தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவிச்சுவை ! நூலாசிரியர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா
Page 1 of 1
கவிச்சுவை ! நூலாசிரியர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா
கவிச்சுவை !
நூலாசிரியர் இரா. இரவி !
மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா
தோரண வாயில் :
[/size]
“நிம்மதி என்பது பணத்தில் இல்லை!
நின் மதியைப் பணத்திலிருந்து விலக்கு!”
(ப. 43).
சாட்டையடி கவிதை :
“இங்கிலாந்துக்காரன் மட்டுமே ஆண்டான் அன்று
எல்லா நாட்டுக்காரனும் ஆளுகின்றான் இன்று” (ப. 66)
கல்வெட்டுக் கவிதை வரிகள் :
“மானே! தேனே! என்று மயக்கியது போதும்
மகளிருக்கான இட ஒதுக்கீட்டைத் தாருங்கள்!”
(ப. 28)
போகிற போக்கில் :
[/size]
.[/size]
நூலாசிரியர் இரா. இரவி !
மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா
பக்கம் 186.விலை ரூபாய் 120.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர்,
சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769
மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com
[size]சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769
மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com
தோரண வாயில் :
[/size]
சங்க இலக்கியப் பொற்களஞ்சியங்கள் பதினெட்டு ; சங்கம் மழுவிய காலத்தில் உதித்தெழுந்த நீதிக் குவியல்கள் பதினெட்டு ; மனித குலத்திற்கு சித்தாந்தம் எது? வேதாந்தம் எது? என தெரிவித்த சித்தர்கள் எண்ணிக்கை பதினெட்டு ; ஆணினத்தோடு பெண்ணினமும் போட்டியிட்டு ஏறத் துடிக்கும் சபரிமலை சன்னதியின் படிகள் பதினெட்டு ; நாள்களில் எல்லாம் புனிதமான நாள் ; காவிரி அன்னை ஆர்ப்பரிக்கும் ஆடி பதினெட்டு.
கவி இரவியின் இலக்கியச் சோலையில் பூத்த மலர்களின் எண்ணிக்கையும் பதினெட்டு. ஆம்! இவரது நூல்களில் எல்லாம் சிறந்த நூல் இந்த ‘கவிச்சுவை’ நூல்.
ஏழு ஏழாய் ...
மனித வாழ்வை எட்டு எட்டாகப் பிரிக்கச் சொன்னது ஒரு சித்தர் பாடல். ஹைக்கூ சித்தரான இரா.இரவியோ இந்த ‘கவிச்சுவை’ நூலை ஏழு ஏழாய்ப் பகுக்கிறார். அது அறுசுவை கடந்து ஏழுசுவையாய் நூலை வாசிப்போர் உள்ளத்தைத் திகட்ட வைக்கிறது.
எது முதல் எது வரை?
ஆரம்பப் பள்ளி முதல் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வரை. மனுநீதிச் சோழன் முதல் மகாத்மா காந்தி வரை, காகிதக் கப்பல் முதல் விண்வெளிக் கப்பலோட்டிய கலாம் வரை, சிட்டுக்குருவி முதல் சிதறடிக்கும் டயனோசர் வரை, உயிர்க்குயிராம் தமிழ்மொழி முதல் உருதுமொழி வரை, தித்திக்கும் மிட்டாய் முதல் திருநெல்வேலி அல்வா வரை, சிவகங்கை சீமை முதல் சிருங்கார ஜப்பான் வரை ; நூற்று எண்பத்தெட்டு பக்கங்கள் கொண்ட இந்த கவிச்சுவை நூல் ஆதி முதல் அந்தம் வரை சமூகத்தை அலசி ஆராய்ந்து செல்கின்றது.
மலரும் மகரந்தமும் :
பழமொழியும், புதுமொழியுமாய், எதுகை, மோனை இயைபோடு, அநீதியைத் தட்டிக் கேட்டும், அர்த்தமுள்ளவற்றைத் தட்டிக் கொடுத்தும், விடுகதைகள் பங்கிற்கு விட்டுக் கொடுத்தும், ஆன்மீகம் தவிர்த்து, அறிவியல் இணைத்து, சமூகம் குறித்த சாதனையும், வேதனையுமாய் கவிச்சுவை நூல் நகர்கின்றது. எங்கும் முரண் ; எதிலும் முரண் என்னும் விதமாய வரிக்கு வரி சுவை கூடுவதோடு, பக்கத்திற்குப் பக்கம் பெண்ணியமும் தலைகாட்டுகின்றது.
கவிஞரின் கரங்களில் ...
இந்நூலில் மணல் வீடு கோட்டை ஆகின்றது! உப்பு மூட்டை, பஞ்சு மூட்டையாய் மாறி மனதை லேசாக்குகிறது. கவிஞரின் கலைந்த கனவு கூட கரும்பாய் தித்திக்கிறது ; ஒற்றைச் சிறகு உயிர்பெற்று ஜெட் வேகத்தில் உயரப் பறக்க எத்தனிக்கிறது! கவிஞர் எழுதுகோலைக் கரத்தில் ஏந்தியவுடன் யுத்தம் கூட நிசப்தமாகி விடுகின்றது. பட்ட மரம் துளிர்க்கின்றது. பச்சை நிலமோ படம் காட்டுகின்றது. ஓடுகின்ற குதிரை இருபுறமும் இறக்கை கட்டி பறக்கத் துவங்குகிறது.
சொல் விளையாடல்!
[size]“நிம்மதி என்பது பணத்தில் இல்லை!
நின் மதியைப் பணத்திலிருந்து விலக்கு!”
(ப. 43).
சாட்டையடி கவிதை :
“இங்கிலாந்துக்காரன் மட்டுமே ஆண்டான் அன்று
எல்லா நாட்டுக்காரனும் ஆளுகின்றான் இன்று” (ப. 66)
கல்வெட்டுக் கவிதை வரிகள் :
“மானே! தேனே! என்று மயக்கியது போதும்
மகளிருக்கான இட ஒதுக்கீட்டைத் தாருங்கள்!”
(ப. 28)
போகிற போக்கில் :
[/size]
தமிழென்னும் கடலில், புரட்சி என்னும் படகினில், இயற்கை, சமூகம் என இரு துடுப்பு கொண்டு, கவிதாதேவி வழிகாட்ட இலக்கியப் பயணம் மேற்கொள்ளும் ஹைக்கூ சித்தராம் இரா. இரவி அவர்களின் எழுத்துலகம் ஒளிரட்டும் என இணையதள வாசகியர் சார்பாக வாழ்த்துகிறோம்.
[size].[/size]
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !
» கவிச்சுவை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! கனிச்சுவைக்கு நிகரானது இரவியின் கவிச்சுவை! அணிந்துரை ! ‘தமிழாகரர்’ தமிழ்த் தேனீ முனைவர் இரா.மோகன் முன்னைத் தகைசால் பேராசிரியர்
» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!
» ஹைக்கூ 500 நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை.
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» கவிச்சுவை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! கனிச்சுவைக்கு நிகரானது இரவியின் கவிச்சுவை! அணிந்துரை ! ‘தமிழாகரர்’ தமிழ்த் தேனீ முனைவர் இரா.மோகன் முன்னைத் தகைசால் பேராசிரியர்
» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!
» ஹைக்கூ 500 நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை.
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum