தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மீன் வளர்ப்பு - கேள்விப்படாத செய்திகள் -
Page 1 of 1
மீன் வளர்ப்பு - கேள்விப்படாத செய்திகள் -
கிறிஸ்துவ நண்பர் ஒருவர், தன் மகள் பிறந்த நாளுக்கு எங்களை
அழைத்திருந்தார். அவர் வீட்டிலேயே பிறந்த நாள் விழா கேக்
எல்லாம் வெட்டி கொண்டாடிய பின், அவரது வீட்டைச் சுற்றிப்
பார்த்தேன்.
உதவாது என நாம் துாக்கி எறியும் பவுடர் டப்பா முதல், பழைய
கார் பேட்டரி கூடு வரை பயன்படுத்தி, செடி வளர்த்தோ,
பூ கொடிகள் வளர்க்கப்பட்டோ இருந்தன.
விசாரித்தேன்... தன், 88 வயது தந்தையை அறிமுகம் செய்து,
'எல்லாம் இவர் தான்...' என்றார். இளைஞர் போல் சுறுசுறுப்பாகக்
காணப்பட்டார் அவர்.
மிக சுவாரஸ்யமாகப் பேசியவர், தான் வளர்க்கும் மீன்களைப்
பற்றி கூறினார்... அது, கேள்விப்படாத செய்தியாக இருந்தது.
இதோ:
வீட்டில் ராமு, சீனு, காமு என்று குழந்தைகளை வளர்ப்பது
சுலபம்...
ஏஞ்சல், சுமித்ரா, பார்ப், போனஸ் அயர்ஸ், ஹாக்கி ஸ்டிக்,
பெள்சில் ஆகிய இந்த மீன்களை மிகுந்த கவனமாக வளர்க்க
வேண்டும். இவைகளும் குழந்தைகள் தான்;
ஆனால், தொட்டியில் வளரும் குழந்தைகள்!
வளர்ப்பு மீன் விற்கும் கடையில் நல்ல கண்ணாடித் தொட்டி
தயார் செய்ய வேண்டும்; வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர்
மாற்றியாக வேண்டும்; குளோரின் கலந்த குழாய் தண்ணீரை
ஒரு நாள் கழித்துத் தான் கண்ணாடித் தொட்டியில் ஊற்ற
வேண்டும்.
மீன் குஞ்சுகளுக்கு ஆகாரம், உயிருள்ள புழு, பூச்சிகளே...
வளர்ப்பு மீன் விற்பனைக் கடைகளில், இப்போது மீன்களுக்கு
உரிய பலவித உணவுகளை விற்கின்றனர்.
வெறும் நீரில் மட்டும் மீன்கள் உயிர் வாழ்வதாக நினைக்கக்
கூடாது; தண்ணீரில் உள்ள பிராண வாயு மீனுக்குப் போதாது.
அதற்காகத் தொட்டித் தண்ணீரில் அமேஸான்ஸவர்ட், கபம்பா,
மின்ட், வாலிஸ் நெரியா, ஹைட்ரல்லா முதலிய செடிகளை
தேடிப் பிடித்து வைக்க வேண்டும்.
அலைந்து சுற்றினால் செடிகள் கிடைப்பது கஷ்டமில்லை;
குறைந்த விலைக்கே கிடைக்கிறது.
நீங்கள் இல்லாத நேரமாகப் பார்த்து, வீட்டிலுள்ள குழந்தைகள்,
தொட்டியிலுள்ள மீன்களைப் பிடித்து விடக் கூடும். கண்ணாடித்
தொட்டியை அவர்கள் சுலபமாக உடைத்து விடுவர்.
தொட்டியை சரியாக மூடாமல் வைத்திருந்தால் பல்லியோ,
எலியோ இதுதான் சமயமென, 'லபக்' என்று உங்கள் அருமை
மீன் குஞ்சுகளை விழுங்கி விடலாம்.
வீடுகளைத் துப்புரவு செய்யும் போது, தண்ணீரோடு மீன்
தொட்டிகளைத் துாக்கலாகாது. தினம் காலையில் எழுந்ததும்
வேறு என்ன காரியம் செய்தாலும் செய்யாவிட்டாலும், எல்லா
மீன்களும் உயிரோடு இருக்கின்றனவா என்று பார்த்துக்
கொள்ள வேண்டும்.
காலை வேளையில் தொட்டியின் அடிமட்டத்தில் அவை
மேய்ந்து கொண்டிருக்கும்; இரவில் தான் அவை மேல் பக்கம்
வரும்.
மீன், தன் உமிழ் நீரால் கட்டும் கொப்புளம் உடையாது.
அதில் தான், பெண் மீன்கள் முட்டையிட, ஆண் மீன்கள்
அவற்றைப் பாதுகாக்கும். பெண் இனத்திற்கு முட்டை
இடுவதோடு வேலை முடிந்து விட்டது.
மற்ற சமயங்களில் சும்மா சும்மா, சாப்பிடும். ஆண் மீன்கள்,
அப்போது அவைகளை அடித்து துரத்தும்; பார்க்க
வேடிக்கையாக இருக்கும்.
சூரிய வெளிச்சம் படும்படியாகத் தொட்டியை தகுந்த இடத்தில்
வைக்க வேண்டும். இரவில் மின் விளக்குகளும் பொருத்தி
அலங்காரம் குறையாமல் காக்க வேண்டும். சரியாகப் பாது
காத்தால், மூன்று ஆண்டு வரை தொடர்ந்து மீன்களைத்
தொட்டியில் வளர்க்கலாம்.
இவ்வளவு முன்னேற்பாடுகளோடு நீங்கள் அவற்றைப்
பராமரித்து வந்த போதிலும், திடீரென்று என்ன காரணம் என்று
தெரியாமலேயே உங்கள் அருமை கோல்டு பிஷ் அல்லது நியான்
டெட்ரா (இருட்டிலே கூட பளிச்சென்று வெளிச்சம் காட்டி
உங்களை மயக்க கூடியவை)
தண்ணீர் தொட்டி வாழ்வைத் துச்சமாகக் கருதி, உயிர் துறந்து
நீர் மேல் மிதக்கலாம். நிச்சயம் நீங்கள் மனம் உடைந்து போவீர்கள்;
வளர்த்த பாசம் சும்மாவா?
என்ன... மீன் வளர்க்கும் ஆர்வம் உங்களுக்கும் வந்து விட்டதா?
-
---------------------------------------
அந்துமணி பா.கே.ப.,
நன்றி-வாரமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» கோழி வளர்ப்பு முறைகள் 2
» கோழி வளர்ப்பு முறைகள் 3
» கோழி வளர்ப்பு முறைகள் 4
» குழந்தை வளர்ப்பு -- வெப்சைட்
» கோழி வளர்ப்பு முறைகள் 1
» கோழி வளர்ப்பு முறைகள் 3
» கோழி வளர்ப்பு முறைகள் 4
» குழந்தை வளர்ப்பு -- வெப்சைட்
» கோழி வளர்ப்பு முறைகள் 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum