்ளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
» சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி
» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
» அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum