தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் விருந்து! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
தமிழ் விருந்து! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
தமிழ் விருந்து!
நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.
தொலைபேசி : 044 24342810,
24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com
பக்கம் : 240 விலை : ரூ. 200
******
24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com
பக்கம் : 240 விலை : ரூ. 200
******
தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் 150 வது நூல் இது. இந்நூலை இலண்டன் தமிழ்ச்சங்கத்தில் வெளியிடுவதாக திட்டமிட்டு இருந்தார். ஆசிரியர் தன்னுரையிலும் குறிப்பிட்டுள்ளார். அதற்குள் இரக்கமற்ற இயற்கை அய்யாவின் உயிரைப் பறித்துக் கொண்டது. ‘தமிழ் விருந்து’ பெயருக்கு ஏற்றபடி தமிழ் விருந்தாகவே உள்ளது.
கவிதை உறவு, புதுகைத் தென்றல், மனிதநேயம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் மாதாமாதம் கட்டுரை எழுதி வந்தார்கள். அய்யாவின் கட்டுரைகளை இதழ்களில் படித்திட்ட போதும் மொத்தமாக நூலாகப் படித்ததில் இன்பம். இந்நூலில் 26 கட்டுரைகள் உள்ளன. கவிதை அலைவரிசை கவிதை உறவில் வந்தவை 12 கட்டுரைகள் சங்கச் சித்திரங்கள் புதுகைத் தென்றலில் வந்தவை 7 கட்டுரைகள். மனிதநேயம் உள்ளிட்ட இதழ்களில் வந்தவை 7 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
கவியரசு கண்ணதாசனில் தொடங்கி கவிப்பேரரசு வைரமுத்துவில் முடித்து உள்ளார்கள். இடையில் சங்க இலக்கியத்தையும் இணைத்து உள்ளார்கள். வழக்கம் போல வானதி பதிப்பகம் இந்நூலை சிறப்பாக வடிவமைத்து அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். மரபு புதிது ஹைக்கூ என பல்சுவை விருந்தாக உள்ளது.
தமிழன்னைக்கு தமிழ்த்தேனீ இரா.மோகன் அய்யா சூட்டியுள்ல 150வது மகுடம் இந்நூல். தேனீ போல வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி உழைத்து இலக்கியத் தேனை இலக்கிய நூல்களில் இருந்து எடுத்து, வாசகர்களுக்கு இலக்கியத் தேன் விருந்து வைத்துள்ளார். எட்டாம் வகுப்பு மட்டுமே படித்து, புகழில் எட்டாத உயரம் சென்ற கவியரசரின் பாடல் வரிகளில் உள்ள முத்துக்களைத் தொகுத்து முத்துமாலையாக வழங்கி உள்ளார்.
கலங்காதிரு மனமே!
வாழ நினைத்தால் வாழலாம்!
காலமகள் கண் திறப்பாள் சின்னையா!
வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும்.
மயக்கமா? கலக்கமா?
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இவ்வாறான பாடல் வரிகளின் மூலம் கண்ணதாசன் கீதோபதேசம் செய்கின்றார். காவியக்கவிஞர் வாலியின் வாழ்க்கையில் மாற்றம் விளைவித்த பாடல். மயக்கமா? கலக்கமா? இப்படி புகழ்பெற்ற பாடல் வரிகளைத் திறனாய்வு செய்து வடித்திட்ட கட்டுரை மிகச் சிறப்பு.
வெறுங்கை என்பது மூடத்தனம் – உன்
விரல்கள் பத்தும் மூலதனம் –
(இது எங்கள் கிழக்கு ப. 33)
இந்த இரண்டே வரிகளின் மூலம் கணியன் பூங்குன்றன் போல புகழ்பெற்றவர் கவிஞர் தாராபாரதி. அவரது வைர வரிகளை மேற்கோள் காட்டி வடித்துள்ள கட்டுரை மிக நன்று.
நிமிர்வாய் தமிழா, எழுவாய் – அட
நீ தான் உலகின் எழுவாய்!
இப்படி பல வரிகளின் மூலம் தமிழர்களைத் தட்டி எழுப்பியவர் தாராபாரதி. அவருக்கு இக்கட்டுரையின் மூலம் மணிமகுடம் சூட்டி உள்ளார் நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன். மறைந்த கவிஞர்கள் மட்டுமின்றி வாழும் கவிஞர்கள் கவிக்கோ ஞானச் செல்வன், கவிதைச் சித்தர் இலந்தை சு. இராமசாமி, கடவூர் மணிமாறன், மரபின் மைந்தன் தங்க செந்தில்குமார், சுடர் முருகையா உள்ளிட்ட பலருக்கும் அற்புதமான திறனாய்வு வழங்கி அவர்களீன் கவியாற்றலை உலகிற்கு பறைசாற்றி வடித்துள்ள கட்டுரைகள் சிறப்பு.
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் கவிதை ஒன்று.
படைப்பில் உச்சியில்
மானுட மகுடம் அதில்
வியர்வைத் துளிகள்
கோகினூர் வைரங்கள்!
(கவிக்கோ கவிதைகள் ப.80)
நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்கள் எந்தஒரு கட்டுரை எழுதுவதென்றாலும் மேம்போக்காக எழுத மாட்டார்கள். கட்டுரை எழுதிட தேவையான நூல்களைத் திரட்டி அலசி ஆராய்ந்து, தோய்ந்து, ஆழ்ந்து, கட்டுரை வடிப்பார்கள். நூலின் பெயர், எழுதியவர் பெயர், பக்க எண் என துல்லியமாக குறிப்பிடுவார்.
அய்யாவை பார்க்க இல்லம் செல்லும் போது பார்த்தால், அய்யாவைச் சுற்றி நூல்களே இருக்கும். நூல்களுக்கிடையே தான் அய்யா இருப்பார். வாசிப்பை சுவாசிப்பைப் போல கொண்டு தினமும் வாசிப்பார். சங்க இலக்கியம் மட்டுமல்ல, இன்றைய ஹைக்கூ கவிதைகளும் வார, மாத இதழ்களில் வரும் கவிதைகளையும் தொடர்ந்து சலிப்பின்றி மனம் விரும்பி வாசிப்பார்.
அய்யா அவர்களின் வாசிப்புத் திறன் தேடல், ஈடுபாடு சுறுசுறுப்பு, படைப்பாளியைப் பாராட்ட வேண்டும். இளையோரை வளர்த்து விட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமே அவரை 150 நூல்கள் வரை எழுதும் வண்ணம் உயர்த்தியது.
வாழ்க்கையில் சாதித்தவர் 150 நூல்கள் எழுதுவது சாதாரண விசயமல்ல மிகப்பெரிய ஆற்றல். அவருடைய மறைவு இலக்கிய உலகில் உண்மையிலேயே பேரிழப்பாகவே ஆகிவிட்டது. அவருடைய இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. மதுரையில் அய்யாவின் இடம் வெற்றிடமாகவே உள்ளது.என்பது முற்றிலும் உண்மை.
கவியருவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் பாப்லோ நெருதாவன் கவிதைகள் ஆய்வுசெய்து வடித்த கட்டுரை நன்று. அவரது கவிதை ஒன்று.
எனக்குள் இருந்த குழந்தை
எங்கே?
இருக்கிறதா?
போய்விட்டதா?
(பாப்லோ நெருதா கவிதைகள் ப. 159)
உண்மை தான். பெரியவர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் குழந்தைத்தனமும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும். அதனைக் கவிதையில் நன்கு வடித்துள்ளார். கவியருவு ஈரோடு தமிழன்பன் அவர்கள்.
தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவச் செய்ய வேண்டும் என்று சொன்ன மகாகவி பாரதியாரின் வைர வரிகளை தாரக மந்திரமாகக் கொண்டு எழுத்து, பேச்சு என இரண்டு வேறுபட்ட துறையில் தமிழோசையைப் பரவச் செய்தவர். உடலால் அவர் உலகை விட்டு மறைந்தாலும்,அவர் படைத்த நூல்களில் தமிழ்த்தேனீ என்றும் வாழ்வார். அவரது புகழ் உடம்பிற்கு அழிவில்லை. இலண்டன் மாநகரில் கல்வித்துறைத் தலைவராக, துணை முதல்வராக உள்ள இனிய நண்பர் கவிஞர் புதுயகன் அணிந்துரை வழங்கி உள்ளார். இலண்டன் தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துரையும் இடம்பெற்றுள்ளது.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» தமிழ் உலா! நூல் ஆசிரியர் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அமுதும் தேனும் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதை ஒளி! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» "கவிதை அலை வரிசை " நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன். நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .
» இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» அமுதும் தேனும் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதை ஒளி! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» "கவிதை அலை வரிசை " நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன். நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .
» இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum