தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நான் யார்?' விடை கண்ட ரமண மகரிஷி!
Page 1 of 1
நான் யார்?' விடை கண்ட ரமண மகரிஷி!
-
நான் யார்...? - இந்தக் கேள்விக்கு விடை தேடிச் செல்கிறவர்கள்
மாமனிதர்கள் போற்றும் மகான்களாகி விடுகின்றனர்.
நான் யார் தெரியுமா? என்று முண்டாசு தட்டி, மீசையை
முறுக்கிக் காட்டுகிறவர்களையே சமூகத்தில் பார்த்துப்
பார்த்துப் புளித்துப் போய்விட்ட மனிதர்களுக்கு, மாமணிகள்
போற்றிய விருதுநகர், திருச்சுழி, வேங்கட ரமணன்
(பிற்கால ரமண மகரிஷி) பற்றிய ஒரு சிறு விருந்துதான்
இந்தக் கட்டுரை.
நதிமூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்பர் சான்றோர்.
அப்படித்தான் ஒரு நாள் துறு, துறுவென ஓடியாடிக்
கொண்டிருந்த அந்த சிறுவன், ' நீங்கள் எப்போது பிறந்தீர்கள்..?"
என மகரிஷி (ரமண மகரிஷிகளை இனி இப்படியே
இக்கட்டுரையில் அழைப்போம்) அவர்களைப் பார்த்துக்
கேட்டான்.
'இந்த மாசம் முப்பதாம் தேதிதான் பிறந்தேன்' என்று
மகரிஷி எழுதிக் காட்ட அன்றுதான் அவருடைய பிறந்த நாள்
உலகிற்கு தெரிய வந்தது.
விருதுநகர் மாவட்டம் அரசியல் உலகிற்கு ஒரு
பெருந்தலைவரை கொடுத்தது என்றால், ஆன்மிக உலகிற்கு
மகத்தான மகரிஷியாம் ரமணரைக் கொடுத்திருக்கிறது.
மீசை கூட அரும்பாத பொழுதில் 'நான் யார்?' என்ற
கேள்விக்கு பதிலைத்தேடி திருவண்ணாமலை எனப்படும்
அருணாச்சல மலையின் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தார்,
வேங்கட ரமணன்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நான் யார்?' விடை கண்ட ரமண மகரிஷி!
-
நாட்கணக்கில், மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில்
'நான் யார்?' என்ற கேள்விக்கான விடையை கண்டுபிடிக்கும்
முயற்சியில், தனிமையான சூழலில், கடுந்தவத்தில் அந்த
வேங்கடரமணன் மூழ்கிக் கிடந்தார்.
உடலை மறைத்துக் காட்ட வேண்டிய முழ நீளத்துக்கான
(கௌபீனம்) ஒரே ஒரு துண்டுத் துணியுடன், பற்றற்று
எளிமையின் வடிவமாக தவத்தில் மூழ்கிய வேங்கடரமணன்
உண்டு, உறங்கி பார்த்தவர் ஒருவரும் இலர்.
ஒரு நாள் அந்த 'ஞானம்' அவருக்கு கிடைத்தது.
ஆம், அவரைச் சுற்றி கைகூப்பி நின்றபடி சேவை புரிய
ஒரு பெருந்திரள் மக்கள் காத்து நின்றனர்.
வேங்கட ரமணன் அன்றுதான் 'ரமணராக' கண் விழித்தார்.
ஒளிப் பிரவாகமாய் ஊற்றெடுத்து ஊடுருவிச் சென்ற அந்த
விழிகளில் கருணை, அருள், ஆசீர்வாதம் என்று மானுட
வாழ்வியலுக்கு தேவையான நவாம்சங்கள் அத்தனையும்
ஒரு சேரக் கிடைத்ததாகவே மக்கள் பரிபூரணமாக நம்பினர்.
நாளுக்கு நாள் அவரைத் தேடிவரத் தொடங்கியது, மக்கள்
கூட்டம்.
"பூக்களோ, பொன்னோ, பொருளோ கொண்டு வந்து என்னிடம்
கொடுக்காதீர், அவைகளை வாங்கிக் கொள்ளும்படி என்னை
வற்புறுத்தாதீர்" என்று தரைமணலில் எழுதிக் காட்டி,
தன்னுடைய நிலைப்பாட்டை உலகிற்கு அறிவித்தார்
கடைசிவரை மவுனத்தைக் கடைப் பிடித்த மகரிஷி.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நான் யார்?' விடை கண்ட ரமண மகரிஷி!
'
வெள்ளையும், சிவப்பும் கலந்த நிறத்திலான தேகம்
மகரிஷிகளுக்கு இருந்ததால், ஊர் மக்கள் அவரை 'பிராமண
சுவாமிகள்' என்று அழைக்க ஆரம்பித்தனர்.
ஆனால், மகரிஷிகளின் நிழலாய் தொடர்ந்து நின்று
அவருக்குப் பணிவிடைகள் செய்து நின்ற காவ்யகண்ட
கணபதி முனி என்ற சீடர் தான் அவரை 'ரமண மகரிஷி'
என்று ஓர்நாள் உரிமையுடன் அழைத்து விட்டார்.
சீடரின் பெயர் சூட்டல் மகரிஷிகளின் ஆழ்மனதில்
அப்படியே லயித்து நிற்க... சீடனைப் பார்த்து மெல்லிதாய்
ஓர் புன்னகை பூத்தார். மகான்களின் உள்ளம் ஏற்பு
நிலையை இப்படித்தான் வெளிப்படுத்துமோ?
ஆம்... அன்று முதல் வேங்கடரமணன், பிராமண சுவாமிகள்
எல்லாம் மறைந்து ரமண மகரிஷிகள் என்றானார், அந்த
அருணாச்சல மலையின் அடிப்புறத்துக்காரர்.
காலச்சக்கரத்தின் வேகமான சுழற்சியிலும், முற்போக்குச்
சிந்தனையிலும், பாரதியின் கவிதா வேள்வியிலும் கனன்று
நின்ற சுத்தானந்த பாரதி, ரமணரின் தீவிர சீடரானார்.
தன்னையறியும் கருத்தில் ஒன்றி 'தன்னையறிய' பஞ்ச
பூதங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையின்
தென்புற அடிவாரத்தில் பத்மாசன நிலையிலிருந்த
ரமணரிடம் சரணடைந்தார்.
வெகுவிரைவில், 'ரமணவிஜயம்' என்ற பேரில் ஆன்மிக
உலகிற்கு பொக்கிஷமான மகரிஷியின் வாழ்க்கை
சரிதத்தை எழுதினார். அந்நூல் பிற்காலத்தில் சமஸ்கிருதம்,
குஜராத்தி, வங்காளம், மலையாளம், தெலுங்கு, கன்னடம்
என்று இருபதுக்கும் மேற்பட்ட மொழிவழி நூலாக வெளி
வந்தது.
நான் யார்? வாழ்வும் வாக்கும், ஏகான்ம பஞ்சகம்,
உள்ளது நாற்பது போன்ற நூல்கள் மகரிஷிகள் இயற்றிய
நூல்கள்.
எளிமை மட்டுமல்ல, அன்பிலும் மகரிஷி நிறைகுடம்தான்.
ஆசிரமத்தில் இருக்கும் நாய், அணில்களை 'பசங்கள்' என்றே
அழைப்பார். யாராவது அவைகளை 'சூ' என்று விரட்டினால்,
"அந்த உடல்களுக்குள்ளே எந்த எந்த ஆத்மாக்கள் உள்ளதோ...
பூர்வகர்மாவின் எந்தெந்த பாகத்தை முடிப்பதற்கு அவைகள்
இப்பிறவி எடுத்தனவோ... பசங்களை (அவைகளை)
விரட்டாதீர்கள்... !" என்பார் மகரிஷிகள்.
ரமண மகரிஷிகளின் பிறந்த நாளான இந்நாள் மட்டுமல்ல,
வரவுள்ள புத்தாண்டிலும், அடுத்தடுத்த ஒவ்வொரு நாட்களிலும்
அன்பால் மலர்ந்து, அன்பால் நிறைவோம்.
-
----------------------------------------
ந.பா.சேதுராமன்
நன்றி- விகடன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பக்தருள் மேலான பக்தர் யார் ? – ஸ்ரீ ரமண மகரிஷி
» நான் கண்ட இறைவன் ....!!!
» நான் கண்ட கணிதம்
» நான் கண்ட இலங்கை
» நான் கண்ட தேடல் . . .
» நான் கண்ட இறைவன் ....!!!
» நான் கண்ட கணிதம்
» நான் கண்ட இலங்கை
» நான் கண்ட தேடல் . . .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum