தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஓட்டம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jun 23, 2021 10:35 pm

» கொரோனா எனும் கொடியவன்! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Wed Jun 23, 2021 10:30 pm

» எல்லார்க்கும் பெய்யும்…
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:41 pm

» காயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:40 pm

» பாதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:39 pm

» உள்ளிருப்பு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:38 pm

» புகைப்படம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:37 pm

» நீ என்ன தேவதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» பெயருத்தான்…! – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» அழகு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:35 pm

» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Sun May 23, 2021 2:30 pm

» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed May 19, 2021 9:32 pm

» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sat May 08, 2021 12:36 pm

» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க! கவிஞர் இரா.இரவி
by eraeravi Sat May 08, 2021 12:25 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue May 04, 2021 10:12 pm

» பண்பாளர் பேராசிரியர் இ .கி .இராமசாமி அய்யா வாழ்க! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun May 02, 2021 2:30 pm

» சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sun Apr 18, 2021 7:20 pm

» உன் கிளையில் என் கூடு! நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Apr 14, 2021 12:44 pm

» மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Mon Apr 12, 2021 11:11 pm

» அரங்கேற்றம் (கவிதை) -ஜெயந்தி பத்ரி
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:17 pm

» காதல் கவிதைகள் – தபூ சங்கர்
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:16 pm

» காதல்….காதல்…….. காதல்……
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:14 pm

» இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Apr 08, 2021 7:39 pm

» வெற்றியின் ஏணி! (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Mar 25, 2021 9:50 am

» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
by eraeravi Tue Mar 23, 2021 10:54 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன்

Go down

பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Empty பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன்

Post by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:23 pm

[You must be registered and logged in to see this link.]

ஒரு காலத்தில் ஒரு பணக்கார வியாபாரி வாழ்ந்து
வந்தார்.

அவர் பிறவிப் பணக்காரர் அல்ல.

அவரது பெற்றோர்கள் அவருக்கு சிறிதளவு சொத்துக்களையே
விட்டுச் சென்றனர்.

அதனால் இரவு பகல் கடினமாக உழைத்து பணம் சேர்த்தார்.

இறுதியில் எண்பது ஒட்டகங்களுக்கு உரிமையாளரானார்.

இந்த ஒட்டகங்களை மற்ற வணிகர்களுக்கு வாடகைக்கு
கொடுத்து பணம் சம்பாதித்து வந்தார்.

ஒட்டகங்கள் வாடகைக்கு போகாத நாட்களில் அந்த ஒட்டகப்
பாலை விற்று பணம் சேர்த்து வந்தார்.

ஒட்டகங்களை வாடகைக்கு எடுக்கும் வியாபாரிகள் அந்த
ஒட்டகங்களில் சரக்கு ஏற்றி வெளியூருக்கு கொண்டு சென்று
வியாபாரம் செய்து வந்தார்கள்.

ஒரு நாள் அந்த வியாபார் தன்னிடமிருந்த எண்பது
ஒட்டகங்களையும் அழைத்துக்கொண்டு ஒரு நகரத்தை
நோக்கிச் சென்றார்.

நகரத்தின் அழகையெல்லாம் ரசித்துக் கொண்டே வந்தார்.

நீண்ட பயணத்தினால் களைப்படைந்த அந்த வியாபாரி
தனிமையான ஓர் இடத்தில் ஒய்வு எடுக்க தங்கினார்.

அந்த சமயத்தில் எங்கிருந்தோ ஒரு துறவி வந்தார்.

அந்தத் துறவி வியாபாரியிடம் `உனக்கு பெரும் செல்வத்தை
அடைய ஆசை இருக்கிறதா?’ என்று கேட்டார்.

துறவி இப்படி கேட்டதும் வியாபாரிக்கு ஒரே திகைப்பு!

இப்படியும் ஒருவர் வந்து கேட்பாரா?’ என்று வியந்து போனான்
வியாபாரி.

துறவி மேலும் தொடர்ந்தார். `இங்கிருந்து சற்று தூரத்தில்
ஒரு மிகப்பெரிய செல்வக் குவியல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
நீ உனது எண்பது ஒட்டகங்களின் மீது சரக்குகளை நிரப்பினாலும்,
அதில் பாதிக்கு மேல் மீதமிருக்கும். உன்னால் கொண்டு போக
முடியாத அளவு செல்வம் அங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளது’

மகிழ்ச்சியடைந்தான் வியாபாரி, ` ஐயா! நீங்கள் துறவியாகி
விட்டதால் இந்த உலகத்து செல்வம் உங்களுக்கு ஒரு பொருட்டே
அல்ல. அந்தச் செல்வக் குவியல் எங்கே இருக்கிறது என்று
சொல்லுங்கள். நான் எனது ஒட்டகங்களின் மீதுள்ள சாக்குகளில்
அதை நிரப்புகிறேன்.

பின் தங்கம் நிரப்பிய ஒரு ஒட்டகத்தை உங்களுக்கு பரிசாகத்
தருகிறேன்’.என்றார்.

துறவி சிரித்தார் ` நீ செய்வது அநியாயம் என்று உனக்குத்
தோன்றவில்லையா ? செல்வக்குவியல் இருக்கும் இடத்தை நான்
உனக்குச் சொல்லப்போகிறேன். அதனால் தங்கத்தால் நிரப்பப்பட்ட
நாற்பது ஒட்டகங்களை நீ எனக்குத் தரவேண்டும்.

நாற்பது ஒட்டகங்களை எனக்குக் கொடுத்தால் உனக்கு இன்னும்
ஆயிரம் ஒட்டகங்கள் கிடைக்கச் செய்வேன்’ என்றார் துறவி.

வியாபாரியும் ஒத்துக் கொண்டான்.

இருவரும் பொக்கிஷம் இருக்கும் இடத்தை நோக்கி பயணம்
செய்தனர்.

இருபுறமும் மலைகளால் மூடப்பட்ட ஒரு பள்ளத்தாக்கை
அடைந்தனர். ஒட்டகங்களால் உள்ளே செல்ல முடியவில்லை.
`ஒட்டகங்களை படுத்துக் கொள்ளச் சொல்’ என்றார் துறவி.

பின் அதன் மீது காய்ந்த மரத்துண்டில் நெருப்பை பற்ற வைத்து
அதன்மீது வாசனை திரவியத்தை ஊற்றினார். அதிலிருந்து ஒரு
பெரிய புகை எழும்பியது.

துறவி அந்தப் புகையை இரண்டாகப் பிளந்தார்.


அதன் நடுவிலிருந்து ஓர் அழகான அரண்மனை தோன்றியது.

அந்த அரண்மனைக்குள் அவசரமாக நுழைந்தார் வியாபாரி.

எல்லா இடங்களிலும் தங்கம் கொட்டிக் கிடப்பதைக் கண்டதும்
வியாபாரியால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார்.

தங்க நாணயங்களையும், நகைகளையும் குவியல் குவியலாக
ஒட்டகங்களின் மீது ஏற்றினார்.

கிளம்பும் நேரம் வந்த போது அரண்மனையின் ஒரு மூலையிலிருந்து
ஒரு ஜாடி ஒன்றை துறவி எடுத்தார்.

`நான் இதனை எடுத்துக்கொள்கிறேன். இதில் அற்புதமான ஒரு
களிம்பு ஒன்று இருக்கிறது’ என்றார்.

வியாபாரிக்குத் துறவி சொன்னதில் எந்த வித ஆர்வமும்
ஏற்படவில்லை.

அத்தனை தங்கத்துடன் வீடு திரும்ப விரும்பினார்.

ஒத்துக் கொண்டபடி துறவிக்கு ஒட்டகங்களைக் கொடுத்தான்.
இருவரும் பிரிந்து சென்றனர்.


Last edited by அ.இராமநாதன் on Sun Aug 23, 2020 9:29 pm; edited 4 times in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31334
Points : 68752
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன் Empty Re: பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன்

Post by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:24 pm

சிறிது தூரம் சென்றதும் `ஒரு துறவி நாற்பது ஒட்டகங்களை
வைத்துக்கொண்டு என்ன செய்வார்? என்று யோசித்தான்
வியாபாரி.. துறவியிடம் ஒடினான்.

`ஐயா! தங்களுக்கு ஒட்டகச் சவாரி கடினம் என்று நினைக்கிறேன்.
நாற்பது ஒட்டகங்களை தங்களால் சமாளிக்க முடியாது.
பத்து ஒட்டகங்களை எனக்கு தந்தால் என்ன ? என்று கேட்டான்.

துறவியும் யோசிக்காமல் பத்து ஒட்டகங்களை வியாபாரிக்கு
கொடுத்துவிட்டார்.

ஆனால் பேராசை வியாபாரியை விடவில்லை.

சிறிது தூரம் சென்றதும் மறுபடியும் துறவியிடம் ஓடி வந்தான்.

இன்னும் பத்து ஒட்டகங்களைக் கேட்டான்.

துறவியும் யோசிக்காமல் இன்னும் பத்து ஒட்டகங்களை
வியாபாரிக்குக் கொடுத்தார்.

சிறிது தூரம் சென்ற வியா பாரிக்கு மறுபடியும் சபலம் தட்டியது.

மறுபடியும் துறவியிடம் ஓடினான்.

இன்னும் பத்து ஒட்டகங்களை தரும்படி கேட்டான்.

அவரும் தயங்காமல் பத்து ஒட்டகங்களை கொடுத்தார்.

அடுத்த முறையும் போய் மீதமிருந்த பத்து
ஒட்டகங்களையும் வாங்கி வந்தான் வியாபாரி.

இப்போது வியாபாரிக்கு இன்னும் பேராசை.

அவர் வைத்திருக்கும் ஜாடிக்குள் என்ன இருக்கும் ? என்று
நினைத்தான்.

அவரிடம் போய் `ஐயா அந்த ஜாடியை எனக்குத் தரவேண்டும்’
என்று கேட்டான்.

துறவி சொன்னான் `இந்த ஜாடியில் இருக்கும் களிம்பை
இடது கண்ணில் தடவினால் உலகத்து பொக்கிஷங்கள்
அனைத்தும் தெரியும். இன்னொரு கண்ணில் தடவினால்
இரு கண்களும் குருடாகிவிடும்’ என்றார்.

அப்படியே இடது கண்ணில் தடவினான். பொக்கிஷம் தெரிந்தது.
இன்னொரு கண்ணிலும் தடவினால் என்னாகும் என்று அடுத்த
கண்ணிலும் தடவினான்.

அவன் பேராசையினால் அவன் குருடாகிப் போனான்.
---------------
நன்றி- தினமலர் (நெல்லை)

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31334
Points : 68752
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum