தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நூலின் பெயர் : கவிச்சுவை நூலாசிரியர் : இரா. இரவி மதிப்புரை நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.

Go down

நூலின் பெயர்      :      கவிச்சுவை நூலாசிரியர்        :      இரா. இரவி   மதிப்புரை நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர். Empty நூலின் பெயர் : கவிச்சுவை நூலாசிரியர் : இரா. இரவி மதிப்புரை நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.

Post by eraeravi Sat Mar 09, 2019 2:49 pm

நூலின் பெயர்      :      கவிச்சுவை
நூலாசிரியர்        :      இரா. இரவி


மதிப்புரை நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.






[size=13]புதிய உறவு – நூல் உறவு :
புதுவை 


வெளியீடு   வானதி பதிப்பகம்,                            23, தீன தயாளு தெரு, தியாகராய நகர்,                            சென்னை-600 017.  
பக்கங்கள்          :      180
விலை             :      ரூ.120..



[/size]
இந்நூலாசிரியர் அய்க்குக் கவிஞர், கவிஞர் திலகம், துளிப்பாச் சுடர், புலிப்பால் இரவி, இணையக் கவிஞர் என்று அவரவர்கள் விருப்பப்படி விளித்தாலும், மதுரை கவிஞர், மதுரக் கவிஞர் என்பதில் தனித்துவம் மிகுந்த கவிஞர் இரா. இரவி.  உள்நாட்டு இதழ்கள், வெளிநாட்டு இதழ்கள், மின்னிதழ்கள், முகநூல்கள், புலனம் என எங்கும் நிறைந்திருக்கும் இயற்கையென எழுத்து வடிவில் வீற்றிருப்பவர். இவர், எல்லோர் உள்ளத்திலும் நிறைந்திருப்பவர்.


இவர் மற்றவரை கவிதையால் ஈர்த்ததை விட, வெள்ளை மனத்தால், முகம் மலர்ந்த சிரிப்பால், கள்ளங்கபடமற்ற நட்பால் ஈர்த்தவர். இப்படி சொல்வதால் இவரின் கவிதை ஈர்க்கவில்லையோ என்றால் உண்மையில் கவிதையில் “புவிஈர்ப்பு விசை போல கவிதை ஈர்ப்பு விசை உண்டு என்பதாலேயே இவ்விமர்சனம் எழுத முடிகிறது.


இவரின் அய்க்குக் கவிதைகளில் நூல் மதிப்புரைகளில் கொட்டிக் கிடக்கும் உவமைகள், வெண்செந்துறை யாப்பை நெருங்கியுள்ள இந்நூலில் காண முடியாமல் உள்ளது. காரணம் ஆடை அலங்காரமென்ற உவமைகள் இல்லாமல் உள்ளதை உள்ளபடியே மனத்தின் எண்ணங்களை தடையின்றி, வாசிக்கும் விதத்தில் கவிதைகளை எளிமையான சொற்களால் வலிமையாக பகர்ந்துள்ளார்.


இனி நூலெனும் பூந்தோட்டத்தில் நுழைந்து, சில கவிதைப்பூ இதழ்களின் சிலவரிகளை பருகலாம் வாருங்கள். நூலின் முழு தேனையும் சுவைக்க நூலை வாங்குங்கள்.


சுவைகளில் பல்வேறு சுவைகள் இருப்பது போல், நூலிலுள்ல எழுபத்தெட்டுக் கவிதைகளையும் எழுபிறப்பு, ஏழுலகம், கடையெழு வள்ளல், ஏழு அதிசயம், ஏழுமலை, ஏழுகடல், ஏழிசை என்று சுட்டும் வண்ணம் பிரித்து முறையே சான்றோர் உலகு, தமிழ் முற்றம், பெண்ணுலகு, உறவுகளின் உன்னதம், நம்பிக்கை நாற்றுகள், சமுதாய வழி, உதிரிப் பூக்கள் என ஏழு தொகுதிகளாக்கி, நூலுக்கு முக்கனி, முப்பால், மூவேந்தர், முக்கடல், முக்காலம், முச்சங்கம், மும்மூர்த்தி, முச்சுவை என்ற அடிப்படையில் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன், முனைவர் அ. கோவிந்தராசு, வித்தகக் கவிஞர் பா.விஜய் ஆகியோரின் அணிந்துரை பெற்று அணியாக்கியுள்ளார். இந்நூலாசிரியர் கவிஞர் இரா. இரவி அவர்கள்.


இன்றைய காலச்சூழலில் கலப்படம் இல்லாத பொருள் எது? என்று கண்டறிய இயலாத வண்ணம் உணவு தானியம், காய்கறி, கனி வகைக்கள் எல்லாமே கலப்படமானதால் பிறக்கும் மழலை கூட நோயுடன் பிறக்கிறது என்ற சமுதாயப் பார்வையை உவமையாக்கி இதே அடிப்படையில் மொழி கலப்பானால் மொழி கெடும் என்பதை,
[size]


“உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும்
       உன்னத மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு



[/size]
என்று தேமதுரத் தமிழோசை தமிழகத்தில் ஒலிக்கட்டும்! என்ற கவிதையில் வலியுறுத்தியவர், செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்! என்ற தலைப்பில்,
[size]


       “தாய்மொழி களுக்கு எல்லாம் தாய்மொழி
       தமிழ்மொழி என்பதை அறியவில்லை தமிழர்!



[/size]
என்று சொல்லி, தமிழர் தம் மொழியின் பெருமையை அறியாமல், கேவலம் வயிற்று பிழைப்புக்காக தமிழை ஒதுக்கி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளைப் பிடித்து, தொங்குவதை நாசுக்காய வலியுறுத்துகிறார்.  தமிழ்நாட்டின் மொழிகொள்கை இருமொழி கொள்கையாய் இருப்பதும் ஒரு காரணியம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
[size]


       “உயிரெழுத்து மெய்யெழுத்து உயிர்மெய் எழுத்தே என்று
       உயிர்த்த எழுத்துகள் உன்வசம் இருக்க கிரந்தம் எதற்கு?



[/size]
என்று கிரந்த எழுத்துகளை தமிழில் தவிர்க்கும்படி வினவுவதை தமிழில் எழுதுபவர்கள் கையாள வேண்டும் ; தனித்தமிழில் எழுத வேண்டும் என்பதை நானும் நீண்ட காலமாய வலியுறுத்தி வருகிறேன், தமிழர் மாறுவார்களா? பார்ப்போம்.
[size]


       “கரும்பு தின்னக் கூலி தந்திட வேண்டுமா?
       கன்னித் தமிழைக் கற்க அறிவுறுத்தல் வேண்டுமா?



[/size]
இப்படி பழமொழியை உவமையாக்கி தமிழரை கண்டு, கேட்க வேண்டிய வினாவை கொடுத்துள்ளார். “தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! எனும் கவிதையில் பாராட்டுக்கள்.


       நாடும், அரசியல் சட்டமும், ஆண்களும், மதக்கோட்பாடுகளும் இன்னும் பலவகையிலும் விடுதலை வழங்கினாலும், சிலந்தி வலையில் சின்ன பூச்சி தானாக வந்து எப்படி மாட்டிக்கொள்கிறதோ அப்படி பெண்கள் நாகரிக வேட்கை ஆசையால் தன்னைத்தானே எவை எவையில் அடிமைகளாக இருக்கிறார்கள்? என்று, ‘பெண்ணால் சிவப்பானது பிரபஞ்சம் என்கின்ற தலைப்பில் கவிஞர் பட்டியலிட்டுள்ளார். இவற்றில் இரண்டு ஆசைகளை மட்டும் சுட்டுகிறேன். அவை ...
[size]


       “பொன்நகை மீதான ஆசையை ஒழியுங்கள் ;
       புத்தன் போதனையை நினைவில் கொள்ளுங்கள்!



       “பட்டுப் புடவையின் மீதான ஆசையை ஒழியுங்கள் ;
       பட்டுப்பூச்சியின் வாழ்க்கை உங்கள் கைகளில்!



[/size]
என்று விழிப்புணர்வூட்டி பட்டுப்புழு மீது இரக்கங்காட்டி, வாடியப் பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் குணத்தை நினைவூட்டியுள்ளார்.


       வரலாற்று வீரமங்கையர் போலவே இக்கால் மங்கையரும் கொடுமை கண்டு கொதித்தெழுந்து புயலெனப் புறப்பட்டு வீரநடையிட்டு வெற்றிக்கொள், புவியை ஆளப்பிறந்தவன் நீ! என்று, ‘புயலெனப் புறப்படு பெண்ணே! என்ற தலைப்பில் வீரத்தை ஊட்டிய கவிஞர், “தாலாட்டுப் பழகுதல் நன்று! என்ற கவிதையில் தமிழர் வாழ்வில் ஒன்றி, பின்னிப் பிணைந்த அடையாளமான தாலாட்டு, ஒப்பாரி போன்ற கலைகள் வழக்கொழிந்தது. மீண்டும் உயிர் கொடு பெண்ணே! என்று இடம், பொருள், ஏவல் என்பதற்கேற்ப பெண் செயல்பட வேண்டும் என்று நடைமுறை வாழ்வியலை சுட்டிய விதம் மிக அருமை.


       ‘கவலைக்கு விடுமுறை எனும் கவிதையில் யாருக்குத்தான் கவலை இல்லை? கவலை என்பது உயர்ந்தவனுக்கும் தாழ்ந்தவனுக்கும் பொதுவானது என்ற நீண்ட பட்டியலிட்டு இறுதியில்,
[size]


       “தூரத்து வெளிச்சம் கண்களை உறுத்தும் ;
       பக்கத்து வெளிச்சமே பயன் தரும்!



[/size]
என்று அறிவியல் கண்ணோட்டத்தோடு ஜென் தத்துவ்வாய் சொல்லிய பாங்கு மிக அழகு!


       ‘இரும்பை செம்மையாக்குவது சிறப்பு! என்ற கவிதையில்,
[size]


       ‘ஒற்றைச் சிறகோடும் உயரம் செல்ல்லாம் ;
       உள்ளத்தில் ஒளி பிறந்தால் வழியும் பிறக்கும்!



[/size]
இப்படி தன்னம்பிக்கை, முயற்சி, உள்ளொளி ஆகியவற்றை ஊட்டிய கவிஞர், ‘கோடை மழையை வரவேற்போம்! எனும் கவிதையில் இயற்கையை மதித்து வாழ,
[size]


       “இயற்கை நம்மைக் கைவிடாமல் காக்கும் ;
       இயற்கையை மதித்தால் நன்மை தருமே!
 


என்கிறார்.
[/size]
       மாந்தர் வேறுபாடு பாகுபாடு இன்றி இருத்தல் வேண்டி, ‘பரிதிப் பார்வை என்ற தலைப்பில்,


       “பரிதியின் பார்வை பாரபட்சமற்றது! என்று நினைவூட்டி மாந்தரிடம் பொதுமையை எதிர்பார்க்கிறார், அருமை.


       ‘துப்பாக்கிக் குண்டுகளால் சிதைக்க முடியாது! என்ற கவிதை கருநாடகாவில் இந்துத்துவா ஈன வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பகுத்தறிவுவாதிகளான கௌரி லங்கேஷ், கல்புர்கி ஆகியோர்க்காக புதிய உறவு இதழ் வாயிலாக ஆசிரியர் மஞ்சக்கல் உபேந்திரன் நடத்திய கவிதைப் போட்டிக்காக எழுதியதில்,
[size]


       “விடுதலை வீரனின் விடுதலை தாகத்தை
       வெளிவரும் துப்பாக்கிக் குண்டுகளால் சிதைக்க முடியாது!



[/size]
என்ற வரிகள் அண்மையில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கும் பொருந்தும். இப்படி கவிதை தோறும் சுவை மிகுந்த பொதுமை கருத்துப் பேழையாக இந்நூல் திகழ்கிறது! அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டிய நூல். நூலாசிரியர் கவிஞர் இரா. இரவி அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றேன்.
நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
[size]




.[/size]
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
» இரா. இரவியின் படைப்புலகம் ! நூலாசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
» நூல் பெயர்: இறையன்பு கருவூலம். நூலாசிரியர்:அய்க்குக் கவிஞர் இரா. இரவி. ____________________________________________ நூல் மதிப்புரை: நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு.
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் நயம் : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
»  "ஹைக்கூ 500" நூல் ஆசிரியர்: கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை -"நெருப்பலைப் பாவலர் ", இராம இளங்கோவன்;பெங்களூரு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum