தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வான்மழை ஹைக்கூ கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கார்முகிலோன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
வான்மழை ஹைக்கூ கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கார்முகிலோன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வான்மழை
ஹைக்கூ கவிதைகள்
நூல் ஆசிரியர் : கவிஞர் கார்முகிலோன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை,
சென்னை-600 018. பேசி : 98414 36213
பக்கங்கள் : 64, விலை : ரூ.50
*****
நூல் ஆசிரியர் கவிஞர் கார்முகிலோன் பெயர், புனைப்பெயர் மட்டுமல்ல, காரணப்பெயரும் கூட. பொதிகை மின்னல் உள்ளிட்ட பல்வேறு சிற்றிதழ்களுக்கு பரிசு மழை பொழியும் புரவலர், வள்ளல், பணமும் மனமும் அமையப்பட்ட பண்பாளர். ஒரே மேடையில் 24 நூல்கள் வெளியிட்ட சாதனையாளர், படைப்பாளர். அவரது ஹைக்கூ கவிதை நூலாக ஹைக்கூ மழை பொழிந்து வான்மழையாக வந்துள்ளது, பாராட்டுக்கள்.
ஹைக்கூ கவிதையின் முன்னோடி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களின் மகள் கு.அ. தமிழ்மொழி ஹைக்கூ நூல்கள் எழுதியுள்ள ஹைக்கூ படைப்பாளி. இந்த நூலிற்கு அணிந்துரை நல்கி இருப்பது சிறப்பு.
எந்த ஒரு நூலையும் மிக நேர்த்தியாகப் பதிப்பிக்கும் செயல் வீரர் பொதிகை மின்னல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்கள் இந்த நூலையும் மிக நேர்த்தியாக அச்சிட்டு பதிப்புரையும் வழங்கி உள்ளார்.
நறுக் சுருக் என சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஹைக்கூ படைப்பாளி உணர்ந்த உணர்வை வாசகனுக்கும் உணர்த்தும் நல் உத்திகளில் ஒன்று ஹைக்கூ கவிதை.
மனமும் செயலும் வெவ்வேறாக
மனிதன் மிருகம் ஆகின்றான்
மனம் ஒரு குரங்கு!
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது மனிதனுக்கு அழகு. அதை விடுத்து பேசுவது ஒன்றாகவும், செயல் மற்றொன்றாகவும் இருப்பதை குரங்கு குணம், விலங்கு குணம் என்று உணர்த்தியது நன்று.
தொண்டன் மோதிரம்
அடகு கடையில்
தலைவன் பிறந்த நாள்!
காந்தி, காமராசர், கக்கன் காலத்தோடு நல்ல தலைவர்கள் மறைந்து விட்டனர். இன்றைக்கு ஏமாற்றும் தலைவர்கள் மலிந்து விட்டனர். ஏமாளியாகவே தொண்டன் இருக்கிறான் என்பதை உணர்த்திய விதம் அருமை.
ஜெயித்த பின் மறந்தவை
தொண்டனும் வாக்குறுதியும்
கறிவேப்பிலைகள்!
உணவில் கறிவேப்பிலை வந்தால் எடுத்து, அதை வெளியே போடுவதைப் போல, வென்றவுடன் செருக்கு வந்து, தந்த வாக்குறுதியை மறந்து விட்டு தொண்டனை ஏமாற்றும் ஏமாற்று அரசியல் மலிந்து விட்ட காலமிது.
சாமான்யன் சாதனை
பத்து தலைமுறைக்கு சொத்து
வாழ்க அரசியல்!
சாமான்யர்கள் அரசியலுக்கு வந்து விட்டார்கள் என்று பெருமைப்பட்டால் வந்தவர்களே ஊழல் புரிவதில் உச்சம் தொட்டு கோடிகளைச் சுருட்டும் கொள்ளையர்களாக மாறிவிடுவது வேதனை, கசப்பான உண்மை.
உன் மௌனம் கவிதை
ஏராள விளக்கத்தை
எடுத்து இயம்புகிறது!
காதல் ஹைக்கூ கவிதைகளும் நூலில் இடம்பெற்றுள்ளன. ஹைக்கூவில் எதையும் பாடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக பல்வேறு தலைப்புகளில் பாடி உள்ளார்.
பண்பில்லா மனிதருக்கு
படிப்பு மட்டுமல்ல
வாழ்வும் வீண் தான்.
இன்றைக்கு சிலர் நன்கு படித்து இருந்தும் பண்பற்றவர்களாக மன நோயாளிகள் போல நடந்துகொள்கின்றனர். பண்பற்றவர்கள் வாழ்க்கை வீண் தான் என்று உணர்த்தியது நன்று.
மருமகள் வந்தவுடன்
பெற்றோர் தனிக்குடித்தனம்
முதியோர் இல்லத்தில்!
நம் நாட்டில் முதியோர் இல்லங்கள் பெருகி வருவது பெருமை அல்ல, சிறுமை. முதியோர் இல்லம் தேவைப்படாத சமுதாயமாக விரைவில் மாற வேண்டும்.
உன்னை நான் மணக்க
வரதட்சணை தர வேண்டுமா?
வேசியா நீ ஆடவனே!
வரதட்சணைக் கேட்கும் மணமகனை நோக்கி மணமகள் கேட்பது போன்று சாட்டையடி ஹைக்கூவாக வடித்துள்ளார், பாராட்டுகள்.
கூசாமல் கேடிகின்றார்
குலை நடுங்க வைக்கின்றார்
மாப்பிள்ளைக் குடும்பத்தார்!
தங்கம் விலையோ விண்ணை முட்டும் அளவிற்கு ஏறிக்-கொண்டே இருக்கின்றது. பெண் குழந்தை பெற்ற பெற்றோர் யாவரும் தங்கம் விலை ஏற ஏற கவலை கொள்கின்றனர். மகனைப் பெற்ற பெற்றோர் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் 30 பவுன் போடுங்க, 50 பவுன் போடுங்க, 100 பவுன் போடுங்க, கார் வாங்கி கொடுங்க என்று கூசாமல் கேட்கும் அவலத்தை உணர்த்தி உள்ளார்.
சலிக்கும் வரை முயற்சித்தும்
வேலை கிடைக்கவில்லை
பட்டம் பயனற்றுப் போனது!
பொறியாளர்கள் பெருகிய அளவிற்கு வேலைவாய்ப்பு பெருகவில்லை. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகின்றது. ஆட்சியில் இருப்போர் இதுபற்றிய கவலையே இன்றி புள்ளிவிவரங்களை மட்டும் தாள்களில் தந்து தப்பித்து வருகின்றனர்.
வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்தால் தான் ஒரு நாடு வளம் பெறும். வல்லரசாவது இருக்கட்டும் முதலில் நல்லரசாகட்டும்!
தங்க கோபுரம் அழகாய்
தரையில் ஏழைகள் அழுகை
மௌனயாய் சாமி!
ஹைக்கூ கவிதையின் மூலம் சிந்திக்க வைத்து பகுத்தறிவு விதையும் விதைத்து உள்ளார். மொத்தத்தில் சமுதாயத்தை சீர்படுத்திட சிந்தித்துப் பார்த்து அறிவார்ந்த கருத்துக்களை எளிய ஹைக்கூ கவிதைகளாக்கி வழங்கி உள்ள நூலாசிரியர் கவிஞர் கார்முகிலோன் அவர்களின் ஹைக்கூ மழை தொடர வாழ்த்துகள்.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மணல் நதியும் சில கூழாங்கற்களும்! ஹைக்கூ கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எரிதழல்! ஹைக்கூ கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் நாகை ஆசைத்தம்பி . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கண்ணஞ்சல் (ஹைக்கூ கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் மல்லிகை தாசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum