தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 10:43 am

» இளங்குமரனார் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Jul 26, 2021 9:24 pm

» கிண்ணத்தில் நிலாச்சோறு! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 24, 2021 11:03 pm

» அன்னைத் தமிழின் பெருமைகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jul 23, 2021 7:56 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Mon Jul 19, 2021 5:12 pm

» இன்சுவை இப்ரான் வாழ்க ! வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 16, 2021 10:26 pm

» காமராசர் ஓர் அரசியல் அதிசயம்! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed Jul 14, 2021 11:02 pm

» அழகின் ஆடல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:13 pm

» அழகியல் நூறு! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:08 pm

» நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 03, 2021 10:21 pm

» இப்பவே கண்ணை கட்டுதே! நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 03, 2021 6:29 pm

» கொரோனா காலக் குறிப்புகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jun 25, 2021 10:34 pm

» ஓட்டம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jun 23, 2021 10:35 pm

» கொரோனா எனும் கொடியவன்! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Wed Jun 23, 2021 10:30 pm

» எல்லார்க்கும் பெய்யும்…
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:41 pm

» காயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:40 pm

» பாதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:39 pm

» உள்ளிருப்பு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:38 pm

» புகைப்படம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:37 pm

» நீ என்ன தேவதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» பெயருத்தான்…! – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» அழகு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:35 pm

» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed May 19, 2021 9:32 pm

» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sat May 08, 2021 12:36 pm

» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க! கவிஞர் இரா.இரவி
by eraeravi Sat May 08, 2021 12:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மின்னல் முகவரி நூல் ஆசிரியர் : கவிஞர் சு. சேகர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Go down

மின்னல் முகவரி  நூல் ஆசிரியர் : கவிஞர் சு. சேகர் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Empty மின்னல் முகவரி நூல் ஆசிரியர் : கவிஞர் சு. சேகர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Tue Mar 23, 2021 10:36 pm

மின்னல் முகவரி
 நூல் ஆசிரியர் : கவிஞர் சு. சேகர் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


நூல் வெளியீடு : அன்புநிலா பதிப்பகம், 3, பழைய பள்ளிக்கூட வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி – 604 408. பக்கங்கள் : 80. விலை : ரூ.50.

*****
      மின்னல் முகவரி நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது. மூன்றாவது வரியில் ஒரு மின்னல் வெட்டு தான் ஹைக்கூ. முனைவர் செ.சி.இரத்தினகுமார், முனைவர் அ.கலைநேசன், முனைவர் கோ.கிருஷ்ணன், முனைவர் க.சேகர், முனைவர் சி.புகழேந்தி, முனைவர் வே.பாலாஜி, முனைவர் வெ. நிர்மலா, உதவிப்பேராசிரியர் இ. இரஃபிக், முனைவர் கி. நடராஜன், இனிய நண்பார் கவிஞர் மு.முருகேஷ் ஆகியோர் அணிந்துரையும் வாழ்த்துரையும் வழங்கி உள்ளனர். வரவேற்பு தோரணங்களாக வரவேற்கின்றன. இந்நூல் ஆசிரியர் கவிஞர் சு. சேகர், அம்மாவிற்கு காணிக்கையாக்கி உள்ளார். பாராட்டுகள்.
      புளிக்காத வரை
      இனிப்பாகவே
      காதல்!

      காதல் இனிப்பானது தான். ஆனால் ஊடல் வந்து பிரிவு வந்து கசக்காத வரை காதல், இனிமை என்பதை அழகாக உணர்ந்து எழுதி உள்ளார்.
      தொலைக்காட்சித் தொடரில்
      தொலைந்து போனார்கள்
      குடும்பப் பெண்கள்!

போலித்தனமான நாடகங்களை உண்மை என நம்பி அதற்கு அடிமையாகி அதனுள் மூழ்கி விடும் அவலம் நாட்டில் அரங்கேறி வருவது உண்மை தான். அதனை அறிந்து வடித்த ஹைக்கூ நன்று.
அசிங்கமாக
      கலந்து கொண்டார்கள்
      அழகிப் போட்டிக்கு!

உண்மை தான். எது உண்மை அழகு என்பது புரியாமல் ஆபாசத்தை அரங்கேற்றி அழகிப் போட்டி நடத்தி வருபவர்களுக்கு கண்டனத்தை நன்கு பதிவு செய்துள்ளார்.
ஏழைகளால்
      வாசிக்க முடியவில்லை
      விலைவாசி!

விலைவாசி ஏறிக்கொண்டே செல்கின்றது. ஆனால் வருமானமோ குறைந்து கொண்டே வருகின்றது. ஏழைகள் வாழ வழியின்றி இன்னலில் தவித்து வருகின்றனர். விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டிய ஆள்வோர் கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது வேதனை.
கல்லுக்கும்
      இறக்கை முளைத்தது
      கலவரத்தில்!

கலவரங்களில் கற்கள் முக்கிய அங்கம் வகித்து பறந்து பறந்து சேதப்படுத்துவதைப் பார்த்து இறக்கை முளைக்கின்றது. கற்களுக்கு என்று எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று.
இனிப்பும் கசப்பும்
      வாழ்க்கை
      வேப்பமரத்தில் தேன்கூடு!

இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. மேடு பள்ளம் நிறைந்தது தான் வாழ்க்கைப் பயணம்! கசக்கும் வேப்பமரத்தில் இனிக்கும் தேனை சேகரிக்கும் தேன்கூட்டைக் காட்டி உணர்த்தியது சிறப்பு.
வெற்றி தோல்வி
      தெரியாமல் ஓட்டம்
      கடிகார முள்!

கடிகார முள் சோர்வு அடைவதில்லை. ஓய்வெடுப்பதில்லை. விரக்தி கொள்வதில்லை. கவலையின்று தன் கடமையை சரிவர செய்திடும் கடிகார முள் மனநிலையை மனிதர்கள் பெற்றால் வாழ்க்கை இனிக்கும், சிறக்கும் என்பது உண்மை.
எத்தனையோ செதுக்கியும்
      இன்னும் சிலையாகாமல்
      கல் மனசு!

அம்மா, அப்பா குடிக்காதே என்றும், உடல்நலத்திற்கு கேடு என்றும், திறமையை வீணடிக்கும் என்றும் அறிவுரை தொடர்ந்து நல்கிய போதும் செவிமடுக்காமல் தொடர்ந்து குடித்து, உடல்நலக்கேடு விளைவித்துக்கொள்ளும் இளைஞனை நினைவூட்டியது இந்த ஹைக்கூ.
அழுகை கேட்டு
      சிரித்தார்கள்
      சுகப்பிரசவம்!

குழந்தை பிறந்ததும் அழுகைச் சத்தம் கேட்டதும் எல்லோரும் மகிழ்ச்சியில் சிரிப்பார்கள். அந்த நேரம் மட்டும் குழந்தையின் அழுகையை எல்லோரும் விரும்புவார்கள். அழாவிட்டால் அடித்து அழ வைப்பார்கள். பிறந்தவுடன் அழ வேண்டும் என்பது வாழ்வியல் நியதி. ஹைக்கூ நன்று. சுகப்பிரசவம் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி நிலவுவது உண்மையே.
கோயில் திருவிழாவிற்குப்
      பூச்சூடிப் பொட்டு வைத்து விடும்
      வெள்ளாடு!

இந்த ஹைக்கூ படித்தவுடன் என்  நினைவிற்கு வந்தது வாக்காளன் தான்.  ‘’எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’’ வாக்களியுங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடி வாக்குகள் வாங்கி, வாங்கியவர் மன்னராகி விடுவார். வாக்களித்தவர்கள் மக்கள், மாக்கள் ஆகிவிடுவர்.
வெறும் கையோடு
      அம்மா
      மகளுக்கு வளைகாப்பு!

ஏழை மட்டும் நடுத்தரக் குடும்பங்களில் மகளுக்கு வளைகாப்பு என்றவுடன் வரும் செலவுகளை சமாளிக்க அம்மா தன் வளையல்களை விற்றோ அல்லது அடகு வைத்தோ விழா நடத்த வேண்டிய நிலை தான் இன்று.
மூங்கில் காட்டுக்குள்
      முகவரியைத் தேடி
      காற்று!

ஜப்பானிய ஹைக்கூவைப் போல இயற்கையை பாடி காற்றையும் மூங்கிலையும் மனக்கண்ணில் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் கவிஞர் சு. சேகர், பாராட்டுகள். பல்வேறு சிந்தனைகளை மின்னல் வெட்டாக வெட்டி, மின்னல் முகவரி தந்துள்ளார், பாராட்டுகள். வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள்.
இந்த நல்ல நூலை எனக்கு பரிசளித்த கருவூலத்துறை பொதுமேலாளர் முனைவர் முத்துப்பாண்டியன் அவர்களுக்கு நன்றி.
--

.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2553
Points : 6095
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum