தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ராம்கி டுவிட்டூ தலைகீழ்! நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

கவிஞர் இரா  இரவி - ராம்கி டுவிட்டூ தலைகீழ்!     நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் !        நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Empty ராம்கி டுவிட்டூ தலைகீழ்! நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Tue Dec 11, 2018 12:05 am

ராம்கி டுவிட்டூ தலைகீழ்! 

நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் !



நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


கந்தகப் பூக்கள் பதிப்பகம், குட்டியணஞ்சான் தெரு,
சிவகாசி – 626 மகிழ்ச்சி விலை : ரூ. 40
.

******

      ராம்பிரசாத் என்ற கவிஞர் ‘ராம்கி டுவிட்டூ தலைகீழ்’ என்ற பெயரில் கையடக்க நூல் எழுதி உள்ளார். வித்தியாசமாக உள்ளது.  இரண்டு வரிக்கவிதைகள் முதல் பக்கம் ஒரு வரி, அடுத்த பக்கம் இரண்டாம் வரி என்று உள்ளன. நூல் படித்து முடித்து விட்டு தலைகீழாகத் திருப்பினால் மற்ற கவிதைகள் தொடங்குகின்றன.  தமிழுக்கு புதுவரவு. டுவிட்டரில் பதிவது போல இரண்டுவரிக் கவிதைகள்.  பாண்டு என்ற கவிஞரின் டுவிட்டூ, அகம் புறம் என்ற கவிதை நூல் படித்ததன் பாதிப்பாக இந்நூல் எழுதியதாக என்னுரையில் குறிப்பிட்டு உள்ளார்.



      டுவிட்டூ பாண்டூ அணிந்துரை அளித்துள்ளார்.  முனைவர் ந. அருள்மொழி வாழ்த்துரை வழங்கி உள்ளார். இனிய நண்பர் பதிப்பாளர் கந்தகப்பூக்கள் ஸ்ரீமதி பதிப்புரை நல்கிஉள்ளார்.



      பத்துப்பக்க கட்டுரையில் சொல்ல வேண்டிய கருத்துக்களை இரண்டே வரிகளில் உணர்த்தும் விதமாக இருப்பதே டுவிட்டூ. அந்த வகையில் ரத்தினச் சுருக்கமாக கருத்தாழம் மிக்கதாக எழுதி உள்ளார்.  குறைந்தபட்ச கவிதைகள் என்றாலும் அதிகபட்ச சிந்தனையை விதைத்துள்ளன

.

      சிவப்பு சிக்னலுக்காக காத்திருக்கிறது
      பிச்சைக்காரன் மகிழ்வு!



பொதுவாக வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு சிவப்பு விளக்கு எரிந்தால் காத்திருக்க வேண்டுமே என்ற எரிச்சல் வரும், பொறுமை இருப்பதில்லை, ஆனால் பிச்சைக்காரனுக்கு பிச்சை எடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது சிவப்பு விளக்கு. அவன் மகிழ்கிறான்.



      புத்தகத்தில் மட்டும் 

      தீண்டாமை ஒரு பாவச்செயல் !



      கணினி யுகத்திலும், இரட்டைக் குவளை முறையும், இரட்டை சுடுகாட்டு முறையும் தொடர்வது வெட்கக்கேடு.  சமீபத்தில் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் சமைத்தால் சாப்பிட மாட்டோம் என்ற கொடிய தீண்டாமை காட்டிய நிகழ்வு நடந்தது.  காந்தியடிகள் செய்யக்கூடாது என்று சொன்ன பாவத்தை சிலர் இன்றும் செய்து வருவது வேதனை. 



      தீபாவளி பண்டிகை 

      ஆடு கோழிகள் நரகாசுரன்களா?



உண்மை தான். தீபாவளி பண்டிகை என்றால் பல்லாயிரம் ஆடுகளும், கோழிகளும் பலியாகி விடுகின்றன.  அவைகள் செய்த குற்றமென்ன என்ற கேள்வியை முன்வைக்கிறார் நரகாசுரன்களா? என்ற கேள்வி மூலம்.



மழையில்லா விவசாயி 

வாழ்வில் இடி!



உண்மைதான். கடனை வாங்கி பயிரிட்டுக் காத்திருப்பான். மழை பொய்த்து விடும், பயிர் வாடிவிடும்.  நட்டத்திற்காக வருந்தி உழவன் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் உண்டு.  கசா புயல் தாக்கி தென்னைகள் காய்ந்ததில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் ஓர் உழவர்.  இப்படி பல சிந்தனைகளை விதைத்தது. 



சாலை விரிவாக்கத் திட்டம் நிலுவை
      மகிழ்ந்தன மரங்கள்!



எட்டுவழிச் சாலை என்ற பெயரில் விளைநிலங்களை கையகப்படுத்திட சென்ற போது போராட்டங்கள் வெடித்தன. கைதுகள் நடந்தன. நீதிமன்ற தீர்ப்பால் தற்காலிகமாக நின்றது கையகப்-படுத்துதல்.  உழவனும் மரங்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தன.



ரியல் எஸ்டேட் வெறி!
      செவ்வாய் கிரகத்தில் பிளாட்டுகள்!



ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விளைநிலங்களை எல்லாம் விலை பேசி, வீட்டடி மனைகளாக்கி பணம் சுருட்டி வருகின்றது ஒரு கும்பல். அவர்களுக்கான கண்டனத்தை இரண்டே வரிகளில் வடித்துள்ளார்.



காட்டில் தேர்தல் பிரச்சாரமின்றி

வென்றது சிங்கமே!



உலக அளவில் மக்களாட்சி நடக்கும் பெரிய நாடு இந்தியா.  ஆனால் தேர்தல் அன்று உலக அரங்கில்  பெருமை தேடித் தந்தது. இன்றோ சிறுமை தேடித் தந்துள்ளது.  வாக்களிக்கப் பணம் தந்து நடத்தும் தேர்தல் அவலத்தை நன்கு உனர்த்தி உள்ளார்.



வாகன முகப்பில் ‘கடவுள் துணை’. 

விபத்தில் பயணிகள் உயிரிழப்பு.!



 இரண்டே வரிகளின் மூலம் மூடநம்பிக்கையைச் சாடி பகுத்தறிவு விதையை விதைத்துள்ளார். படிக்கும் வாசகர்களை சிந்திக்க வைத்துள்ளார்.



கைதிகளுக்குப் பேச்சுப் போட்டி!
      தலைப்பு விடுதலை இந்தியா!



சிறையில் வாடும் சிறைவாசிகள் விடுதலை பற்றி பேசுவது எள்ளல் சுவையுடன் உணர்த்தி உள்ளார். 



பசியோடு மாணவன் படித்தான்
      உணவு உற்பத்தி முறை!



பசியோடு வாழும் ஏழை மாணவர்கள் இன்னும் இந்தியாவில் இருக்கின்றனர். வறுமை ஒழியவில்லை, ஏழ்மை ஒழியவில்லை.  வறுமைக்கோடு அழியவே இல்லை.  ஆள்வோர் வறுமையை ஒழிப்பதாக வாக்குறுதி தந்து அவர்கள் வறுமையை ஒழித்து வளமாகி விடுகின்றனர்.



நோட்டு கேட்கும் மகன்
       புரோ நோட்டுடன் அப்பா!



பெற்ற குழந்தைக்கு நோட்டு வாங்கிக் கொடுக்க முடியாத தந்தைகள் உண்டு.  அதற்காக வட்டிக்கு கடன் வாங்கும் அவலநிலையும் உண்டு. தனியார் கல்வி நிறுவனங்கள் பகல் கொள்ளை கூட்டுக்கொள்ளை அடித்து வருகின்றனர்.  கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய ஆள்வோர்கள் டாஸ்மாக் மதுக்கடைக்கு விற்பனை குறியீடு நிர்ணயித்து கோடிகள் திரட்டி வருகின்றனர்.



கப்பலுக்குச் சளைத்தவனல்ல
      மிதப்பதில் குடிகாரன்!



மிதப்பதாக நினைத்துக் கொண்டு மூழ்குகிறான் குடிகாரன். அவன் மட்டுமல்ல, குடும்பத்தையே மூழ்கடித்து விடுகிறான். நாட்டில் தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்று பெருகி விட்டது.



   மது அருந்தும் பழக்கம் பெருகி விட்டது.  சமுதாயம் சீரழிந்து வருகின்றன.  நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு மதுப்பழக்கமே காரணமாகின்றது.  குடியை ஒழிக்க, மதுக்கடைகள் மூடிவிட முன்வர வேண்டும்.



இப்படி பல சிந்தனைகளை விதைக்கும் விதமாக வடித்த இருவரி கவிதைகள் சிறப்பு. பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum