தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சுழி

Go down

சுழி Empty சுழி

Post by அ.இராமநாதன் Tue Aug 27, 2019 11:25 pm

சுழி E_1373574295



-
“சுழி’ என்பது வட்டமான வடிவத்தைக் குறிக்கின்றது. எழுதுவதற்கு முன்பாக காகிதத்தின் தலைப்பில் சுழி இடப்படுகிறது. அதைப் பிள்ளையார் சுழி என்று அழைக்கிறோம். முன்னாளில் மக்கள் முன்னுச்சியில் அணிந்திருந்த வட்டமான ஒரு அணிவகை சுழியம் எனப்பட்டது. இது நெற்றிக்கு மேலாக அணியப்படும் அணியாகும்.

திருத்தொண்டர் புராணமாகிய பெரிய புராணத்தில் இந்த அணி பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. சேக்கிறார், சுந்தரர் பரவையாரைத் திருமணம் செய்து கொள்ளச் செல்கையில் கொண்ட கோலத்தை விவரிக்கின்றார். அதில் சுந்தரச் சுழியும் சாத்திச் சென்றதை.


அந்தரத்தமரர் போற்றும்
அணிகிளர் ஆடைசாத்தி
சந்தனத்து அளறுதோய்ந்த
குங்குமக்கலவைசாத்தி
சுந்தரச் சுழியம் சாத்தி சுடர்
மணிக் கலங்கள்சாத்தி
இந்திரத்திருவின் மேலாம்
எழில்மிகு விளங்கத்தோன்றி,
கையினிற் புனைபொற்கோலும்
காதினில் இலங்கும் தோடம்
மெல்லினில் துவளும் நூலும்
நெற்றியில் விளங்கும் நீறும்
ஐயனுக்கழகிதாம் என்றா
யிழை மகளிர்போற்றச்
சைவமெய்திருவின் கோலந் தழைப்ப
வீதியினைச் சார்ந்தார்.


(1060) 184 எனும் பாடலால் தெரிவிக்கிறார்.
கானப்பேர் என்றழைக்கப்பட்ட காளையார் கோவில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குச் சிவபெருமான் இளைஞன் வடிவில் காட்சியளித்த வேளையிலும் சுழியம் அணிந்திருந்தார் என்பதை,


அங்கனாரைப் பணிந்துறையும் ஆரூரர்க்கவ்வூரில்
கங்குலிடைக் கனவின்கட் காளையாம் திருவடிவால்
செங்கையினிற் பொற்செண்டும் திருமுடியில் “சுழியமுடன்’
எங்குமிலாத் திருவேடம் என்புருக முன்காட்டி (112) 1236
எனும் பாடல் மூலம் குறிக்கப்பட்டுள்ளது.


அவரவர் தகுதிக்கேற்பப் பல வகையான பூ வேலைப்பாடுகளைச் சுழி கொண்டிருந்தது. சுழியின் மையத்தில் தெய்வ உருவங்கள் இடம் பெற்றன.
திருஒற்றியூர் தியாகராஜசுவாமி ஆலயத்தினுள் கருவறையான படம்பக்கநாதர் எழுந்தருளியிருக்கும் சந்நிதி வாயிலில் விளங்கும் துவாரபாலகர்கள் அணிந்துள்ள சுழியங்கள் வரலாற்றுச் சிறப்பும் கலைச் சிறப்பும் கொண்டவை. 



இதில் ஒருவனது முன்னுச்சியில் விளங்கும் சுழியில் நடராசப் பெருமான் ஆடிக் கொண்டிருக்கிறார். மற்றொருவனின் முன்னுச்சிச் சுழியத்தில் கஜசம் ஹாரர் யானைத்தோலைப் போர்த்திக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கிறார்.

தொடக்கத்தில் வட்டமாக அமைந்த சுழியனைச் சுற்றிலும் காலப்போக்கில் சுற்றிலும் கொடிகள், தீப்பிழம்புகள், தொங்கல்கள் என்று மேலும், அழகூட்டிக் கலைநுணுக்கங்களைச் சேர்த்துக் கலைஞர்கள் விரிவுபடுத்தினர்.


அது வளர்த்து கலிகதோரா என்ற அணிகலனாகப் புதிய வடிவம் பெற்றது. மன்னர்களின் திருமுடியில் அளவால் சிறியதாக இருந்த கலிகதோராக்கள் சிவாலயங்களில் செய்யப்படும் அலங்காரங்களில் ஒரு முழு அளவுக்கு மேலாகவும் அமைந்துள்ளன. 



பல வண்ணக்கற்களை இழைத்து வனப்பூட்டப்பட்ட கலிகதோராக்கள் தலையலங்காரத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன.

“சுழி’ மங்கல அணியாகும்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சுழி Empty Re: சுழி

Post by அ.இராமநாதன் Tue Aug 27, 2019 11:26 pm

மாட்டின் உடலில் சுழிகள் அமைந்துள்ளன. இவற்றின் தன்மைக்கேற்ப அந்த மாட்டிற்குக் குணாதிசயங்கள் இருக்குமென்று ஆயர்கள் கூறுகின்றனர்.
ஓடும் ஆற்றுவெள்ளம் மோதித் திரும்பி ஓடுவதைச் சுழித்து ஓடுவதாகக் கூறுகின்றனர்.


“சுழி’ என்ற பெயர் பெற்ற தலங்கள் இரண்டாகும். 

ஒன்று வலஞ்சுழி மற்றது திருச்சுழியல்.

மக்களின் கை கால்களில் ஒவ்வாரு விரலின் நுனியிலும் ரேகைகள் சுழிகளுடன் அமைந்துள்ளன. அந்தச் சுழிகளின் அமைப்பை அடிப்படையாகக் கொண்டும் வருங்காலம் உரைக்கப்படுகின்றது. நாடி நூல்கள் இருசுழிச் சங்கு ரேகை, முச்சுழிச்சங்கு ரேகை, சதுரச்சுழி ரேகை என பலவகையான சுழி ரேகைகளைக் கூறி அதைக் கொண்டு பலன்களைக் கூறுகின்றன.


விநாயகப் பெருமானை வலஞ்சுழிப் பிள்ளையார் என்றும் அழைக்கின்றனர். அவரது துதிக்கை இடது கையில் உள்ள மோதகத்தின் மீது இருக்கும். 



சில தலங்களில் அவரது துதிக்கை வலப்புறம் சுழித்திருக்க நடுவில் மோதகம், தாமரை, சங்கு இவற்றில் ஏதாவது ஒன்றிருக்கும். துதிக்கையை வலமாகச் சுழித்திருப்பதால், மக்கள் பேச்சு வழக்கில் வலம்புரி பிள்ளையார் என்றும் கூறுகின்றனர்.

- பூசை. ஆட்சிலிங்கம்

நன்றி-கலைமகள்-1-7-2013

&வாரமலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum