தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் ! பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Go down

கவிஞர் இரா  இரவி - பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்!   நூல் ஆசிரியர்கள் :  பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் ! பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  Empty பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் ! பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Tue Nov 27, 2018 7:59 pm

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்! 

நூல் ஆசிரியர்கள் : 
பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் !
பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
 
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.  

பக்கம் : 120, விலை : ரூ. 120


******

      'பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்' என்ற இந்த நூல் இலக்கிய இணையர், அதாவது முதுமுனைவர்வெ. இறையன்பு  மொழியில் "மற்றவர்களை இயக்கும் இணையர்" தமிழ்த்தேனீ இரா.மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் இருவரும் எழுதிய 12 கட்டுரைகளின் தொகுப்பாக வந்துள்ளது.



      இந்நூலிற்கு அணிந்துரை நல்கியுள்ள பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்கள்தான் இந்நூல் வரக்காரணமாக இருந்துள்ளார்கள்.  இலக்கிய இணையர்களிடம் ‘சிலப்பதிகாரம் பற்றி நூல் எழுதுங்கள்’ என்று கேட்டுக் கொண்டதன் காரணமாக சிலப்பதிகாரம் பற்றி ஏற்கனவே எழுதிய கட்டுரைகளையும் புதிய கட்டுரைகளையும் தொகுத்து நூலாக்கி அவரிடமே அணிந்துரையும் பெற்று விட்டனர்.



      அணிந்துரையிலிருந்து சிறு துளிகள் : “இலக்கிய உலகில் இரு சுடர்களாக ஒளிரும் இணையர் வழங்கிய இலக்கியப் பரிசு என்றே போற்றுகிறேன்; வழக்கம்போல வனப்புற பதிப்பிக்கும் வானதி பதிப்பகம் ஓங்கி உயர்வதற்கு இந்நூலும் துணை செய்யும் எனத் துணிகிறேன்.”



      அட்டைப்பட வடிவமைப்பு, உள்அச்சு யாவும் மிகவும் நேர்த்தி.  இலக்கிய இணையர் – வானதி பதிப்பகம் வெற்றிக்கூட்டணியின் வெற்றிப் பதிப்பாக வெளிவந்துள்ளது.  சிலப்பதிகாரத்தின் சிறப்பை இயம்பிடும் ஆகச்சிறந்த நூலாக வெளிவந்துள்ளது.



      முக்கிய நகரங்களில் கம்பன் கழகம் தோற்றுவித்து, கம்ப இராமாயணம் பரப்பி வருகின்றனர்.  ஆனால் சிலப்பதிகாரம், இராமாயணம் அளவிற்கு இன்னும் புகழ்பெறவில்லை. தமிழர்களின் காப்பியம் தமிழர்களை இன்னும் சரியாக சென்றடையவில்ல்லையே என்ற மனக்குறை எனக்கும், தமிழறிஞர்களுக்கும் உண்டு.  அந்த மனக்குறையினை நீக்கிடும் வண்ணமாக வராதுவந்த மாமணியாக இந்நூல் வந்துள்ளது, பாராட்டுக்கள்.



      சிலப்பதிகாரம் முழுமையாக படித்திராத பலருக்கும் நல்ல வாய்ப்பாக, சிலப்பதிகாரம் பற்றி அறிந்துகொள்ள உதவியுள்ள நூல்.  மகாகவி பாரதியாரின் வைரவரியினை ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்ற தலைப்பில் முதல் கட்டுரை தொடங்கி உள்ளனர்.  இந்த நூலும் வாசகர்களின் ‘நெஞ்சை அள்ளும் நூல்’ என்றால் மிகையன்று.



      பேச்சு, எழுத்து என்ற இருதுறையிலும் இலக்கிய இணையர் தனி முத்திரை பதித்து வருகிறார்கள்.  இந்நூலின் மூலம் தமிழன்னைக்கு மற்றுமொரு மகுடத்தை வழங்கி உள்ளனர்.  ‘தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா’ என்ற நாமக்கல் கவிஞரின் வைர வரிகளை நினைவூட்டும் வண்ணம், தமிழர்களின் சிறப்பை, தமிழின் சிறப்பை, தமிழ்ப்பண்பாட்டின் சிறப்பை இயம்பி உள்ளனர்.



      மற்ற மொழியில் உள்ள காப்பியங்கள் எல்லாம், ஒன்று-கடவுள் பற்றி இருக்கும் அல்லது நாடாண்ட மன்னரைப் பற்றி இருக்கும்.  ஆனால் சிலப்பதிகாரம் தான் குடிமக்கள் காப்பியம்.  சாதாரண குடிமகன் பற்றிய வரலாற்றை எடுத்தியம்பிய காவியம். காலம் உள்ளவரை நினைவில் நிற்கும் காப்பியம்.  பெண்மையைப் போற்றும் காப்பியம்.



      குடிமக்களில் ஒருத்தி, தன் கணவன் அநியாயமாகக் கொல்லப்பட்டு விட்டான் என்ற செய்திஅறிந்து கொதித்தெழுந்து மன்னனிடம் நீதிகேட்ட வரலாறு காப்பியமானது.  பண்டைக் காலத்திலேயே குடிமக்கள் உரிமைக்கு முதல்குரல் எழுப்பியவள் கண்ணகி.  இன்றைய மக்களாட்சி முறைக்கு கேள்வி கேட்கும் உரிமையை பெற்றுத்தந்தவள் கண்ணகி.



      சிலப்பதிகாரத்தில் உள்ள மிக முக்கிய வரிகளை எடுத்துக்காட்டி விளக்கம் கூறி ஆய்வு கட்டுரைகளை வழங்கி உள்ளனர்.

      இது ஒரு நாடகக் காப்பியம். திங்களைப் போற்றும், ஞாயிறு போற்றுதும், பூம்புகார் போற்றுதும் என்ற தன்மைப் பன்மை நடையில் தொடங்குகின்றது.  மங்கல வாழ்த்துப் பாடலின் தொடக்கம்.  இப்படி பல்வேறு கோணங்களில் சிலப்பதிகார ஆய்வினை நிகழ்த்தி உள்ளனர்.



      கட்டுரை தொடங்கும் போது சிலப்பதிகாரம் குறித்து அறிஞர்கள் கூறிய முக்கிய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.  கட்டுரையைப் படிக்கும் ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளன.  சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு முன்பாக கண்ணகியை அறிமுகம் செய்துள்ளார் என்ற நுட்பமான செய்தி வரை நூலில் பதிவு செய்துள்ளனர்.  மதுரைக் காண்டம், வஞ்சிக்காண்டம் பற்றிய விளக்கம் நூலில் உள்ளன.



      சிலப்பதிகாரம் பற்றி பல்வேறு அறிஞர்கள் எழுதிய கருத்துக்கள் மேற்கோளாகக் காட்டியுள்ளனர்.  மு.வ., தெ..பொ.மீ., பிரபஞ்சன், பிரபாகரன், எஸ். வையாபுரி பிள்ளை, கா. செல்லப்பன், எஸ். இராமகிருஷ்ணன், ப. அருணாசலம், சரளா ராஜகோபாலன், ம.பொ.சி., வாலி, இரா.தண்டாயுதம், கா.மீனாட்சிசுந்தரம், பூவண்ணன் என பலரின் பல்சுவை கருத்துக்கள். சிலப்பதிகாரம் தொடர்பாக எழுதியவற்றை எடுத்து எழுதி உள்ளனர்.



      சிலப்பதிகாரம் தொடர்பாக வெளிவந்த பல்வேறு நூல்களைப் படித்து அதிலுள்ள மகர்ந்தங்களைச் சேகரித்து இலக்கியத் தேனாக வழங்கி உள்ளனர்.  உற்றுழி உதவிய நூல்கள் என்று 21 நூல்களின் பட்டியலும் நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ளன.



      “புதிய தமிழ்க்கவிதைகளில் சிலப்பதிகாரத்தின் தாக்கம்” என்ற கட்டுரையில் பல புதுக்கவிதைகளும் மேற்கோள் காட்டி உள்ளனர்.  அவற்றில் சில :



      சிலம்பை 

      உடைத்து என்ன பயன்? 
      அரியணையிலும் அந்தக் கொல்லன்!



-    சூரியப் பிறைகள் (ப.65) ஈரோடு தமிழன்பன் !



கண்ணகி உடைத்த 

சிலம்பின் பரல்கள்
பாண்டியன் விரலிம் மோதிரமாய்!



-    சிறகுகளின் சுவடுகள் (ப.58) கவிஞர் துறவி !



கண்ணகிக்கு கோயில் 

மாதவிக்கு? 

அரணமனை !

-    காலடிச்சத்தம் (ப.117) கவிஞர் நாராயணன்!



யானோ அரசன் ; யானே கள்வன்            அந்தக்காலம் !
இந்தக்காலம்  

யானோ கள்வன் ; யானே அரசன் !

     

ஊர்வலத்தில் கடைசி மனிதன் (ப.25) கவிஞர் எஸ். ஷங்கர நாராயணன் !



சங்க இலக்கியம் தொடங்கி ஹைக்கூ கவிதைகள் வரை மேற்கோள் காட்டி வடித்துள்ள சிறப்பான நூல்.சிலப்பதிகாரத்தின்   சிறப்பை சீர்   தூக்கிப் பார்த்து சிந்தியில் பதியும் வண்ணம் சிங்கார சித்திரமாக வடித்துள்ள இலக்கிய இணையருக்கு பாராட்டுக்கள் . 

.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வேரும் விழுதும்! நூல் ஆசிரியர்கள் : ‘தமிழ்த்தேனீ’ பேராசிரியர் இரா. மோகன் ! ‘தமிழ்ச்சுடர்’ பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிற்பியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி
» பன்முக நோக்கில் குறுந்தொகை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» பன்முக நோக்கில் புறநானூறு! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஏர்வாடியம் ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன் ! பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum