தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

Go down

தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு Empty தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

Post by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:10 am

[You must be registered and logged in to see this image.]


புதுடெல்லி, 

இந்திய விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 


இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முகுந்தகம் ஷர்மா தலைமையில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ், பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா உள்பட 12 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. 


இந்த கமிட்டியினர் கடந்த 2 நாட்களாக டெல்லியில் கூடி ஆலோசித்தனர். இதில் இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ மல்யுத்த வீரரும், ஆசிய, காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான பஜ்ரங் பூனியாவுக்கு மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது வழங்க பரிந்துரைப்பது என்று ஏற்கனவே ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.


இந்த நிலையில் கேல்ரத்னா விருதை இந்த ஆண்டு மேலும் ஒருவர் பெறுகிறார். 2016-ம் ஆண்டு ரியோ பாராஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாற்றுத் திறனாளி வீராங்கனையான தீபா மாலிக்குக்கும் கேல்ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. 


அரியானாவைச் சேர்ந்த 48 வயதான தீபா மாலிக் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். மேலும் தொடர்ச்சியாக மூன்று பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனையும் இவர் தான். இடுப்புக்கு கீழே உறுப்புகள் செயலிழந்ததால் கடந்த 17 ஆண்டுகளாக வீல்சேர் உதவியுடன் போட்டிகளில் பங்கேற்று சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அர்ஜூனா விருதுக்கு 19 பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, பெண்கள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ், தடகள நட்சத்திரங்கள் தஜிந்தர் பால் சிங் தூர், முகமது அனாஸ், ஸ்வப்னா பர்மன், தமிழ் தலைவாஸ் கபடி அணியின் கேப்டன் அஜய் தாகூர் ஆகியோரும் அடங்குவர்.

அர்ஜூனா விருது பெறுபவர்கள் விவரம் வருமாறு:-

தஜிந்தர் பால் சிங் தூர் (தடகளம்), முகமது அனாஸ் (தடகளம்), எஸ்.பாஸ்கரன் (பாடி பில்டிங்), சோனியா லாதர் (குத்துச்சண்டை), ரவீந்திர ஜடேஜா (கிரிக்கெட்), சிங்லென்சனா சிங் (ஆக்கி), அஜய் தாகூர் (கபடி), கவுரவ் சிங் கில் (கார்பந்தயம்), பிரமோத் பாகத் (மாற்றுத்திறனாளி பேட்மிண்டன்), அஞ்சும் மோட்ஜில் (துப்பாக்கி சுடுதல்), ஹர்மீத் ரஜூல் தேசாய் (டேபிள் டென்னிஸ்), பூஜா தன்டா (மல்யுத்தம்), பவாட் மிர்சா (குதிரையேற்றம்), குர்பிரீத்சிங் சந்து (கால்பந்து), பூனம் யாதவ் (கிரிக்கெட்), ஸ்வப்னா பர்மன் (தடகளம்), சுந்தர் சிங் குர்ஜர் (மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம்), சாய் பிரனீத் (பேட்மிண்டன்), சிம்ரன் சிங் ஷெர்ஜில் (போலோ).

சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது:- விமல்குமார் (பேட்மிண்டன்), சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்), மொகிந்தர் சிங் தில்லான் (தடகளம்), சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா வாழ்நாள் சாதனையாளர் விருது:- மெஸ்பன் பட்டேல் (ஆக்கி), ராம்பிர் சிங் கோகர் (கபடி), சஞ்சய் பரத்வாஜ் (கிரிக்கெட்).

வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருது:- மானுல் பிரெட்ரிக்ஸ் (ஆக்கி), ஆருப் பசாக் (டேபிள் டென்னிஸ்), மனோஜ்குமார் (மல்யுத்தம்), நிட்டேன் கிர்டான் (டென்னிஸ்), லால்ரெம்சங்கா (வில்வித்தை).

இந்த பட்டியலுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடும். கேல்ரத்னா விருதுக்கு ரூ.7½ லட்சமும், மற்ற விருதுகளுக்கு ரூ.5 லட்சமும் பாராட்டு பட்டயத்துடன் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவை துரோணாச்சார்யா விருதுக்கு தேர்வு கமிட்டி பரிந்துரை செய்யாதது குறித்து ஒலிம்பிக்கில் 
துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றவரான அபினவ் பிந்த்ரா 
அதிருப்தி தெரிவித்துள்ளார்.

‘தேர்வு கமிட்டியின் முடிவு தவறானது என்பதை தனது பயிற்சி திறமை 
மூலம் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அவர் நிரூபிப்பார்’ என்று பிந்த்ரா கூறியுள்ளார்.

இதே போல் பேட்மிண்டன் வீரர் பிரனாய், அர்ஜூனா விருதுக்குரிய 
தகுதி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தினத்தந்தி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics
» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
» சர்வதேச கடல் நிறுவனத்தின் வீர தீரச் செயலுக்கான விருதுக்கு ராதிகா தேர்வு
» அபராத தொகையை குறைக்க லஞ்சம்: இ.எஸ்.ஐ. மண்டல இணை இயக்குனர் உள்பட 2 பேர் ஜெயிலில் அடைப்பு
» அரசு பஸ்- லாரி மோதல்: டிரைவர் உள்பட 4 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum