தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



துப்பாக்கியால் சிதைத்திட முடியாது! தொகுப்பாசிரியர் : மஞ்சக்கல் உபேந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Go down

துப்பாக்கியால் சிதைத்திட முடியாது!    தொகுப்பாசிரியர் : மஞ்சக்கல் உபேந்திரன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Empty துப்பாக்கியால் சிதைத்திட முடியாது! தொகுப்பாசிரியர் : மஞ்சக்கல் உபேந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Mon Oct 22, 2018 11:17 pm

துப்பாக்கியால் சிதைத்திட முடியாது!


தொகுப்பாசிரியர் : மஞ்சக்கல் உபேந்திரன் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  

புதிய உறவு பதிப்பகம், 5, மூன்றாவது குறுக்குத் தெரு, எழில் நகர், அரும்பாந்தபுரம் அஞ்சல், வில்லியனூர், புதுச்சேரி-605 110. 
பேச : 94422 51512 

******
புதிய உறவு மாத இதழின் ஆசிரியர் மஞ்சக்கல் உபேந்திரன் அவர்கள் ‘துப்பாக்கியால் சிதைத்திட முடியாது’ என்ற தலைப்பில் கவிஞர்களிடம் கவிதைகள் வாங்கி தொகுத்து நூலாக்கி உள்ளார்.  

04-03-2018 அன்று கவியரங்கம் நடத்திக் கவிதைகளை வாசித்து உள்ளார்.  இந்த நூலில் 96 கவிஞர்களின் முத்தான கவிதைகள் முத்தாய்ப்பாக உள்ளன.  பாராட்டுக்கள்.

தொகுப்பாசிரியர் என்னுரையில் இருந்து சிறு துளிகள் இதோ!

‘அந்த காவி பயங்கரவாதம் முற்போக்காளர்களை படுகொலை செய்வது மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தை கருவறுத்து, சர்வாதிகாரத்தை அரியணை ஏற்றும் வேலையிலும் இறங்கியிருக்கிறது.  பாசிச இந்துத்துவாவிற்கு எதிரான குரல்கள் முன்பைவிட மேலும் வலுவாக ஒலிக்கும் என்பதை இந்த கவிதைத் தொகுப்பு பறைசாற்றுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் அவர்களை கூலிப்படையை ஏவி கொலை செய்து அவரது குரலை முடக்க நினைத்தனர். ஆனால் இன்று 96 கவிஞர்களின் குரலாக ஒலித்துள்ளது.  புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் என்பது முற்றிலும் உண்மை. 

 பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் அவர்களின் உரிமைக்குரல் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரை படுகொலை செய்ததின் மூலம் தங்களுக்க்கு படுகுழி வெட்டி விட்டனர்.

 இக்கொலையின் எதிரொலியாகத் தான் கர்னாடகாவில் தோல்வி முகம் கண்டனர்.  இப்படுகொலையின் எதிர்வினை வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலும் எதிரொலித்து படுதோல்வி கிட்டும் என்பதையே இந்த நூல் பறைசாற்றி உள்ளது.  67ஆம் பக்கம் என்னுடைய கவிதையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

பாவலர் ச. சண்முகசுந்தரம் அவர்களின் வாழ்த்துரை நனி நன்று.  பொறியாளர் இராதே அவர்களின் வாழ்த்துரையும் சிறப்பு.  நூலிலிருந்து சில வைர வரிகள் மட்டும்.

தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் !
புன்மைக்கு நியாயங்கள் இந்த நாடு
      புரட்சிமிகு எழுத்தின் முன் புல்லே! புல்லே!



ஒருவரின் குரல்வளையை நெறித்து ஓராயிரம் குரல்களை ஒலிக்க வைத்தனர்.  இன்னும் திருந்தவில்லை என்பதையே காட்டுகின்றது.  பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தால் குட்டுப்பெற்று அவமானப்பட்டனர்.

பாவலர் தேவகி ஆனந்த் !

ஏந்தி நிற்கும் இந்துத்வா தூள் தூளாய்ப் போகும்      இந்தியாவில் கௌரி லங்கேஷ் கொள்கை முரசொலிக்கும்.

  எல்லோருடைய கவிதைகளும் எரிமலை போல உணர்ச்சிப் பிழம்பாக இருந்தாலும் நூல் மதிப்புரையில் எல்லாக் கவிதைகளையும் மேற்கோள் காட்டிட இயலாது என்பதால் பதச்சோறாக சிலவற்றை மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன். மேற்கோள் காட்டப்படாத கவிஞர்கள் வருந்த வேண்டாம். கலைஞர் சொல்வது போல சொல்கிறேன், மற்ற கவிஞர்களுக்கு இதயத்தில் இடமளித்து உள்ளேன்.

கவிஞர் சி. நாகலிங்கம் !
முற்போக்குவாதிகளை முடக்கி விட்டால் 
      முன்னேற்றம் கண்டிடுமோ இந்த நாடு?



முன்னேற்றப் பாதையில் செல்வதை விடுத்து முற்போக்-காளர்களை முதல்குரல் கொடுப்பவர்கள் படுகொலை செய்திடும் கொடூரச் செயலுக்கு முடிவு கட்ட வேண்டும்.

கவிஞர் எ. விஜயலட்சுமி
தண்டனைக் கேயிவர் அஞ்சார் – உடல்
      சாய்ந்திட்ட போதிலும் வாழ்வது மெய்யே!



உண்மை தான். கௌரி லங்கேஷ் அவர்கள் உடலால் உலகை விட்டு மறைந்தாலும் முற்போக்காளர்களின் உள்ளங்களில் வாழ்கிறார்.

மாமணிக் கவிஞர் கோவி மாசிலாமணி !
அப்பாவி மக்களுக்கு அடிவயிற்றில் குண்டு
      அகிம்சையினை  போதித்தார் அவர்களுக்கும் குண்டு!



வன்முறை விரும்பாத அகிம்சையாளர்கள் அகிம்சை போதித்தால் அவர்களுக்கு துப்பாக்கி குண்டு பரிசளிக்கும் கொடூரம் ஒழிய வேண்டும்.

கவித்தென்றல் ந.வே. கணேசன்!
நீதிக்கே அடங்காதோர் நெறிய டுத்த
      நீள் அமைதிப் போரினாலே பாடம் சொல்வோம்!



மக்கள் துன்பத்தில் வாடுகின்றனர்.  தினந்தோரும் பெட்ரோல் விலை ஏறுகின்றது. மதவெறிக் கொலைகள் அரங்கேற்றமாகிறது.  வேடிக்கை பார்க்கும் மக்கள் வரும் தேர்தலில் வைப்பார்கள் வேட்டு அநீதிக்கு.

மரபும் புதுக்கவிதையும் கலந்து உள்ளன.  நெஞ்சு பொறுக்க-வில்லை என்ற கூற்றாக கவிஞர்கள் பலரும் கொதித்து எழுந்து சங்கநாதம் முழங்கி உள்ளனர்.

பாவலர் கா.வ. ஆதிமுலம்!
எதனை சாதிக்க எழுதுகோல் பிடித்தோம்
      இங்கே கொடுமைகளை கண்டும் என்
      கண்களை புதைத்தோம்!



எது நடந்தால் எனக்கென்ன என்று கேளிக்கைகளை எழுதுவதை வாடிக்கையாகக் கொண்ட தன்னலமிக்க எழுத்தாளர்களின் தலையில் கொட்டு வைத்துள்ள வைர வரிகள்.

கவிஞர் வீ. உதயக்குமாரன்
மனிதனின் வயிற்றுப்பசியை போக்கும் ஏர்முனை
      மனிதனின் அறிவுப்பசியை தீர்க்கும் எழுதுகோல் முனை!



துப்பாக்கியை விட வலிமையானது எழுதுகோல். 96 கவிஞர்களும் துணிவுடன் அநீதியை எதிர்த்து படுகொலையைக் கண்டித்து கண்டனத்தை மிகச்சிறப்பாக பதிவு செய்து உள்ளனர்.  அனைவருக்கும் பாராட்டு.

பணமதிப்பு இழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் திட்டம் என மக்கள் மீது, இடி மீது இடியை இறக்கியோரை வரும் தேர்தலில் பாடம் புகட்டி வீட்டிற்கு அனுப்பிட முற்போக்காளர்களின் மனிதநேய ஆர்வலர்களின் போர்முரசாக ஒலிக்கின்றது இந்த நூல், பாராட்டுக்கள்.

காலத்திற்கேற்ற கவிதைகளை வாங்கி கவிதை பாட வைத்து தொகுத்து நூலாக்கி வழங்கிய மஞ்சக்கல் உபேந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  வரலாறு படைத்துள்ள அரிய நூல் இது!
.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» என்ன சொல்லப் போகிறாய்? நூல் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» உலக உத்தமர் கலாம் ! நூல் தொகுப்பாசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள்! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum