தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !

Go down

கவிஞர் இரா  இரவி - ஆயிரம் ஹைக்கூ  !    நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !    நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா ! Empty ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !

Post by eraeravi Tue Jun 25, 2019 2:24 pm

ஆயிரம் ஹைக்கூ  !

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com
பக்கம் : 184, விலை : ரூ. 120.

கவிஞர் இரா. இரவி.  அய்யா அவர்கள் எனக்கு குரு. அவர் தினமலர் நாளிதழில் 2015ல் எழுதிய கவிதை எழுதுவோம் என்னும் கட்டுரையே என்னை கவிதைகள் எழுத ஊக்கப்படுத்தியது. அய்யா அவர்களின் 12-ஆவது நூல் ஆயிரம் ஹைகூ. நீண்ட நாள்களாக வாங்க நினைத்த  நூல். குருவின் கையில் இருந்தே  நூலைப் பெற்று நூலுக்கு மதிப்புரை எழுதுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. 

நூலின் முன் அட்டைப்படத்தில் திருவள்ளுவரின் படமும் பின் அட்டைப்படத்தில் கவிஞரின் சுயவிபரமும் கொடுக்கப்பட்டுள்ளது. நுhலின் அணிந்துரைக்கு அழகு சேர்க்கும் இரு சான்றோர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன் அவர்களும், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களும் ஆவர்.  நூலின் தனிச்சிறப்பாக கவிஞர் என்னுரையில் தனது முந்தைய ஹைக்கூ கவிதை நூல்களில் பலவற்றிலிருந்து தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் தேர்வு செய்து சிறப்பு வாய்ந்த ஹைக்கூ கவிதைகளையும் பின்னர் எழுதிய புதிய ஹைக்கூ கவிதைகளையும் தொகுத்துத் தர ஆயிரம் ஹைக்கூ நூலாக மலர்ந்துள்ளது.

 நூலின் பின்னிணைப்பாக கவிஞர் இரா. இரவி அவர்களின் படைப்புகள் மற்றும் ‘தி ஹிந்து’ நாளிதழில் கவிஞரின் நேர்முகம் இடம் பெற்றுள்ளது. இந்நூல் மூன்று பதிப்புக்களை கண்டுள்ளது. இனி  ஆயிரம்  ஹைக்கூக்குள் செல்வோம்.!                                 

                மூத்த மொழி , முதல் மொழி, ஆதியில் பிறந்த நம் தமிழ்மொழி பற்றி நூல்.
                                                                             

“தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா.!”

                “பல்லாயிரம் வயதாகியும்
                இன்னும் இளமையாக
                தமிழ்.!”

என்று தமிழின் பெருமை குறித்து நூல் எடுத்துரைக்கின்றது.

சமூகத்தில் நிலவும் அவலநிலை குறித்து:

                “உள்ளூரில் இனவெறி
                வெளிநாட்டில் நிறவெறி
                உலக அமைதி கேள்விக்குறி?”

                               
ஹைகூ மூலம் நூல் சமூக அவலம் சுட்டுகின்றது.

நூல் முற்போக்கு சிந்தனைகள் ஹைக்கூ வழி நம் சிந்தைக்கு                 

                “தூணிலும் இருப்பான்
                துரும்பிலும் இருப்பான் சரி
                ஆலயங்கள் எதற்கு?’

                     ‘கம்பி எண்ணுகிறார்
                     விடுதலைக்கு ஏங்கி
                     குறி சொன்ன சாமியார்

                ‘கடவுளின் முன்னே
               அனைவரும் சமம்
                சிறப்பு தரிசனம்?’

இன்றைய நூற்றாண்டில் மனிதனிடம் இல்லாத மனிதநேயம் குறித்து நூல்.

                ‘உலகெலாம் உறவு
                பக்கத்து வீடு பகை
                மனிதன்!”

                     ‘குஞ்சுகள் மிதித்து
                     கோழிகள் காயம்
                     முதியோர் இல்லம்!’

                ‘மனிதாபிமானற்ற
                மடச்செயல்
                தூக்குத் தண்டனை!”

நம் நாட்டின் அரசியல் அவலமாக  நூலில்,

                ‘சின்ன மீன் போட்டு 
                சுறாமீன் பிடிப்பு
                அரசியல்!”

                     ‘அன்று இருந்தது
                     இன்று இல்லை
                     அரசியல் நாணயம்!’

                ‘இராமாயணத்தில் கூனி
                மகாபாரதத்தில் சகுனி;
                நாட்டில் அரசியல்வாதிகள்!’;

                                “தெரிந்தே
                                 ஏமாறும் நாள்
                                 தேர்தல் நாள்!”

இயற்கை குறித்து நூலானது,

                 ‘கட்டணம் வாங்காத
                 திறந்தவெளிப் பல்கலைக்கழகம்
                 வானம்!’

                     ‘மரபுக் கவிதை
                     வானத்தில்
                     நிலவு!’

                ‘அய்யகோ
                வானத்திலும் சுரண்டலா
                பிறை நிலவு.!’

                     ‘ரசிப்பதும் சுகம்
                     நனைவதும் சுகம்
                     மழை!’

கவிபாடும் அனைவரும் காதல் கவிபாடுவது உண்டு.அதன் அடிப்படையில் சிலகாதல்கவிகளை கவிஞர் நூலில் பதிவு செய்துள்ளார்.

                ‘இனிது இனிது
                தமிழில் இனிது                                                                                                                                        
                அவள் பெயர்!

                     ‘பிரிந்து
                     பின் சந்தித்தால்
                     சுவை அதிகம்!’

                ‘கர்ணனின் கவசமாய்
                காதலி நினைவு
                கடைசி வரை!’

இன்றைய இருபத்திஓராம் நூற்றாண்டில் வாழ்வியல் விழுமியம் குறைந்தும் மறைந்தும் வருகின்றது. இது பற்றி நூலானது

                “முதியோர் இல்லத்தில் பெற்றோர்
                வேரை மறந்த விழுதுகள்
                மகன்கள்!”

                     “பிறர் சேமிப்பை
                     அபகரித்தான் மனிதன்
                     தேன்கூடு!”

                “நியாயத்தை
                விற்கக் கடையா?
                நியாயவிலைக் கடை!”

அன்று தரமாக இலவசமாக வழங்கப்பட்ட கல்வி இன்று வணிகமானது குறித்து நூலானது.

                “ஆரம்பமானது
                பகல் கொள்ளை
                கல்வி நிறுவனங்கள்!”

                     ‘அன்று தொண்டு
                     இன்று கொள்ளை
                     கல்வி நிறுவனங்கள்!’

தொலைக்காட்சியின் தீமைக் குறித்து  நூலானது.

                “பொழுதுபோக்கக் கண்டுபிடித்தது
                பொழுதை விழுங்குகின்றது
                தொ(ல்)லைக்காட்சி!”

                     “அழியும் அன்பு
                     வளரும் வம்பு
                     தொடர்கள்!”

                “மாற்றுங்கள் பெயரை
                தொலைக்காட்சியன்று
                தொல்லைக்காட்சி என்று!”

ஹைகூ கவிதைகளின் கூகுளான கவிஞர் ஹைகூ கவிதைப் பற்றி தம் ஹைகூ மொழியில்.

                “கணினி யுகத்தின்
                கற்கண்டு
;               ஹைகூ!”

                     “உருவத்தில் கடுகு
                     உணர்வில் இமயம்
                     ஹைகூ!”

                “சிந்தனைச் சிற்பி
                செதுக்கிய சிலை
                ஹைகூ!”

மாற்றுத்திறனாளிகளின் தனித்திறன்கள் குறித்து  நூலானது.

     “மனிதநேயம் மிக்கவர்கள்
      உதவிடும் உள்ளம் பெற்றவர்கள்
      மாற்றுத்திறனாளிகள்!”

                     “வாய்ப்பு வழங்கினால்
                     வெற்றி பெறுவார்கள்
                     மாற்றுத்திறனாளிகள்!”

தற்போது அலைபேசி கோபுரம் மூலம் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து வருவதை  நூல்

                “புகைப்படம் எடுத்து வைப்போம்
                பேரன்களுக்குக் காட்ட
                குருவிகள்!”

                நூலின் இறுதியாக நூல் பொதுவியல் கருத்துக்களாக சில ஹைகூ கவிதைகளை முன்வைக்கின்றது.

                “நீட்டிக்கச் சொன்னார்கள்
                திருமண வாழ்த்துரை
                சமையல் முடியும் வரை!”

                     “விரல் நுனியில்
                     விரிந்தது உலகம்
                     இணையம்!”

                “பணக்காரர்களுக்கு அருகில்
                ஏழைகளுக்கு தூரத்தில்
                கடவுள் தரிசனம்!”

                     “சரியான ஆட்டம்
                      பெயரோ
                      தப்பாட்டம்!”

                “வெகு நாட்கள் இல்லை
                அருங்காட்சியகத்தில்
                அரிசி!”-

ஆயிரம் ஹைக்கூ நூல் கவிஞரின்  நூல்களில்  உள்ள ஹைகூ கவிதைகள் தொகுக்கப்பட்ட பன்முகபார்வையான செம்மை பொருந்திய  இனிய நூல்.
.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
» விழிகளில் ஹைக்கூ.... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !
» உதிராப்பூக்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum