தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கடவுளின் கனவு! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏ.எஸ். பிரான்சிஸ், நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Go down

கவிஞர் இரா  இரவி - கடவுளின் கனவு!   நூல் ஆசிரியர் : கவிஞர் ஏ.எஸ். பிரான்சிஸ்,    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Empty கடவுளின் கனவு! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏ.எஸ். பிரான்சிஸ், நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Sat May 02, 2020 1:03 pm

http://www.tamilauthors.com/04/538.html  

-- கடவுளின் கனவு!

நூல் ஆசிரியர் : கவிஞர் ஏ.எஸ். பிரான்சிஸ், asanthiah@yahoo.com
  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி 
 

*****
‘கடவுளின் கனவு’ புதுக்கவிதை நூல். நூலாசிரியர் கவிஞர் ஏ.எஸ். பிரான்சிஸ் புலம் பெயர்ந்த தமிழர். மலேசியாவில் வாழ்ந்து வருபவர். டத்தோ டாக்டர் லோக பாலமுருகன், டத்தோ ஸ்ரீ சையது இப்ராஹிம் பின் காதர், டத்தோ ஸ்ரீ மெக்லின், டத்தோ B. சகாதேவன், ஓம்ஸ் பா. தியாகராஜன், டத்தோ பி.எஸ்.சாமி, சுப. இராஜேந்திரன், வித்தியாசாகர் போன்ற பலரும் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்து உள்ளனர்.

புரியாத புதிர் கவிதை இல்லை, இருண்மை கவிதையும் இல்லை. படிப்பவர்களுக்கு எளிதில் புரியும்வண்ணம் புதுக்கவிதைகள் வடித்து இருப்பது சிறப்பு.

தூரத்து கனவுகள்!
கடற்கரையில் என் காலடிகளை அழித்து
      களிப்பு கொள்கிறது பேரலைகள்
      எனது கோப எதிரொலியைக்
      காற்றின் சிறகுகள் வானின் முகட்டுக்கு
      இழுத்து செல்கின்றன.



கடற்கரையில் அமர்ந்து இருக்கும் புலம் பெயர்ந்த மனிதனின் மன ஆதங்கத்தை இயற்கை ரசனையுடன் வடித்துள்ளார்.

நோயாளிகள் மடிகளில்
குவியும் தங்க ரொட்டிகள்
அவர்களுக்கு எக்காலமும் பயன்படுவதில்லை.


நோயாளிகளுக்கு மட்டுமல்ல சேர்த்து வைத்து இருக்கும் பணக்காரர்களுக்கு தங்க ரொட்டிகள் பசி நீக்கிடபயன்படப் போவதில்லை!



விந்தை மனிதர்!
ஞானம் தேடி வஞ்சகர் கூட்டம் வழி நடக்கிறது
      மோகம் இழந்து நடக்கும் காலடிகளின் கழுத்து நிழல்
      விந்தையான ஓசை கேட்டு அஞ்சுகின்றது
      நாவில் படர்ந்திருக்கும் நஞ்சு
      விஷ வார்த்தைகளைக் கொன்றும் துப்புகின்றது.



ஞானம் தேடி போலிச்சாமியார்களைத் தஞ்சம் அடைந்து பிணங்களைக் கொட்டி ஏமாந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது தொடர்-கதையாகத் தொடர்கிறது. சாமியார்களை நம்பி மோசம் போகாதீர்கள் என எச்சரித்து இருப்பது சிறப்பு.

மலர்களில் மயக்கம்!

புரட்சிக்காரர்களின் தலையில் கட்டப்பட்ட
      சிவப்பு ரிப்பனைப் போல
      சிவந்து போயிருக்கிறது எனக்கான காதல்!



காதல் கவிதையில் கூட தனக்கு ஈடுபாடுடைய பொதுவுடைமை சிந்தனையின் குறியீடு சிவப்பு ரிப்பனை உவமையாக்கியது சிறப்பு.

போராளிகள்!

போராளிகளுக்கு வாழ்க்கை இனிமையான போர்க்களம்
காடுகளில் பசிப்புலிகளாய் அலைந்து திரிந்தும்
புரட்சிக் கொள்கை விற்று புல்லைத் தின்னாதவர்கள்
பூத்துவிட்ட விடியல் ஒளியில் இலட்சியத்தைப் படிப்பவர்கள்
போராளிகளின் உடலிலிருந்து பசி எட்டியே நிற்கும்
போராளிகள் மக்கள் விடுதலையை உண்பவர்கள்
போராளிகள் மக்கள் சுதந்திரத்தை நிதம் சுவாசிப்பவர்கள்!



பசி பற்றிய கவலை இன்றி தன்னலம் மறந்து  மக்கள் நலன் கருதி போராடி வரும் போராளிகளின் நல் உள்ளத்தை புதுக்கவிதையின் மூலம் படம்பிடித்துக் காட்டி உள்ளார்கள்.

ஏழையர் சிரிப்பதற்கு தடைபோடும் கோழையர்கள்
      பொருள் குவித்து உறக்கம் துறந்தவர்கள்
      விதியின் வாலுக்கு நெய் அபிசேகம் செய்பவர்கள்
      வீதியிலே நடமாட பகலிலும் அஞ்சும்
      செல்வந்தர்களிடமிருந்து என்ன நன்மை வரும்?



ஆண்டவன் இல்லா ஆலயங்களுக்கு கட்டு கட்டாய்ப் பணம் குவிகிறது. பட்டினியால் பல பயிர்கள் செத்து மடிவதை வேடிக்கை பார்த்துவிட்டு கோயில் உண்டியல்களில் பணத்தைக் கொட்டிடும் பக்தர்களின் தலையில் கொட்டும் வண்ணம் மனிதநேயம் பாடி உள்ளார். பாராட்டுக்கள்.

புதிய போர்க்களம்
யாருக்கும் தெரியாத இரகசியங்களைத்
      தன் மடியில் புதைந்து வைத்திருக்கும் இயற்கை
      மனித் விஞ்ஞானத்திற்கு அப்பாலும்
      பால் வீதியில் படுத்திருக்கும் மர்ம முடுச்சிகள்



இயற்கை சீற்றம் கொண்டு வெள்ளம், வறட்சி, புயல், சுனாமி என்று மிரட்டி வருகின்றது. இவற்றை மர்ம முடுச்சுகள் என்று குறிப்பிட்டது சரியே! இயற்கையை மனிதன் அழித்தால் இயற்கை மனிதனை அழிக்கும் என்ற நியதியை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.

மூடத்தனம் மனிதனை சங்கிலிகளால்       பிணைத்திருக்கிறது.
      மூடத்தனம் அகன்றால் சங்கிலிகள் தெறிக்கும்!
      சடங்குகளுக்குள் சல்லாபிக்கும் மந்தை புத்தி அகலும்!
      ஒழுங்கு, ஒழுங்கீனம் எது என யாரறிவார்?
      மனித மனங்கள் விழிப்புணர்ச்சி பெறுகையில்
      நன்மைச் செயல்கள் மழையாகப் பொழிந்து உலகாளும்
      மனிதனுக்கு தேவை போதனைகள் அல்ல
      சுய விழ்ப்புணர்ச்சி!



தந்தை பெரியார் வழியில் எதைட்யும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? எங்கு? என கேள்வி கேட்டு பகுத்தறிவுடன் விழிப்புணர்ச்சி-யுடன் வாழ வழிசொல்லி உள்ளார்.

தள்ளிப்போகும் மரணம்
      அமைதி காக்கும் காட்டு மரங்கள்
      இலைகளைத் தழுவி இன்பமூட்டும் தென்றல்
      மனிதர்களின் சுவாசத்திற்கும் சுக காற்றை
      மனிதமாக்கும் சூழல்!

காதுகளுக்குப் புதுப்புது ராகங்களை
      அறிமுகப்படுத்தும் பூச்சிகள்
      சொர்க்கம் இங்கும் தன் ஆடையை
      அவிழ்த்துள்ளது.



நூலாசிரியர் கவிஞர் ஏ.எஸ். பிரான்சிஸ் அவர்கள் இயற்கை ரசிகராகவும் உள்ளார். இயற்கையை ரசித்து, காற்றை ரசித்து கவிதைகள் வடித்துள்ளார்.

தென்றல்
புல்லின் மேனியை வருடி
      உல்லாசமாய் வருகிறது மென்தென்றல்
      சூரிய ஒளியில் சூடுகண்ட பூக்களும்
      தென்றல் தழுவலில் மேனி சிலிர்த்து மலர்கின்றன.



இயற்கையை வரிகளாக வடித்து படிக்கும் வாசகர்களுக்கு காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். பாராட்டுக்கள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» எண்ணங்கள் வாழ்க்கையின் வண்ணங்கள்! நூல் ஆசிரியர் : நிக்கோலஸ் பிரான்சிஸ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கடவுளின் நிழல்கள் ! நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கடவுளின் கடைசி கவிதை ! நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை .நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கனவு மெய்ப்பட வேண்டும் ! நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ஆ. குமாரி லெட்சுமி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum